பிரதமர் மோடியின் ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து நாளுக்கு நாள் மக்களின் பிரச்னைகள் கூடிக்கொண்டிருக்கிறதே தவிர, நிலைமை சரியாவதற்கான சூழலே உருவாகவில்லை. இது தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ஆம் தேதி திடீரென ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தபோது மக்கள் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்தனர். அதை எதிர்கொள்வதற்கு மக்கள் தயார் நிலையில் இல்லை. இந்த நடவடிக்கை மூலம் அவர்கள் மிகப்பெரிய தவறு செய்துள்ளனர். இப்போது பிரச்னையைத் தீர்க்க மிகவும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் ரூபாய் 500, 1000 நோட்டுகள் சுமார் 2100 கோடி என்ற அளவில் உள்ளன. இத்தனையையும் மாற்றி அதே அளவுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் கொடுக்கப்பட வேண்டும்.இந்த அளவு ரூபாய் நோட்டுகளை உடனே அச்சிட்டு விட முடியாது. ஒரு மாதத்துக்கு 300 கோடி பண நோட்டுகளைத்தான் மத்திய அரசால் அச்சடித்து தயாரிக்க முடியும். அந்த வகையில், பார்த்தால் புதிய 2100 கோடி ரூபாய் நோட்டுகளை அச்சடித்து முடிக்க வேண்டுமானால் குறைந்தபட்சம் ஏழு மாதங்கள் ஆகும். இதனைக்கருத்தில் கொண்டுதான் மத்திய அரசு ரூ.2000 புதிய நோட்டை அறிமுகம் செய்துள்ளது. ரூபாய் 2000 நோட்டுகளை வெளியிடுவதன் மூலம் பொருளாதாரத்தை சீர்திருத்தி விடலாம் என்று மத்திய அரசு சொல்கிறது. அதை ஒரு போதும் ஏற்க இயலாது.
ரூபாய் 2000 நோட்டுகளை அறிமுகம் செய்ததில் ஒரு தந்திரம் உள்ளது. புதிய நோட்டுகள் அச்சிடும்போது ரூபாய் 2000 என்பதால் குறைவாக அச்சிட்டால் போதும். அது மட்டுமின்றி ஐந்து மாதத்தில் தேவையான அனைத்து புதிய ரூபாய் நோட்டுகளையும் அச்சிட்டுவிட முடியும். இந்த இரு காரணங்களால் மட்டுமே மத்திய அரசு புதிதாக ரூபாய் 2000 நோட்டுகளை அறிமுகம் செய்துள்ளது. மற்றபடி, பொருளாதார சீர்திருத்தத்துக்கும், புதிய ரூபாய் 2000 நோட்டு அறிமுகம் செய்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை. எனது இந்த கேள்விக்கு நிச்சயமாக யாராலும் பதில் சொல்ல முடியாது.
தற்போது ரூபாய் 100 நோட்டுகள் கூடுதலாக தேவை என்று உணர்ந்து இருக்கிறார்கள். தேவையான அளவுக்கு ரூபாய் 100 நோட்டுகளை அச்சிட்டு முடிக்கவும் ஐந்து மடங்கு காலம் தேவைப்படும் என்பதுதான் உண்மை.இதையெல்லாம் கணக்கிட்டுப் பார்க்கும்போது ரூபாய் நோட்டுகள் விஷயத்தில் மத்திய அரசு எந்தவிதத்திலும் தயார் நிலையில் இல்லை என்பது தெளிவாகத் தெரிய வந்துள்ளது. முழுக்க முழுக்க இது அரசியல் லாபம் கருதியே நடத்தப்படுகிறது” என்று தெரிவித்தார்.
பார்வையற்றோருக்கு வசதி:பார்வையற்றோர் எளிதில் உணரும் வகையில் காந்தியின் படம், அசோக சின்னம், கோணலான கோடுகள் ஆகியவை மேலெழும்பியவாறு அச்சிடப்பட்டிருக்கும்.


கடந்த ஆண்டு ஆற்காடு பஞ்சாங் கத்தில் கணித்தபடி சென்னையை பெரும் வெள்ளம் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியது. அதேபோல், இந்த ஆண்டும் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படும் என, ஆற்காடு கா.வெ.சீதாராமய்யர் பஞ்சாங்க வெளியீட்டாளர் கே.என்.நாராயண மூர்த்தி எச்சரித்துள்ளார்.
நாடு முழுவதும் ஒரே இரவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல் லாத நோட்டுகளாக மாறிவிட்டன. மக்கள் தங்களிடம் இருந்த செல்லாத நோட்டுகளை வங்கியில் வரிசையில் நின்று மாற்றி வரு கின்றனர். இதை முன்கூட்டியே ஆற்காடு பஞ்சாங்கத்தில் கணித்து வெளியிட்டுள்ளனர். இந்த பஞ்சாங் கத்தின் பக்கங்கள் ‘வாட்ஸ் அப்’ மூலம் வேகமாக பரவியது. அதில், ‘‘வங்கிகளில் பல மாற்றம் ஏற் படும். கணக்கில் இல்லாத கறுப் புப் பணத்தைக் கண்டுபிடிக்க நேரும். தணிக்கைத் துறையின் மூலம் அரசாங்கத்துக்கு கோடிக் கணக்கான பணம் சேரும்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பஞ்சாங்கத்தின் 2015-ம் ஆண்டு பதிப்பில், வரலாறு காணாத வெள்ளம் சென்னையை தாக்கும் என்ற தகவலும், இந்த ஆண்டுக் கான பஞ்சாங்கத்தில் தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியே ஆட்சியைப் பிடிக் கும் என்ற தகவலும் குறிப்பிடப் பட்டிருந்தது. அந்த வரிசையில் அடுத்த மாதம் (டிசம்பர்) மீண்டும் வெள்ளத்தில் சென்னை மிதக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக, ஆற்காடு கா.வெ.சீதாராமய்யர் பஞ்சாங் கத்தை வெளியிடும் கே.என்.நாரா யணமூர்த்தி(79) கூறியதாவது:
ஆரணி எஸ்.வி.வனம் அரச குடும்பத்தின் ஆஸ்தான ஜோதிட ராக எனது பாட்டனார் கா.வெ.சீதாராமய்யர் இருந்தார். அத்துடன் ஆற்காடு நவாபுகளுக்கும் சரபோஜி மன்னர்களுக்கும் ஜோதிட ராகவும் இருந்தார். ஆண்டுதோறும் அரசர்களுக்கு ஜோதிடக் குறிப்பு களை கொடுத்துவந்தார். சித்திரை முதல் பங்குனி மாதம் வரை பஞ்சாங்கக் குறிப்பை வெளியிட் டார். அவரது வழியில் எனது தகப்பனார் கா.சீ.வெ.சுப்புராமய் யர், நான் மற்றும் எனது மகன் கே.என்.சுந்தரராஜன் என 4-வது தலைமுறையாக தொடர்ந்து 116 ஆண்டுகளாக பஞ்சாங்கத்தை வெளியிட்டு வருகிறோம்.
1970-ம் ஆண்டுக்குப் பிறகு ஆற்காடு பஞ்சாங்கத்தில் ஜெகத் ஜாதகம் (பூமியின் ஜாதகம்) என்ற அடிப்படையில் உலகில் நடைபெற வாய்ப்பு உள்ள முக் கிய நிகழ்வுகளை வெளியிட்டு வருகிறோம். சூரியனின் இயக் கத்தை அடிப்படையாகக் கொண்டு கணித்து இதனை வெளியிடு கிறோம். எங்களது கணிப்புகள் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதை எச்சரிக்கையாகக் கூறுகிறோம். பஞ்சாங்கக் குறிப்புகளை முதலு தவிப் பெட்டியாகக் கருதி ஆபத் தைத் தவிர்க்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
சென்னையை மீண்டும் வெள்ளம் தாக்கும் என்பது எங்கள் கணிப்பு. கால்வாய் தூர்வாருதல், தாழ்வான பகுதிகளை கண்காணித்தல் போன்ற நடவடிக்கைகளால் இயற்கையின் சீற்றத்தைத் தவிர்க்க முடியும். நாங்கள் வெளியிடும் பஞ்சாங்கத்தை இந்தியா மட்டும் இல்லாமல் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் தமிழர்கள் வாங்கிச் செல்கின்றனர். ஆற்காடு பஞ்சாங்கம் என்ற பெய ரில் பல பஞ்சாங்கப் புத்தகங்கள் வெளிவருகின்றன. இதில், லாவண்யா பதிப்பகம்தான் எங் களின் அடையாளம்.