அன்பு நண்பர்கள் அனைவருக்கும்,
எமதருமைத் தாயை இழந்திருக்கும் இக்கட்டான இத்தருணத்தில் ஆறுதல் தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
குறிப்பாக செல்வா அடிக்கடி தொடர்பில் இருந்தது, பக்ருதீன், முரளி, சாபு, செந்திலின் செல்பேசி அழைப்புகள், டேவிட் தங்கையுடன் நேரில் வருகை தந்தது
மற்றும் கௌதமன், பாலாவின் மின்னஞ்சல் வழியான கனிவான வார்த்தைகள் என அனைத்துமே பெரிதும் ஆறுதல் அளித்தது. என்னதான் சுற்றம் இருந்தாலும் நட்புக்கு ஈடு எதுவுமில்லை
என்பதை இத்தருணம் எனக்கு அதிகம் உணர்த்தியது என்பதுதான் உண்மை. எனது இளநிலை வகுப்புத் தோழர்களும் ஏற்பாடுகள் முதல் அடக்கம் வரையில் பெரிதும் உதவிகரமாக இருந்ததை நான் என்றும் நினைவில் நிறுத்தவேண்டும்.
எனதருமைத் தாய் பிறருக்கு உதவுவதையும், உணவளிப்பதையும் கடமையாகக் கொண்டிருந்தவள். அதன்பொருட்டோ என்னவோ உயிர்ப்போராட்டம் எதுவுமின்றி உறக்கத்திலே உயிர் பிரிந்திருக்கிறது. அவள் இறைவனடியில் இளைப்பாறுவதாகவே நம்புகிறேன்.
நாம் வாழ்வது சில காலம். வாழ்ந்ததை சொல்வது பல காலம்.
ஆக வாழ்வோம்! வாழவும் வைப்போம்!!
தமிழகத்தில் அனைத்தும் பணிகளும் நிறைவுற்று கனத்த இதயத்துடன் சென்ற வெள்ளியன்று ஹூஸ்டன் திரும்பியுள்ளேன்.
மீண்டும் மற்றுமொரு செய்தியில் தொடர்பில் வருவோம்.
நன்றி,
கரு.மாணிக்கவாசகம்.