From: Manickam Nadeson <nade...@yahoo.com>Subject: [TamizSongs] (unknown)To: Tamiz...@yahoogroups.com.auCc: AllTam...@googlegroups.comDate: Saturday, November 21, 2009, 12:05 AM கடந்த அரை நூற்றாண்டு காலமாகத் தமிழ்நாட்டுக் கலை இலக்கிய அரசியலில் தவிர்க்க முடியாத குரல்! வெண்கலத் தாம்பாளத்தில் தங்கப்பழம் வைத்துத் தந்ததுமாதிரி தன் வெண்கலக்குரலில் தங்கத்தமிழ் கொடுத்தவர் டி.எம்.எஸ். இத்தனைக்கும் அவர் தாய் மொழி தமிழ் இல்லை. மதுரையை ஆண்ட திருமலைநாயக்க மன்னருக்குப் பட்டு அங்கவஸ்திரம் அணிந்து கொள்வதில் மட்டுப்படாத ஆசை. அதனால் பட்டு நெசவு செய்யும் தேர்ந்த குடும்பங்களைக் கூர்ஜரத்திலிருந்து (குஜராத்) கொண்டு வந்து கோயிலைச் சுற்றிக் குடியமர்த்தினார். அவர்கள் சௌராஷ்ட்ர சமூகத்துப் பெருமக்கள். அப்படிப் பட்டுநெசவு செய்யும் கூட்டத்திலிருந்து பாட்டு நெசவு செய்ய வந்தவர் டி.எம்.எஸ். அன்று கொடிகட்டிப் பறந்த தியாகராஜ பாகவதரின் தீவிர பக்தர் சௌந்தரராஜன். அவரது தொடக்ககாலப் பாடல்களில் தியாகராஜபாகவதர் பாணியை விட்டு முற்றும் விடுதலையாக முடியவில்லை அவரால். �தூக்கு தூக்கி�, மந்திரிகுமாரி _ மலைக்கள்ளன் _ மதுரை வீரன்�வரைக்கும் பாகவதரின் நகலாகவே பாடினார் டி.எம்.எஸ். அதில் வியப்புமில்லை; பிழையுமில்லை. தியாகராஜ பாகவதரைப் போல முன் நெற்றியில் முடி ஏறி இருக்க வேண்டும் என்பதற்காக அந்தக்கால ரசிகர்கள் சுவரில் உரசித் தலையைத் தேய்ப்பார்களாம். பாகவதரைப் போலப் பாடவேண்டுமென்று தன் இயல்பான கம்பீரக்குரலில் மூக்கொலி கலந்து பாடிய டி.எம்.எஸ். ஐம்பதுகளின் இறுதியில் அதிலிருந்து விடுபட்ட போது அசல் டி.எம்.எஸ். அவதரித்தார். எம்.ஜி.ஆர். _ சிவாஜி என்ற இரு துருவ நட்சத்திரங்களுக்கும் தன் குரலை அவர் பொருத்திக் காட்டியபோது இவரும் ஒரு நட்சத்திரமானார். மனிதக்கூட்டம் கடந்துபோகும் சகல உணர்ச்சிகளின் மீதும் டி.எம்.எஸ்.ஸின் அடர்ந்த குரல் ஆளுமை செய்திருக்கிறது. பாவாடை தாவணியில் பார்த்த உருவமா இப்போது கேட்டாலும் மனசு பதினாறு வயது நோக்கிப் பயணம் போகிறது. அச்சம் என்பது மடமையடா போருக்குப் போ மகனே என்று புலன்களைத் திருகிவிடுகிறது. உள்ளம் என்பது ஆமை _ மயக்கம் எனது தாயகம் _ அண்ணன் காட்டிய வழியம்மா _ போன்ற பாடல்களில் தண்ணீரில் மிதக்கும் தாமரைகளைப் போல டி.எம்.எஸ்.ஸின் கண்ணீரில் மிதக்கின்றன வார்த்தைகள். உலகம் பிறந்தது எனக்காக நலிந்த மனதுக்கு நம்பிக்கையூட்டுகிறது. ஆரபி _ கானடா _ சாருகேசி மோகனம், கல்யாணி, சிந்துபைரவி போன்ற ராகங்களை உழைக்கும் மக்களின் வயல்வெளிக்கு அழைத்துச் சென்றது அவர் குரல். தமிழில் அரைமாத்திரைகூட தேயாத உச்சரிப்பு _ நடிகர்களின் பாவனைக்கு ஏதுவாக ஏற்பாடு செய்து கொடுக்கும் பாவம் _ தனக்குள்ளிருக்கும் நடிகனைக் குரலுக்குள் கொண்டுவரும் ரசவாதம் _ நடிகர்களின் உடலுக்கும் முகத்துக்கும் ஏற்பத் தன் குரலின் அலைவரிசையை மாற்றிக் கொள்ளும் அற்புதம் _ இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். உலகியல் அறியாத குழந்தை அவர் என்பதால் அவரைக் கண்டு சற்றே ஒதுங்குதல் சரியாகாது. இப்படியொரு கலைஞன் அமைவது மீண்டும் அரிது. காது படைத்தவர்களே! வாழும்போதே கொண்டாடுங்கள் அந்த ஆலய மணிக்குரல் நாயகனை ! New Email names for you! Get the Email name you've always wanted on the new @ymail and @rocketmail.Hurry before someone else does! __._,_.___ Reply to sender | Reply to group Messages in this topic (1) Recent Activity: New Members 31 Visit Your Group Start a new topic Switch to: Text-Only, Daily Digest • Unsubscribe • Terms of Use . __,_._,___