இஸ்லாமிய எழுச்சி - தொடர் 2

24 views
Skip to first unread message

Rishard Fais Abdul Fareed

unread,
Feb 25, 2017, 5:36:24 AM2/25/17
to Akpgroup
அக்கால அரேபியாவில் குலங்களாகவும் கோத்திரங்களாகவும் வாழ்ந்துகொண்டிருந்த வேளையில் மக்காவானது 'குறைஷ்' கோத்திரத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.  மக்காவிலிருந்த சிலைகளின் பராமரிப்பு 'பனு அப்தித் தார்' குடும்பத்திடமும், க.'.பாவிற்கு வரும் பக்தர் கூட்டங்களுக்கு இடவசதிகளைச் செய்துகொடுக்கும் பணி றஸூல் (ஸல்) அவர்களின் குடும்பமாகிய 'பனு ஹாஷ்ம்' இன் பொறுப்பில் இருந்தது.

மக்காவின் கொழுத்த பணக்காரர்களாகவும், அதிகாரம், செல்வாக்கு மிக்கவர்களாகவும் உமையா (இவனிடம்தான் பிலால் (றழி) அவர்கள் அடிமையாக இருந்தார்கள்), அபூ ஸுப்யான், உத்பா, அபூ லஹப் போன்றோர் இருந்தனர். சிரியாவிலிருந்தும் அரேபியாவிற்கு வெளியே இருந்தும் வியாபாரக் கூட்டங்கள் மக்காவுக்கு அலை மோதின. பண்ணை வளர்ப்பு (ஆடு, ஒட்டகம்) போன்றவையும் பிரதானமாக இருந்தது. மக்கா செல்வச் செழிப்போடு காணப்பட்டது.

மக்கள் கவிஞர்களையும், குறி கூறும் பெண்களையும், அம்புகளால் குறி பார்ப்பதையும், சோதிடம் போன்றவற்றையும் மதித்து வந்தது மட்டுமல்லாமல் தங்கள் வாழ்க்கையின் அங்கங்களாகப் பார்த்தனர். சமூகத்திலுள்ள கொழுத்த பணக்காரர்களை கவிஞர்கள் புகழ்பாடி அவர்களிடமிருந்து அன்பளிப்புக்களையும், பரிசுப் பொருட்களையும் பெற்றுக் கொண்டனர். சந்தைகளிலுள்ள திடல்களில் கவிஞர்கள் பாடுவதை மக்கள் கூட்டம் இரசித்துக்கொண்டிருக்கும்; அக்காலத்தில் ஒரு பொழுதுபோக்காக இருந்தது.

இக்காலகட்டத்தில் சத்தியத்தையும் அசத்தியத்தையும் வேறு பிரித்துக் காட்டுவது என்பது காலத்தின் தேவையாக இருந்தது. மக்கள் தங்கள் மனம் போன போக்கிலும், பாவங்களிலும் மூழ்கிக்கிடந்தனர். சிலை வணக்கமும், விபச்சாரமும், வட்டியும் மேலும் கொடிய பாவங்களும் தலைவிரித்தாடின. பணக்காரன் ஏழையை நசுக்குவதும், வசதி படைத்தோர் வசதி இல்லாதோரை ஏழனமாகப் பார்ப்பதும் அக்காலத்தின் வழக்கமாக இருந்தது. கடன் கொடுக்கல் வாங்கல்கள் மிக அநீதமான முறையில் நடைபெற்றன, பெண்களை வெறும் காட்சிப் பொருட்களாகவும், விலை மாதுக்களாகவும் பயன்படுத்தி வந்தனர்.

சமுதாயத்திலுள்ள கொழுத்த பணக்காரர்களையும், அவர்களது ஆள் பலம், பணபலம், அதிகாரம், செல்வாக்கு என்பவற்றை எதிர்ப்பது என்பது மிகப்பெரும் சவாலாகவே காணப்பட்டது. பலதரப்பட்ட எதிர்ப்புகளுக்கு மத்தியில் சத்தியத்தை எடுத்துச்சொல்வது என்பது பெரும் சவாலாகவே காணப்பட்டது. நபித்துவத்தின் ஆரம்ப காலத்தில் றஸூல் (ஸல்) அவர்களுக்கு அவர்களின் மனைவி கதீஜா (றழி), சிறிய தந்தை அபீதாலிப், அபூபக்ர் ஸித்தீக் (றழி) போன்றோர் பெரும் பக்க பலமாக இருந்தனர்.

ஆரம்பகட்டத்தில் இஸ்லாத்தின் தூய கொள்கைகளைப் பரப்புவது என்பது இரகசியமாகவே மேற்கொள்ளப்பட்டது. ஒரு குறிப்பிட்ட சிலரைக் கொண்ட குழு ஒன்று அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக தங்களின் உயிரைக்கூட தியாகம் செய்ய தயாராகும் வரை அழைப்புப்பணி இரகசியமாகவே மேற்கொள்ளப்பட்டு வந்தது. பின்னர் நபி (ஸல்) அவர்களின் குடும்பமான பனூ ஹாஷ்இம், குறைஷ் கோத்திரம் என்பவற்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

றஸூல் (ஸல்) அவர்கள் தங்களது குடும்பத்தை ஒன்றாக அழைத்து இஸ்லாமிய அழைப்பை விடுத்தபோது "குகை, வானவர்கள் இவையெல்லாம் நமக்கு புது விடையங்கள்" என அபூ ஜஹ்ல் போன்றோர் எதிர்த்தனர். மேலும் காலா காலமாக அவர்கள் பின்பற்றி வந்த பலகடவுள்களையும், சிலை வணக்கங்களையும் கொண்ட இறை கொள்கையையும் அவர்களது வாழ்க்கை முறைமையையும் மாற்றிக்கொள்ள மறுத்ததோடு, தங்கள் சுகபோக வாழ்க்கைக்கு இது ஒரு முட்டுக்கட்டையாக இருக்கும் என்பதற்காக எதிர்ப்புகளையும் வெளியிட்டனர்.

அதுவரையில் "உண்மையாளர்", "நம்பிக்கையாளர்" என்று கூறிவந்தவர்கள் றஸுல் (ஸல்) அவர்களை "பொய்யன்", "சூனியக்காரன்" என்று கூற ஆரம்பித்தனர். இவ்வாறு நாளுக்கு நாள் எதிர்ப்புகள் அதிகமாயின.. இதன்போது அல்லாஹ் அச்சமுதாயத்தை எச்சரிக்கும் வகையில் சில வசனங்களை அருளினான்.




81. ஸூரத்துத் தக்வீர் (சுருட்டுதல்)
மக்கீ, வசனங்கள்: 29

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
81:1 اِذَا الشَّمْسُ كُوِّرَتْۙ‏ 
81:1. சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது-
81:2 وَاِذَا النُّجُوْمُ انْكَدَرَتْۙ‏ 
81:2. நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது-
81:3 وَاِذَا الْجِبَالُ سُيِّرَتْۙ‏ 
81:3. மலைகள் பெயர்க்கப்படும் போது-
81:4 وَاِذَا الْعِشَارُ عُطِّلَتْۙ‏ 
81:4. சூல் நிறைந்த ஒட்டகைகள் (கவனிப்பாரற்று) விடப்படும் போது-
81:5 وَاِذَا الْوُحُوْشُ حُشِرَتْۙ‏ 
81:5. காட்டு மிருகங்கள் (மனிதர்களுடனும், இதர பிராணிகளுடனும்) ஒன்று சேர்க்கப்படும்போது-
81:6 وَاِذَا الْبِحَارُ سُجِّرَتْۙ‏ 
81:6. கடல்கள் தீ மூட்டப்படும்போது-
81:7 وَاِذَا النُّفُوْسُ زُوِّجَتْۙ‏ 
81:7. உயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது-
81:8 وَاِذَا الْمَوْءٗدَةُ سُٮِٕلَتْۙ‏ 
81:8. உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது-
81:9 بِاَىِّ ذَنْۢبٍ قُتِلَتْ‌ۚ‏ 
81:9. “எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?” என்று-
81:10 وَاِذَا الصُّحُفُ نُشِرَتْۙ‏ 
81:10. பட்டோலைகள் விரிக்கப்படும் போது-
81:11 وَاِذَا السَّمَآءُ كُشِطَتْۙ‏ 
81:11. வானம் அகற்றப்படும் போது-
81:12 وَاِذَا الْجَحِيْمُ سُعِّرَتْۙ‏ 
81:12. நரகம் கொழுந்துவிட்டு எரியுமாறு செய்யப்படும் போது-
81:13 وَاِذَا الْجَـنَّةُ اُزْلِفَتْۙ‏ 
81:13. சுவர்க்கம் சமீபமாக கொண்டு வரப்படும்போது-
81:14 عَلِمَتْ نَفْسٌ مَّاۤ اَحْضَرَتْؕ‏ 
81:14. ஒவ்வோர் ஆத்மாவும், தான் கொண்டு வந்ததை அறிந்து கொள்ளும்.
81:15 فَلَاۤ اُقْسِمُ بِالْخُنَّسِۙ‏ 
81:15. எனவே, பின்னே விலகிச் செல்பவை (கிரகங்களின்) மீது சத்தியமாக-
81:16 الْجَوَارِ الْكُنَّسِۙ‏ 
81:16. முன் சென்று கொண்டிருப்பவை மறைபவை (மீதும்),
81:17 وَالَّيْلِ اِذَا عَسْعَسَۙ‏ 
81:17. பின்வாங்கிச் செல்லும் இரவின் மீதும்,
81:18 وَالصُّبْحِ اِذَا تَنَفَّسَۙ‏ 
81:18. மூச்சுவிட்டுக் கொண்டெழும் வைகறையின் மீதும் சத்தியமாக.
81:19 اِنَّهٗ لَقَوْلُ رَسُوْلٍ كَرِيْمٍۙ‏ 
81:19. நிச்சயமாக (இக்குர்ஆன்) மிகவும் கண்ணியமிக்க ஒரு தூதுவர் (ஜிப்ரீல் மூலம் வந்த) சொல்லாகும்.
81:20 ذِىْ قُوَّةٍ عِنْدَ ذِى الْعَرْشِ مَكِيْنٍۙ‏ 
81:20. (அவர்) சக்திமிக்கவர்; அர்ஷுக்குடையவனிடம் பெரும் பதவியுடையவர்.
81:21 مُّطَاعٍ ثَمَّ اَمِيْنٍؕ‏ 
81:21. (வானவர் தம்) தலைவர்; அன்றியும் நம்பிக்கைக்குரியவர்.
81:22 وَ مَا صَاحِبُكُمْ بِمَجْنُوْنٍ‌ۚ‏ 
81:22. மேலும் உங்கள் தோழர் பைத்தியக்காரர் அல்லர்.
81:23 وَلَقَدْ رَاٰهُ بِالْاُفُقِ الْمُبِيْنِ‌ۚ‏ 
81:23. அவர் திட்டமாக அவரை (ஜிப்ரீலை) தெளிவான அடிவானத்தில் கண்டார்.
81:24 وَمَا هُوَ عَلَى الْغَيْبِ بِضَنِيْنٍ‌ۚ‏ 
81:24. மேலும், அவர் மறைவான செய்திகளை கூறுவதில் உலோபித்தனம் செய்பவரல்லர்.
81:25 وَمَا هُوَ بِقَوْلِ شَيْطٰنٍ رَّجِيْمٍۙ‏ 
81:25. அன்றியும், இது விரட்டப்பட்ட ஷைத்தானின் வாக்கல்ல.
81:26 فَاَيْنَ تَذْهَبُوْنَؕ‏ 
81:26. எனவே, (நேர்வழியை விட்டும்) நீங்கள் எங்கே செல்கின்றீர்கள்?
81:27 اِنْ هُوَ اِلَّا ذِكْرٌ لِّلْعٰلَمِيْنَۙ‏ 
81:27. இது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும்.
81:28 لِمَنْ شَآءَ مِنْكُمْ اَنْ يَّسْتَقِيْمَؕ‏ 
81:28. உங்களில் நின்றும் யார் நேர்வழியை விரும்புகிறாரோ, அவருக்கு (நல்லுபதேசமாகும்).
81:29 وَمَا تَشَآءُوْنَ اِلَّاۤ اَنْ يَّشَآءَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِيْنَ‏ 
81:29. ஆயினும், அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (நல்லுபதேசம் பெற) நாடமாட்டீர்கள்.


தொடரும்....










SINCERELY.

RISHARD FAIS ABDUL FAREED,




“Let's plant trees and save the environment


Reply all
Reply to author
Forward
0 new messages