ஜகாத்
பற்றி விளக்கம் தேவை. நகைக்கு ஜகாத் உண்டா? சொந்த வீடு மற்றும் கடைக்கு கொடுக்க
வேண்டுமா? வீட்டில் உள்ள பொருள்களுக்குக் கொடுக்க வேண்டுமா? வீட்டு மனை நிலங்கள்
இருந்தால் அவைகளுக்கும் கொடுக்க வேண்டுமா? ...............
நாம் உபயோகிக்கக் கூடிய வீடு,
வீட்டுப் பொருள்கள் உட்பட எல்லாவற்றிற் கும் ஜகாத் கொடுக்க வேண்டுமா அல்லது சிலதை
கழித்துவிட்டு ஜகாத் கொடுக்க வேண்டுமா என்பதுபற்றி கருத்து வேறுபாடு நிலவுகிறது.
எனவே இதுபற்றி முதலில் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.
நாம் உபயோகிக்கும்
பொருட்கள் உட்பட எல்லாவற்றிற்கும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்போர் அதற்குச் சான்றாக
இரண்டு இறை வசனங்களைக் காட்டுகிறார் கள்.........
'(நபியே)
அவர்களுடைய பொருட்களிலிருந்து தர்மத்தை எடுத்துக் கொண்டு அவர்களை உள்ளும் - புறமும்
தூய்மைப் படுத்துவீராக' (அல் குர்ஆன் - 9:103)
இந்த வசனத்தில் 'மின் அம்வாலிஹிம்' என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
'அம்வால்' என்றால்... பொருட்கள் - செல்வம், நகைகள், கரன்ஸி, இதர நமது சம்பாத்தியத் தில்
வந்த அல்லது நமக்குப் பிறர் கொடுத்த, வாரிசு முறையில் வந்த எல்லாச் சொத்துக் களையும்
குறிக்கும். இறைவன் 'அம்வாலி' லிருந்து தர்மம் செய்யச் சொல்வ தால், நமது வீடு
அதிலுள்ள பொருள்கள் உட்பட எல்லாவற் றிற்கும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று இவர்கள்
கூறுகிறார்கள். இக்கருத்தை வழுப்ப டுத்தும் இன்னொரு வசனத்தையும் இவர்கள்
கூறுகிறார்கள்.
'எந்த செல்வத்திற்கு இறைவன் உங்களை
பிரதிநிதியாக்கினானோ அந்த செல்வத்தி லிருந்து செலவு செய்யுங்கள்' (அல்குர்ஆன் -
57:7)
இறைவன் பிரதிநிதியாக்கியுள்ளான் என்றால் அதில் நாம்
உபயோகிக்கும் பொருட்களும் அடங்கும் என்பது எல்லாவற்றிற்கும் ஜகாத் கொடுக்க வேண்டும்
என்பது இவர்களின் நிலைபாடு.
இதில் நமக்கு உடன்பாடில்லை. காரணம்: 'அம்வால்'
என்பதை இறைவன் எந்த அர்த்தத்தில் பயன்படுத்தியுள்ளான் என்பதை மற்ற வசனங்களைப்
பார்க்கும்போது விளங்கலாம்.
'எதை (இறைவழியில்) செலவு செய்ய வேண்டும் என்று உம்மிடம்
கேட்கிறார்கள். உங்கள் தேவைக்குப் போக மீதமுள்ளதைச் செலவு செய்யுங்கள் என்று
கூறுவீராக' (2:219)
இந்த வசனம் தெளிவாகவே 'அம்வாலை' இரண்டு
அர்த்தத்தில் பிரித்துவிடு கின்றன - ஒன்று முஸ்லிம்களின் சொந்தத் தேவைக் குரியவை மற்றொண்டு மேலதிகமானவை.
வாழ்வாதார தேவைக்குரியவைகளில் வீடும், வீட்டுப் பொருட்களும், வீட்டார்
பயன்படுத் திக் கொள்ளும் வாகனமும் அடங்கிவிடும். குடும்பத்திற்காகச் செலவிடப்படும்
தொகை ஜகாத் தொகைக்குரிய தகுதியைப் பெறாது.
முஸ்லிம்களின் சொந்தத்
தேவைக்குரியது என்ன என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள
வேண்டும்.
மனிதன் தன் வாழ்வாதாரத் தேவைகளை மிக வேகமாகப் பெருக்கிக் கொண்டு
வந்து விட்டான். மேற்கண்ட 2:219வது வசனம் இறங்கும்போது அந்த
மக்களின் தேவை வெகு சொற்பமே. வீடும், வாகனமும், உணவும், உடையும் போக மீதி இருப்பவை
அனைத்தும் மேலதிகமானதே. வளர்ச்சி பெற்ற நூற்றாண்டுகளில் குறிப்பாக இந்த
நூற்றாண்டில் மனிதனின் அத்தியாவசியத் தேவை அதிகப்பட்டு விட்டது. குளிர் சாதனப்
பெட்டிகள், தெலைகாட்சி, தொலைபேசி, இணையம் என்று ஒவ்வொன்றும் வசதிக் கேற்ப மனிதனுக்கு
அவசியமாகி விடுகிறது. பேரரிவாளனான இறைவன் இதையெல்லாம் உள்ளடக்கியே தன்னுடைய
வார்த்தையை பயன்படுத்தியுள்ளான். 'தமது தேவைக்குப் போக மீதமுள்ளதை'
என்று.
தேவைகள் அதிகரித்து அதற்கேற்ப வீட்டில் பொருட்கள் 'அம்வால்'
பயன்படுத் தப்பட்டால் அதற்கு ஜகாத் தேவையில்லை.
'தேவைக்குப் போக மீதமுள்ளதை தர்மம் செய்வதே சிறந்ததாகும்' என்ற
நபிமொழியும் இங்கு கவனிக்கத் தக்கது. (அபுஹுரைரா ரலி - புகாரி
14:26)
வீடு இல்லாதவர்கள் சொந்த வீடு கட்டுவத ற்காக நிலம் வாங்கி
போட்டிருந் தால், அவை வீடு கட்டுவதற்குரிய அளவுள்ள இடமாக இருந்தால் அதற்கு ஜகாத்
இல்லை.,,,,,,,, ஏனெனில், அவை நமது தேவைக்கு உட்பட்ட தாகும். அதிகப்படியான நிலங்கள் மேலதி கமான
சொத்தாக இருந்தால் அவற்றிற்கு ஜகாத் கொடுத்தாக வேண்டும்.
வருமானம் இல்லாமல் வீட்டு மனைகள் வாங்கப்பட்டிருந்தால் அவற்றின்
மதிப்பிற்கு ஜகாத் கொடுத்தாக வேண்டும்.
ஏனெனில் வங்கிகளில் பணம் சேமிக்கப் படுவது
போன்று இங்கு நிலங்களின் மீது பணம் சேமிக்கப் படுகிறது. மேலதிக 'அம்வால் களுக்கு
ஜகாத் கொடுக்க வேண்டு மென்ற இறைவனின் கட்டளையில் இந்த காலிமனைகள் அனைத்தும்
அடங்கிவிடும்.
பெண்கள் அணியும் நககைகள், பீரோவில் உள்ள நகைகள், லாக்கரில்
பூட்டப்பட் டுள்ள நகைகள் இவற்றிற்கும் ஜகாத் கொடுத்தாக வேண்டும்.
'யார் தங்கத்தையும் - வெள்ளியையும்
சேமித்து வைத்து அல்லாஹ்வின் பாதையில் அவற்றை செலவு செய்யாமல் வாழ்கிறார் களோ
அவர்களுக்குக் கடும் தண்டனை யுண்டு' (அல்குர்ஆன் -
9:34,35)
இறைவழியில் செலவு செய்யாமல் சேமித்து வைப்போருக்குத்
தண்டணை யுண்டு என்று கூறுவதால் அவற்றின் மீதும் ஜகாத் கடமை யாகிறது. பெண்கள்
தங்கத்தைச் சேர்த்து வைக்கவில்லை, அதன் மூலம் தம்மை அழகுபடுத்திக் கொள்கிறார்கள்
அதனால் அதற்கு ஜகாத் தேவையில்லை என்றெல் லாம் யாரும் சமாதானம் சொல்ல முடியாது.
தம்மை
அழகுபடுத்திக் கொண்டு தொழ வந்த பெண்களிடம்தான் நபி அவர்கள் உபதேசம்
செய்கிறார்கள். உடனே பெண்கள், தமது காது வளையங்கள், கால் மெட்டிகள், வளையல் கள்
எல்லாவற்றையும் கழற்றி அவற்றை இறைவனின் பாதையில் கொடுக்கிறார்கள்.
(புகாரி)
பெண்கள் தமது கைகளில் அணிந்திருந்த தங்கக்
காப்புகளுக்கு நபி (ஸல்) அவர்கள் ஜகாத் கொடுக்கச் சொன்ன விபரம் அமீரிப்னு
ஷுஐப்(ரலி) அறிவித்து அபூதாவூதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, பெண்கள்.....
தங்க நகைகளுக்கு ஜகாத் கொடுக்கத்தான் வேண்டும் ...........................................................................