இஸ்லாமிய எழுச்சி...

55 views
Skip to first unread message

Rishard Fais Abdul Fareed

unread,
Feb 6, 2017, 6:20:28 AM2/6/17
to Muslim watch, SL Muslims.., Akpgroup
فَاِذَا قَرَاْتَ الْقُرْاٰنَ فَاسْتَعِذْ بِاللّٰهِ مِنَ الشَّيْطٰنِ الرَّجِيْمِ‏ 
16:98. மேலும் (நபியே!) நீர் குர்ஆனை ஓதுவீராயின் (முன்னதாக) வெருட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் காவல் தேடிக்கொள்வீராக.

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

اَلرَّحْمٰنُۙ‏ 
55:1. அளவற்ற அருளாளன்,
55:2 عَلَّمَ الْقُرْاٰنَؕ‏ 
55:2. இக் குர்ஆனை (அவன்தான்) கற்றுக் கொடுத்தான்.
55:3 خَلَقَ الْاِنْسَانَۙ‏ 
55:3. அவனே மனிதனைப் படைத்தான்.
55:4 عَلَّمَهُ الْبَيَانَ‏ 
55:4. அவனே மனிதனுக்கு (பேச்சு) விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தான்.

اِنَّنِىْۤ اَنَا اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّاۤ اَنَا فَاعْبُدْنِىْ ۙ وَاَقِمِ الصَّلٰوةَ لِذِكْرِىْ‏ 

20:14. “நிச்சயமாக நாம் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை; ஆகவே, என்னையே நீர் வணங்கும், என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக.

يٰمُوْسٰۤى اِنَّـهٗۤ اَنَا اللّٰهُ الْعَزِيْزُ الْحَكِيْمُۙ‏ 
27:9. “மூஸாவே! நிச்சயமாக நானே அல்லாஹ்! (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்.

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اذْكُرُوْا اللّٰهَ ذِكْرًا كَثِيْرًا ۙ‏ 
33:41. ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகமதிகமான திக்ரைக் கொண்டு திக்ரு (தியானம்) செய்யுங்கள்.
وَّ سَبِّحُوْهُ بُكْرَةً وَّاَصِيْلًا‏ 
33:42. இன்னும், காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்யுங்கள்.
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ‏ 
51:56. இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.


அகிலங்கள் அனைத்தையும் படைத்துப் போஷ்இத்துப் பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே எல்லாப் புகழும். எம்மைப் படைத்த இறைவன் எமக்கு எவ்வாறு வாழவேண்டும் என்பதையும் கற்றுத்தருகின்றான்.

உதாரணமாக ஒருவர் அல்லது ஒரு விஞ்ஞானி ஒரு எந்திர மனிதனைக் கண்டுபிடிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்; அவருக்கே நன்கு தெரியும் அதை எப்படி இயக்குவது, எக்காரணிகள் அதைப் பழுதடையச் செய்யும், எவற்றால் அதற்கு பாதிப்பு ஏற்படும், எவ்வெப்ப நிலையை அது தாங்கிக்கொள்ளும் என்பதெல்லாம். இதே போன்று நம்மைப் படைத்த ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே தெரியும் நாம் எவ்வாறு இந்தப் பூமியில் வாழ வேண்டும், எவற்றைச் செய்தால் நமது வாழ்க்கை நஷ்டத்திற்குச் செல்லும், வாழ்வில் எத்தருணத்தில் எப்படி முடிவுகளை எடுக்க வேண்டும், எம்முடிவுகளை எடுத்தால் நமக்கு வெற்றி கிடைக்கும், எம்முடிவுகளை எடுத்தால் நாம் தோல்வியைத்தழுவ நேரிடும் என்பவை மட்டுமல்லாது அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அல்-குர்ஆன், சுன்னா அடிப்படையில் எப்படி தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பது அல்லாஹ் சொல்லிக்காட்டியது மட்டுமல்லாமல் அதைச் செய்து காட்ட எம் பெருமானார் (ஸல்) அவர்களை அகிலங்களுக்கு அருட்கொடையாக இந்தப் பூமிக்கு அனுப்பி அதைச் செய்துகாட்ட வைத்துள்ளான்.

لَـقَدْ جَآءَكُمْ رَسُوْلٌ مِّنْ اَنْفُسِكُمْ عَزِيْزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيْصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِيْنَ رَءُوْفٌ رَّحِيْمٌ‏ 
9:128. (முஃமின்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது; அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார்; இன்னும் முஃமின்கள் மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக இருக்கின்றார்.

قُلْ اِنَّمَا يُوْحٰۤى اِلَىَّ اَنَّمَاۤ اِلٰهُكُمْ اِلٰـهٌ وَّاحِدٌ‌  ۚ فَهَلْ اَنْـتُمْ مُّسْلِمُوْنَ‏ 
21:108. “எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருப்பதெல்லாம்: “உங்கள் நாயன் ஒரே நாயன் தான்” என்பதுதான்; ஆகவே நீங்கள் அவனுக்கு வழிப்பட்டு நடப்பீர்களா?” (என்று நபியே!) நீர் கேட்பீராக!

لَقَدْ كَانَ لَكُمْ فِىْ رَسُوْلِ اللّٰهِ اُسْوَةٌ حَسَنَةٌ لِّمَنْ كَانَ يَرْجُوا اللّٰهَ وَالْيَوْمَ الْاٰخِرَ وَذَكَرَ اللّٰهَ كَثِيْرًا ؕ‏ 
33:21. அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.
مَا كَانَ مُحَمَّدٌ اَبَآ اَحَدٍ مِّنْ رِّجَالِكُمْ وَلٰـكِنْ رَّسُوْلَ اللّٰهِ وَخَاتَمَ النَّبِيّٖنَ ؕ وَكَانَ اللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمًا‏ 
33:40. முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன். 

يٰۤـاَيُّهَا النَّبِىُّ اِنَّاۤ اَرْسَلْنٰكَ شَاهِدًا وَّمُبَشِّرًا وَّنَذِيْرًا ۙ‏ 
33:45. நபியே! நாம் நிச்சயமாக உம்மைச் சாட்சியாகவும்; நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம்.
33:46 وَّدَاعِيًا اِلَى اللّٰهِ بِاِذْنِهٖ وَسِرَاجًا مُّنِيْرًا‏ 
33:46. இன்னும் அல்லாஹ்வின் பால் (மனிதர்களை) - அவன் அனுமதிப்படி - அழைப்பவராகவும்; பிரகாசிக்கும் விளக்காகவும் (உம்மை அனுப்பியுள்ளோம்.)

اِنَّ اللّٰهَ وَمَلٰٓٮِٕكَتَهٗ يُصَلُّوْنَ عَلَى النَّبِىِّ ؕ يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا صَلُّوْا عَلَيْهِ وَسَلِّمُوْا تَسْلِيْمًا‏ 
33:56. இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்.

مُحَمَّدٌ رَّسُوْلُ اللّٰهِ‌ ؕ وَالَّذِيْنَ مَعَهٗۤ اَشِدَّآءُ عَلَى الْكُفَّارِ رُحَمَآءُ بَيْنَهُمْ ‌ تَرٰٮهُمْ رُكَّعًا سُجَّدًا يَّبْتَغُوْنَ فَضْلًا مِّنَ اللّٰهِ وَرِضْوَانًا‌سِيْمَاهُمْ فِىْ وُجُوْهِهِمْ مِّنْ اَثَرِ السُّجُوْدِ‌ ؕ ذٰ لِكَ مَثَلُهُمْ فِى التَّوْرٰٮةِ ۛ ۖۚ وَمَثَلُهُمْ فِى الْاِنْجِيْلِ ۛۚ كَزَرْعٍ اَخْرَجَ شَطْئَـهٗ فَاٰزَرَهٗ فَاسْتَغْلَظَ فَاسْتَوٰى عَلٰى سُوْقِهٖ يُعْجِبُ الزُّرَّاعَ لِيَـغِيْظَ بِهِمُ الْكُفَّارَ‌ ؕ وَعَدَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ مِنْهُمْ مَّغْفِرَةً وَّاَجْرًا عَظِيْمًا‏ 
48:29. முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும்; அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது: அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாளமிருக்கும்; இதுவே தவ்ராத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும், இன்ஜீலுள்ள அவர்கள் உதாரணமாவது: ஒரு பயிரைப் போன்றது; அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது; பின்னர் அது பருத்துக் கனமாகி, பிறகு விவசாயிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில், அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது; இவற்றைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோப மூட்டுகிறான் - ஆனால் அவர்களில் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களிக்கின்றான்.

وَاِنَّكَ لَعَلٰى خُلُقٍ عَظِيْمٍ‏ 
68:4. மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.


நபி (ஸல்) அவர்கள் அவரது வாழ்வின் எல்லாக்கட்டங்களிலும் சோதிக்கப்பட்டு, அச்சோதனைகள் அனைத்திலும் அல்லாஹ் ஒருவனை உறுதிகொண்டு தன் வாழ்க்கையில் வெற்றி கண்ட மனிதராவார். அல்லாஹ் அவரையே பின்பற்றுமாறு நம்மைக் கட்டளையிடுகின்றான். நமது வாழ்க்கை அல்லாஹ் ஒருவனின் திருப்பொருத்தத்தை அடைவதை மட்டுமே நோக்காகக் கொண்டதாக அமைய வேண்டும். 
இதன்மூலமே நாம் இம்மையிலும் மறுமையிலும் வெற்றியடைய முடியும்.



30:44 مَنْ كَفَرَ فَعَلَيْهِ كُفْرُهٗ ‌ۚ وَمَنْ عَمِلَ صَالِحاً فَلِاَنْفُسِهِمْ يَمْهَدُوْنَۙ ‏ 
30:44. எவன் நிராகரிக்கின்றானோ அவனுக்கே அவனது நிராகரிப்பு கேடாகும். எவர் ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்கின்றாரோ அவர்கள் தங்களுக்கே நன்மையைச் சித்தப்படுத்திக் கொள்கிறார்கள்.
30:45 لِيَجْزِىَ الَّذِيْنَ اٰمَنُوا وَعَمِلُوْا الصّٰلِحٰتِ مِنْ فَضْلِهٖ‌ؕ اِنَّهٗ لَا يُحِبُّ الْكٰفِرِيْنَ‏ 
30:45. ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்தவர்களுக்கே அவன் தன் அருளிலிருந்து (நற்) கூலி கொடுக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிக்கமாட்டான்.

நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்னர் தன் தந்தையை இழந்து தன் குழந்தைப் பருவத்தில் தாயை இழந்து தனது இழமைக்காலத்திலேயே சோதிக்கப்பட்ட மனிதராவார்... இருந்தபோதும் நம்பிக்கை இழக்கவில்லை. 

வீதியால் ஒரு கர்ப்பிணிப் பெண் சென்றால் அவளின் வயிற்றில் இருக்கின்ற குழந்தை ஆணா? அல்லது பெண்ணா? என்று சோதிப்பதற்காக வயிற்றைக் கிழித்துப் பார்த்த காலம் அது. 'அய்யாமுல் ஜாஹிலிய்யா'  என்று வர்ணிக்கப்படும் 'மடைமைக் காலம்' அது. 

புனித கஅபாவிற்குள் 360 இற்கும் மேற்பட்ட சிலைகளை வைத்து வணங்கிய காலம் அது. மனித உயிருக்கு அறவே பெறுமதி இல்லாத காலம் அது. அக்காலத்தில் 'அல்லாஹ் ஒருவனே' என்று ஆணித்தரமாக, யாருக்கும் அஞ்சாமல் உறுதியுடன் நின்று வெற்றி கண்டார்.

பெண்களை வியாபாரப் பண்டங்கள் போன்று பயன்படுத்திய காலம் அது.. பிடித்தால் வைத்துக்கொண்டு பிடிக்கவில்லையாயின் சந்தையில் விலை கூவி விற்றுவிட்ட காலம் அது.
அக்காலகட்டத்தில் "பெண்களும் ஆண்களைப் போன்றவர்களே..! அவர்களுக்கும் உரிமைகள் உள்ளன. அவர்களுக்கும் எம்மைப்போன்று அனைத்து உணர்வுகளும் உள்ளன" என்று புரியவைத்தார்.

பெண்ணுக்காகவும், பொன்னுக்காகவும் ஒருவரை ஒருவர் கொலை செய்பவர்களாகவும், வட்டி, விபச்சாரம், பொய், களவு போன்றவை தலை விரித்தாடிய காலத்தில் வாழ்ந்த மிருக குணம் கொண்டவர்களை மனிதப் புனிதர்களாக்கிய மாமனிதர்தான் எம் பெருமானார் (ஸல்) அவர்கள்.

தனது வாழ்வின் இழமைக் காலத்தைக்கூட எந்தவொரு கேளிக்கைகளிலோ அல்லது வீண் விளையாட்டுக்களிலோ கழிக்காத மனிதர். தனது மர்மஸ்தானத்தையும், நாவையும் பாதுகாத்துக்கொண்ட ஒரு மனிதர் உலகில் அவரைத்தவிர வேறு யாரும் இருக்க முடியாது.

தனது வாழ்வின் இழமைக் காலத்தைக்கூட எந்தவொரு கேளிக்கைகளிலோ அல்லது வீண் விளையாட்டுக்களிலோ கழிக்காத மனிதர். தனது மர்மஸ்தானத்தையும், நாவையும் பாதுகாத்துக்கொண்ட ஒரு மனிதர் உலகில் அவரைத்தவிர வேறு யாரும் இருக்க முடியாது. 
தன் இளம் வயதிலேயே 'அல் அமீன்' (உண்மையாளர்), 'அஸ் ஸாதிக்' (நம்பிக்கையாளர்) என்ற பெயர் பெற்று..  முழு மக்காவுமே அவரின் நம்பிக்கைக்கும் உண்மைக்கும் சான்றாக இருக்குமளவு பண்புகளில் சிறந்த மனிதர்.

இளம் வயதில் தான் வாழ்ந்த சமுதாயத்தில் நடக்கின்ற அநியாயங்கள், அட்டூளியங்கள், கொடுமைகள், பாவங்கள்,  பணக்காரர்
 ஏழைகளை நசுக்குவது, வட்டி, விபச்சாரம், கொலை, களவு போன்றவற்றைக்கண்டு உள்ளத்தில் கவலை கொண்டார். இவற்றை அழித்தொழிக்க நாடினார். உருவமற்ற ஒரே நாயனாகிய அல்லாஹ்வை நாட்டம் கொண்டார். அனைத்து கொடுமைகளிலும், பாவங்களிலும் இருந்து ஒதுங்கி 'ஹிறா' எனும் குகையை நாடினார்.


அவரது நாற்பதாவது வயதில்வ ல்ல இறைவன் அல்லாஹ் ஒருவனிடமிருந்து 'வஹீ' (
இறை வெளிப்பாடு) வந்தது... வானவர்களின் தலைவரான ஜிப்ரீல் (அலை) அவர்களின் மூலமாக.

اِقْرَاْ بِاسْمِ رَبِّكَ الَّذِىْ خَلَقَ‌ۚ‏ 
96:1. (யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக.

خَلَقَ الْاِنْسَانَ مِنْ عَلَقٍ‌ۚ‏ 
96:2. “அலக்” என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.

اِقْرَاْ وَرَبُّكَ الْاَكْرَمُۙ‏ 
96:3. ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.

الَّذِىْ عَلَّمَ بِالْقَلَمِۙ‏ 
96:4. அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.

عَلَّمَ الْاِنْسَانَ مَا لَمْ يَعْلَمْؕ‏ 
96:5. மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக மடமையிலும், மூட நம்பிக்கைகளிலும் மூழ்கிக் கிடந்தவர்களின் இறை கொள்கைகளையும் பழக்கவழக்கங்களையும் மாற்றுகின்றதென்பது, அவர்களை நேர்வழிக்கு அழைத்துவருவது என்பது எவ்வளவு சிரமமான காரியம் என்பதை அவரை ஆரம்பத்தில் பின்பற்றிய நபித் தோழர்களுக்கு உணரச் செய்தார்.

பொறுமை, சகிப்புத்தன்மை, இறைவனின் நேர்வழிக்கு மக்களை அழைக்கும்போது ஏற்படும் இன்னல்களையும், சிரமங்களையும், சோதனைகளையும் சகித்துக்கொள்ளல் என்பவற்றை செயல்முறை ரீதியாக செய்துகாட்டியதோடு அவரைப்பின்பற்றியவர்களையும் அவ்வாறான இடர்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை செயலாற்றச் செய்தார்.

இவர்களில் முதன்மையானவர்களாக நபி (ஸல்) அவர்களின் துணைவியார் அன்னை கதீஜா (றழி), சிறிய தந்தையின் மகன் அலி (றழி), வளர்ப்பு மகன் ஸைத் (றழி), 
அபூபக்ர் ஸித்தீக் (றழி),
 சிறிய தந்தை ஹம்ஸா (றழி), முஷ்ஹப் (றழி), யாஸிர் (றழி), சுமையா (றழி) (இவர்தான் இஸ்லாத்திற்காக முதன்முதல் உயிர் நீத்த பெண்மணி ஆவார்), அம்மார் (றழி), 
ஜஹ்பர் (றழி), 
ஹுதைபா (றழி), 
பிலால் (றழி)
 
ஆகியோர் 
வர்.

தொட
ரு
ம்...





SINCERELY.

RISHARD FAIS ABDUL FAREED,




“Let's plant trees and save the environment


Reply all
Reply to author
Forward
0 new messages