பெரியார் - அம்பேத்கர் நினைவு ஓவியப்போட்டி முடிவுகள்

0 views
Skip to first unread message

நாளைவிடியும் அரசெழிலன்

unread,
Apr 18, 2025, 6:21:26 AM4/18/25
to மாணவர் மின்னல்
நாளை விடியும் இதழின் சார்பில் பெரியார் - அம்பேத்கர் நினைவு ஓவியப்போட்டி ஒன்றினை இவர்கள் இருவரின் நினைவு நாள்கள் வருகிற மாதமான கடந்த திசம்பர் மாதம் பெரியார் அம்பேத்கர் இருவரும் இணைந்து இருப்பது மாதிரியான ஓவியப்போட்டியாக  அறிவித்திருந்தோம்.

எல்லா வயதினருக்குமான பொதுப்போட்டி என்றுதான் அறிவித்திருந்தோம். ஆனால் எதிர்பாராத வகையில் நான்காம் வகுப்பு மாணவர்களில் இருந்து நிறையப் பள்ளி மாணவர்களும் ஓவியங்களை அனுப்பி இருந்தனர். மொத்தம் 350 ஓவியங்கள் வந்திருந்தன. பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களைத் தனியாகப் பிரித்து பரிசுகளை இரு வகையாக அறிவித்திருக்கிறோம். 

பலரும் சிறப்பாகப் பங்கெடுத்து இருக்கின்றனர்.

பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பிரிவில் முதல் மூன்று  பரிசுக்குரியவர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்கள் அனைவரும் அரசுப் பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அரசுப் பள்ளி மாணவர்கள் மீதான கரிசனையில் தேர்வாளர் இவர்களைத் தெரிவு செய்து விட்டார் என யாரும் எண்ணிவிட வேண்டாம். பெயர், முகவரி இல்லாமல் வெறும் ஓவியங்களை மட்டுமே தேர்வாளருக்கு அனுப்பி இருந்தேன்.

இரு பிரிவிலும் மொத்தம் வந்த 350 ஓவியங்களிலிருந்து  சிறந்த 40, 40 ஓவியங்களைத் தெரிவு செய்து தேர்வுக்கு அனுப்பியிருந்தேன்.

பொதுப் பிரிவில்

முதல் பரிசு: செ.சினேகா, சிவகங்கை.

இரண்டாம் பரிசு:
ஹரிஷ், திருநெல்வேலி 

மூன்றாம் பரிசு: 
லெ. பிரபா, பட்டுக்கோட்டை.

பத்தாம் வகுப்பு வரையிலான ஓவியங்களுக்கான 

முதல் பரிசு:
சு. புவனேசுவரன், நெல்லிக்குப்பம்.

இரண்டாம் பரிசு:
சு.பி. அஸ்வத்,
பவானி.

மூன்றாம் பரிசு:
க. ஜோஷ்வா,
காஞ்சிபுரம்.

தன்னுடைய பணிச் சூழல்களுக்கிடையே சிறந்த ஓவியங்களைத் தெரிவு செய்து அனுப்பிய  ஈரோடு தோழர் ஓவியர் மு. சுந்தரன்   அவர்களுக்கு நன்றி!

போட்டிக்கான செய்தியைப் பகிர்ந்த முகநூல் நண்பர்கள், பகிரிக் குழுக்களின் (WhatsApp groups) ஒருங்கிணைப்பு நிர்வாகிகள் (group admins) அனைவருக்கும் நன்றி!

போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகளும்.. பாராட்டுகளும்...

பொதுப் பிரிவில் முதலிடம் பெற்ற, கல்லூரி மாணவர் சினேகாவின் ஓவியத்தையும் பத்தாம் வகுப்புக்குக் கீழுள்ள பிரிவில் முதலிடம் பெற்ற
 சு. புவனேஸ்வரனின் ஓவியத்தையும் இணைத்துள்ளேன்.

பணப்பரிசும் பரிசுக்கான நூல்களும்  அனைவருக்கும் அனுப்பப் பட்டுவிட்டன..

மீண்டும் அனைவருக்கும் வாழ்த்துகள்!
 

சு. புவனேசுவரன், நெல்லிக்குப்பம்.jpg
செ. சிநேகா, சிவகங்கை.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages