இந்திய சங்கங்களுக்கான சட்டம் (Indian societies Act) மற்றும் தமிழ்நாடுசங்க பதிவுசட்டம் 1975 மற்றும் 1978 ஆகியவை, ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இயற்றப்பட்ட 1860 சங்க பதிவு, மற்றும் சங்க நடத்தை சட்டங்களை அடிப்படையாக கொண்டு வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு கால கட்டங்களில் அமல் படுத்தப்பட்டு திருத்தப்பட்டு, ஒழுங்குமுறைபடுத்தப்பட்டு, தற்பொழுது அமுலில் உள்ளதாகும்.
மேற்க்கண்ட சட்டத்தில் கூறியுள்ளபடி சங்கம் என்பது.
(a) பதிவு செய்யப்பட்ட சங்கம் (registered society)
(b) பதிவு செய்யும் நிகர்நிலையில் உள்ள சங்கம் (deemed to be registered society) இவை இரண்டும் 1975 தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் வருபவை.
மேலும்
கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டிய சங்கங்கள் societies need to be compulsorily registered)
பதிவு செய்ய முடியாத சங்கங்கள் (societies which can not be registered under societies act)
விருப்பின்படி பதிவு செய்யக்கூடிய சங்கங்கள் (societies of optional registration) இவையும் தமிழ்நாடு சங்க பதிவு சட்டம் 1975 மற்றும் 1978ன் கீழ் வருபவை.
சங்கங்களின் சட்டத்தின்படி
நமது சங்கம் 20 அதற்க்கு மேல் உருப்பினர்களை கொண்டுள்ளதாலும்.
எந்த நிதியாண்டிலும் சங்கத்தின் ஆண்டு வரவு செலவு ரூபாய் 10,000/- (பத்தாயிரம்) மேல் உள்ளதாலும்
நமது சங்கமானது கட்டாயமாக பதிவு செய்யப்பட்வேண்டிய சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டியதாகும்.
சங்கம் தோற்றுவித்தல்.
குறைந்தபட்சம் ஏழு உறுப்பினர்களுடன், கிழ் கண்ட நோக்கங்களையும் குறிக்கோள்களையும் கொண்டு சங்கத்தை தோற்றுவித்து பதிவு செய்யலாம். அவற்றில் சில
கல்வி, இலக்கியம், பொழுதுபோக்கு,கலை,சமூக சீர்திருத்தம், விளையாட்டு,சமூகப்பனி, தொழில் சார்ந்த பயணுள்ள அறிவை விரிவாக்குதல், பகிர்ந்து கொள்தல், தொழில் சார்ந்த பொதுவான ஒருவருக்கொருவர் சார்ந்த பாதுகாப்பு, மற்றும் தொழில் சார்ந்த பயிற்ச்சி etc.
தொடரும்.
P.Padmanabhan
Perfect Computer Services,N0. 6. RMS Building, 1st floor, 9th cross, Thillainagar, Trichy.
620018. mobile- 9842431014- Dot- 0431 2743014.