| "முத்தம் கொடுத்தேனா?" இல்லை என்கிறார் சொர்ணமால்யா | |
|
| Tuesday, 15 April 2008 | |
|
நடிகை சொர்ணமால்யா, இளைஞர் ஒருவருக்கு உதட்டுடன் உதடு வைத்து முத்தம் தருவது போன்ற படம் இணையதளம், செல்போன்களில் பரவி வருகிறது.
'அப்படத்தில் இடம்பெற்றிருப்பது நானில்லை. இது எனக்கு எதிரான சதி' என மறுத்துள்ளார் சொர்ணமால்யா.
இணையதளம், செல்போன்களில் பரவி வரும் இப்படத்தில் இளைஞர் ஒருவரின் உதட்டுடன் உதடு வைத்து சொர்ணமால்யா முத்தம் கொடுப்பதுபோன்று உள்ளது.
இது குறித்து சொர்ணமால்யா கூறியதாவது:
இணையதளம், செல்போன்களில் இது போன்ற படம் வெளியாகி இருப்பது எனக்கு மனஉளைசசலை தந்துள்ளது. அந்த படத்தில் இருப்பது நான் அல்ல. தொழில்நுட்ப வளர்ச்சியை சமூக விரோதிகள் எப்படி தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதை இப்படத்தால் அறியலாம். மோசடித்தனமாக எனது முகவெட்டுடன் கூடியவரை படத்தில் பயன்படுத்தியுள்ளனர். எனது பெயருக்கு களங்கம் ஏறபடுத்தவே இவ்வாறு செய்கிறார்கள்.
ஆனால் நான் மிகவும் தைரியமான பெண். எனது குடும்பத்தாரின் ஆதரவும் எனக்கு உள்ளது. நல்ல பண்பாடு கொண்ட குடும்பத்தில் பிறந்தவள் நான். இதுபோன்ற இழிவான விஷயங்களை என்னால் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் எனக்கு நடந்தது, கல்லூரி செல்லும் ஒரு பெண்ணுக்கு நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? தவறு செய்பவர்கள் இதை உணர வேண்டும்.
இவ்வாறு சொர்ணமால்யா கூறினார். .
அர்ஜுன் என்ற வெளிநாட்டு தொழிலதிபரை திருமணம் செய்த சொர்ணமால்யா, கருத்து வேறுபாடால் அவரை பிரிந்தார். இது போன்ற சர்ச்சைகளில் பலமுறை சொர்ணமால்யா சிக்கியுள்ளார். ஏற்கெனவே அவர் இடம்பெறுவது போன்ற ஆபாச படம் இணையதளத்தில் வெளியானது. அதன்பின் காஞ்சி சங்கர மடம் வழக்கிலும் தொடர்புபடுத்தப்பட்டு பரபரப்பாக பேசப்பட்டார். |