[திரு அண்ணாமலை ஜோதிடம்] ஜோதிட கேள்விகள்

233 views
Skip to first unread message

?????? ??????? S.?????? ?????????

unread,
Jul 14, 2009, 7:34:00 PM7/14/09
to aa...@googlegroups.com

அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது?


சுக்கிரநாடி, ஜாதகலங்காரம், நந்தி வாக்கியம் ஆகிய பண்டைய ஜோதிட நூல்களில் 8ஆம் பாவம் என்று தனிப்பிரிவே ஒதுக்கப்பட்டுள்ளது. ஜோதிடத்தில் 8ஆம் இடம்தான் ஆயுள் ஸ்தானத்தை குறிக்கிறது. இதற்கு அடுத்தபடியாக 8ஆம் பாவத்தில் சில பிரிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் துர்மரணம், அகால மரணம் உள்ளிட்ட நிகழ்வுகள் பற்றி கூறப்பட்டுள்ளது. பொதுவாக லக்னத்திற்கு 8ஆம் இடம்தான் ஆயுள் ஸ்தானம் என்றாலும், 6ஆம் இடம்தான் துர்மரணத்தை குறிக்கும் இடமாகும். மேஷ லக்னத்திற்கு 6க்கு உரியவர் புதன். அவர்களுக்கு புதன் தசையில், சனி புக்தி நடக்கும் போது, கோச்சாரத்தில் ராகு, கேது, சனி ஆகியவை சரியில்லாமல் இருக்கும் போது மூச்சுத் திணறி இறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. உணவு சாப்பிட்டுவிட்டுப் படுத்தார், திடீரென்று மூச்சடைத்து இறந்து விட்டார் என்று சிலரைப் பற்றிக் கூறுவார்கள். எனவே, அதுபோன்ற நிலையில் உள்ளவர்கள் சாப்பிடும் போது பேசக் கூடாது. நிதானமாக உணவு அருந்த வேண்டும். மாறாக சாப்பிடும் போது பேசினால் உணவுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு அதனாலும் மரணம் நிகழும். ரிஷப லக்னத்திற்கு 6க்கு உரியவன் சுக்கிரன். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் ஓரளவு சமாளிக்கும் தன்மை படைத்தவர்களாக இருப்பார்கள். துர்மரணம் அவ்வளவு சீக்கிரத்தில் ஏற்படாது. அடுத்ததாக மிதுன லக்னத்திற்கு 6க்கு உரியவனாக செவ்வாய் வருகிறார். எனவே, செவ்வாய் தசை வரும் போது இவர்கள் கவனமாக இருக்க வேண்டும். செவ்வாய் நெருப்புக்கு உரிய கிரகம் என்பதால் சமையல் பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த லக்னக்காரர்கள் தங்கள் வீட்டில் உள்ள எரிவாயு சிலிண்டரில் இருந்து அடுப்புக்கு செல்லும் வாயுக் குழாயை புதிதாக மாற்றிவிட வேண்டும். செவ்வாய் மின்சாரத்திற்கும் உரிய கிரகம் என்பதால், வீட்டில் உள்ள மின்சாதனங்களை முறையாக சர்வீஸ் செய்யச் செய்வதுடன், ஹீட்டர் உள்ளிட்ட உபகரணங்களை கையாள்வதில் அதிக கவனம் செலுத்தச் சொல்கிறோம் சகோதரத்துவத்திற்கும் உரிய கிரகம் செவ்வாய் என்பதால் சகோதரர்களுக்கு இடையிலான வாய்த்தகராறு கூட தற்கொலையைத் தூண்டும் அளவுக்கு கொண்டு சென்று விடும். மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் தசை, புக்தி நடக்கும் போது கோச்சார கிரகங்கள் சரியில்லாமல் இருந்தால் மேற்கூறிய நிகழ்வுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. செவ்வாய் 6ஆம் அதிபதியாகப் பெற்றவர்கள் தீக்குளித்தும் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வது உண்டு. கடக லக்னத்திற்கு 6க்கு உரியவர் குரு. இவரே பாக்கியாதிபதியாகவும் வருகிறார். ஆனால் குரு தசை, புக்தி நடக்கும் போது அவரே துர்மரணத்தையும் அளிப்பவராக விளங்குகிறார். வங்கியில் இருந்து பெரும் தொகையை எடுத்துக் கொண்டு காரில் வரும் போது, மர்ம நபர்களால் வழிமறிக்கப்பட்ட ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகிறார். பணம் பறிக்கப்படுகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படும் அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழக்கிறார். பணத்திற்கு அதிபதியான குரு, பணத்தின் மூலமே அவருக்கு துர்மரணத்தை ஏற்படுத்தியுள்ளார். எனவே எந்த லக்னமாக இருந்தாலும் 6ஆம் அதிபதி யார் என்று பார்க்க வேண்டியது அவசியம். 6ஆம் அதிபதியின் தசை, புக்தி நடக்கும் போது அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும் ஜோதிடத்தைப் பொறுத்த வரை இறப்பு எனக் கூறுவது கிடையாது. அதனை கண்டம் என்றே ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. அதனைக் கடந்து விட்டால் அவர் தொடர்ந்து உயிர் வாழ்வார் என்பதால் அதனை இறப்பு/மரணம் எனக் குறிப்பிடக்கூடாது.

தென்னாடுடைய சிவனே!

அன்பே சிவம்...Om Namasivaya

திரு அண்ணாமலை ஜோதிடம்,

அருள்மிகு ஸ்ரீ பாலீஸ்வரன் திருக்கோயில்


S.சங்கர் குருக்கள்

http://sankarngpd.wordpress.com/

http://omsivasivaom.blogspot.com/

http://sankarngpd.mywebdunia.com/

http://temple.mywebdunia.com/

http://astrology-vastu.mywebdunia.com/

http://sankarngpd.blogspot.com/

http://paleeswarantemple.blogspot.com/

http://newgummidipundi.blogspot.com/

http://sankarngpd.spaces.live.com

http://srirajaganapathy.blogspot.com/

http://jothidamvasthu.blogspot.com/

http://omsivayanamaga.blogspot.com/

கும்மிடிப்பூண்டி
+919444175185

வாழ்க வளமுடன்!


--
7/15/2009 05:04:00 AM அன்று திரு அண்ணாமலை ஜோதிடம் இல் ”ஜோதிட திலகம்” S.சங்கர் குருக்கள் ஆல் இடுகையிடப்பட்டது

?????? ??????? S.?????? ?????????

unread,
Jul 15, 2009, 10:05:03 PM7/15/09
to aa...@googlegroups.com
ஜோதிட விளக்கங்கள் : காரகோ பாவனாசாய

ஜோதிடத்தில் "காரகோ பாவனாசாய" என்னும் கருத்து நிலவுகிறது. என்னவென்றால் ஒவ்வொரு கிரகமும் எவைகளுக்கெல்லாம் காரகத்துவம் வகிக்கின்றதோ, அந்தந்தக் காரகங்களைக் குறிக்கும் வீட்டில் இருந்தால் அந்தக் காரகத்துவம் சரியாக இருக்காது. ஏதோ விடுகதை போடுவதைப் போல் இருக்கிருக்கிறது அல்லவா? இன்னும் கொஞ்சம் விளக்கமாக எழுதுவோம்.

உதாரணமாக சூரியன் தந்தைக்குக் காரகனாகின்றார். தந்தையைக் குறிக்கும் வீடு ஒன்பதாம் வீடு ஆகும். தந்தையைக் குறிக்கின்ற சூரியன் தந்தைக்குக் காரகமாய் இருக்கின்ற ஒன்பதாம் வீட்டில் இருந்தால் தந்தைக்கு ஆகாது. இது தந்தைக்கு கண்டத்தைக் கொடுக்கும் என்ற கருத்து நிலவுகிறது.

அதேபோல் தாயாருக்குக் காரகம் வகிக்கின்ற சந்திரன் 4-ம் இடமான தாயார் ஸ்தானத்தில் இருந்தால் அது தாயாருக்குக் கண்டம். அதாவது இளம்வயதிலேயே தாயாரை இழக்க வேண்டியது இருக்கும்.

குரு புத்திர காரகன்; தன காரகன்; புத்திரத்தைக் குறிக்கும் 5-ம் வீட்டில் குரு இருந்தால் புத்திர நாசம் உண்டாகும். தனத்தைக் குறிக்கின்ற 2-ம் வீட்டில் குரு இருந்தால் அவருக்கு பணக் கஷ்டம் உண்டாகும்.

புதன் வித்யாகாரகன். 4-ம் இடமான வித்யா ஸ்தானத்தில் புதன் இருந்தால் அவருக்குக் கல்வி தடைப்படும்

செவ்வாய் பூமி காரகன். 4-ம் இடம் ஸ்திர சொத்துக்களைக் குறிக்கிறது. 4-ல் செவ்வாய் இருந்தால் அவருக்கு ஸ்திர சொத்துக்கள் நிலைக்காது.

சுக்கிரன் களத்திர காரகன். களத்திர ஸ்தானமான 7-ம் வீட்டில் இருந்தால் அது களத்திர தோஷமாகும்.

இவ்வாறான கருத்து ஜோதிட உலகில் நிலவுகிறது. ஆனால் அனுபவ பூர்வமாகப் பர்க்கும்போது இது தவறான கருத்தாகவே காணப்படுகிறது.

4-ம் வீட்டில் சந்திரன் இருந்து, அத்துடன் கொடிய பாவிகளான் சனி, செவ்வாய் ஆகியோர் இருந்தும் கூட சுமார் 60 வயதாகும் ஒருவருக்கு இன்னும் தாயார் இருக்கின்றார். அதுவும் இன்னும் ஆரோக்கியத்துடன் இருக்கின்றார்.

ஒருவருக்கு 2-ல் குரு; அவருக்கு அதிகம் படிப்பும் கிடையாது. சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த அவர் மிக வசதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கின்றார். வீட்டில் இரண்டு அல்லது மூன்று கார்கள்.

அதேபோல் 4-ல் புதனுள்ளவர்கள் படிப்பில் நல்ல தேர்ச்சி பெற்று Phd - வரையில் படித்தவர்களின் ஜாதகங்களையும் பார்த்து இருக்கின்றேன்.

5-ல் குரு உள்ளவர்களுக்கு நிறையவே குழந்தை பாக்கியம் இருப்பதையும் அனுபவபூர்வமாகப் பார்க்க முடிகிறது.

இதையெல்லாம் எதற்காக எழுதுகிறேன் என்றால் இந்த "காரகோ பாவனா சாய" என்ற விதியை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டாமென்பதற்காகத்தான்.

'பெண்மூலம் நிர்மூலம்", "கேட்டை நட்சத்திரம் ஜேஷ்டனுக்காகாது", விசாகம் இளய மைத்துனருக்காகாது" என்பனவற்றில் எப்படி உண்மை இல்லையோ அதைப்போல் இந்தக் கூற்றிலும் உண்மையில்லை என்பது நம் அனுபவம் தந்த பாடம்.

மறுபடியும் பின்பு சந்திப்போம்.


தென்னாடுடைய சிவனே!

அன்பே சிவம்...Om Namasivaya

திரு அண்ணாமலை ஜோதிடம்,

அருள்மிகு ஸ்ரீ பாலீஸ்வரன் திருக்கோயில்


S.சங்கர் குருக்கள்

http://sankarngpd.wordpress.com/

http://omsivasivaom.blogspot.com/

http://sankarngpd.mywebdunia.com/

http://temple.mywebdunia.com/

http://astrology-vastu.mywebdunia.com/

http://sankarngpd.blogspot.com/

http://paleeswarantemple.blogspot.com/

http://newgummidipundi.blogspot.com/

http://sankarngpd.spaces.live.com

http://srirajaganapathy.blogspot.com/

http://jothidamvasthu.blogspot.com/

http://omsivayanamaga.blogspot.com/

கும்மிடிப்பூண்டி
+919444175185

வாழ்க வளமுடன்!




--
7/16/2009 07:31:00 AM அன்று திரு அண்ணாமலை ஜோதிடம் இல் ”ஜோதிட திலகம்” S.சங்கர் குருக்கள் ஆல் இடுகையிடப்பட்டது
Reply all
Reply to author
Forward
0 new messages