[ஆகமக்கடல்] பஞ்சாங்கத்தை புரிந்துகொள்வோம்- பகுதி -2

129 views
Skip to first unread message

ஆகமக்கடல்

unread,
Feb 27, 2013, 8:30:00 PM2/27/13
to aagam...@googlegroups.com
வாசகர்களுக்கு வணக்கம்.
சென்ற பதிவில் விஷமாசம்,மலமாசம் என்றால் என்ன என்று பார்த்தோம்.அதை படிக்காதவர்கள் இங்கு சென்று படித்துவிட்டு வரவும்.இனி இந்த பதிவில் சம்ஸ்பர்ச மாசம்,அம்ஹஸ்பதி மாசம்,திரிதினஸ்ப்ருக்,அவமா, என்றால் என்ன என்று பார்ப்போம்


*ஸம்ஸ்பர்ச மாஸம்*

ஒரு மாஸத்தில் ஸங்க்ரமணம் என்று சொல்லக்கூடிய மாதப்பிறப்பு இல்லாவிட்டால் அந்த மாஸத்திற்கு ஸம்ஸ்பர்ச மாஸம் என்று பெயர்.
இதில் சுபங்களை விலக்கவேண்டும். உதாரணமாக நந்தன வருடம்(2012)
ஆனி மாதப்பிறப்பு வைகாசி 32ம் தேதியே ஏற்பட்டுவிட்டது.ஆடி மாதப்பிறப்பு ஆடி 1ம் தேதி தான்.எனவே ஆனி மாதத்தில் மாதப்பிறப்பே நிகழாததால் இது
சம்ஸ்பர்ச மாஸம் எனப்படும்.இந்த மாஸத்தில் முன் கூறிய மல மாஸம் போலவே திருமணம், போன்ற சுப நிகழ்ச்சிகளை விலக்கவேண்டும்.
செய்யவேண்டிய அவசரம் எனில் தகுந்த ஜோதிடர்/குருக்கள்/புரோகிதரை அணுகி பரிகாரம் செய்து சுபங்களை செய்யலாம்

*அம்ஹஸ்பதி மாஸம்*
ஒரு மாஸத்தில் இரண்டு மாஸப்பிறப்பு வந்தால் அந்த மாஸத்திற்கு அம்ஹஸ்பதி மாதம் என்று பெயர்.
இந்த மாஸத்தில் சுபங்களை விலக்கவேண்டும்.உதாரணமாக
நந்தன வருடம்(2013) வைகாசி 1ம் தேதி வைகாசி மாதப்பிறப்பும் 32ம் தேதி ஆனி மாதப்பிறப்பும் ஆக இரண்டு மாதப்பிறப்புகள் நிகழ்வதால் இது அம்ஹஸ்பதி மாஸம் எனப்படும்.இதிலும் அந்த மாதமே செய்யக்கூடிய ருது மங்கள ஸ்னானம்,நாமகரணம்,சீமந்தம் முதலிய விசேஷங்களை தவிர திருமணம் முதலியவை செய்யக்கூடாது.
அவசியம் செய்யவேண்டுமெனில்
முன் கூறிய பரிகாரமே இதற்கும் பொருந்தும்


*திரிதினஸ்ப்ருக்*

ஒரு நக்ஷத்திரமோ திதியோ தொடர்ந்து மூன்று நாட்கள் வ்யாபித்தால் அதற்கு" திரிதினஸ்ப்ரிக்" என்று பெயர்.

#உதாஹரணமாக விஜய வருஷம் (2013)சித்திரை 1,2,3 தேதிகள் மிருகசீர்ஷ நக்ஷத்திரம் தொடர்ந்து உள்ளதால் இது "நக்ஷத்திர திரிதினஸ்ப்ருக்" எனப்படும்.

அதே மாதம் 6,7,8 தேதிகளில் மூன்று நாட்கள் தசமி திதி வருவதால் இது "திதி திரிதினஸ்ப்ருக்" எனப்படும்

*அவமா*

ஒரே நாளில் தொடர்ந்து 3 திதிகளோ, 3 நக்ஷத்திரங்களோ வந்தால் அது "அவமா" எனப்படும்.

உதாரணமாக விஜய வருடம்(2013)ஆவணி மாதம் 6 ம் தேதி ப்ரதமை,த்விதீயை,த்ருதீயை ஆகிய 3 திதிகளும் வருகின்றன.
இது "திதி அவமா" எனப்படும்.

அதே ஆண்டு ஆடி 8ம் தேதி திருவோணம்,அவிட்டம்,சதயம் ஆகிய 3 நட்சத்திரங்களும் வருகின்றன.இது "நக்ஷத்திர அவமா" எனப்படும்.





--
Posted By ஆகமக்கடல் to ஆகமக்கடல் at 2/28/2013 07:00:00 AM
Reply all
Reply to author
Forward
0 new messages