சில
நாட்காட்டி மற்றும்
பஞ்சாங்கத்தில்
அபிஜித் காலம்
என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.அதைப்
பற்றிய
சிறு விளக்கம்.
ஒருவர் கல்யாணம்
செய்துகொள்வதென்று தீர்மானிக்கிறார்.அன்றே செய்து கொள்ளவேண்டிய
கட்டாயம்.அடுத்த
நாளே மணமகளும்
மாப்பிள்ளையும்
வெளிநாடு போகவேண்டும்.வேறு நாள்
கிடைக்கவில்லை.இந்த
நாளை
விட்டால் இன்னும்
இரண்டு வருஷம்
கழித்துதான் அந்த
பிள்ளை வருவார்.அப்போதுதான்
கல்யாணம் பன்ன
முடியும்.இருவருக்கும்
வயதும்
ஆகிவிட்டது.கல்யாணமும்
பண்ணியே ஆகவேண்டும்.எல்லோரும்
தயாராக
இருக்கிறார்கள்.மற்ற
எல்லா விஷயங்களும்
சரியாக இருக்கிற
நிலையில் அந்த நாள்
மட்டும் நன்றாக
இல்லை.முகூர்த்தம்
இல்லை.என்ன
செய்வது?ஜோதிட
சாஸ்திரம் சொல்கிற
நல்ல நாள் வரும்
வரையில்
காத்துக்கொண்டிருக்கமுடியாதே.
அப்படி காத்துக்கொண்டுதான்
இருக்கவேண்டும்
என்றும் ஜோதிட
சாஸ்திரம்
சொல்லவில்லை.
இப்படியான நேரத்தில்
ஜோதிட சாஸ்திரம்
நமக்கு ஓர் உபதேசம்
தந்திருக்கிறது.மத்தியானம்
பன்னிரண்டு மணிக்கு எந்த
விதமான
நட்சத்திரமோ தோஷமோ கிடையாது.அந்த
சமயத்தில்
முகூர்த்தம்
பண்ணலாம்.அந்த
காலம் நல்ல
காலம்.அதில்
உங்களுக்கு முகூர்த்தம்
கிடைத்துவிடும்.அன்று கெட்ட
நாளாக இருந்தாலும்
அந்த12
மணி வேளையில்
கெட்ட
தோஷங்களெல்லாம்
விலகிவிடும்.அதற்கு முன்னாலும்
பின்னாலும் அந்த
தோஷம் தொடரும்.
இப்படியாக அவசர
காலத்தில்
நமக்கு உதவுவதற்காக
ஜோதிட சாஸ்திரம்
சொல்லும் தீர்வு இது.
நடைமுறையிலேயே கூட
ஆபத்துக்
காலத்திற்கென
மருத்துவமணைகள்
உள்ளனவே...அஞ்சல்
செய்ய தவறினால்
கொஞ்சம் கூடுதலாகப்
பணம் கட்டிப் போடலாம்
என்று இருக்கிறதே.டிக்கெட்
எடுக்கத் தவறினால்
தக்கால் முறையில்
வாங்கிக்கொள்கிறோமே..அதுபோலத்தான்
இது.
அதற்காக நாம் அவசர
நிலை இல்லாதபோதும்,அபிஜித்
காலத்தில்தான்
எல்லா காரியங்களையும்
செய்வேன்
என்று அடம்பிடித்தால்
அதனால் பலன்
கிடையாது.
http://aagamakadal.blogspot.com