"கும்பாபிஷேகமும் கருடதரிசனமும்"

47 views
Skip to first unread message

aadhisaivar ஆதிசைவர்

unread,
Sep 12, 2010, 1:28:39 AM9/12/10
to aagam...@googlegroups.com
வணக்கம்,
இந்த தலைப்பு கும்பாபிஷேகம் பற்றியோ கருட தரிசனம் செய்வதால் ஏற்படும் பலன் பற்றியோ
விளக்குவதற்காக ஏற்பட்டதல்ல.இவைகளுக்கு இடையில் எந்த ஒற்றுமையும் இல்லை என்பதை
குறிப்பிடவே எழுதப்பட்டது.

கும்பாபிஷேகம்:

பொதுவாக கும்பாபிஷேகம் என்பது தென்நாட்டில் அதிகம்
நடைபெறுகிறது.வினாயகர்,சிவன்,அம்மன்,முருகன்...முதலிய சிவாலய சம்மந்தமான தெய்வமாக
இருந்தால் அந்த ஆலயங்களில் சிவாகமங்களை அடிப்படையாக வைத்து கும்பாபிஷேகம்
நடைபெறும்.வைணவ ஆலயமாக இருந்தால் அவை வைகானச,பாஞ்சராத்ர ஆகமங்களை அடிப்படையாக
வைத்து கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.அல்லது சில ஆலயங்கள் வைதீக முறைப்படியோ கேரளம்
போன்ற பகுதிகளில் தாந்த்ரீக முறைப்படியோ ப்ரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம்
நடைபெறும்.ஆக
எந்த ஆலயமாக இருந்தாலும் அதன் பூஜை முறைகளுக்கென்று ஒரு ப்ரமாண மூல நூல்(ஆகம
நூல்)இருக்கும்.அதன்படியே அந்த ஆலய பூஜை வழிபாடுகள் நடைபெறும்.இதை மாற்றவோ அல்லது
நம் வசதிக்கு தகுந்தாற்போல் தேவைப்பட்ட விஷயத்தை மாற்றி அமைக்கவோ
யாருக்கும் அதிகாரம்
இல்லை.இப்படியாக ஆகம முறைப்படி நிகழ்த்தப்படும் கும்பாபிஷேக நிகழ்வுகளில் முக்கிய
அங்கம் என்ன எனில் யாகசாலையிலே வைத்து பூஜை செய்யப்பட்ட தெய்வ வடிவான
கலசத்தை அந்தந்த
ஆசார்ய,அர்ச்சக பெருமக்கள் கோபுர கலசத்தில் அபிஷேகம் செய்யும் நிகழ்வே
ஆகும்.இப்படியாக
கும்பாபிஷேகம் செய்யும் முன்பாக கோபுர கலசத்தின் மேலே கருடன் வட்டமடித்து
பறக்கவேண்டும்.அப்படி கருடன் வந்து தரிசனம் காட்டிய பிறகுதான் கும்பாபிஷேகம்
செய்யவேண்டும் என்ற ஒரு தவறான பழக்கம் தமிழகத்தில் நிலவுகிறது.இதனால் பல தேவையற்ற
குழப்பங்களும்,அப்படி சில நேரம் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வர தாமதமானாலோ,அல்லது
சில நேரம் வராமல் போனாலோ அந்த கும்பாபிஷேக பூஜை முறைகளை அர்ச்சகர்கள் சரி வர
செய்யாததே காரணம் என்ற ஒரு குற்றச்சாட்டும் அவர்கள் மீது
வைக்கப்படுகிறது.இது சரியா?

லக்னமே முக்கியம்:

கும்பாபிஷேக பூஜை முறைகளை குறிப்பிடும் சைவ,வைணவ ஆகமங்களிலோ,வைதீக,தாந்த்ரீக
சாஸ்திரங்களிலோ குடமுழுக்கு சமயத்தில் இதுபோல் கருடன் வரவேண்டும் என்ற
குறிப்பு எங்கும்
காணப்படவில்லை.சரி, கும்பாபிஷேகம் செய்ய எது முக்கியம் என்றால் லக்னமே
முக்கியமாகும்.மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 லக்னங்களை சரம்,ஸ்திரம்,உபயம் என்று
3வகையாக பிரித்துள்ளனர்.இதில் ஸ்திர லக்னமான
ரிஷபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் ஆகிய
லக்னங்களில் கும்பாபிஷேகம் செய்வது மிக உத்தமம் என்கிறது சாஸ்திரங்கள்.அதற்கு
அடுத்தபடியாக உபய லக்னங்களில் செய்யலாம் ஆனால் சர லக்னத்தில்
செய்யக்கூடாது.அடுத்ததாக
கிழமை,நட்சத்திரம்,பஞ்சகம்,ஸ்தான சுத்தம் போன்ற விஷயங்களை எல்லாம் பரிசோதித்தே இந்த
லக்னத்தில் கும்பாபிஷேகம் செய்யவேண்டும் என்று கும்பாபிஷேகத்தை
செய்விக்கின்ற அர்ச்சகரால்
கணிக்கப்படுகிறது.இதுவே சாஸ்திரம் கூறும் வழியாகும்.
கருட தரிசனம் என்பது சகுனம்,நிமித்த சாஸ்திர சம்மந்தமானது அதற்கும்
கும்பாபிஷேகத்திற்கும் துளி கூட சம்மந்தமில்லை.பிறகு ஏன் கருடன்
வருகிறது?என்றால்,பொதுவாக எங்கு கும்பாபிஷேகம் நடந்தாலும் அங்கே பக்தர் கூட்டம்
அதிகமாக இருக்கும்.இதுபோல் கூட்டம் அதிகம் உள்ள இடத்திற்கு பறவைகள் வருவது
இயற்கை.இவ்வாறாக கருடனானது தானாக வந்திருக்கும் அல்லது அதுவும் நம்மைப்போல்
குடமுழுக்கை தரிசிக்க வரலாம்.ஆக கருடன் வந்தால் மட்டுமே கும்பாபிஷேகம்
செய்யவேண்டும்
என்பதோ,வரவில்லை என்றால் பூஜை முறையாக செய்யவில்லை என்று கூறுவதோ சுத்த
மூடத்தனமாகும்.கும்பாபிஷேகம் செய்ய நல்ல நேரம்,நல்ல லக்னம் தான் தேவை.இதையே
ஆகமங்களும்,ஆலயம் பற்றிய சாஸ்திரங்களும் கூறுகின்றன.எனவே பக்தர்கள்
அனைவரும் தங்களுடைய
மூட நம்பிக்கையை களைந்து வழி தெரிந்து,முறைப்படி இறைவனை வழிபட்டு வாழ்வில் எல்லா
நலனும் அடையவும்.

--
Posted By ஆதிசைவர் to ஆதிசைவர் on 9/12/2010 08:50:00 AM


--
http://aadhisaivar.blogspot.com

http://twitter.com/aadhisaivar

--
http://aadhisaivar.blogspot.com

http://twitter.com/aadhisaivar

Reply all
Reply to author
Forward
0 new messages