[ஆகமக்கடல்] நாத்திகன் யார்? ஆத்திகன் யார்?

254 views
Skip to first unread message

?????????

unread,
Jul 3, 2011, 4:16:00 PM7/3/11
to aagam...@googlegroups.com
பொதுவாக தெய்வம்
இருக்கிறது என்பவர் ஆத்திகர்
என்றும்,தெய்வம் இல்லை என்பவர்
நாத்திகர் என்றும்
நினைத்துக்கொண்டிருக்கிறோம்.இது ஓரளவில்
சரிதான் என்றாலும்
மிகச்சரியாக்கூறவேண்டும்
என்றால்
"நாம் வாழும் இந்த உலகைத்தவிர
மற்றொரு உலகம் (பரலோகம்)
ஒன்று உண்டு என்றும் ,இவ்வுளகில்
மனிதன் செய்யும் நல்ல
செயல்களுக்குத் தகுந்த நல்ல
பலனும்,தீயச்செயல்களுக்குத்
தகுந்த தண்டனையும் அங்கே(அந்த
பரலோகத்தில்)வழங்கப்படுகின்றன
என்றும்
(அஸ்தி=இருக்கிறது என்னும்
கருத்தை)
ஏற்றுக்கொண்டு அதன்படி செயல்படும்
மனிதனே ஆத்திகன்(ஆஸ்திகன்)
எனப்படுகிறான்."மேற்கூறிய
பரலோக
தத்துவத்தை இல்லை(நாஸ்தி)எனக்
கருதி கட்டுப்பாடின்றி வாழும்
மனிதனே நாத்திகன்(நாத்திகன்)
எனப்படுகிறான்.

நாம் ஒரு வீதியில்
செல்லும்போது சிலர் நம்மிடம்
வந்து ,சார் இந்த
வழியே போகாதீர்கள்,அங்கே கலாட்டா நடக்கிறது என்று கூறினால்
நாம் என்ன செய்வோம்? அவர்கள்
வார்த்தையை நம்பி வேறு வழியாகச்
செல்வோமா?அல்லது அவர்கள்
வார்த்தையை நம்பாமல் அதேவழியில்
செல்ல முயற்ச்சிப்போமா?
புத்திசாலியாக இருந்தால்
வேறுவழியில்தான்
செல்வோம்.ஏனென்றால் அவர்கள்
சொல்வது பொய்யாக இருந்தால்
நமக்கு சிறிது(சுற்றிச் செல்ல
வேண்டும் என்னும்)சிறிய கஷ்டம்
தான்.ஆனால் அவர்கள்
சொன்னது உண்மையாக
இருந்து நாமும் அவர்கள்
வார்த்தையை நம்பாமல் அதேவழியில்
சென்றால் நமக்கு அந்த கலவரத்தில்
பல கஷ்டங்கள் ஏற்படலாம்.
"सन्दिग्धे तु परे लोके
न कार्यमशुभं बुधैः |
अस्ति चेन्नास्ति नो हानिः नास्ति चेन्नास्तिको हतः
|
"சந்திக்தே து பரே லோகே ந
கார்யம் அசுபம்
புதைஹி "
"அஸ்தி சேத்
நாஸ்தி நோ ஹானி:
நாஸ்தி சேத்
நாஸ்திகோ ஹதஹ "

அதைப்போன்றுதான் பரலோகம்
இருக்கிறதா?இல்லையா?என்னும்
விஷயத்தில் நாம் தீர்க்கதர்சிகளான
மஹரிஷிகளின்
வார்த்தையை (பரலோகம்
இருக்கிறது என்று )நம்பித்தான்
ஆகவேண்டும்.அவ்வாறு பரலோகத்தில்
நம்பிக்கையில்லாமல்
தான்தோன்றித்தனமாக நடந்தால்
நமக்குத்தானே நஷ்டம்?

இந்த ஆத்திக நாத்திக
வேறுபாடு இந்துமதத்தில்
மட்டுமல்ல,உலகிலுள்ள
அனைத்து மதங்களிலும்
இருக்கிறது.நமது முன்னோர்களைப்போல்
நாம்
ஆத்திகர்களாகவே தொடர்ந்து இருக்க
முயற்சிப்போம்.

--
Posted By ஆகமக்கடல் to ஆகமக்கடல் at 7/04/2011 01:46:00 AM
Reply all
Reply to author
Forward
0 new messages