தமிழ் மற்றும் சமஸ்கிருத இலக்கியத்தில் பல விதமான பாவகைகளில் செய்யுள்
எழுதமுடியும்.அந்த வகையில் "சப்த சித்ர காவ்யம்" என்பதாக சமஸ்கிருத
மொழியில் பரமேஸ்வரனுக்கும் மஹாவிஷ்ணுவுக்கும் ஒரே ஸ்லோகத்தில்
துதிக்கும்படியான ஒரு ச்லோகத்தை பழைய ஏடு ஒன்றில் கன்டேன்.உங்கள்
ரசனைக்காக அந்த ச்லோகம் இதோ
मित्रात्रिपुत्र नेत्राय त्रयीशात्रव शत्रवे |
गोध्रारि गोध्रजत्राय गोत्रात्रे ते नमो नमः |
மித்ராத்ரி புத்ர நேத்ராய த்யீசாத்ரவ சத்ரவே|
கோத்ராரி கோத்ர ஜத்ராய கோத்ராத்ரே தே நமோ நம: |
பொருள்:
மித்ர-அத்ரிபுத்ர-நேத்ர मित्र अत्रि पुत्र नेत्र என்றால் மித்ரனாகிய
சூரியனையும்,அத்ரியின் மகனாகிய சந்திரனையும் இரு கண்களாகக் கொண்டவர.இது
சிவனுக்கும்,விஷ்ணுவுக்கும் பொருந்தும்.
2.த்ரயீ,சாத்ரவ சத்ரூ त्रयी शात्रव शत्रू என்றால் வேதங்களுக்கு எதிரியான
அசுரர்களின் எதிரி<சிவனும்,விஷ்ணுவும்>
3.கோத்ராரி-கோத்ரஜ-த்ர गोध्रारि गोध्रज त्र என்றால் மலைகளுக்கு எதிரியான
இந்திரனுடைய குலத்தில் பிறந்த தேவர்களை காப்பவர்<சிவனும்,விஷ்ணுவும்>
4.கோத்ராத்ரே தே நமோ நமஹ गोत्रात्रे ते नमो नमः என்றால் பசுவை
பாலிக்கின்ற<சிவனையும்,விஷ்ணுவையும்> உனக்கு மறுபடி மறுபடி நமஸ்காரம்.
குறிப்புகள்:
1.மித்ரன் என்றால் சூரியன் என்று பொருள.அத்ரி புத்ரன் என்றால் அத்ரி
ரிஷியின் மகன் என்று பொருள்.
2.த்ரயீ- ரிக்,யஜுர்,சாம ஆகிய மூன்றும் அடங்கிய வேதத்திற்கு த்ரயீ என்று பெயர்
3.गोध्र: கோத்ரஹ என்றால் மலை.ஆதிகாலத்தில் மலைகள் எல்லாம் இறக்கைகளுடன்
இருந்ததாகவும் அதனால் அவை பறவைகள் போல அடிக்கடி இடம்பெயர்ந்ததால் லோக
வாசிகளுக்கு கஷ்டம் ஏற்பட்டதால் இந்திரன் மலைகளுடைய இறக்கைகளை
வெட்டியதால் மலைகளின் எதிரியாக இந்திரன் கூறப்படுகிறான.
4.கோத்ராத்ரே-கோ என்றால் பசு.பசு என்பதற்கு ஆன்மாக்கள்,அனைத்து
ஜீவராசிகள் என்று பொருள்.பசுவை காப்பவன் பசுபதி<சிவன்>.
கோபாலன் க்ருஷ்ணன்<விஷ்ணு>
ஆக சூரியனையும்,சந்திரனையும் தம் இரு கண்களாக்கொண்டவரும், வேதங்களுக்கு
எதிரியான அசுரர்களின் எதிரியும்,மலைகளுக்கு எதிரியான இந்திரனுடைய வம்சமான
தேவர் குலத்தை காப்பவரும்,பசுக்களான ஜீவராசிகளை காப்பவரான
உனக்கு<சிவனுக்கு/விஷ்ணுவுக்கு>மறுபடி மறுபடி நமஸ்காரம்.
ஆக இந்த ஒரே ச்லோகத்தை சிவனுக்கும்,பெருமாளுக்கும் சொல்லலாம்.
--
Posted By ஆதிசைவர்
http://aadhisaivar.blogspot.com
http://twitter.com/aadhisaivar