|
In Tamil - பஞ்சாங்கம் - 25-06-2010
|
|
|
|
|
|
|
|
------------------------------------------------- | ||||||||||||||
In English - Almanac
|
|
|
|
|
| ||||||||||||||
|
இன்றைய நாளின் சிறப்பு:- |
[1] பௌர்ணமி பூஜை [2] சந்திராஷ்டம நக்ஷத்ரங்கள்: கார்த்திகை, உரோஹினி [3] திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் திருத்தேர், இராஜபாளையம் பெத்தவநல்லூர் ஸ்ரீ மயூரநாதஸ்வாமி திருத்தேர் உத்ஸவம். [4] ஸ்ரீ ஸத்யநாராயண விரதம், பூஜை ----------------------------------------
இன்றைய ஜோதிடக்குறிப்பு:- கேள்வி: எனது பெயரை எண் கணிதப்படி மாற்றியமைக்கலாமா? - திரு.ஜான், திருச்சி. (பாகம் - 01) பதில்: முதலில் ஒன்றை தெளிவாக சொல்லி விடுகிறேன். இங்கு சொல்லப்படும் கருத்துக்கள் அனைத்தும் எனது தனிப்பட்ட கருத்துக்களே. இவையனைத்தும் ஆதாரபூர்வமாகவும் யதார்த்தமாகவும் ஆராய்ந்து பார்த்துதான் சொல்லப்படுகிறது. யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்க ஜோதிடம் ஒன்றும் கடைச்சரக்கல்ல. அது புனிதமானது. சரி விஷயத்திற்கு வருவோம். திருச்சி.திரு.ஜான் அவர்களுக்கு மட்டுமல்ல, ஏகப்பட்ட பேருக்கு இந்த சந்தேகம் உண்டு. ”ஐயா எனது பெயர் எண் கணித படி சரியாக உள்ளதா? இல்லை மாற்றம் செய்ய வேண்டுமா? எந்த எண்ணில் எனது பெயர் இருக்க வேண்டும்?” போன்ற கேள்விகள் பல அனுதினமும் வருகின்றன. அவர்களுக்கெல்லாம் மட்டுமல்ல அனைவருக்குமே நான் சொல்லிக் கொள்வது, நீங்கள் பேரை மாற்றினாலோ, நீங்கள் பிறந்த தேதிக்கு ஏற்றவாறு உங்கள் பெயரை மாற்றி அமைப்பதனாலோ எதுவும் மாறிவிடப்போவதில்லை. ஜோதிடத்தில் எதையுமே மாற்ற இயலாது. மேலும் நம் அனைவருக்குமே நமது பெற்றோர்களும் நமது முன்னோர்களும்தான் முதல் கடவுள். அப்படியிருக்க அவர்கள் வைத்த பெயரை யாரோ ஒருவர் சொன்னதற்காக நீங்கள் பெயரை மாற்றலாமா? இதில் தினமும் 200 தடவை, 500 தடவை எல்லாம் எழுதிக் கொண்டிருக்கின்றனர். ஒருவர் சொன்னார் “சார், நான் எனது பெயரை R.S.SHANKAR என்பதை R.S.R.SHANKAR என்று மாற்றி விட்டேன். அதற்கு 3000 ரூபாய் பீஸ் வாங்கி விட்டார் அந்த ஜோஸ்யர். ஆனால் எனக்கு எதுவுமே மாறவில்லை’ என்றார். நான் அவரை மிகவும் கடிந்து கொண்டேன். எங்காவது நாம் போய் ஏமாந்து விட்டு வந்து ஐயய்யோ இந்த ஜோதிடம் பொய் என்று சொல்கிறோம். தொடரும்.... ------------------------------------------------ |
|
இனி வரும் நாட்களில் வரப்போகும் கேள்விகள்: [1] ஸ்ரார்த்த விதிமுறைகளை கூறவும் - திரு.பஞ்சாபகேசன், சென்னை [2] ஒரே வீட்டில் இரண்டு சிவலிங்கங்கள், இரண்டு சாளக்கிராமங்களை வைத்து வழிபடலாமா? - திரு.மூர்த்தி, நெல்லை. [3] அதிர்ஷ்டக்கல் அணிந்தால் பலன் தருமா? - செல்வி.ஹேமா, சென்னை [4] எனக்கு ஜோதிடப்படி எந்த திசையில் வீட்டின் வாசல் இருக்க வேண்டும்? - திரு.மகேந்திரன், படப்பை |
[5] எனக்கு குலதெய்வம் தெரியவில்லை, என்ன செய்யலாம்? - திரு.ராஜு, நங்கநல்லூர் [6] ஒரே வீட்டில் இருவருக்கு 7 1/2 சனி நடந்தால் ஆபத்து ஏதேனும் உண்டா?-திரு.லக்ஷ்மி, டில்லி |
|
------------------------------------ இன்றைய அறிவிப்பு: [1] தங்களுடைய ஜோதிடம், ஆன்மீகம் சார்ந்த கேள்விகளை எனக்கு தனி மடலில் அனுப்பி வைக்கவும். [2] தாங்கள் பகுதியில் நடக்கும் ஆன்மீக நிகழ்ச்சிகள், விழாக்கள், கும்பாபிஷேகம் போன்ற நிகழ்ச்சிகள் பற்றிய விபரங்களை எனக்கு தனி மடலில் அனுப்புங்கள். [3] ஜோதிடம் சம்பந்தப்பட்ட மடல்கள் தங்கள் நண்பர்களுக்கும் போய் சேர்வதற்கு தங்களுடைய நண்பர்களின் இமெயில் முகவரிகளையும் எனக்கு அனுப்பலாம். [4] தங்களுக்கு இன்னும் நக்ஷத்ரம் தெரியவில்லை, ஜாதகம் கணிக்கவில்லை என்பவர்கள் எனக்கு தனி மடலிடவும். அவர்களுக்கு இலவசமாக ஜாதகம் கணித்து மின்னஞ்சலில் அனுப்பப்படும். [5] தங்களுடைய மேலான ஆலோசனைகளும் வரவேற்கப்படுகிறது.
------------------------------------ |