மலைப்பிரதேசங்களில் வளரும் ஒருவகையான மரத்தின் விதைதான் ருத்ராட்சம். இதற்கு தனித்துவமான சிறப்புகள் பல உண்டு. தன்னைச் சுற்றிலும் அபூர்வமான அதிர்வலைகளை இது கொண்டிருக்கிறது. எனவே, இதை அணிவதால் பல நன்மைகள் ஏற்படுகிறது.
நீங்கள் புதுஇடங்களுக்கு செல்லும் போது அங்கிருக்கும் அதிர்வுகள் உங்களுக்கு ஏற்றதாக இல்லையென்றால் உங்களால் அமைதியாக இருக்க முடியாது. ஆனால், ருத்ராட்சம் அணிந்தால் எவ்விதமான பாதிப்பும் நம்மை தீண்ட முடியாது.மனநிலை சாந்தமாகவே இருக்கும். சக்திவட்டம் நம்மைக் கவசம் போல் பாதுகாக்கும்.
ஐந்துமுகம் கொண்ட ருத்ராட்சம் உடல் ஆரோக்கியம் தரும். ஆண்பெண் பேதமின்றி எல்லோரும் அணியலாம். இது ரத்த அழுத்தத்தை சீராக்கி,மன அமைதியையும், சுறுசுறுப்பையும் தரும். ஆறுமுகம் கொண்ட சண்முகி ருத்ராட்சத்தை 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் அணிவதால் தாயின் பூரண அன்பிற்கு பாத்திரமாகலாம். Buy Rudraksham and Garlands