புதிர்

7 views
Skip to first unread message

ThamizThenee

unread,
Jul 10, 2008, 11:28:52 AM7/10/08
to தமிழ் ஒசை
புதிர்

திடீரென்று ப்ரபஞ்சமே தன்னுடைய
மொத்த இயக்கத்தையும் நிறுத்திக் கொண்டது
பரிபூரண அமைதி

அந்தப் பேரமைதியைக் கிழித்துக் கொண்டு
ஒரு பெரும் ஓசை இடி முழக்கம்போல்....
அதிர்ந்தேன்............

என்ன சத்தம் ,,,,.....? யார் நீ....? என்றேன்
பலகீனமான பயந்த குரலில்

ஹஹஹஹஹஹஹஹஹ
நான்தான் இறை ,
உன்னை நோக்கி கேள்விகளை
இரைக்கப் போகிறேன்
நீ பதில் சொல்லவில்லையென்றால்
நீதான் எனக்கு இரை..!
என்றது அந்தக் குரல்
பயந்து நடுங்கிக் கொண்டே
பதில்.........சொல்கிறேன் ,ஆ..னா....ல்
என்னால் உன்னைப் பார்க்க முடியவில்லையே என்றேன்.....
பார்க்க முடியாது ....உன்னால் மட்டுமல்ல
யாராலும் பார்க்க முடியாது
,நான் அனுமதித்தாலன்றி........!

பதில் சொல் என் கேள்விக்கு.................


நீ யார் ,,,,,?


பதில் சொல்ல வாயெடுத்தேன்
மீண்டும் அந்தக் குரல் .......
தானே …………………
அடுத்த கேள்வியைக் கேட்டது,
இந்துவா,அப்படியென்றால் அதில் எந்தப் பிரிவு
சைவமா ,வைணவமா, சாக்தமா,
பௌத்தமா,சமணமா ....இன்னும்
பல பிரிவுகளை சொல்லி இவைகளில் எது என்றது
மீண்டும் பதில் சொல்ல நான் எத்தனிக்கையில்
என்னைப் பேசவிடாமல் அதுவே
அடுத்த கேள்வியைக் கேட்டது
கிரித்துவமா
இஸ்லாமியமா...?

என்று கேட்டுவிட்டு
ப்ரபஞ்சத்திலுள்ள,
மொத்தப் பிரிவுகள், வகைகளையும்
அத்துணை பிரிவுகளையும்
அதன் துணைப் பிரிவுகளையும்,
,மதங்களையும் ,இனங்களையும்,
ஜாதிகளையும்,
அக்குவேறு ஆணி வேறாக
அக்கறையாக பிரித்து அடுக்கி வைத்து
அவற்றில் நீ எந்த பிரிவில் இருக்கிறாய் என்றது

நான் பவ்வியமாய்
ப்ரபஞ்ஜத்தில் நானும் ஒரு ஜீவராசி
அவ்வளவே என்றேன்
ஓ அப்படியா .....!!!!!!
அப்படியானால் நானும் நீயும் ஒன்று
நீ.......”தான் நான், நானே நீ.....
நீதான் ‘இறை” என்றது
இப்போது அந்தக் குரல் நான் உன்னை
அனுமதிக்கிறேன்
என்னைப் பார்க்க ......பார்க்கிறாயா....?
என்றது .........
மறுத்தேன்.......நான்
நான் எதற்கு உன்னைப் பார்க்க வேண்டும்
தேவையே இல்லை .........?
நானும் நீயும் ஒன்றுதானே
நான்தானே இறைவன் ................!
உன்னை எதற்கு பார்க்க வேண்டும்
என்னையே பார்த்துக் கொள்கிறேன்
என்றேன் நான்.....

இப்போது நான் கேள்விகளை
இரைக்கப் போகிறேன்
நான் ....கேட்கும் கேள்விகளுக்கு பதில்
நீ .......பதில் சொல்.
இல்லையென்றால் நீதான்
எனக்கு இரை என்றேன்
இறை பயந்து நடுங்கியது..........

கேள்விகளை கேட்கட்டுமா......?
நீ யார் என்ன ஜாதி என்ன குலம்...
பதிலில்லை ....
இறை பயந்து
என்னுள் ஒடுங்கியது...
ஹஹஹஹஹஹஹாஹஹஹஹாஹாஹா...?
ப்ரபஞ்சம் இயங்கத் தொடங்கியது




அன்புடன்
தமிழ்த்தேனீ
Rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com


Reply all
Reply to author
Forward
0 new messages