Safeguarding Yourself From Internet Based Attacks - Part II
12 views
Skip to first unread message
Maakimo - Gmail
unread,
Mar 30, 2007, 8:09:33 AM3/30/07
Reply to author
Sign in to reply to author
Forward
Sign in to forward
Delete
You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to
இணையத்தில் அடி வாங்காமல் இருக்க.... பாகம் 2
யாரை பற்றியெல்லாம் எழுதக்கூடாது
ரஜினி - திராவிடர் கழகம் எழுச்சி அடைந்தது கடந்த 50
ஆண்டுகளில் தான். இதே நேரத்தில் தமிழ் உணர்வும் மக்களுக்கு வந்தது. நல்ல விஷயம்
தான். ஆனால் கடந்த 25 ஆண்டுகளில் தான் ரஜினி அசுர வளர்ச்சி அடைந்தார். 3000
ரூபாய் சம்பளம் வாங்கி வந்ததவரை 3 கோடி வாங்கும் அளவுக்கு உயர்த்தியது. சுருட்டு
புகைக்கும் ஸ்டைலக்காக பித்தானது. அதுவரையில் இவர் கன்னடர் என்று யாருக்கும்
தெரியாதாம் பாவம். அவர் அரசியல் வந்ததும் தான் அவரை பற்றி மக்களுக்கு தெரிந்தது
போலும். உடனே அவர் தமிழ் இன துரோகி ஆகிவிட்டார். அவருடைய பேனருக்கு மாலைப்போடு
சூடம் காண்பிக்கும்போது நமக்கு ஞானம் வரவில்லை. அதனால் ரஜினி பற்றி எழுதுவது
ஆபத்து.
கமல் - இவர் நாத்திகர். கருணாநிதியின் அன்பு தம்பி தானே
என்று தைரியமாக எழுத முயலாதீர்கள். உங்களுடைய பற்ற பதிவுகளை வைத்து நீங்கள் அவர்
பிராமணர் என்பதால் அவருடைய நடிப்பை ரசிக்கிறீர்கள் என்று உங்களை தாக்கக்கூடும்.
சுவராஸ்யமான விஷயம் இவரும் வளர்ச்சியடைந்தது இந்த 25 ஆண்டுகளில் தான்.
அப்துல் கலாம் - இந்தியாவில் சிறுபான்மையினர் எந்த அளவுக்கு
உயரிய பதவியை அடைய முடியும். ஜாகீர் ஹீசைன் மன்மோகன் சிங்க இந்திய காப்டனாக
அஜாரூதீன் என்றெல்லாம் இந்திய ஒற்றுமையை பற்றி சிலாகித்து போய் நீங்கள் அப்துல்
கலாமை பற்றி எழுத முயலாலம். ஏழ்மை குடும்பத்தில் வந்து இந்த உயரத்தை அடைந்தவர்.
இந்திய அணுவிஞ்ஞானத்தின் தந்தை. ஒரு தமிழர். சந்தோஷப்பட வேண்டிய விஷயம் தான்.
ஆனால் இவரை பற்றி எழுதினாலும் உங்களுக்கு ஆப்பு வரும். இந்துக்களிடமிருந்து அல்ல.
முஸ்லீம்களிடமிருந்தும் அல்ல. அவர் சமஸ்கிருதம் நல்ல மொழி என்று கூறினாராம்.
பகவத் கீதை அனைவரும் படிக்க வேண்டும் என்று கூறினாராம். பாவம் அவர் மத
நல்லிணக்கத்துக்காக சொன்னாரோ என்னவோ. ஆனால் அவர் உடனே தமிழின துரோகி ஆகிவிட்டார்.
வடமொழியின் கைக்கூலியாகிவிட்டார். ஒரு காலத்தில் பத்திரிக்கைகள் கூட ஜனாதிபதியை
பற்றி கேலிசித்திரம் போடாத காலம். இப்போது இணையத்தில் இருக்கும் பேச்சு
சுகந்திரத்தால் இந்த மனிதரை பற்றி அவதூறுகள் இணையத்தில் காணலாம். ஆக அப்துல்
கலாமை விட்டுவிடுங்கள்.
வைகோ - இவரை பற்றியும் எழுதாமல் இருப்பது நல்லது. அப்படி
எழுத வேண்டும் என்றால் ஒரு விதி - அவர் திமுகவை ஆதரிக்கும் போது திமுக ஆட்சியில்
இருந்தால் அவர் அதிமுகவை ஆதரிக்கும் போது அதிமுக ஆட்சியில் இருந்தால் எழுதங்கள்.
அவர் இப்போது இருப்பது போல அதிமுகவை ஆதரித்து திமுக ஆட்சியில் இருந்தால் நீங்கள்
என்ன எழுதினாலும் தமிழின துரோகி.
வீரப்பன் - ஆயிரம் யானைகளை கொன்ற மஹாவீரர். இவன் ஒரு
கிரிமினல் தானே என்று ஏதாவது கண்டித்து எழுத தோன்றினாலும் எழுதக் கூடாது என்பது
தான் அறிவுரையே. தமிழன் கொலை செய்தாலும் அதை பற்றி எழுதினால் நீங்கள் தமிழின
துரோகி ஆகிவிட வாய்ப்புகள் இருக்கிறது. வீரப்பன் ஆதரவு அணி என்றே இணையத்தில்
இருக்கிறது. இதைவிட தமிழ் உணர்வை காட்ட நமக்கு வாய்ப்பு உண்டா.
குஷ்பு - வடநாட்டுக்காரியான இவரை கனவு கன்னியாக கண்டது
நம்மில் ஒரு கூட்டம். கோவில் கட்டி மகிழ்ந்தது. தமிழ் பெண்கள் கற்பில்லாதவர்கள்
என்ற போது வீரம் எழுச்சி கொண்டு கொடி பிடித்தது. நீங்கள் அவரை பாராட்டி எழுதினால்
தமிழி துரோகி. திட்டி எழுதினால் தமிழின துரோகி. ஏன் என்று கேட்டால் அவரையை
பெரியாரின் மனைவியாக நடிக்க வைத்துள்ளதால். நல்ல தமிழ் பேசும் நடிகர்கள்
பாரதியாகவோ இல்லை பெரியாரின் மனைவியாகவோ நடிக்க நம் திரையுலகத்தினருக்கு
கிடைக்காததே காரணம். ஆக மொத்தம் குஷ்பூவை விட்டுவிடுவது நல்லது
ராவணன் - அடே என்ன இதிகாசத்திலிருந்து ஒரு பாத்திரத்தையும்
பேசுகிறேன் என்று ஆச்சர்யப்படுகிறீர்களா. ஆன்மீக வாதிகளே கூட இதிகாசங்கள் கதையாக
இருக்கலாம் என்று நம்பிவிடலாம். ஒருவேளை நீங்கள் அவை நிஜம் என்று சொன்னால்
கட்டுக்கதை என்று வாதிட ஒரு கூட்டம் இருக்கும். இதை கட்டுக்கதை என்று வாதிடும்
ஒரு கூட்டமே ராவணன் ஒரு திராவிடன் என்றும் ராமன் ஒரு ஆரியன் என்றும் அதனால் தான்
திராவிடனை இழிவுபடுத்த இது போன்ற ஒரு கதை எழுதினார்கள் என்று சொல்லி ராமாயணத்தை
நிஜப்படுத்தி உங்களை பைத்தியம்
அடித்துவிடுவார்கள்.
கொசுறு
இணையத்தில்
போகக்கூடாத இடங்கள்
நீங்கள் ஆத்திராக இருந்தால் நாத்திகம் பேசும்
தளத்திற்கு போகாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் கடவுளரை கொச்சையாக பேசி இதிகாச
புராணங்களில் உள்ள உறவுகளை மட்டப்படுத்தி எழுதவே ஒரு கூட்டம் அலைகிறது.
படித்தவுடன் உங்களுக்கு வாந்தி வந்துவிடும்.
நீங்கள் நாத்திகராக இருந்து
கடவுள் நம்பாமை தங்களுக்கு மட்டுமே உள்ள கொள்கை மற்ற ஆத்திகர்களை மதிப்பவராக
இருந்தால் நீங்கள் அப்படியானவர் என்று சொல்லாமல் இருப்பது நல்லது. காரணம்
இணையத்தில் இருக்கும் அறிவிலிகளுக்கு நாத்திகரர் என்றால் ஆத்திகரை கேவலமாக
பேசுபவர்கள் என்று மட்டுமே இருப்பது சாத்தியம் என்று நினைக்கும் ஒரு கூட்டம்
உங்கள் நாத்திகராக ஏற்காது.
வருத்தம் USSR உடைந்து
22 நாடுகளானது. இந்தியா உடைந்து சுக்கநூறாக எல்லா சாத்தியக்கூறுகளும் இருக்கிறது.
மீண்டும் மன்னர் ஆட்சி காலத்திற்கு தள்ளப்படலாம். தமிழ் இணையம் கட்டுண்டு
வெட்டுண்டு துண்டு துண்டாய் கிடக்கிறது. தமிழன் ஒரு போதும் ஒற்றுமையாக இருக்க
முடியாது என்பதற்கு அறிகுறிகள் இணைய உலகத்தில் தமிழ் தளங்களில் உலாவினால்
உங்களுக்கு ஏற்படும்.