அன்புள்ள நண்பர்களே நல்லவை எங்கிருந்தாலும்
அவை நம் மக்களுக்கு கிடைக்க வேண்டும்
என்னும் நியாயமான ஆசை கொண்டவன் நான்
ஆகவே சமீபத்தில் என் கவனத்துக்கு வந்த
ஒரு செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்
பல வெளி நாடுகளில் அந்த நாடுகளில் பணி புறியும்
பணியாளர்கள் தங்களின் பணி நாட்கள் தவிர
விடுப்பு நாட்களில் ஏதேனும் ஒரு தொண்டு நிறுவனத்துடனோ
அல்லது தனியாகவோ மக்கள்தொண்டு செய்பவராக இருந்தாலும்
அந்த தொண்டு நிறுவனங்களுக்கு தங்களுடைய நிறுவனத்தில்
பணி செய்யும் அவருடைய ஊதியத்தை கணக்கிட்டு
அந்த தொகையை அந்தத் தொண்டு நிறுவனங்களுக்கு
அளிக்கிறது என்று கேள்விப்பட்டேன்
அது போல செய்வதில் என்ன நன்மை இருக்கிறது
என்று எண்ணிப் பார்த்தேன்
முதலில் தங்களுடைய சொந்த நேரத்தை மகிழ்வாக கழிப்பதில்
பொழுது போக்காமல் அடுத்தவருக்கு உதவி செய்ய வேண்டும்
என்னும் எண்ணம் கொண்ட நல்ல உள்ளங்களை
பாராட்டும் விதமாகவும் இன்னும் தொண்டுகள் செய்ய வேண்டும்
என்னும் எண்ணங்களை அவர்களுக்கு ஏற்படுத்தவும்
இந்த முறை மிகவும் பயன் படும்
தொண்டு நிருவனங்கள் அதிக உதவிகளை செய்ய ,
இன்னும் அதிக பேருக்கு உதவி செய்யும் திட்டங்கல் தீட்ட
உதவி செய்யும் வகையில் பணப் பற்றாகுறை தீரவும்
வழி வகுக்கும் திட்டமல்லவா இது
ஏன் இது போன்ற நல்ல திட்டங்களை நம் நாட்டிலும்
ஏற்படுத்தக் கூடாது..?
நம் அரசாங்கமும் இது போன்ற நல் திட்டங்களை
செயல்படுத்த தயங்காது
இந்த செய்தியை அரசுக்கு, அரசாங்க அதிகாரிகளுக்கு
எடுத்துச் சொல்லி இத் திட்டம் ஏற்பட யாரேனும் வகை
செய்தால் அவர்களுக்கு நான் மிகவும் நன்றி உள்ளவனாக
இருப்பேன்
(இத் திட்டத்தைப் பற்றி அனைவரும் உங்கள் கருத்துக்களைப்
பகிர்ந்து கொள்ளுங்கள்)
மேலும் இது போன்ற மக்களுக்கு உதவக் கூடிய திட்டங்கள்
உங்கள் மனதிலிருந்தால் அவற்றையும் பகிர்ந்து கொள்ளுங்கள்
அன்புடன்
தமிழ்த்தேனீ
ஆசிரியர்- தமிழ்த்தேனி
http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http;//
thamizthenee.blogspot.com
Contact us at:
con...@peopleofindia.net or
peopleof...@gmail.com