Fwd: [kanittamiz] 12ஆம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக் கட்டுரைக்கான அழைப்பு

45 views
Skip to first unread message

SS Avarangal

unread,
Jun 24, 2024, 6:59:15 AMJun 24
to Tamil_Araichchi

---------- Forwarded message ---------

அனைவருக்கும் வணக்கம்..

உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் மற்றும் எஸ்.ஆர்.எம் தமிழ்ப்பேராயம் இணைந்து நடத்தும் 12ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது.

இதையொட்டி கல்லூரி மாணவர்கள், ஆய்வு மாணவர்கள், பேராசிரியர்களிடமிருந்து ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

அறிவியல் மற்றும் பொறியியல் துறை சார்ந்த மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களிடமிருந்து

பொறியியல் தொழில்நுட்பம்

கணிப்பொறி அறிவியல்

கணினித்தமிழ்

தலைப்புகளில் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

கட்டுரைகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கலாம்..

பொறியியல் துறைசார்ந்த ஆய்வுக் கட்டுரைகளில் தமிழ்மொழி பயன்பாடுகள் குறித்தும், தொழில்நுட்பத்தில் தமிழ்ப்பயன்பாடுகள் குறித்தும், கணினியில் தமிழ்ப் பயன்பாடுகள் குறித்தும்,ஆய்வுக்கட்டுரைகள் வழங்கலாம்...

முதலில் சுருக்க உரைகளை(Abstract)ஜூலை-31 ஆம் தேதிக்குள் சிற்றேட்டில் குறிப்பிட்டுள்ள இணைப்பில் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றனர்.


அன்புடன்,
நீச்சல்காரன்





---------- Forwarded message ---------
From: 12TH IATR WORLD TAMIL CONFERENCE <iatr...@srmist.edu.in>
Date: Fri, 31 May 2024 at 11:40
Subject: 12ஆம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு


அன்புடையீர், வணக்கம்.

      உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றமும், திரு. இராமசாமி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத் தமிழ்ப்பேராயமும் இணைந்து 12வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது.  அதற்கான அறிவிப்பு மடலைத் தங்களின் மேலான பார்வைக்கு அனுப்பியுள்ளோம்.  தாங்கள் அதில் ஆய்வுக் கட்டுரையை வழங்குவதோடு; பலரும் பங்கேற்றுச் சிறப்பிப்பதற்கு ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி.

பேரா. முனைவர். கரு. நாகராசன்
தலைவர், தமிழ்ப்பேராயம்
திரு. இராமசாமி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி
காட்டாங்குளத்தூர்

அறிவிப்பு மடல் 1 .jpg
அறிவிப்பு மடல்2 .jpg
Reply all
Reply to author
Forward
0 new messages