‘ஈழத்தழிழர்களுக்கான தீர்வு வட்டுக்கோட்டை தீர்மானமே'
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் புலம்பெயர் உறவுகளுடனான ,
வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாடு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு
வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50 வது ஆண்டினை முன்னிட்டு 'வட்டுக்கோட்டை 50' எழுச்சி மாநாடு, யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் எதிர்வரும் 20ம் திகதி ஜீன் மாதம் 2026 அன்று நடைபெறவுள்ளது .
இம்மாநாட்டை முன்னிட்டு தமிழர் தாயகப்பகுதியெங்கும் விழிப்புணர்வு கருந்தரங்குகளை நடாத்தி முடித்துள்ளதுடன் மாவட்ட ரீதியான ஒருங்கிணைப்பு குழுக்களை உருவாக்கி அவர்கள் ஊடாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றோம்.
அந்தவகையில் புலம்பெயர்தேசங்களில் வாழும் 'தமிழ் தேசிய பற்றும், வட்டுக்கோட்டை தீர்மானமே தமிழர்களுக்கான தீர்வு' என்பதனை உணர்ந்த அனைத்து தமிழ் அமைப்புக்கள் மற்றும் புலம்பெயர் உறவுகளையும் இணையவழி விழிப்புணர்வு நிகழ்வுக்கு அன்புடன் அழைக்கின்றோம்.
வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாடு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வில் பங்குபற்ற விரும்புபவர்கள் தங்களின் பங்குபற்றுதலையும் மேலும் தங்களுக்கு வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாடு தொடர்பாக ஏதேனும் விசேடமாக அறியவேண்டி இருப்பின் தங்களுடைய கேள்விகளையும் வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாடு தொடர்பாக தங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களையும்
vadduk...@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். (நேரமுகாமைத்துவத்தினை கருத்தில் கொண்டு இவ்வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது).
விழிப்புணர்வு நிகழ்வின் நோக்கம்:- வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாடு தொடர்பான விழிப்புணர்வு ஊடாக களத்திலும் புலத்திலும் வாழும் தமிழர்கள் ஒருமித்த குரலில்' ஈழத்தமிழர்களுக்கான தீர்வு வட்டுக்கோட்டை தீர்மானமே' என்பதனை மீண்டும் உலக நாடுகளுக்கு வலியுறுத்தும் நோக்குடன், வட்டுக்கோடடை தீர்மானத்திற்கு ஆதரவான புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் புலம்பெயர் உறவுகளையும் ஒன்றிணைத்தல்.
திகதி:- 31.05.2026 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை .
நேரம் :-
• தமிழீழ நேரம்: மாலை 7.00 மணி – 8.00 மணி
• அமெரிக்கா (கிழக்கு நேரம் - EDT): காலை 9.30 மணி – 10.30 மணி
• இங்கிலாந்து (UK): பிற்பகல் 2.30 மணி – 3.30 மணி
• ஐரோப்பா (மத்திய ஐரோப்பிய நேரம் - CEST): பிற்பகல் 3.30 மணி – 4.30 மணி
• அவுஸ்திரேலியா (சிட்னி): இரவு 11.30 மணி – அதிகாலை 12.30 மணி (அடுத்த நாள்)
வழிப்படுத்துனர்கள்- தவத்திரு. வேலன் சுவாமிகள் மற்றும் அருட்தந்தை க.ஜெகதாஸ் அடிகளார்.
மூலம்:- சூம் (zoom)
Zoom ID: 863 3852 6660
Password: 720560
Link:-
https://us06web.zoom.us/j/86338526660?pwd=XUmCiHyRTOEQ45YJIoh7M2ZQIbAFMM.1
ஏற்பாடு:- வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாட்டு ஏற்பாட்டுக்குழு