கனடிய தமிழர் பேரவையை சீர்திருத்த புறப்பட்டிருக்கும் உத்தமர்கள்!

9 views
Skip to first unread message

atha...@sympatico.ca

unread,
Jun 9, 2024, 1:14:33 PMJun 9
to Tamil_Araichchi

தன் முயற்சியில் சற்றும் சளைக்காத விக்கிரமாதித்தன் மரத்தில் ஏறி அதில் தொங்கிய உடலைக் கீழே வெட்டி வீழ்த்தினான். பின்னர் அவன் கீழேயிறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள் இருந்த வேதாளம், “மன்னா! இரவு பகலாக இவ்வாறு காட்டிலும், மேட்டிலும் நடு நிசியில் திரியும் உன்னைக் கண்டு பரிதாபமாக இருக்கிறது" என்று சொல்லிவிட்டு ஒரு கதை சொல்லத் தொடங்கியது!

இந்தக் கனேடியத் தமிழர் கூட்டு அவ்வப்போது ஊடக சந்திப்புக்களை நடத்துவதும் அறிக்கை விடுவதையும் பார்க்கும் போது எனக்கு இந்த வேதாளம் முருக்கை மரத்தில் ஏறிய கதைதான் நினைவுக்கு வருகிறது. ஊரில், உலகில் செய்வதற்கு எத்தனையோ பணிகள் உள்ளன. 30 ஆண்டு காலப் போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்கள் வறுமையில் வாடுகிறார்கள். தொழில் இல்லை. தொழில் செய்ய முதல் இல்லை. புலம்பெயர் தமிழர்கள் அள்ளிக் கொடுப்பது இல்லை. கொடுப்பதாக இருந்தால் தங்கள் உற்றார் உறவினர்களுக்குக் கொடுக்கிறார்கள்.

2009 மே 18 இல் யுத்தம் முடிந்த போது சிங்கள இராணுவம் வட கிழக்கில் வாழும் தமிழ்மக்களுக்குச் சொந்தமான 118,253 ஏக்கர் காணியைக் கைப்பற்றியிருந்தது. அதில் பெரும்பகுதி விடுவிக்கப்பட்டாலும் 28,990 ஏக்கர் காணி இதுவரை விடுவிக்கப்படவில்லை. காணிச் சொந்தக்காரர்கள் ஏதிலி முகாம்களில் வாழ்கிறார்கள். இதுபற்றி கனேடிய தமிழர் கூட்டு எப்போதாவது அக்றைப்பட்டிருக்கிறதா?

முந்தநாள் பெய்த மழைக்கு நேற்றுப் முழைத்த கனேடியத் தமிழர் கூட்டு கடந்த கால் நூற்றாண்டு காலமாக தாயக மக்களுக்கு கனேடியத் தமிழர்பேரவை தனது சக்திக்கு மேலாக  அரும்பெரும் பணிகளை ஆற்றிவருகிறது. ம் கனேடியத் தமிழர் பேரவைக்கு காலக்கெடு கொடுத்துள்ளது. அந்த அமைப்பில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டுமாம். ஒரு அமைப்பை சீர்திருத்தம் செய்வதற்கு இன்னொரு அமைப்பு - அதுவும் அந்த அமைப்பில் தலைவர் பதவி உட்பட முக்கிய பதவிகளில் இருந்தவர்கள் பின்னர் அதிலிருந்து வெளியேறியவர்கள் - வெளிக்கிட்டுள்ளது. உலகைத் திருத்திய உத்தமர் காந்தி, வள்ளலார் என இவர்கள் தங்களை நினைக்கிறார்கள். அடுத்த வீட்டுக்காரனது சமையல் சரியில்லை, சாப்பாடு சரியில்லை என்று சொன்னவன் கதையாக இருக்கிறது. இன்றைய கனடிய தமிழர் பேரவை என்பது தொண்ணூறுகளில் இயங்கிய FACT என்ற அமைப்பின் வாரிசு. அந்த அமைப்பின் தலைவரவராக நான் இருந்த காலத்தில்தான் இந்தப் பெயர் மாற்றம் இடம்பெற்றது. புதிய அமைப்பின் பொறுப்பாளராக அபி சிங்கம் நியமிக்கப்பட்டார். சும்மா சொல்லக் கூடாது. அந்த அமைப்பை நடாத்த அவர் அரும்பாடு பட்டார். ஆனால் முடியவில்லை.

அந்த அமைப்பைவிட்டு வெளியேறியவர்களுக்கு - பேராசிரியர் சந்திரகாந்தன் உட்பட - அந்த அமைப்பைப் பற்றி விமர்ச்சிக்க - அதனைத் திருத்த அருகதையில்லை. அதனைச் சீர்திருத்த வேண்டும் என்றால் மீண்டும் அந்த அமைப்பில் சேர்ந்து முயற்சி செய்யுங்கள்.  அதுதான் நாகரிகம். அதுதான் நேர்மை. அதுதான் நாணயம்.

 

C.RatnaVadivel

unread,
Jun 24, 2024, 6:58:53 AMJun 24
to tamil_a...@googlegroups.com
Very well said! தாமும் செய்யார், செய்கிறவர்களையும் செய்ய விடார். இதுதான் இன்று களத்திலும் நடைபெறுகிறது. தாம் ஏதோ புலிகளின் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துகிறவர்கள் போல பாசாங்கு செய்யும் கூட்டம். அவர்களது காற்தூசிக்கும் பெறுமதியற்ற இந்த போலித் தேசியவாதிகளின் உண்மை ரூபத்தை வெளிக்கொணர்ந்து அவர்களது கொட்டத்தை அடக்காவிடின் தமிழ் இனம் நிர்க்கதியாகப்போவது திண்ணம். 

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் ஆராய்ச்சி" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamil_araichc...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamil_araichchi/000001daba90%240ffa74a0%242fef5de0%24%40sympatico.ca.
Reply all
Reply to author
Forward
0 new messages