Fwd: "அரசியலிலும் விவேகத்திலும் தோல்வியடைந்த/தோல்விகாணவைத்த தலைவராக உருத்திரகுமாரன்.

10 views
Skip to first unread message

TNA UK

unread,
Jul 15, 2024, 11:02:44 AM (7 days ago) Jul 15
to tamil_a...@googlegroups.com

சமாதானபேச்சுக்களில் ஈடுபட்ட நிபுணர்குழுவின் தீர்மானத்துடன் மதியுரைஞர் கையொப்பமிட்ட ஒஸ்லோ அறிக்கையை தானும், அன்றய அரசியல்பிரிவு தலைவரும் ஒஸ்லோவில்வைத்து கிழித்தெறிந்து பின்புல துணையுடன் தமிழரின் தோல்விக்கு பிள்ளையார்சுழிபோட்ட, தமிழரை பூண்டோட்ஃபு தோர்கடிக்க வித்திட்ட உருத்திரகுமாரன் விழல் எழுதுகின்றார்.





On Sat, 6 Jul 2024 at 17:35, canada tna <canada...@gmail.com> wrote:


---------- Forwarded message ---------
From: Vin Mahalingam <vinmah...@gmail.com>
Date: Sat, Jul 6, 2024 at 12:32 PM
Subject: Fwd: "அரசியலிலும் விவேகத்திலும் தோல்வியடைந்த தலைவராக இயற்கை எய்திய சம்பந்தனுக்கு
To:



nersdStopo07i639hf1t521uu5fugmuamhth6c27u8luc9cu0ua5h95l3f5l  · 

Shared with Public

Public

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரன் பெருந்தலைவர் இரா. சம்பந்தன் அவர்களது மறைவையொட்டி -

"அரசியலிலும் விவேகத்திலும் தோல்வியடைந்த தலைவராக இயற்கை எய்திய சம்பந்தனுக்கு (R. Sampanthan) இறுதி வணக்கம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE) வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்படிப் பார்த்தால் இரா சம்பந்தன் மட்டுமல்ல அவருக்கு முன்னைய தலைவர்களான தந்தை செல்வநாயகம், கோப்பாய்க் கோமான் வன்னியசிங்களம், உடுப்பிட்டிச் சிங்கம் சிவசிதம்பரம், தளபதி அமிர்தலிங்கம் போன்றோரும் "அரசியலிலும் விவேகத்திலும்" தோல்வியடைந்த தலைவர்கள்தான்.

ஏன் தேசியத் தலைவர் மாண்புமிகு பிரபாகரன் அவர்களும் தோல்வியடைந்த தலைவர்தான்.

போர்த்துக்கேய படையெடுப்பாளர்களிடம் போர்முனையில் இழந்த யாழ்ப்பாண இராச்சியத்தை மீளப் பெறுவது என்பது இலேசான காரியமல்ல. வில்லங்கமான காரியம்.

தோல்வியோ வெற்றியோ அந்த இலக்கை நோக்கிப் பயணிப்பதுதான் எமது இலட்சியமாக இருக்க வேண்டும்.

""அரசியலிலும் விவேகத்திலும் தோல்வியடைந்த தலைவர்" சம்பந்தன்தான் அமெரிக்க நாட்டின் வெளியுறவு அமைச்சு அதிகாரிகளை 2011 ஆம் ஆண்டு ஒக்தோபர் மாதம் சந்தித்து தொஇடர் பேச்சு வார்த்தை நடத்தினார். அதன் விளைவுதான் 2012 ஆண்டு தொடக்கம் இன்றுவரை ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையில் சிலங்கா அரசுக்கு எதிரான அமெரிக்க அரசின் தொடர் தீர்மானங்கள். இன்று இலங்கைகத் தமிழ்மக்களது உரிமை மறுப்பு அவர்களுக்கு எதிரான அடக்குமுறை ஐநாமஉ பேரவையில் பேசு பொருளாக இருக்கிறது. இது சம்பந்தனின் அரசியல் சாதனை. சாணக்கியம்.

"அரசியலிலும் விவேகத்திலும் தோல்வியடைந்த தலைவர்" என எள்ளல் செய்யும் உருத்திரகுமாரன் அமெரிக்க இராசாங்க அமைச்சின் அருகே மழைக்குக் கூட ஒதுங்க முடியாது! இதுதான் இன்றைய யதார்த்தம்

அமெரிக்கா நாட்டை மட்டுமல்ல உலகில் உள்ள 191 நாடுகளில் ஒரு நாட்டோடாவது பிரதமர் உருத்திரகுமாரன் அவர்களோ அவரது நாடு கடந்த அரசோ நெருங்க முடியாது. சந்திக்க முடியாது.

தனது பரம எதிரி இறந்தால்கூட அவனது சாவீட்டுக்குச் சென்று மரியாதை செய்வது தமிழர்களின் பண்பாடு.

இந்தக் குறைந்த பட்ச பண்பாடு உருத்திரகுமாரனுக்கும் அவரது நாடுகடந்த தமிழீழ அரசுக்கும் இல்லாமல் இருப்பது கவலை அளிக்கிறது.

 

Reply all
Reply to author
Forward
0 new messages