தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் (MAY 18) குறித்த ஊடக அறிக்கை - 18/05/2026

5 views
Skip to first unread message

Yogi

unread,
May 20, 2026, 1:36:27 PMMay 20
to tamil_a...@googlegroups.com, Thamilvaddam
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் (MAY 18) குறித்த ஊடக அறிக்கை

தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் ஏற்பாட்டில் வழமைபோன்று இம்முறையும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தை நினைவுகூரும் குருதிக்கொடை நிகழ்வானது London - Westfeild குருதிக்கொடை நிலையத்தில் வைகாசி மாத வார இறுதி நாட்களான 16ம் திகதி சனிக்கிழமை மற்றும் 17ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் மிகவும் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் வரும் மாவீரர் வாரம் மற்றும் வைகாசி மாதத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆகிய இரு தருணங்களிலும் பிரித்தானியவாழ் எம் ஈழத் தமிழ் உறவுகளை ஒன்றிணைத்து இரு பெரும் குருத்திக்கொடை நிகழ்வுகளை எமது தமிழீழ சுயநிர்ணய அமைப்பு முன்னெடுத்துவருகின்றமை அனைவரும் அறிந்ததே. இந்தநிலையில், இம்முறையும்   தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் மற்றும் எமது அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளடங்கலாக நூற்றுக்கணக்கானவர்களின் பங்கேற்புடன் காலை 08:00மணி முதல் மாலை 05:00மணி வரைக்குமாக  குறித்த இரு நாட்களிலும் இந்தக் குருதிக்கொடை நிகழ்வானது மேற்கொள்ளப்பட்டது.

இதனை நாம் பிரித்தானியாவின் பல பாகங்களிலும் தொடர்ந்தும் முன்னெடுத்துச்செல்ல உறுதிபூண்டிருக்கின்றோம். ஏனெனில்,  எம் தமிழீழத் தாய் மண்ணின் விடுதலைக்காக தம் குருதியை சிந்திக் களமாடிய வீர மறவர்களான மாவீரச் செல்வங்களின் தியாகத்தையும், இறுதி யுத்த இனவழிப்பின்போது குருதிப்பற்றாக்குறையால் ஏற்பட்ட எம் உறவுகளின் அவலத்தையும் சர்வதேசத்துக்கு தொடர்ந்தும் நினைவுபடுத்தவும், எமது இளைய தலைமுறைக்கு எம் ஈழத் தமிழினம் கண்டடைந்த பேரவலத்தின் பெருவலியை உணர்வுபூர்வமாகக்  கடத்திச் செல்லவும் கிடைத்த ஒரு வழிமுறையாகவே இதனை நாம் கருதுகின்றோம்.

அத்துடன், தாயகத்திலுள்ள எமது உறவுகளோடும் அவர்களது தேசியம் சர்ந்த உணர்வுகளோடும் ஒன்றித்துச் செயற்படுகின்ற எமது அமைப்பானது,  தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களால் இம்முறை வவுனியா - செட்டிக்குளம் பகுதியில் முன்னெடுக்கப்படுகின்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்விற்கும் அனுசரணை வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தியுள்ளமையும் இந்தவேளையில் குறிப்பிடத்தக்க விடையமாகவுள்ளதுடன்,  18ம் திகதி திங்கட்கிழமை காலை 10:00மணியளவில் London - Harrow - Raynerslane பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாட்டினையும் முன்னெடுத்திருந்தோம். அந்தவேளையில், 2009 வைகாசி (May 18) மாத இறுதி யுத்த காலப்பகுதியில் எம் உறவுகள் பட்டினிச்சாவை எவ்வாறு எதிர்நோக்கினர் என்பது பற்றிய தெளிவுபடுத்தலும்  பிரித்தானியாவில் வாழ்கின்ற ஏனைய இனத்தவர்களிடையே மேற்கொள்ளப்பட்டமை இங்கே குறிப்பிடத்தக்கது.

எமது தமிழீழ சுயநிர்ணய அமைப்பானது  இவ்வாறான செயற்பாடுகளினூடாக பிரித்தானிய அரசிற்கும்  உலக நாடுகளின் கவனத்திற்கும் கொண்டுசெல்லும் செய்தியானது, எம் ஈழத் தமிழினத்தின் அவலத்திற்கும் இனவழிப்பிற்கும் காரணமானவர்கள் பாராபட்சமின்றி தண்டிக்கப்பட சர்வதேச நீதி விசாரணையே எமக்கு வேண்டும். தனித் தமிழீழமே எம் தமிழினத்தின் இருப்பிற்கான ஒரே தீர்வு என்பனவாகும். இதனை முன்னிறுத்தி எமது அமைப்பின் செயற்பாடுகள் தொடருமென உறுதியுரைக்கின்றோம்.

MSDTE Media Team

                                    - தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் -


Photos from Blood Donation - https://photos.app.goo.gl/FyMmY852CXb8Gf7y9

Photos from Mullivaikkal Kanji in Rayners Lane, Harrow, UK - https://photos.app.goo.gl/KFk77MwamDorkUDy8


Poster for 16 & 17 May 2006 - Blood Donation.jpeg
Poster for 15 May 2006 - Blood Donation in Scotland.jpeg
Mullivaikkal Kanji in Rayners Lane - Poster.jpeg
Mullivaikkal Kanji in Seddikulam Vavuniya Sri Lanka - Poster.jpeg
Press Release by MSDTE for Mullivaikkal Naal 18.05.2026.pdf
Reply all
Reply to author
Forward
0 new messages