கலைப்போராளி பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா அவர்களுக்கு தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் இரங்கல் செய்தி!!

4 views
Skip to first unread message

Yogi

unread,
May 1, 2026, 8:29:26 PMMay 1
to tamil_a...@googlegroups.com, Thamilvaddam
தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் ஊடக அறிக்கை!!

திகதி : 29/04/2026

கலைப்போராளி பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா அவர்களுக்கு தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் இரங்கல் செய்தி!!

இறவாப்புகழ்பெற்ற கலைப்போராளி,
நாடிநரம்பெல்லாம் உணர்வூட்டிய குரலின் சொந்தக்காரர்,
தேச விடுதலைக்காகக் கூவிய பெருங்குயில்,
"எங்கள் தேசத் தலைவனின் பாசப்பிணைப்பாக விளங்கிய
பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா ஐயா" அவர்களின்
மறைவு செய்தி எமக்கு ஆழ்ந்த துயரத்தையும் அளவற்ற இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அவரது குரல் வெறும் இசையல்ல — அது ஒரு போராட்டத்தின் உயிர்த்துடிப்பு.
அவரது பாடல்கள் எங்கள் இதயங்களைத் துளைத்து,
உணர்வுகளை எழுப்பி, தமிழீழ விடுதலைப் பாதையில்
ஒரு தலைமுறையை உருவாக்கியவை.

மேடைகள் எங்கும் ஒலித்த அவரது குரல்,
மக்கள் மனங்களில் இன்னும் உயிரோடு வாழ்கிறது.
தேச உணர்வை விதைத்த அவரது கலைப்பணி
என்றென்றும் அழியாத வரலாற்றுச் சின்னமாக நிலைத்திருக்கும்.

இத்தகைய மகத்தான கலைப்போராளியை இழந்த இந்நேரத்தில்,
"தமிழீழ சுயநிர்ணய அமைப்பு தனது ஆழ்ந்த இரங்கலையும்
மரியாதையையும் தெரிவிக்கிறது."

அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதுடன்,
அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும்
எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

“உங்கள் பாடல்கள் எங்கள் போராட்டத்தின் உயிராகவே தொடரும்”

தேனிசை செல்லப்பா ஐயா அவர்களுக்கு
எங்கள் தலைவணக்கத்துடன் கூடிய
"வீரவணக்கம்".

"அழியாப் புகழோடு என்றும் வாழ்வீர்கள்".

தமிழீழ சுயநிர்ணய அமைப்பு (UK)
Movement for Self-Determination of Tamil Eelam (MSDTE)

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"



Adobe Scan 29 Apr 2026 (3).pdf
Reply all
Reply to author
Forward
0 new messages