*இலங்கை அரசாங்கத்தின் பலவீனங்களை அறிந்து தமிழர்கள் நகர்த்தும் வியூகம் வெற்றி அடையுமா?*
பொருத்தமான வியூகங்களுடன் சர்வதேசத்தை திறம்படக் கையாள்வதன் மூலம், சிறிலங்காவின் நாசகார நடவடிக்கைகளை முறியடித்து தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க முடியும்.
எம்மிடமுள்ள பலத்தை உணர்ந்து, அறிவுபூர்வமாக ஒருங்கிணைந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
வெறும் வீர வசனங்களும், செயலற்ற பேச்சுகளும், கற்பனை உலகில் மிதப்பதும், எம் நியாயங்களை சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லத் தவறுவதும் எம் முன்னேற்றத்திற்கு தடையாகின்றன.
*ஐ.நா. கட்டமைப்புகளில் நாம் மேற்கொள்ளும் உறுதியான நகர்வுகளே சிறிலங்காவை உண்மையில் அச்சுறுத்துகின்றன.*