காலின் ஆடுசதைப் பகுதியில் வலி மற்றும் வீக்கம், நடந்தால் வலி, வீக்கம் அதிகமாவது மற்றும் ஆடுசதைப் பகுதியைத் தொட்டாலே வலிப்பது, கால் மரத்துப் போவது, காலின் வீக்கமுள்ள பகுதி மிகவும் இறுக்கமாக இருப்பது, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனே மருத்துவரைச் சந்திப்பது நல்லது.
ஏனென்றால், மேற்சொன்ன அறிகுறிகள் அந்தப் பகுதியில் ஏற்படும் ரத்தம் உறைதலின் (Blood Clot) அறிகுறியாகவும் இருக்கலாம்" என்கிறார்கள் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள்.