"நெறிசூடி" — பாவலர் நாரா.நாச்சியப்பன்

12 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jun 5, 2026, 9:24:50 PM (3 days ago) Jun 5
to மின்தமிழ்
"நெறிசூடி"
 
 — பாவலர் நாரா.நாச்சியப்பன்


[நல்ல தமிழில் நாச்சியப்பன் சொல்லிய நன்னெறி சூடி]
நாச்சியப்பன் பாடல்கள்  — https://ta.wikisource.org/s/3axb

1. அன்புநெறி நில்
2. ஆக்கம் பெருக்கு
3. இனியவை பேசு
4. ஈயென வாழேல்
5. உயர உழை
6. ஊசல் மனங் கொளேல்
7. எண்ணிய முடி
8. ஏசிப் பேசேல்
9. ஐய வினாக் கேள்
10. ஒன்றித் தொழில் செய்
11. ஓடி நலங்கொள்
12. ஒளவெனக் குறுகேல்
13. அஃறிணைக்கு இழியேல்
14. கடல் கடந்து உறவுகொள்
15. ஙவ்வினம் போலிரேல்
16. சட்டம் வகுத்து நில்
17. ஞண்டுபோல் ஒளியேல்
18. அடம்பிடித்து அழியேல்
19. வணங்கி ஒளிகொள்
20. தமிழ்ப்பணி தொடர்ந்து செய்
21. நகத்தைக் கடியேல்
22. பகட்டு கைவிடு
23. மரத்தை வெட்டேல்
24. அயல் மொழி பழகு
25. இரக்கம் வேண்டேல்
26. இலக்கணம் அறிந்து கொள்
27. வழுவிலாச் செயல் செய்
28. அழகு சிதையேல்
29. இளவ்லுக்கு அன்புசெய்
30. அறன் கடை நில்லேல்
31. இன நலம் பேணு
32. கடமை தவறேல்
33. காது குத்தேல்
34. கிள்ளி மகிழேல்
35. கீரன் உரங்கொள்
36. குறிக்கோள் கொண்டுவாழ்
37. கூற்றைப் புறங்கொள்
38. கெலித்துப் பெருமைகொள்
39. கேலிக் கிடங் கொடேல்
40. கைத் தொழில் வளர்த்திடு
41. கொலைக் கதை கூறேல்
42. கோலம் புதுக்கு
43. சண்டைக்கு அலையேல்
44. சாவுக்கு அஞ்சேல்
45. சிரித்துப் பழகு
46. சீலங் கருது
47. சுட்டுத் தணியேல்
48. சூழ்ச்சி பொடி செய்
49. செம்மை நெறி நில்
50. சேவலோ டெழுந்திரு
51. சைவ உணவு தேர்
52. சொன்ன சொல் மாற்றேல்
53. சோறு சிந்தேல்
54. தனித் தமிழ் பெருக்கு
55. தாழ்ந்து நில்லேல்
56. திருத்தம் ஒப்பு
57. தீர முடி
58. துன்பம் உதறு
59. தூண்போல் தாங்கு
60. தெளிவு கொள்
61. தேவை சுருக்கு
62. தைவளம் போற்று
63. தொண்டு மகிழ்
64. தோழமை பெருக்கு
65. நலிவு தவிர்
66. நாளும் உழை
67. நிலத்துப் பயன் கொள்
68. நீறு பூசேல்
69. நுனிப்புல் மேயேல்
70. நூறாண்டு உயிர் வாழ்
71. நெகிழ்வது உயர் மனம்
72. நேரிற் புகழேல்
73. நைந்தது அகற்று
74. நொள்ளைக்கு இரங்கு
75. நோவன செய்யேல்
76. பண்பில் திரியேல்
77. பாமரம் அகற்று
78. பிஞ்சு பறியேல்
79. பீதி பரப்பேல்
80. புன்னகை தேக்கு
81. பூச்சில் மயங்கேல்
82. பெண்டிற்கு உயர்வளி
83. பேசுவ பேசு
84. பைக் களவுக்கு இடங்கொடேல்
85. பொழுது வீண் கழியேல்
86. போலி விலக்கு
87. மதிக்கப் பழகு
88. மானங் காத்திடு
89. மின் விளை யாடேல்
90. மீண்டும் பிழை செயேல்
91. முள் வழி நடவேல்
92. மூத்தோர் சொற்கேள்
93. மென்று உணவுகொள்
94. மேடை பழகு
95. மையிருட் டுலவேல்
96. மொழிநலம் பேணு
97. மோதி மகிழேல்
98. மௌலியழகு செய்
99. வலிவு பெருக்கு
100. வாழும் நெறிகொள்
101. விரைந்து செயல் முடி
102. வீணுக் குழையேல்
103. வெற்றி நாடு
104. வேலைக் கயரேல்
105. வைர நெஞ்சு கொள்
_____________________________________


"ஆய்வு சூடி"   —  தமிழண்ணல்
https://groups.google.com/g/mintamil/c/kmvDtP2U0_c/m/SjfX12a9BAAJ
Reply all
Reply to author
Forward
0 new messages