1. வெருளி நோய்கள் 1246 -1250 : இலக்குவனார் திருவள்ளுவன் ++ 2. சட்டச் சொற்கள் விளக்கம் 1041-1042: இலக்குவனார் திருவள்ளுவன்

1 view
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Apr 10, 2026, 6:49:05 PM (7 hours ago) Apr 10
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan Srinivasan, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan, Umarani Pappusamy Mysore, Guberan Rajan, Dr. Ku.Muthukumar

சட்டச் சொற்கள் விளக்கம் 1041-1042: இலக்குவனார் திருவள்ளுவன்

 ஃஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்      11 April 2026      கரமுதல



(சட்டச் சொற்கள் விளக்கம் 1036-1040 : தொடர்ச்சி)

சட்டச் சொற்கள் விளக்கம் 1041-1042

1041. Awareness  விழிப்புணர்வு

சட்ட விழிப்புணர்வு தனி விழிப்புணர்வுகுமுக விழிப்புணர்வுபண்பாட்டு விழிப்புணர்வுஉணர்வு விழிப்புணர்வுஅமைப்பு விழிப்புணர்வுஉறவு விழிப்புணர்வுகுடிமை விழிப்புணர்வுதொழில்நுட்ப விழிப்புணர்வுநலவாழ்வு விழிப்புணர்வு, மனநல விழிப்புணர்வு மன்பதை விழிப்புணர்வுஊடக விழிப்புணர்வுசுற்றுப்புற விழிப்புணர்வுவரலாற்று விழிப்புணர்வுமுதலீட்டு விழிப்புணர்வுசேமிப்பு விழிப்புணர்வு, அரசியல் விழிப்புணர்வு முதலியவாறாகப் பலவகைப்படும்.

தொடர்பான சிக்கல்கள் வழக்குகளில் இடம் பெறும்பொழுது தொடர்புடைய சொற்கள் சட்டச் சொற்கள் ஆகின்றன.

சட்ட விழிப்புணர்வு (Legal awarness) என்பது பொது மக்களுக்கான சட்டக் கல்வி அல்லது சட்ட நூலறிவு என்றும் அழைக்கப்படுகிறதுசில நேரங்களில் குடிமக்களின் கல்வி எனவும் குறிக்கப் பெறுகிறது.

இது தனியர்களைச் சட்ட அமைப்பில் வலுப்படுத்தும் வகையில் சட்டங்கள்உரிமைகள்சட்ட செயல்பாடுகளைப் புரிந்து கொள்வதைக் குறிக்கிறது.

சட்டம்நீதிமன்ற அமைப்புகளுக்குத்  தொடர்புடைய பொதுப் பலன்களையும் திறன்களையும் மேம்படுத்துவதற்காக நோக்கப்பட்ட பல்வேறு செயல்பாடுகளை இது கொண்டுள்ளது. மேலும் அந்தச் செயல்பாடுகளுடன் தொடர்புடைய நடைமுறைபடிப்புத்துறைகளையும்சட்டம் பற்றிய அறிவை  மக்களுக்கு வழங்குவதில் குமுகாய- தொழில்முறை இயக்கத்தையும் குறிக்கிறது.

அமெரிக்கர்சட்ட உரைஞர் சங்கம்(American Bar Association) சட்ட விழிப்புணர்வுஎன்றால் . குறையாய்வுத் தீர்ப்புகள் குறித்த சட்டப் பொருண்மைகள், சட்ட வழிமுறை, வாய்ப்புள்ள சட்ட வளங்கள் முதலியவற்றைப் பயன்படுத்தவும் மேம்படுத்தவும் உள்ள வழிகளையும் உத்திகளையும் வெளிப்படுத்தவும் வழிகாட்டுவது என்கிறது.

மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், (PHRA) 1993 பொது மக்களுக்கு மனித உரிமைகள் குறித்தும் தொடர்பான சட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு தேவை என்பதற்காக இயற்றப்பட்டது.
1042. Axe to grindமறைமுக நோக்கம்   

கூறியதையே திரும்பத் திரும்பக்‌ கூறுதல் என்பது நேர் பொருள். சட்டத் துறையில் மறைநோக்கத்தை – அஃதாவது மறைமுக நோக்கத்தைக் குறிப்பது. மறை நோக்கம் என்றால் தவறாகப் பொருள் கொள்ளலாம் என்பதால் மறைமுக நோக்கம் எனக் குறிக்கப்பெற்றுள்ளது. எனினும் நாளடைவில் மறை நோக்கம் என்றே பயன்படுத்தலாம்.

இத் தொடர் ஒருவர், தூய பொதுநலத்தின் அடிப்படையில் செயல்படாமல், மாறாக ஒரு குறிப்பிட்ட ஆதாயத்தைப் பெறுவதற்காக அல்லது பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படுகிறார் என்பதை உணர்த்துகிறது.

தனியரின் நோக்கங்கள் வெளிப்படையானவை அல்ல என்றும், அவை தனிப்பட்ட மனக்குறைகள் அல்லது மறைமுக நலன்களால் உந்தப்பட்டிருக்கலாம் என்றும் இத்தொடர் சுட்டிக்காட்டுகிறது.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

++

வெருளி நோய்கள் 1246 -1250 : இலக்குவனார் திருவள்ளுவன்

 ஃஃஃ    இலக்குவனார் திருவள்ளுவன்      11 April 2026      கரமுதல



(வெருளி நோய்கள் 1241-1245-தொடர்ச்சி)

வெருளி நோய்கள் 1246 -1250

  1. தானி உந்து வெருளி – Jiqimuphobia
    தானியங்கி உந்து(robotic car) தொடர்பான வரம்பற்ற பேரச்சம் தானி உந்து வெருளி.
    இயந்திர இழுவையான ‘ஆட்டோ/ Auto Rickshaw’ என்பதைத் தானி எனத் தமிழன்பர்கள் குறிப்பிடுகின்றனர். (Rickshaw என்பது சப்பானியச் சொல்.) அந்த இடத்தில் அச்சொல் இயந்திரம் என்னும் பொருளில்தான் கையாளப்படுகின்றது. உண்மையில் இந்த இடத்தில்தான் தானி என்பது பொருத்தமாக இருக்கும். இருப்பினும் மிதியூர்தியாகிய ஆட்டோ ரிக்சாவைத்(Auto Rickshaw) தானி எனச் சொல்வது மறையும் வரை robotic car என்பதனைத் தானி உந்து (தானியுந்து) எனலாம்.
    00
  2. திகிலி வெருளி – Deimosphobia
    செவ்வாய்க்கோளின் திகில் உலவி(Mars’s moon Deimos) குறித்த வரம்பற்ற பேரச்சம் திகிலி வெருளி.
    கிரேக்கத் தொன்மைக் கதையின்படி திகில் கடவுள். சுருக்கமாகத் திகிலி எனலாம். இதையே செவ்வாயின் இரட்டைஉலவி ஒன்றின் பெயராகச் சூட்டியுள்ளனர். நாம் இதனைத் திகிலி என்றே கூறலாம். (மற் றொரு உலவியின் பெயர் வெருட்டி/Phobos)
    00
  3. திகில் வெருளி – Tromophobia
    திகில்(terror) குறித்த வரம்பற்ற பேரச்சம் திகில் வெருளி.
    திடீரென்று வெடிக்கும் அதி பயங்கரம், மிகு வன்முறை முதலிய திகில் நிலை குறித்த அளவுகடந்த பேரச்சம் அனைத்துத் தரப்பாரிடமும் உருவாகிறது. 11.09.2001 இல் பன்மாடி அடுக்கத்தில் வானூர்தி மோதி வெடிக்கச்செய்து உயிர்ப்பலி நடைபெற்றது. இந் நிகழ்விற்குப் பின்னர் திகில் வெருளி பலரிடம் பெருகியுள்ளது.
    Tromo என்னும் கிரேக்கச் சொல்லிற்குத் திகில் எனப் பொருள்.
    00
  4. திகைப்பு வெருளி – Anapsychiphobia / Ekplixiphobia / Xafniasmaphobia
    திகைப்பு (பிரமிப்பு) குறித்த வரம்பற்ற பேரச்சம் திகைப்பு வெருளி.
    கிரேக்கத்தில் Anapsychi – கேளிக்கை, Xafniasma – திடுக்கிடல், Ekplixi – வியப்பு எனப் பொருள்கள்.
    கேளிக்கையால், திடுக்கிடும் நிகழ்வால், வியப்பால் பிரமித்து – திகைத்துப்போவது குறித்த வெருளி என்பதால் பொதுவாகத் திகைப்பு வெருளி எனச் சொல்லாம்.
    00
  5. திக்கல் வெருளி-Psellismophobia
    திக்கிப்பேசுவது குறித்த தேவையற்ற அச்சம் திக்கல் வெருளி.
    திக்குவாய் என்பதைக் கொன்னை வாய் என்றும் சொல்வர்.
    திக்கிப்பேசுவதால் பிறரால் மதிக்கமாட்டோம் என்ற எண்ணமும் திக்குவாயால் ஏற்படும் தாழ்வுணர்ச்சியும் திக்கிப்பேசுதல் குறித்த அச்சத்தை மிகுதியாக்குகிறது. திக்கிப் பேசுவதை ஊனமாக எண்ணாமையும் குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையும் அதற்கான முயற்சியும் அதன் மீதான அச்சத்தைப் போக்கும்.
    திக்குவாயரை நகைச்சுவையாகக் காட்டும் பழக்கத்தை ஊடகத்தினர் கை விட வேண்டும். அத்தகைய காட்சிகளைப் படிப்பதால் அல்லது பார்ப்பதால் திக்குவாயினர் தாழ்வுமனப்பான்மையை வளர்த்துக்கொண்டு கவலையையும் அச்சத்தையும் உடன் வளர்த்துக் கொள்கின்றனர்.
    psellismo என்னும் கிரேக்கச் சொல்லிற்குத் திக்குவாய் எனப் பொருள்.

(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5



--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages