பாரதியின் "குயில் பாட்டு" பாடுவோம் - சூர்யா மற்றும் அருள்

1,221 views
Skip to first unread message

தேமொழி

unread,
May 26, 2020, 3:52:39 AM5/26/20
to மின்தமிழ்

பாரதியின் "குயில் பாட்டு"  பாடுவோம்  - 1 


சுடர் இசை மாமணியும் (ஆர். சூர்யபிரகாஷ்)
அருந்தமிழ் அருவியும் (முனைவர் ஔவை அருள்)

குயில் பாட்டு இயலும் இசையுமாக இணைந்து செய்யும் முயற்சி


(Presenting weekly episodes of Mahakavi Subramanya Bharathiyar's "Kuyil Pattu" in musical form with an explanation.)



----

தேமொழி

unread,
Jun 2, 2020, 1:25:00 AM6/2/20
to மின்தமிழ்

பாரதியின் "குயில் பாட்டு"  பாடுவோம்  - 2 




================================================
குயில் பாட்டுப் பாடுவோம் – பகுதி -2
குயிலிசையோடு குரலிசை இணைந்த கோலம் 
கண்டு மகிழலாம்.
================================================

அருளின் குரல் வரிகள்:-
••••••••••••••••••••

குயில் பாட்டு பாரதியாரின் உயிர்ப்பாட்டு என்று சொல்லலாம். 
குயில் கூவுகிறதாம். கூவுகிற குயிலின் ஓசை எத்தனை விதமாய்ப் புனைந்து காட்டலாம் என்பதைத் தமிழ் உலகத்தில் ஏற்றம் பெறச் செய்த பொன்வரிகளைத்தான் குயிலின் குரலாக பாரதியார் கூறுகிறார்.
குயில் தன்னுடைய கதையைச் சொல்லத் தொடங்குகிறது. குயில் பேசுகிற அந்த குரல் இன்பத்தில் கனல் ஏற்றுவதாக மின்னொளியைக் கன்னலில் கலப்பது போல சொல்லமுடியாத சுவையோடு சூழ்ந்திருக்கும் அவ்வளவு பேரும் சொக்கிப்போகப் பாடத் தொடங்கி தன் கதையைத் தொடங்குகிறது. 

தமிழில் முன்னெல்லாம் கோகிலம் என்பார்கள். அதனால்தான் தன் அருமைத் திருமகளின் குரலுக்கு வசந்த கோகிலம் என்றே பெயரிட்டார்கள். கோகிலம் என்பது குயில் ஆகும். அதனால்தான் இசை அரசிக்கு கோகில வாணி என்று பெயரிட்டார்கள்.
கோகிலக் குரல் வேந்தராக சூரியப் பிரகாஷ் அவர்கள் சுடச்சுட இசையின் திறன்கள் படப்பட இப்போது பாடுவதைக் கேட்டோம்.

தேமொழி

unread,
Jun 20, 2020, 1:46:24 AM6/20/20
to மின்தமிழ்

பாரதியின் "குயில் பாட்டு"  பாடுவோம்  - 3




================================================
குயில் பாட்டுப் பாடுவோம் – பகுதி -3
குயிலிசையோடு குரலிசை இணைந்த கோலம் 
கண்டு மகிழலாம்.
================================================

அருளின் குரல் வரிகள்:-
••••••••••••••••••••

கற்பனையும், கதையுமாக எழுதப்பட்ட கவிதைப் பகுதி இது.  கதையின் துவக்கமாக அதன் பாத்திரங்களை அறிமுகப்படுத்தும் நோக்கில், முதலில் இக்கதையின் கதாநாயகியான குயிலி, குயிலைப் பற்றிக் கூறுகிறாள்.

அவர் காட்டும் முதல் காட்சி, ஒரு மாஞ்சோலை என்றும், வேடர்கள் வந்து பறவைகளைச் சுடும் ஒரு சோலை என்றும், வேடர் வராத ஒரு நாள் என ஒரு திகல் கதையைப் போல தொடங்குகிறார்.

பெண் குயிலொன்று, கிளையில் அமர்ந்துள்ளது.  அதைப்பார்த்து, பரவசமுற்று பல ஆண் குயில்கள் அதனருகில் வருகின்றன.  பெண் குயிலின் குரலில், ஆண் குயில்கள் அறிவிழந்து அமர்ந்துள்ளன.  காலைக் கடன்களை மறந்து மயங்கியுள்ளன.  குயிலின் குரல், காற்றில் கலந்த அமுதம் எளிதான மின்னலை குரலில் சேர்த்து கூவும் குயிலின் குழலிசையில் தம்மை இழந்துள்ளன.

வானத்து தேவதைப்பெண்தான் இந்தக் குயிலுருவில் வந்து இருக்கிறாளோ என வியந்து திகைத்துள்ளன.  பூவுலகம் வந்து, தேனாய் தன் குரலில் இசைக்கும் விந்தை இதுவோ என வியக்கவைக்கும் குயிலின் குரல்.  இதில், ஆண் குயில்கள் மட்டுமின்றி, பாரதியார் தன்னையும் ஒரு ஆண் குயிலாக எண்ணுகிறார்.  பட்டப்பகலிலேயே கவிதை வெறி உண்டாகி, நினைவிழந்து நீண்ட கனவு ஒன்றைக் காண்பதாக கவி பாடுகிறார்.

தன் மனித உருவம் நீங்க வேண்டும்.  தன் முன்னுள்ள பெண் குயிலுடன் காதலித்து களிக்க வேண்டும்.  தானும் ஒரு ஆண் குயிலாக மாற வேண்டும்.  பாட்டின் தீயிலே பொசுங்கிவிட வேண்டும் என்றெல்லாம் எண்ணுகிறார்.  இப்படி அந்த தேவர்கள்கூட வினவுவார்களோ என ஐயமுறுகிறார்.  'குக்கூ' என்று குயில் பாடும் இந்தப் பாட்டில் என் சிந்தை பறிகொடுத்தேன். பல கற்பனை எண்ணங்கள் எனக்குள் தோன்றுவதை இந்த உலகிற்கு உரைக்கப்போகிறேன். குயிலின் குரல் இன்பத்தேன் வந்து காதில் விழுந்ததால், வந்த போதையில் செய்வதறியாது இனி என் எண்ணங்களை வடிக்கப்போகிறேன் என முதல் அத்தியாத்தை முடிக்கிறார்.

The winds that blew or sweets of lightning hid
In clouds all softly thinly spreading over
Or like a beauteous maiden from the bower
Of heaven, singing in this guise her tale
Such heavenly symphony and song did spell
My ears and I began to dream outright
Of glorious visions with a poets might
O bliss that I were changed into a koel
To woo her and enjoy her bosom still
And lose myself in her fiery flood of song
Such pining thoughts the shady trees among
She with her song inspired, O rarely heard
By Devas even,At the Ku Ku song of the bird
A world of thoughts uprose which I would fain
Lay bare,but a heavenly voice I seek in vain...

தேமொழி

unread,
Jun 20, 2020, 2:01:09 AM6/20/20
to மின்தமிழ்

பாரதியின் "குயில் பாட்டு"  பாடுவோம்  - 4

https://youtu.be/dKa8A8OF1Ac


================================================
குயில் பாட்டுப் பாடுவோம் – பகுதி -4
குயிலிசையோடு குரலிசை இணைந்த கோலம் 
கண்டு மகிழலாம்.
================================================

அருளின் குரல் வரிகள்:-
••••••••••••••••••••

பெருமக்களே,

குயில்பாட்டின் இரண்டாம் இயல்  தொடங்கியது. மிக அற்புதமாக நம்முடைய கலைமாமணி சூர்யபிரகாஷ்  தொடக்கத்திலிருந்து இதை மிக அழகாக "காதல், காதல், காதல் அது போயின் சாதல், சாதல், சாதல்" என்று அந்த வரிகள்தான் இப்போது இந்தப் பாடலினுடைய உயிராக அமைகிறது.  இந்த வரிகள் வைர வரிகள்; சாதனை வரிகள்; கல்வெட்டு வரிகள்.  
சாசன வரிகள், இளையோரின்  இதய கீதம். 

உலகெங்கும் உள்ளவர்கள் அனைவருக்கும் தெரிந்த தேன் வரிகள். இந்த வரிகளைப் பாரதியார் சொல்லும்போதே அவருக்கு திருவள்ளுவருடைய இன்பத்துப்பால்தான் நினைவில் நின்றது.  

அமுதம்போல் இருந்த அந்தப் பெண்ணை நான் தொட்டபொழுதே எனக்கு இன்னுயிற் மலர்ந்தது என்ற குறட்பாக்களை எண்ணிக் கொண்டுதான் 
‘வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிலை சாதல்
அதற்கன்னள் நீங்குமிடத்து’, 
‘உறுதோறு உயிர் தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்’

இந்தப் பாடல் வரிகளே வந்திருக்கும் என்று நாம் எண்ணத் தோன்றுகிற அளவுக்கு வரலாற்று வரிகளைப் பாடிச் சிறப்பித்த கலைமாமணி சூர்யபிரகாஷை என்னென்று புகழ்வது!?
என்னென்று புகழ்வது!?
 
பாரதியார் தன்னுடைய குயில்பாட்டு 2ஆம் அத்தியாயத்தை 'குயிலின் பாட்டு' என்று இசைப்பாடலாக வடிக்கிறார்.  ‘காதல் போயின் சாதல்' என்று பல்லவியாகத் தொடங்குகிறார்.  அதனை அடி நாதமாகக் கொண்டு குயில் கூவுவது போல் அடுக்கடுக்காகக் காதல் எத்தகையது என்றும், அது அழிந்து போனால் உயிரும் அங்கே உடலை விட்டு நீங்கிவிடும் எனத் தொடங்குகிறார்.

 ஒளி போனால் இருள் போகும் என்று நேரடியாகச் சொன்னவர், இன்பம் இல்லையேல் துன்பம் வரும் என நேரடியாகக் கூறாமல், நம்மைச் சற்றுச் சிந்திக்க வைக்கிறார். இன்பத்திற்கோல் எல்லைகாணின் துன்பம் என ஒரு கருத்தினை வலியுறுத்துகிறார்.  இன்பமும் துன்பமும், கடலும் நிலவும் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டுள்ளதுபோல், கடலின் கரையில் நீள் உலகம் நிற்பது போலவும் இன்பத்தின் எல்லையாகத் துன்பமும் துன்பத்தின் எல்லையில் இன்பமும் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு எல்லையாக உள்ளன என்றும் எடுத்துக் காட்டுகிறார்.

 அதையேதான் இன்பத்திற்கோர் எல்லை காணின் துன்பம்தான் முடிவு என எழுதுகிறார்.  இன்பத்தையும் அளவிற்கு மீறி எல்லைக்குச் சென்றால் துன்பம் வந்து சேரும் என எடுத்துரைக்கிறார்.  அடுத்த அடியில், பாரதியார் குயிலுக்குத் தெரிந்த இன்ப உணர்வு நாதத்தில்தானே உள்ளது என்று 'நாதத்தில் ஓர் நலிவு உண்டாயின் சேதமாகிவிடும்' எனக் கூறுகிறார்.

 சுரம் பாடுகையில், ஒரு ஒலிக்குறிப்பு மாறினாலும், அந்த இராகம் அழிந்துவிடும் என்று இசையறிஞர்கள் கூறுவர்.  அதை ஓர் ஆணித்தரமான கருத்தாகவும் கொள்வர்.  சங்கராபரணம் கொஞ்சம் தடம் மாறினால் கல்யாணி இராகமாகிவிடும் என்பர்.  குயில் அவ்வாறு கூறுவது மிகப் பொருத்தம் தானே?.  இராகம் குறிப்பிடும்போது தாளம் தானாகவே வரும்.  சுதி மாதா என்றால், இலயம் பிதா என்று சொல்வர்.  எனவேதான் 'தாளத்திற்கு ஓர் தடையுண்டாயின் கூலமாகிவிடும்' எனத் தவறிய தாளம் குப்பையாகிவிடுகிறது என எடுத்துக் காட்டுகிறார்.  

 தப்புத்தாளங்கள் வெறும் ஒலிக்கூட்டங்கள்.  அவை வெறும் சத்தங்கள்.  இனிமைய இழந்த இரைச்சல்கள்.  குப்பையாகிப் போன கூச்சல்கள்.  கரையிழந்து போன கதறல்கள்.  தாளமிட்டு நளினமான ஒலியில் நர்த்தனமாகி வருகின்ற தாளங்கள்தான் நாதத்தின் உயிர் என்பது குயில் கூறும் இசை இலக்கணமாகும் என்று பாரதியா இப்பாடலில் கூறுகிறார்.

 இசையும் தாளமும் சேர்ந்ததுதான் பண்ணாகும்.  குயிலின் குரல் பண்ணாகி, பாரெங்கும் காற்றில் பரவி, சோலையனைத்தையும் இசை மழையில் நனைக்கிறது.  அதே பண்ணிற்குப் பழுது ஏற்பட்டுவிட்டால் அது மண்ணாகிவிடும்.  'காதல் போயின் சாதல் என்பதும் அதுவேதான்.'  கண்ணைக் காக்கும் இரண்டு இமைகள் போலவே காதலைக் காத்திடுவோம்.  உயிர்த்தீயில் வளர் ஜோதி இந்தக் காதல்.  அது நெஞ்சுக்கு இனிய அமுதாகும்.  துயர் நீங்கி உள்ளம் சுடர் விடச் செய்யும்.  

  காதல் ஒளியாகவும், பண்ணாகவும், தாளமாகவும், நாதமாகவும் உலகில் உலவும் உயிர்ப்பொருள்.  இவை இல்லையேல் மரணமே கிட்டும் எனத் தன் மகன் நெகிழ்ந்து குயிலின் பாட்டு மூலம் பாரதியார் அன்பின் மகத்துவத்தை அழகாக எடுத்துரைக்கிறார்.

 குயில் மேலும் கூவுகிறது;  காதல் புகழ் தரும்;  உறுதி தரும்;  உணர்வு தரும் எனக் காதல் குறித்து எடுத்துரைக்கிறது.  புகழில் இழுக்கு நேர்கையில், இகழ்ச்சி அடைவதற்கு வாய்ப்புண்டு.  'புகழுக்கு ஓர் புரையுண்டையின் இகழே இகழே இகழே' எனப் புகழ்கிறது அந்தக் குயில்.  புரை என்பது புண்ணாவதைக் குறிக்கும்.  காதல் புகழடைவதற்குத் தியாகம் தேவை.  தியாகமும், சமர்ப்பணமும் விட்டுக்கொடுத்தலும் புரிதலும் ஒன்று சேர்ந்து காதலைப் புகழின் உச்சிக்கு எடுத்துச் செல்லும்.  காதலில் உறுதி சேர்ந்தால்தான் உண்மையான வெற்றியும் கீர்த்தியும் வெல்ல முடியும்.

 'ஒன்றா உலகத்து உயர்ந்த புகழினைப் பெறுவதற்கு உண்மையும், அறமும் உறுதுணையாதல் வேண்டும்.  அவற்றிலிருந்து பாதை விலகும்போது இகழ்ச்சிக்கு வழி வகுத்துத் தீமையும், கேடும் சூழ்ந்துகொள்ளும்' என்று குயில் பாடுகிறது. 

 காதல் பாதையில் புகழுடனும், உறுதியுடனும் செல்கையில் உள்ளம் நிலை குலைந்தாலோ, பலவீனமடைந்தாலோ அதுவே இறுதிக்கும், இயலாமைக்கும் அழைத்துச் சென்றுவிடும்.  திண்ணிய நெஞ்சமும், திடமான எண்ணமும்தான் உறுதியை உள்ளத்தில் உட்கார வைக்கும்.  அவை உடையாமல் பார்த்துக்கொள்ளும் மனப் பக்குவமே மாண்பையும், மன மகிழ்ச்சியையும் அளிக்கும்.  

 காதல், வாழ்வின் புகழும், உறுதியும் கூடலுக்கு வழி வகுக்கும்.  கூடிக் குடும்பமாக இருந்து குதூகலமாக வாழ்வது இயற்கை தரும் வரப்பிரசாதமாகும்.  குமரியும், குமரனும் ஒற்றுமையாக வாழ்வதற்கு அன்பும், கருணையும் ஒளிமயமாய் இணைந்து இருக்கையில் இன்பமும், இசையுமாய் வாழலாம்.  கூடலில் பிரிவினை ஏற்பட்டால், குமரன் வெளிச்செல்வான் என்றால் வாழ்வெனும் பயிர் வாடிவிடும்.  வாழ்வில் கலையிழந்து வலுவின்றி, வருந்த நேரிடும் என்று குயில் நடக்கப்போவதை இங்குக் குறிப்பாகப் பாடுகிறது.  

 வாழ்வின் இசை, குழலின் நாதமாய் இருக்கையில், புல்லாங்குழலில் கீறல் விழுந்தால், இசை அழிந்துவிடும்.  விழலுக்கு இரைத்த நீராகும்.  குழலில் நுழைந்து செல்லும் காற்று, வெறும் காற்றாகவே செல்லும்.  பிரிவும், கீறலும் வாழ்வைப் பாதித்துவிடாமல் பாதுகாக்கக் காதல் வாழ்க்கையில் ஒற்றுமை அவசியம்.  பின் நடக்கப்போகும் சோகத்திற்குக் குயில் முன்னதாகவே படிப்பவருக்கு எடுத்துக்காட்டித் தம் இரண்டாவது அத்தியாயத்தைத் திகில் கருவை உள்ளடக்கி முடிக்கிறார் பாரதியார்.  

Love! Love! Love!
When  love is lost, when love is lost, 
Death!  Death!  Death!
Grace!  O, gracious light!
If the light of grace, O, be effaced
This night, O, endless night!
Joy!  Joy!  Joy!
If bound of Joy were to be found, 
This grief, O, endless grief
Music!  Music!  Music!
If music fails, O, music fails,
This waste, O, endless waste!
Measure, O, musical measure!
If there be blemished in the measure
This rubbish beyond measure!
Melody!  Melody!  Melody!
If blemish creeps in melody, 
This dust, O, useless dust!
Fame! Fame!  Fame!
If blame attaches to one’s fame, 
This shame, O, endless shame!
Strength of will, O, will, 
From strength of will, if there be spill,
This death, O, certain death
Sweet, O, lovers meet
But after the meet for lovers to park, 
This pain, O, endless pain!
Flute!  Flute!  Flute!
A rift in the flute, O rift in the flute,
Turns it a reed-a useless reed.

தேமொழி

unread,
Jun 23, 2020, 4:16:19 PM6/23/20
to மின்தமிழ்

பாரதியின் "குயில் பாட்டு"  பாடுவோம்  - 5 



https://youtu.be/lOA0C4IVeH4


================================================
குயில் பாட்டுப் பாடுவோம் – பகுதி -5
மாங்குயிலுக்கு தீங்குரல் தந்த மாமணி!
கண்டு மகிழலாம்.
================================================

அருளின் குரல் வரிகள்:-
••••••••••••••••••••

  இசை வாணர் சூர்ய பிரகாஷின் இசை மழை மிக உன்னதமான மாமழையாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.  கடந்த மூன்று வாரங்களாக பாரதியாரி..ன் உயிர்ப் பாட்டான குயில் பாட்டை ஊன் உருக அவர் இசைத்துக் காட்டியிருக்கிறார்.  அலைபுரளக் கரை புரள இராகங்கள் அவர் குரலில், வழிந்தன.  இது குறித்து, உலகிலிருந்து பல்வேறு பெருமக்கள் எல்லாம் என்னை அழைத்து குயில் பாட்டை இப்படி உருக்கமாக பாடுகிறாரே, கலைமாமணி சூர்ய பிரகாஷ், அவரை என்னென்று புகழ்வது? என்னென்று புகழ்வது? என்றுதான் என்னிடம்  நண்பர்கள் பலர் தொலைபேசியில் அழைத்துச் சொல்கிறார்கள்.

நண்பர்களே,

  பாரதியாரின் குயில் பாட்டின் கதை மிக அழகாக தொடங்கியுள்ளது.  இந்த இடத்தில் ஒரு கருத்தைச் சொல்கிறேன்.  ஆங்கிலப் பேரறிஞர் கால்ட்ரிஜ் ஒரு முறை சொன்னார். 

  “All Arts aspire the status of music” என்று சொல்லிக் காட்டுகிறார். 

  உலகில் உள்ள கலைகள் யாவும் இசையின் உயர்ந்த நிலையை அடையவே தாமும் ஆசைப்பட்டு அதனை அவாவி நிற்கும் நிலையில் இசைக்கு என்ன குறை கூற முடியும் என்றார் கோல்ரிட்ஜ்

  எந்தவொரு படைப்பையும் இசையாக மாற்றிக் காட்டுகிற அந்த விதம் , அந்த இசைக்கும், அந்த பாட்டுக்கும், அந்த கருத்துக்கும் ஒரு மாபெரும் சிறப்பு என்று கூறினார்.  அந்த சிறப்பு, இந்த குயில் பாட்டில் பொதிந்து கிடக்கிறது.   குயில்பாட்டை இசைப் பாட்டாகவே, பாடிக் காட்டிய பெருமை சூர்ய பிரகாஷை சாரும். 

  பாரதியார், மிக நுட்பமாக, குயிலுடன் தன்னுடைய தோழருடன் பேசுவதைப் போலவே பேசிக் காட்டுகிறார்.  குயிலே, என்னுடைய திரவியமே என்றெல்லாம் ஒரு குயிலைப் பார்த்து எவ்வளவு பெருமையாக ஒரு கவிஞராம், ஒரே தமிழ்க் கவிஞராம் பாரதியாரால் மட்டும்தான் பேசிக் காட்டி வென்றுக் காட்ட முடிந்தது. 

  குயில் பாட்டு ஆழங்காண முடியாத கடலாக பல்வேறு விளக்கங்களைக் கொண்ட விடுகதையாக புதிர்க்கதையாக பொற்குவியலாக அமைந்திருக்கிறது. 

குயிலின் காதல் கதை
**********

  பாரதியார் தன் குயில் பாட்டில் குயிலை அறிமுகப்படுத்தி, அதன் குரலிசையை வழிமொழிந்த பின் குயிலின் காதல் கதையை எடுத்துரைக்கத் தொடங்குகிறார்.

  குயிலின் இனிமையான குரல் வழி வந்த காதல் போயின் சாதல் என்ற மோகனப் பாட்டு முடிந்ததும் எங்கும் ஓர் அமைதி.  மாஞ்சோலை முழுவதும் ஒரு மெளனம்.  இன்பமும் துன்பமும் இணைந்து நிரம்பியது அக்கணம்.

  சோகமே வடிவாக ஒரு பெண் குயில் மட்டும் தனித்திருக்க, மற்றொரு பறவை மகிழ்ந்து எங்கோ பறந்து சென்று விட்டதால் அது சோகமாக தலை குனிந்து வாட்டத்துடன் வலிவிழந்து வாடியிருப்பதாக பாரதியார் காண்கிறார்.

  மரத்தருகே சென்று கேட்கிறார். "ஏய் பெண்ணே, கலைச் செல்வமே! காதில் இன்ப ஊற்றாகப் பாடலைப் பாடும் பறவையே, இவ்வுலக மனைத்தும் உன் இசை கேட்டு மகிழுமே. ஆனால், நீ மட்டும் ஏன் சோகமாக அவலமுற்றது போல் அமர்ந்துள்ளாய்? என்ன காரணம்? என்று கூறமாட்டாயா? என்று கேட்கிறார்.  

  அக்குயிலும் மனிதர் பேசும் மொழியிலேயே கேட்பவர் மனம் கணம் கூடுமாறு, வேதனைத் தீ மூளுமாறு சொல்கிறது.  " என் காதலுக்காக குரல் எழுப்புகிறேன்; அழுது புலம்புகிறேன்;  இல்லையேல் நான் இறந்து விட வேண்டும் என மனமுறுகும் வார்த்தைகளாக கொட்டியது அக் குயில். பாரதியின் உள்ளம் துணுக்குற்றது.  குயிலே நீ இப்படி கூறலாமா?  பிற பறவைகள் மனம் மகிழும்படி பாடக் கூடிய வல்லமை படைத்தவள் நீ. உனக்கு காதலன் கிடைக்கவில்லை என்பது அதிசயமாக உள்ளதே என்ன காரணம் என கேட்கிறார்.

  அதற்கு அந்த சோலைக்குயில்,

  மெதுவாக வெட்கமும் வேதனையும் கலந்த குரலில் தன் கதையை சொல்லத் தொடங்குகிறது.

The Koel ended her song of love and soft.
A quiet spread.  Mad love and sorrow swift
Now weighed me down.  The birds had taken flight
But the koel all along in a piteous flight
Sat pining for love.  Nearing the tree, O Bird, 
My treasure, sweetest singer of songs which could
The seven world’s set on fiery love,
What sorrow deep afflicts thee here now?
Tell me!  I asked.  O thrilled to hear her speak
The tongue of man! O novelty! all meek 
I stood.  I pine for love, if not for death!
She said.  Thou song – bird of the blue enchanted
In wisdom all the bird excelled! in vain
How could you seek a lover meet? with pain
And shame full rampant in her voice she went
To tell her tale of love, O sweet! and thus the story ran.

தேமொழி

unread,
Jun 30, 2020, 3:28:01 PM6/30/20
to மின்தமிழ்
பாரதியின் "குயில் பாட்டு"  பாடுவோம்  - 6 






================================================
குயில் பாட்டுப் பாடுவோம் – பகுதி -6
சோலைக் குயில் தன் சோகக் கதையை சொல்கிறது 
கண்டு மகிழலாம்.
================================================

அருளின் குரல் வரிகள்:-
••••••••••••••••••••


குயில் பாட்டு

 அந்த சோலைக் குயில் தன் சோகக் கதையை சொல்லத் தொடங்குகிறது.  

என் மானத்திற்கு ஏற்பட்ட சோதனையையும், துன்பத்தையும் பார்க்காமல் உண்மை முழுவதையும் சொல்லி விடுகிறேன்.  
உயர் குலத்தோரே கேளுங்கள்.  நானும் பெண் என்பதால் நான் கூற இருப்பதை சிறிது மனமிறங்கி செவி மடுப்பீர்.

  இந்த உலகில், உருவத்திலும் அறிவிலும் சிறிய வடிவிலான பறவையாக நான் பிறந்திருந்தாலும், இறைவன் அருளாலோ அல்லது தேவர்களின் கோபத்தினாலோ நான் அனைத்து உயிர்களின் மொழிகளையும் புரிந்துகொள்ளும் சக்தி பெற்றேன்.  மனிதர்களின் மனத்தில் ஓடும் எண்ணங்களையும் புரிந்துகொள்ளும் சக்தி கிடைத்தது.

  காட்டில் பறக்கும் பறவைகளின் கலகலவென்ற மகிழ்ச்சியின் ஓசையிலும், மரங்களின் இலைகளை அசைத்து காற்று இசை பாடுவதிலும், ஓடும் நதியின் ஒலியிலும் ஆர்ப்பரித்து விழும் நதியின் ஆரவாரத்திலும், கடல் அலை எழுந்து கரையைத் தொட்டு ஓடும் ஓயாத ஒலியிலும் என் மனத்தை பறிகொடுத்தவள் நான்.

  அதுமட்டுமல்ல, மனித குல பெண்கள், காதலாகி கசிந்துருகிப் பாடும் தேன் மழைப் பாட்டிசையிலும், ஏத்தம் இரைக்கையில் எழுந்து வரும் இசைப்பாட்டிலும், உறையில் நெல்லைப் போட்டு உலக்கையினால் மூச்சிறைக்கும் வேளையிலும் குக்கூ என்று கொஞ்சு மொழி தெறிக்கும் இராகத்திலும், வெற்றிலை போட சுண்ணாம்பு இடிக்கையில் தாள இலயத்துடன் வரும் பாட்டொலியிலும், வயல் வெளியில் பெண்கள் இசைக்கும் பல்வேறு கானத்திலும், பெண்கள் கூடி வட்டமிட்டு நின்று கும்மி பாடும் இன்னிசையிலும், புல்லாங்குழல், வீணை, இசைக்கருவிகள் மூலம் மனிதர்கள் விரலிலும் குரலிலும் இசைக்கும் பாட்டிலும், வீட்டிலும், வெளியிலும், நாட்டிலும், காட்டிலும் என எங்கெல்லாம் இசை என்னும் இன்ப ஒலி கேட்கின்றதோ, அதில் அந்த பாட்டில் என் நெஞ்சை பறிகொடுத்த பாவி நான் என்கிறது அந்தக் குயில். 

O high born,shedding shame and sorrowing
I will all truth lay bare.And thou,bear
With a maidens faults and me pardoned,On earth
A bird though born,with knowledge nothing worth,
By love of Devas or great heavens ire,
I know  with ease the tongues of men entire
I am,O strange,their thoughts and dreams versed in

In the chirpy sounds 
Of the songbirds’ calls
The music of the breeze 
Blowing through the trees
The soothing gurgling tunes 
Of gushing streams and tumbling falls
The eternal cadence
Of the waves of the blue seas,

The honey sweet melody 
Of young women in love
The waterwheel movements
And songs matching their move
The giggle of the slender women 
while pounding paddy
The lilt of the songs 
of lime crushers in the quarry,

The energising ballads
Sung by farming women,
The beat of the kummi dancers
With the tinkle of their bangles
 The grace in their moves
 As they glide around in circles,
 The magical flow of music
 Played, strung or beat
 In flute, veena or like, 
Strike a chord very deep
Stir me from deep within,
Anytime anywhere, anyway,
I lose myself in all these
And get carried far, far, away.
---

தேமொழி

unread,
Jul 8, 2020, 12:33:24 AM7/8/20
to மின்தமிழ்
பாரதியின் "குயில் பாட்டு"  பாடுவோம்  - 7 



================================================
குயில் பாட்டுப் பாடுவோம் – பகுதி -7
சோலைக் குயில் தன் சோகக் கதையை மேலும் கூறுகிறது 
கண்டு மகிழலாம்.
================================================

அருளின் குரல் வரிகள்:-
••••••••••••••••••••
குயில் மேலும் கூறுகிறது. என் நா தழுதழுக்கிறது. வார்த்தைகள் நடுங்குகின்றன. மனம் பதறுகிறது. தொலைநோக்குப் பார்வை கொண்டால், என் நெஞ்சத்தைப் புரிந்துக் கொள்வீர்கள் நீங்கள். என் நண்பரே, என் சிந்தனைக் காட்சி சிறிதும் புரியவில்லையா? காதலுக்காக கதறுகிறேன். கண்ணீர் விடுகிறேன். இல்லையேல் என் சாதலைக் காண தவிக்கிறேன் என்று குயில் கூற, துணுக்குற்றது கவிஞர் மனம்.

நான் உனக்கு காதலனா? சின்னக் குயிலின் மதுர மொழியில் உள்ளம் கவர்ந்தவராய் உரைக்கப்பட்டதால் உள்ளமும், உயிரும் உருகி நிற்க பேச்சின்றி சிலையானார்.

குயில் கூறி கதறிய வார்த்தை, இவரைக் குழப்பியது. காதல் இல்லையேல் இறந்துவிடுவேன் என்று சொல்லும் சொல், உள்ள வீணையில் உட்கார்ந்து சோக கீதம் பாடியது.

குழம்பிய நிலையில், நம் கவிஞர் நின்றார். மயக்கமுற்று, திகைப்படைந்து நின்றேன் என்று கூறுகிறார்.

அவர்களின் தனிமையைக் கெடுக்க, அந்த நேரத்தில், எல்லா பறவைகளும் ஒன்றுகூடி, கிளைமேல் அமர்ந்து, ஒலியெழுப்பின.

காதல் குயில் பெருமூச்சி விட்டு மேலும் கூறியது, காதலு வழி கரடுமுரடானது என்று கேள்விப்பட்டுள்ளேன். ஒளி படைத்த என் கண்ணனே, துன்பக் கடலில் தத்தளிக்கும் நேரத்தில், என்னைக் காக்க ஒரு கப்பல் போல் நீவிர் வந்தீர். என் கவலை தீர, தங்களிடம் அளவளாவ விரும்பியவருக்குத் தடை வந்துவிட்டது. நான் தம் தனிமையைக் கெடுக்க. ஆனால் ஒரே ஒரு செய்தி, இன்றிலிருந்து நான்காம் நாள், மீண்டும் இங்கேயே நாம் சந்திப்போம். மறந்துவிடாதீர்கள் என் மன்னனே. என் சிந்தனை அனைத்தும் உங்களிடம் பறிகொடுத்துள்ளேன். மறவாமல் வந்துவிடுங்கள். வரவில்லையேல் எனக்கு மரணம் நிச்சயம். நான்காம் நாள் என்று அக்குயில் மீண்டும் நினைவூட்டியது.

காத்திருக்கும் நான்கு நாட்களும், நான்கு யுகங்களாகும் எனக்கு. இப்பொழுது சென்று வாருங்கள் என கூறிய அந்தக் குயில், பறந்து மறைந்துவிடுகிறது என பாட்டுடைத் தலைவர் இந்த பத்தியை முடிக்கிறார்.

The Koels love refrain,I pine for love or else for death,
Like the cooing of love
Played on the guitar of my heart and filled the spaces of my soul entire and thrilled
As soul enchanted there I stood,on the mangrove.

Rang wild again with song on every bough
For all the birds had now returned, Alas said the koel with a sigh they say,the course of love is rugged
You bright eyes in your prime came to me as a life boat floating in correct time.
For one fast drowning in a sea of grief
For my sweet enjoyment
I as it is but brief
Of your loving company,a hindrance sore
Had clouding spread,O lord that I adore
I beg you come again four mornings hence
O fail not,born high who had robbed me since my heart
If failed to return back I will die
Remember 4 days from now on,each day will lie full heavily on me as 4 yuga's ten
O please do return,the loveliest of all men...

There are 4 yugas
Kruda Yugam 17,28,000 years
Thretha yugam 92,96,000 years
Thwapura yugam 8,64,000years
Kali yugam 4,32,000 years duration
---

தேமொழி

unread,
Jul 15, 2020, 9:37:32 PM7/15/20
to மின்தமிழ்
பாரதியின் "குயில் பாட்டு"  பாடுவோம்  - 8 



================================================
குயில் பாட்டுப் பாடுவோம் – பகுதி -8
பாரதியார் குயிலின் காதல் கதையைத் தொடர்கிறார்
================================================

அருளின் குரல் வரிகள்:-
•••••••••••••••••••••••••••••••••••

காதலோ காதல். பாரதியார் குயிலின் காதல் கதையைத் தொடர்கிறார். நான்கு நாட்கள் கழித்து சந்திப்பதாகச் சொல்லி குயில் மறைந்ததும் பாரதியாரின் மனம் பேதலித்தது. தான் கண்ட காட்சி கனவா இல்லை நினைவா என்று குழம்பியது. நினைவிழந்தவராக நின்றார். ஒரு பேயின் உருவத்தைப் பார்த்தாலே உள்ளம் நடுங்கி, உடல் வியர்க்கும் அல்லவா? இருபது பேய்களை ஒன்றாகப் பார்த்தால் எப்படி இருக்கும்? அந்த அதீத நிலையை பாரதியார் பெறுகிறார்.

பயத்தில் கலக்கமும், காதல் மயக்கமும் உடன் கூட, முகமும் விழிகளும் உள்ளக் கிளர்ச்சியின் சிகரத்தை தொட்டன. காணும் கரிய ஒருவமெல்லாம் காதல் குயிலாய் காட்சியளித்தன. உலகமெல்லாம் உள்ளக் கிடக்கையின் குயில் உருவமாக நின்று சித்தத்தை சீர்குலைக்கிறது.

நாட்கள் சென்றன. ஒரு நாள் போவதற்குள் அவர் மனம், மத்தளம் போன்றும், மரத்தடி போன்றும் அடிபட்டு, இடிபட்டு ஏக்கத்தில் துயில் இழந்தார். உயிர் துறந்தது போலானார். மன்மதன் வில்லை தோளில் சாய்த்து, எதிரில் நின்றான். மனத்தில் மயக்கும் குயில் வந்து வந்து செல்கிறது. குயிலின் குரல், இந்திர லோக இசையானது. மந்திர சக்தியாய், மாயப் பாடலாய் எங்கும் பரவியது. புத்தியும் மனமும் புகலிடம் இன்றி புரண்டன. சித்தம் கலங்கியது.

ஆவியைத் தொட்ட காதல் மாயையால் சாவியிட்ட பொம்மையானார். கால் கடுக்க சோலைக்குள் செல்கிறார். நீலிக்குயிலின் வேட்கை வேகம் தருகிறது. எந்த ஒரு பொருளும் வழியில் தெரியவில்லை. அவ்வேளையில், கதிரொளி பச்சை இலைகள்தோறும் பட்டு தெறிக்கிறது.

பாரதியாரின் காதல் மனத்தை இயற்கையே உணர்ந்தது போல் இருக்கும் பறவையெல்லாம் எங்கோ சென்றுவிட்டன. கவிஞரோ கானக் குயிலைத் தேடுகிறார். கோணமெல்லாம் பார்வையைச் சுழலவிடுகிறார். கொடுங்காதல் மனம் கொண்டு மரக்கொம்மையெல்லாம் உற்று உற்று நோக்குகிறார்.

You robbed me of my heart,please do return
Implored the koel engulfed in greif.
Ah,turn the walked steps,fond lover,
Koel left the mangrove in a gloom
O blissful vision,was it a dream or thought

I know not,nor I will think about it,
For caught in a whirl of devils did I seem
My eyes and checks are flushed
For in my bosom lies
The shaft of Cupid,God of love,manmathan

Myriad fold the form
Of the koel multiplied and in the home
Of the world she seemed the only occupant
Reeling with thoughts as these and in a ferment
I staggered home.
The day dragged heavily along
I suffered untold misery
As never loom or cymbal.
Passed a day
My soul and I with cupid,god of love,manmathan bow held by
And the mysterious koel with her
Trancing lay swelled as the shades and fruits of the magic way upon the world.
Now when tomorrow ,i tell no lies with cupid,god of love,manmathan spell
In a frame of mind that know not what was what.

Such as a doll in jugglery, to find my lass
I rushed,that which I saw the path along
I remembered not.
When I walked the trees among
I saw them glittering in the sun all gold.
The birds as if they knew my love untold
Left the man grove,
With passion all over me
I peered each bush and tree
The Kiel had left the forest she was not to be seen
With tremor in my heart I searched for it...

தேமொழி

unread,
Jul 24, 2020, 2:14:26 AM7/24/20
to மின்தமிழ்
பாரதியின் "குயில் பாட்டு"  பாடுவோம்  - 9




================================================
குயில் பாட்டுப் பாடுவோம் – பகுதி -9
குயிலும் குரங்கும்!
================================================

அருளின் குரல் வரிகள்:-
•••••••••••••••••••••••••••••••••••

சென்ற வாரம், கலைமாமணி சூரியபிரகாஷ் பாடிய அந்த உருக்கமான பாடலின் இராகம் என்ன என்று என்னிடம் பலர் கேட்டனர். கலைமாமணி சூரிய பிரகாஷே தானே புனைந்த சூரிய வசந்தம் என்ற இராகத்தில் மிக மிடுக்காக அவர் பாடியதும், அவருடைய தோற்றப் பொலிவும், அவர் பாடிய அந்த நயத்தைக் கேட்டு உலகமே சுருண்டது என்று சொன்னால் மிகையாகாது.


முன்பு பார்த்த மரத்தில் இப்போது அந்தக் குயிலைக் காணவில்லை. சுற்றும் முற்றும் பார்த்து கவலைப்படுகிறார் கவிஞர். குயிலைக் காணாமல் புலம்புகிறார். ஏ! பெண் குயிலே என்னை வஞ்சித்துவிட்டாயே. மன்மதனின் பொய்மை வடிவமே என தன் விதியை நொந்து இந்த உலகமே பாழாகிவிட்டதாக புலம்புகிறார். மேலே பார்க்கிறார். அவர் கண்ட காட்சி, அவரைப் பித்தனாக்கியது. ஆ! என்ன இது? பெண்ணால் அறிவிழக்கும் பேதைகளே, காதலைப் புகழ்ந்து பாடும் மேதைகளே! பெண்களே! இங்கே பாருங்கள். என்னைக் காதலிப்பதாக அழுத அந்த நீலிக்குயில், இப்போது ஒரு ஆண் குரங்குடன் உட்கார்ந்து ஏதே நேசமாய் கெஞ்சிக் கொண்டிருக்கிறதே என்று கதறுகிறார். பாரதியாருக்கு கோபம் வந்தது. எது நல்லது, எது கெட்டது, என்ன செய்வது என புரியாமல் இருவரையும் கொன்றுவிட உடைவாளை எடுக்க ஒரு கணம் யோசித்தார்.

அவர்களைக் கொள்வதற்கு முன்னே அந்தக் கள்ளத்தனமான இணையர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என தெரிந்துக்கொள்ள விழைந்தார். அவர்களின் கண்களுக்குத் தெரியாமல் ஒரு மரத்தின் கீழ் நின்று ஒளிந்து நின்று கேட்கலானார்.

பெண் குயில் பேசிக்கொண்டிருந்தது. வானரமே! என் அழகிய ஆண் மகனே! எத்தனை பிறவி எடுத்தாலும் உன் அழகை விஞ்ச முடியுமோ! இந்த மனிதர்கள் எவ்வளவு தவறாக தங்களை உலகின் தலைவர்களாக எண்ணுகிறார்கள். ஒரு வேலை, வீடு, கோயில், நகரம் என அமைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அரசு, மக்கள் குடிவாழ்வு என்று வேண்டுமானால் அவர்கள் உயர்ந்துள்ளதாக மமதை கொள்ளலாம். ஆனால், குரங்கு இனத்திற்கு மனிதர்கள் நிகராக முடியுமா? அவர்களுக்கு குரங்கினைப்போல் பட்டு முடியால் மேனி முழுவதும் மூடி இருக்குமா? அவர்களின் மழித்த உடலை எட்டு துணி கொண்டு மறைத்தாலும் தாடி, மீசை வளர்த்துக் கொண்டு குரங்குக்கு போட்டியாக ஒப்பனை செய்து கொண்டாலும், உங்களைப் போல் வேகமாக ஓடி, ஆடி குதிக்க முடியுமா? அப்படியே குதித்தாலும் கோபுரத்தில் ஏறுவதற்கு மனிதருக்கு ஏணி தேவையே.

உங்களைப் போல் மனிதன் எத்தனையோ செய்ய எத்தனித்தாலும் வேகமாக பாய முடியுமா? சரி விடுங்கள்... அவர்களுக்கு உங்களைப்போல் அழகான வால் உண்டா? தலைப்பாகையில் வேண்டுமானால் அவர்கள் வால் வைத்துக் கொள்ளலாம்... இடுப்பில் இருக்கத் துணி இறுக்கிக்கொண்டிருக்கலாம். இவையெல்லாம் நீங்கள் குதித்து எழுகையில் வீறு கொண்ட வாலுக்கு சமமாகுமா?

இந்த குரங்குக் கூட்டத்தில் என் கண்மணியால் நீ அமைந்தாய். உருவத்தில் சிறிய தாழ்வான இந்தப் பறவையாய் நான் பிறந்திருந்தாலும், முன் செய்த தவத்தினால், தங்களின் காதல், அன்பு பெற நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

தலைவரே! தங்களின் மேல் கொண்ட ஆவலினால், நான் பாடுகிறேன்... நீங்கள் கேளுங்கள்.... என சொல்லிக் கொண்டு இருந்ததை கவிஞர் கேட்கிறார். ஏதோ ஒரு திறம் வந்ததால், குயிலின் பேச்சும், குரங்கின் ஒலியும் புலவருக்கு இப்போது புரிந்து வருகிறது. இப்போது, பாரதியாருக்கு அந்த நேசக் குயில், நீசக் குயிலாக தெரிகிறது. அதன் அழகான குரல், இப்போது அனலாய் உள்ளது. குயிலோ, குரங்கினைப் பார்த்து, குதுகலமாய் பாடிக்கொண்டிருக்கிறது. அதே பாடல்,

காதல் காதல் காதல் - காதல் போயின்
சாதல் சாதல் சாதல்.
இசையை விலங்கறியும், மழலை அறியும், பாம்பும் கேட்டு படமெடுக்கம் என்றெல்லாம் பசப்பு மொழியில் பாட, குரங்கு மதிமயங்கி, வெறி கொண்டு தாவிக் குதிக்கிறது, தாளம் போடுகிறது.

உருகுதே, ஆகா உருகுதே
ஆவி உருகுதே
என கண்ணைச் சிமிட்டுகிறது. மண்ணை வாரி இறைக்கிறது. ஆசைக் குயிலே, என் தேவதையே, உன்மேல் நானும் காதல் கொண்டுவிட்டேன். எனக்காக காதல் இல்லையேல் இறந்துவிடுவதாக கூறினாயே உன்னைப் பிரிய மனம் வருமா? அருகில் வா. உனக்கொரு ஆசை முத்தம் தருகிறேன் என காதல் மொழி பேசுவதை கவிஞர் கேட்டு கொதித்தெழுகிறார். கைவாளை எடுத்து குரங்கின் மேல் வீச, கனவா அல்லது நனவா? குரங்கின் நல்ல நேரம் வாளுக்குத் தப்பி முகத்தைச் சுளித்துக் காட்டிவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிடுகிறது. அந்த மாயக்காரி கருங்குயிலும் எங்கோ மறைந்துவிடுகிறது. அந்த சோலையில், அனைத்து பறவைகளும் மொத்தமாய் ஒலியெழுப்ப மேலே என்ன செய்வது என புரியாது தட்டித் தடுமாறுகிறார் பாரதியார். எட்டி எட்டி தேடுகிறார். அந்த குட்டிப் பிசாசு குயில், கும்மிருட்டில் மறைந்துவிடுகிறது.

O treachery, weak womanhood
O false love god, O heart the source of all the ills of man
O ruinous world how can I tell
That which I saw,
Fond men caught in the spell
Of maddening womankind,O hear
The treacherous Koel with tears
A trembling sat on the bough,
Ah,now one hears her sighs and words of love to a monkey by
Does good or evil, a sense of virtue high
Prevail,forthwith to smite her and her lover
I laid my hand on sword,but fond to hear
Her tale of love again,I his by a tree and listened.
Said koel ro the monkey free,
O lover beautiful without compare
Whatsoever life the weaker sex doth bear
O noble lord,could she escape the charm
Is love to be rebuffed and suffer harm
Man in his pride does think himself the king of gods creation.
Temples,cities,sprang from his hands.
In sovereignty and caste and creed
And things as these,he might be great,
But need he be told he could not ever aspire to reach
The height of beauty of the form and speech and binding graces.
Let him try as best he can
And in fold on fold of clothes full dressed
Can he excel thee in thy silken hair
Let shave his face as smooth he can and fair
To thee surpass and drink his fill with friends
And dance and leap and for the help it lends
The ladder scale and climb pagodas high
Of no avail are these attempts to vie with thee,for where to seek the tail they lack
Could loin cloth with thy tail compare
At back of hood through slips a rag how could it aid
A speedy leap,as tail that never failed
Thy beauteous tail god given
With graceful look and vegetarian to the core
Thou could not brook
Compare with any other on earth
I seek rare gem of the race
The love a bird all meek
A beggar bird that by the goodly act of former birth aspiring for thy shaft of love
I sing love bidden,hear, O hear
By some strange accident, perchance of a year
Gone by ,I knew koels amorous talk to the monkey in the language of that stock


தேமொழி

unread,
Aug 6, 2020, 2:21:04 AM8/6/20
to மின்தமிழ்
பாரதியின் "குயில் பாட்டு"  பாடுவோம்  - 10



================================================
குயில் பாட்டுப் பாடுவோம் – பகுதி -10 
குயிலும் குரங்கும்!
================================================

அருளின் குரல் வரிகள்:-
•••••••••••••••••••••••••••••••••••
சென்ற வாரம் கலைமாமணி சூரியபிரகாஷ் பாடிக் காட்டிய அந்த விதத்தைக் கண்டு பலர் மகிழ்ந்தனர்.  மகிழ்ச்சியில் விம்மினர்.  இன்பத்திலே துள்ளினர்.  பாட்டு என்பது இப்படித்தான் பாட வேண்டும் என்பதற்கு ஒரு வரையறையை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும் என்றால், கலைமாமணி சூரியபிரகாஷ் போல பாட வேண்டும் என்று இலண்டனிலிருந்து என் நண்பர் புதுயுகன் தன்னுடைய மகனுக்கு சொன்னதாக தொலைபேசியில் பேசி மகிழ்ந்தார்.  
நண்பர்களே, குயில்பாட்டு எவ்வளவு அழகாக ஒவ்வொரு கட்டத்தையும் தாண்டி வருகிறது.  இந்த முறை ஏதோ ஒரு திறம் வந்ததால், குயிலின் பேச்சும், குரங்கின் ஒலியும் புலவருக்கு இப்போது புரிந்து வருகிறது.  
இப்போது பாரதியாருக்கு அந்த நேசக் குயில், நீசக் குயிலாகத் தெரிகிறது.  அதன் அழகான குரல், இப்போது அனலாய் உள்ளது.  குயிலோ, குரங்கினைப் பார்த்து குதுகலமாகப் பாடிக் கொண்டிருக்கிறது.  அதே பாடல், எந்தப் பாடல்?  நம்முடைய நண்பர் கலைமாமணி சூரிய பிரகாஷ் பாடிப் பாடி மகிழ்ந்து காட்டுகிறாரே, காதல், காதல், காதல், காதல் போயின் சாதல் சாதல் சாதல் இசையை விலங்கறியும், பாம்பும் கேட்டு படமெடுக்கும் என்றெல்லாம், பசப்பு மொழியில் பாட, குரங்கு மதிமயங்கி, வெறி கொண்டு தாவிக் குதிக்கிறது. தாளம் போடுகிறது.  உருகுதே, ஆகா உருகுதே, ஆவி உருகுதே என்று கண்ணைச் சிமிட்டுகிறது.  மண்ணை  வாரி இறைக்கிறது.  ஆசைக் குயிலே, என் தேவதையே, உன்மேல் நானும் காதல் கொண்டு விட்டேன்.  எனக்காக, காதல் இல்லையேல் இறந்துவிடுவதாக கூறினாயே, உன்னைப் பிரிய மனம் வருமா?  அருகிலே வா.  உனக்கொரு ஆசை முத்தம் தருகிறேன்.   காதல் மொழி பேசுவதைக் கவிஞர் கேட்டு கேட்டு கொதித்து எழுகிறார்.  கை வாளை எடுத்து குரங்கின் மேல் வீச, கனவா அல்லது அது நனவா குரங்கின் நல்ல நேரம் வாளுக்குத் தப்பி, முகத்தை சுழித்துக் காட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விடுகிறது.  
அந்த மாயக்காரி கருங்குயிலும் எங்கோ மறைந்து விடுகிறது.  அந்த சோலையிலே அனைத்து பறவைகளும் மொத்தமாய் ஒலி எழுப்ப, மேலே என்ன செய்வது என்று புரியாது, தட்டுத் தடுமாறுகிறார் மகாகவி பாரதியார்.  எட்டி எட்டித் தேடுகிறார்.  அந்த குட்டிப் பிசாசு, குயில், கும்மிருட்டில் மறைந்து விடுகிறது. 

The vicious kuyil In a fiery  voice with love like amruth flowing thus sang on the bow love love love.  When love is lost, When love is lost, death death death.  
Music spells they say even the jungle bees. 

Will sarpanch  babes upon the mother's breast.  So, true the monkey like a drunken wild leaping on the clapping hands all love beguile  and crying. 

Oh oh melts my heart my love now winking scooping out beneath the bow. Heap of mud in estacy O dear, pressure love divine my power of speech over filled with love availed thou  sang death our lot and through me into the brave one among the die of love forth with I will kiss and sought sweet enjoy. 

Ah, words as these he read  at with eyes marting in a range unsheated. My sword and flungation ah can it be dream, fantasy and divinity the puny crecher left all abrupt past death and it got it. 

The pearless kuyil darkest forth an out of shy.  The birds now filled the grove  with sacred notes ah ignorance eats bow and bush for the devilish kuyil I searched in way in.

தேமொழி

unread,
Nov 3, 2020, 10:32:05 PM11/3/20
to மின்தமிழ்
பாரதியின் "குயில் பாட்டு"  பாடுவோம்
சூர்யா மற்றும் அருள் - மீள்பார்வையில் 

recap.JPG
Kuyil Pattu Paduvom - A Recap Episode - Surya and Arul

ஒயாத  குயிலின் உன்னதப்பாடல்
......................................................................
 

ஆசைக்குயிலே… அருட்பொருளே… தெய்வீகமே… என்றெல்லாம் நாம் குயிலைப்பற்றி சென்ற வாரம் வரை சொல்லி மகிழ்ந்தோம்.

அந்தக்குயில் நம்மையெல்லாம் ஏங்க வைத்து எங்கோ காணாமல் சென்று விட்டதாம். 

இதுதான் நான் சென்ற வாரம் பேசிய பாடுபொருளாகும். 

எங்கே போனதாம்?  தெரியவில்லை. எப்படிப் போனதாம்? புரியவில்லை. அந்தக் குட்டிப் பிசாசுக் குயிலைக் காணவில்லையே என்று ஏங்குகின்ற தருணத்தில், அந்தப்பாடலை மிக நுட்பமாக கலைமாமணி சூரிய பிரகாஷ் அவர்கள் அதை எவ்வளவு அழகாகப் பாடிக் காட்ட முடியுமோ பாடி உலகெல்லாம் உள்ள பெருமக்கள்  குயில் பாட்டிற்கு இப்படி ஒரு பரிமாணமா? 

குயில் பாட்டினுடைய பொருளை இவ்வளவு அழகாகப் பாடிக் காட்டுகிற  கலைமாமணி சூரிய பிரகாஷை நாங்கள் என்றென்றும் வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறோம் என்று சொல்லி நெகிழ்ந்தார்கள்.

 நண்பர்களே

 குயில் பாட்டினுடைய அருமையை சூரிய பிரகாஷ் பாடிக்காட்டுவது போல அந்தப் பாடலின் சில உட்பொருள்களையெல்லாம் நான் அவ்வப்போது சொல்ல முனைந்துள்ளேன்.

தேமொழி

unread,
Nov 13, 2020, 12:38:26 AM11/13/20
to மின்தமிழ்
பாரதியின் "குயில் பாட்டு"  பாடுவோம்  - 11

episode-11.JPG
================================================
குயில் பாட்டுப் பாடுவோம் – பகுதி -11
================================================

அருளின் குரல் வரிகள்:-
•••••••••••••••••••••••••••••••••••
ஆசைக்குயிலே… அருட்பொருளே… தெய்வீகமே… என்றெல்லாம் நாம் குயிலைப்பற்றி சென்ற வாரம் வரை சொல்லி மகிழ்ந்தோம்.
அந்தக்குயில் நம்மையெல்லாம் ஏங்க வைத்து எங்கோ காணாமல் சென்று விட்டதாம். 
இதுதான் நான் சென்ற வாரம் பேசிய பாடுபொருளாகும். 
எங்கே போனதாம்?  தெரியவில்லை. எப்படிப் போனதாம்? புரியவில்லை. 
அந்தக் குட்டிப் பிசாசுக் குயிலைக் காணவில்லையே என்று ஏங்குகின்ற தருணத்தில், அந்தப்பாடலை மிக நுட்பமாக கலைமாமணி சூரிய பிரகாஷ் அவர்கள் அதை எவ்வளவு அழகாகப் பாடிக் காட்ட முடியுமோ பாடி உலகெல்லாம் உள்ள பெருமக்கள்  குயில் பாட்டிற்கு இப்படி ஒரு பரிமாணமா? குயில் பாட்டினுடைய பொருளை இவ்வளவு அழகாகப் பாடிக் காட்டுகிற 
கலைமாமணி சூரிய பிரகாஷை நாங்கள் என்றென்றும் வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறோம் என்று சொல்லி நெகிழ்ந்தார்கள்.
 நண்பர்களே குயில் பாட்டினுடைய அருமையை சூரிய பிரகாஷ் பாடிக்காட்டுவது போல அந்தப் பாடலின் சில உட்பொருள்களையெல்லாம் நான் அவ்வப்போது சொல்ல முனைந்துள்ளேன்.

அன்று பரந்து விரிந்த வானத்தின் நடுவில் கோலமிகு கதிரவன் கொலு வீற்றிருந்தான். உடலெல்லாம் சோர்வாக இருக்க, கண்கள் மயங்கிச் சொருக, மனம் துடிதுடிக்க, வெட்கமும் வேதனையும் நெஞ்சை வருத்த, இல்லம் வந்த நான் நினைவிழந்த நிலையில் படுக்கையில் விழுந்தேன். நனவு வருவதற்கு நாள் சென்று மாலை வந்துவிட்டது. கண்கள் திறந்து பார்த்தபோது நாற்புறமும் நண்பர்கள் சூழ்ந்து நிற்க, சரமாரி கேள்விகள்.  “விடிந்தும் விடியாத காலையிலே எழுந்து எங்கு சென்றாய்? என்ன செய்தாய்? என்ன நடந்தது? ஏன் வீடு வந்தவுடன் மயங்கி விழுந்து விட்டாய்? உணவும் எடுக்கவில்லை உண்மையில் என்னதான் உனக்கு?” என கேள்விகள் பல அடுக்கடுக்காக வந்தன. யாருக்கு என்ன பதில் சொல்வது எனப் புரியாமல் என்னை ஒன்றும் இப்பொழுது கேட்காதீர்கள் நாளை அனைத்தையும் கூறுகிறேன் எனச் சொல்லி நண்பர்களை நயமாக அனுப்பிவைத்தேன் என கவிஞர் கூறுகிறார். கவலையுடன் நொந்து போயிருந்த தாய் சிற்றுண்டியும் பாலும் தர கொஞ்சம் சோர்வு நீங்கியது. அனைத்தையும் மறந்து ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கினேன் என பாரதி இப்பகுதியை முடிக்கிறார்...

And sore exhaustion rolling in my eyes without solace with shame and grief fast weakening my limbs I sought my roof and there O quite unconscious fell by eve I gained my consciousness. my friends reprove and ask and ask,why didst thou fall in swoon where had thou been and ask and what didst thou my dawn they say you got out all alone.reveal why didst thou stray forgetful of thy meal so they unceasing asked  I knew not what to answer best and whom.in mild retort I spoke I could  not now recount my tale come on the morrow,friends and I will tell but now O leave me all alone They left...     

Kuyil Pattu Paduvom - Episode 11, a ragamalika set in ragas Harikambhoji, Bhavani, Janasammodhini and Neelambari, uploaded today on YouTube channel 'R. Suryaprakash Official'
Check out this episode in the link
and the previous episodes in the playlist link

தேமொழி

unread,
Dec 1, 2020, 1:39:47 AM12/1/20
to மின்தமிழ்

பாரதியின் "குயில் பாட்டு"  பாடுவோம்  - 12
surya.JPG
================================================
குயில் பாட்டுப் பாடுவோம் – பகுதி -12
================================================

அருளின் குரல் வரிகள்:-
•••••••••••••••••••••••••••••••••••

அன்பார்ந்த பெருமக்களே …

குயில் கூவிக் கொண்டே இருக்கிறது. குயில் பாட்டு ஒலித்துக்கொண்டே இருக்கிறது. உலகெங்கும் உள்ள தமிழர்கள் அங்கிங்கெனாதபடி குயில் பாட்டைக் கேட்டுக் கேட்டு இன்புற்று கலைமாமணி சூரியபிரகாஷை வாழ்த்திக் கொண்டே இருக்கின்றார்கள். பாரதி வரிகளை நாங்கள் எத்தனையோ முறை படித்திருந்தாலும் குயில் பாட்டை இசைப் பாட்டாக அற்புதமாகப் பாடிக் காட்டுகின்ற கலைமாமணி சூரியபிரகாஷை நாங்களெல்லாம் வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறோம் என்றார்கள்.
 
நண்பர்களே ! இலண்டன் மாநகரைச் சேர்ந்த கவிஞர் கருணானந்தராஜா குயில் பாட்டில் தத்துவ ரகசியங்கள் என்ற ஒரு நூலை பத்தாண்டுகளுக்கு முன்பு எழுதி ஸ்ரீராம் இலக்கியக் கழகத்தின் வாயிலாக அவருக்கு ஒரு சிறந்த பரிசே கிடைத்தது அந்தப் புத்தகத்திற்காக. குயில் பாட்டு தான் அவருக்கு பாரதியைப் பற்றித் தெரியும். அவர் என்னிடம் நேற்று தொலைபேசியில் அழைத்து மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்தினார். இவ்வளவு அழகாகக் குயில் பாட்டைப் பாடிக் காட்டுகின்ற சூரியபிரகாஷை நான் பார்க்க விரும்புகிறேன். கோவிட் சிக்கல்களெல்லாம் முடிந்த பிறகு நான் உறுதியாக சென்னைக்கு வந்து கலைமாமணி சூரிய பிரகாஷைப் பார்க்க வேண்டும்; அவருடன் பேசவேண்டும் என்று மிக மகிழ்ச்சியாக என்னிடம் சொன்னார்.

அதே போல என்னுடைய இன்னொரு நண்பர் அரக்கோணத்திலிருந்து என்னை அழைத்து என்ன சொன்னார் என்றால் சூரியபிரகாஷ் பாடுவதைக் கேட்கும் பொழுது எனக்கு இப்படி சொல்லத் தோன்றுகிறது என்று சொன்னார். என்ன என்று கேட்டேன். மாந்தளிரைக் கோத வைக்கும் குயிலின் குளிர்காலக் கூவலைப் போல உள்ளது சூரிய பிரகாஷினுடைய பாடல் என்று சொல்லி மகிழ்ந்தார்.

நண்பர்களே ! குயில் பாட்டு மிக அழகாக இப்பொழுது தொடங்கிக்கொண்டிருக்கிறது. இப்பொழுது எப்படி என்றால் கவிஞர் மனக்கலக்கத்தில் உறுமுகிறார். குரங்கும் குயிலுமா கூடிக்குலவுவது ? இந்தக் காட்சியைக் கண்டு மனம் மருண்டு கவிஞர்,  “ ஐயகோ ! நான் எதிர்பார்க்காதது நடக்கிறதே ” என்று மனம் வேதனையுற்று விடியற்காலையில் காலைக் கதிரவனைப் பார்த்து மகிழ்கிறார்.

காலை நேரம் தூங்கி எழுந்தேன். சொல்லாமலேயே கால்கள் வழக்கம்போல் என்னை சோலைக்கு இழுத்துச் சென்றன. சுற்றும் முற்றும் பார்த்தேன். எங்கேயும் பறவைகளைப் பார்க்க முடியவில்லை. ஓரத்தில் ஒரு மாமரம், அதன் மேல் அந்த அதிசயம் பாருங்கள். அதன் கிளையில் நம் நாயகி குயில் அமர்ந்துகொண்டு கீழே நிற்கும் காளையுடன் காதல் கதை பேசிக் கொண்டிருக்கிறது. மாடும் தலையாட்டிக் கொண்டிருக்கிறது. பார்த்ததுதான் தாமதம் படபடவென வந்தது; நெஞ்சு குமுறியது. கோபக்கனல் கொப்பளித்தது; கலக்கமுற்றேன். உடல் வியர்த்தேன்; குமுறினேன்; துடிதுடித்தேன்; காளையைக் கொல்ல வேண்டும் எனும் அளவுக்கு கோபம் வந்தது. குத்துவாள் எடுத்துக்குறி பார்த்தேன்.

இந்தக் குயில் ஒரு பொய் பேசும் பேய். அது இந்தக் காளையுடன் பேசியதைப் பார்த்தபின் கொல்லாமல் விடக்கூடாது என மறைந்து நின்றேன். அந்தக் குயிலோ காதல் மயக்கத்திலிருந்தது. மோகக் கதை காளையிடம் பேசிக் கொண்டே இருந்தது. பொன் போன்ற குரலில் மின் போன்ற வார்த்தைகளால்  “ காளையே ! பெண்டிரைச் சொக்கி இழுக்கும் காந்தமே ! மன்மதன் எனும் மந்திரமூர்த்தியே ! பூமியிலே உன்போல் இனமுண்டோ ? மனிதருள்ளும் வலிமையுடையாரைக் காளை என்றே புகழ்கின்றாரே ! ” எனப் புகழ் வார்த்தைகளைக்  கூறிக் கொண்டே இருந்தது.

Dear friends… 

The music of Kalaimamani Suryaprakash is indeed divine. Why is music called the divine art when all other arts are not so called ? We may certainly see God in all arts and in all sciences. But in music alone we see god is free from all forms and thoughts. In every other art there is idolatory. Every thought every word has its form. Sound alone is free from form. Every word of great poetry forms a picture in our mind. Sound alone does not make any object appear before us.

What do we see as the principle expression of the life in the beauty visible before us ? It is movement inline in colour, in the changes of the seasons, and the rising and falling of the waves, in the wind, in the storm, in all the beauty of nature. There is constant movement. It is this movement which is cost day and night and the changing seasons. This movement has given us the comprehension of what we called time. Otherwise there would be no time for it is eternity.

About me sorrows deep and suffocate
words fail and thoughts come 
crowding to the gate 
of memory Oh well for them 
whose well their tale 
digressing for the gudi sale
Alak I lack the art with shame oppressed 
I off way leave my tail 
and all with jest of poetic fancy 
shall I sing every here and then
now of the glories of the golden morning 
oh flow of sweetness sprung from honey 
of melted gold soft cool peerless Oh light in pearl 
in the silken space of heaven 
that is why the sky measures with its light 
and opens with its eye 
is it not sweeter than the eye of God ?
if it is said by sages of the wood 
that is for expanding light peerless 
is light that which sweet
that which sweet each doe grass with smile and kiss each bud  
to Bloom brighten the world 
the waters stud with flowers open 
high heavens glorious site 
at break of day I adore selfsame life 
the world's sweet music filled shines 
beautiful now listen 
I take the thread of my doleful tale.
----

தேமொழி

unread,
Dec 14, 2020, 12:21:42 AM12/14/20
to மின்தமிழ்

பாரதியின் "குயில் பாட்டு"  பாடுவோம்  - 13

13.JPG

================================================
குயில் பாட்டுப் பாடுவோம் – பகுதி -13
================================================

அருளின் குரல் வரிகள்:-
••••••••••••••••••••••••••••••••••

பெருமக்களே… 

கரைபுரள அலைபுரள நம்முடைய நண்பர் கலைமாமணி சூரிய பிரகாஷ் பாடிக் காட்டுகின்ற குயில் பாட்டு மகோன்னதமான வரவேற்பை உலகெங்கும் பெற்றுவருகிறது.

பார்க்கும் நண்பர்களெல்லாம் யூடியூபில் குயில் பாட்டைக் கேட்டுக் கேட்டு இன்புறுவதும் லண்டன் மாநகரத்திலிருந்தும், அமெரிக்காவிலிருந்தும், சுவிட்சர்லாந்திலிருந்தும் கனடாவிலிருந்தும் பெரிய ஆர்வலர்கள் கூட்டம் எங்களை வரவேற்றுக் கொண்டிருக்கிறது. குயில்பாட்டு பாரதியாருடைய சிறந்த இலக்கியப் படைப்பாகும். பாரதியாருடைய தலைசிறந்த மூன்று படைப்புகள் எது என்று கேட்டபொழுது சொன்னார்களாம் தேசிய உணர்ச்சிக்காகப் பாடப்பட்டது பாஞ்சாலி சபதம் என்றும், தெய்வீக உணர்ச்சிக்காகப் பாடப்பட்டது கண்ணன் பாட்டு என்றும், தத்துவ நோக்கத்திற்காகப் பாடப்பட்டது குயில்பாட்டு என்றும் தான் சொல்லியிருக்கின்றார்கள் நண்பர்களே. இந்தக் குயில் பாட்டு, சரியாக 744 அடிகளில் இந்த பாடல்களை யாப்பு வடிவத்தில் புனைந்திருந்திருக்கிறார்கள். 

நண்பர்களே, பாரதியார் சென்ற வாரம் வரை அந்தக் குயில் செய்கின்ற கோலாகல அமளிதுமளிகளைப் பற்றி நம்மிடம் அடுக்கிக் கொண்டு வந்தார். என்ன சொன்னோம் சென்ற வாரம்? குயிலையும் குரங்கையும் ஒருங்கிணைத்துப் பார்த்தபொழுது கவிஞர் எப்படிப் பொங்கினார்? எப்படிக் கனன்றார்? என்று சொல்லிக் காட்டி அவ்வளவு அழகாகப் பாடிக்காட்டினார் கலைமாமணி சூரியபிரகாஷ். இந்த வாரம் கவிஞர் எப்படியெல்லாம் தன்னை இன்னும் எடுத்துப் பார்க்கிறார் பாருங்கள் நண்பர்களே. 

இந்த முறை காளையைப் பார்த்து, குயிலும் காளையும் பேசிக்கொண்டு இருக்கின்றதாம். ஒகோ… காளை மீதும் இந்தக் குயிலுக்குக் காதல் வந்து விட்டதே என்ற ஏக்கத்தில், தவிப்பில், தத்தளிப்பில் அவர் எகிறிக்குதிக்கிறார். ஆகா… காளையுடன் என்ன காதல் உணக்குக் குயிலே? என்று சொல்லிக்காட்டுகின்ற விதமாக இந்த முறை மிக நுட்பமாகப் பாடிக்காட்டி இந்த ஐந்தாவது பகுதியை மிக அற்புதமாக வழிநடத்திச் செல்லுகிற சூரியபிரகாஷ் அவர்களை என்னாலும் நாம் வாழ்த்துவோம்.

குயில் பாட்டு
காலை நேரம் தூங்கி எழுந்தேன். சொல்லாமலேயே கால்கள் வழக்கம்போல் என்னை சோலைக்கு இழுத்துச் சென்றன. சுற்றும் முற்றும் பார்த்தேன். எங்கேயும் பறவைகளைப் பார்க்க முடியவில்லை. ஓரத்தில் ஒரு மாமரம், அதன் மேல் அந்த அதிசயம் பாருங்கள். அதன் கிளையில் நம் நாயகி குயில் அமர்ந்துகொண்டு கீழே நிற்கும் காளையுடன் காதல் கதை பேசிக் கொண்டிருக்கிறது. மாடும் தலையாட்டிக் கொண்டிருக்கிறது. பார்த்ததுதான் தாமதம் படபடவென வந்தது; நெஞ்சு குமுறியது. கோபக்கனல் கொப்பளித்தது; கலக்கமுற்றேன். உடல் வியர்த்தேன்; குமுறினேன்; துடிதுடித்தேன்; காளையைக் கொல்ல வேண்டும் எனும் அளவுக்குக் கோபம் வந்தது. குத்துவாள் எடுத்துக்குறி பார்த்தேன். இந்தக் குயில் ஒரு பொய் பேசும் பேய். அது இந்தக் காளையுடன் பேசியதைப் பார்த்தபின் கொல்லாமல் விடக்கூடாது என மறைந்து நின்றேன். அந்தக் குயிலோ காதல் மயக்கத்திலிருந்தது. மோகக் கதை காளையிடம் பேசிக் கொண்டே இருந்தது. பொன் போன்ற குரலில் மின் போன்ற வார்த்தைகளால்  “காளையே! பெண்டிரைச் சொக்கி இழுக்கும் காந்தமே! மன்மதன் எனும் மந்திரமூர்த்தியே! பூமியிலே உன்போல் இனமுண்டோ? மனிதருள்ளும் வலிமையுடையாரைக் காளை என்றே புகழ்கின்றாரே!” எனப் புகழ் வார்த்தைகளைக்  கூறிக் கொண்டே அந்தக்குயில் காளையிடம் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டு நான் மனம் நொந்தேன்.

At break of day as if by magic drawn I spend to the grove and searched.
All birds had flown away but the koel atop on the topmost bough sat making love to an aged ox below I flew to a passion, grieved with burning heart I smarted, growled,  Sweated. itched to dart my sword at them. but cooling down my ire I thought it best to hide and overhear the faithless koels tale are I would kill in her sweet melodious voice and words that fill began to speak O bull that maids pine for O Manmath in this guide,lives there on earth such lovely breed.

Kuyil Pattu Paduvom - Episode 13, a set in ragas Bhoopalam (as per the old tradition), Basant, Saranga and Rishabhapriya (since the verses are one of adulation of the bull, uploaded today on YouTube channel 'R. Suryaprakash Official'

Check out this episode in the link

தேமொழி

unread,
Dec 18, 2020, 1:42:06 AM12/18/20
to மின்தமிழ்

பாரதியின் "குயில் பாட்டு"  பாடுவோம்  - 14

14.JPG

================================================
குயில் பாட்டுப் பாடுவோம் – பகுதி -14
================================================

அருளின் குரல் வரிகள்:-
••••••••••••••••••••••••••••••••••

பெருமக்களே… 

பாரதியின் குயில்பாட்டை மிக வனப்புற, அழகாக பெருமிதமாக, எல்லோரும் இப்படியெல்லாம் பாடிக் காட்ட முடியுமா குயில் பாட்டை…

 எங்கள் கலைமாமணி சூரியபிரகாஷ் பாடிக் காட்டும் விதத்தை நாங்கள் கண்டு எல்லையில்லாத மகிழ்ச்சி அடைகின்றோம் என்று அனைவரும் போற்றிப் புகழ்ந்து வருகின்றனர்.

 பெருமக்களே

 பாரதியினுடைய மாபெரும் காப்பியமான குயில் பாட்டை படலம் படலமாக, மது சுரக்கும் வரிகளை மிக அழகாக, தன்னுடைய வசீகரமான குரலில் கலைமாமணி சூரியபிரகாஷ் பாடுவது நமக்கெல்லாம் பெருமை.

 எனக்கென்ன பெரிய பெருமையென்றால், 

சூரியபிரகாஷ் அனைத்துப் பணிகளையும் செய்து விடுவார். நான் அங்கிங்கு அவர் பாடியதை அந்த வரிகளின் சில விளக்கங்களைத் தான் நான்  சொல்ல முற்பட்டிருக்கின்றேன்.

 குயில் பாட்டின் பெருமையுடன் ஒரு பெருமையை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 

சூரியபிரகாஷ் மட்டும் இந்தப் பணியை செய்யவில்லை. அவர் குடும்பமே ஒரு நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் போல் பணியாற்றி வருகின்றார்கள். 

அவர்களுடைய பெற்றோர்கள் அவருக்குக் கிடைத்த மாபெரும் மாணிக்கச் செல்வங்கள் ஆவார்கள். அவர்களுடைய தாயார் நாங்களெல்லாம் பள்ளியில் இணைந்து பயிலும் பொழுதே நாங்கள் பேசும் பேச்சுப் போட்டிகளிலும் அவ்வப்போது சொல்லுகின்ற சில கவிதைகளை போட்டி வளர்க்கின்ற கவிதைப் போட்டிகளுக்கெல்லாம் நடுவராக வந்த பெண்மணி அம்மையார் அவர்கள். 

அந்த அம்மையாருடைய ஊக்கமும், அவர்களுடைய ஆக்கமும் இன்றைக்கு கலைமாமணி சூரியபிரகாஷ் ஒரு ஆலமரம் போல் தழைத்து இருக்கின்றார். அவருடைய துணைவியார் ஒருபக்கம்; மறுபக்கம் அவருடைய மக்கட் செல்வங்கள்; துபாயிலிருந்து அவருடைய தங்கை நானும் என் பங்கை செய்கிறேன் என்று சொல்லி நாங்கள் பேசுவதையும் அவர் பாடுவதையும் மிக அழகாக இந்த யூடியூப் வாசகர்கள் எல்லாம் பார்ப்பதற்காக அதை மிக அழகாக எடிட் செய்து, அழகாக செய்து வருகின்ற அந்த அம்மையாரையும் துபாயில் இருக்கும் அவருடைய தங்கையையும் நான் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். 

 நண்பர்களே!  

இப்படித்தான் குடும்பமாக செயல்பட மிக ஆர்வமாக பாரதியும் செயல்பட்டார். 

தன்னுடைய மகளைப் பார்த்து ஒடுங்கி நிற்காதே, நிமிர்ந்த நன்னடை போடு, நேர்கொண்ட பார்வை பார் என்றெல்லாம் ஊக்கப்படுத்தி தனக்குப் பிறகு தன்னுடைய துணைவியார் தான் அவருடைய பாடல்களையெல்லாம் பதிப்பிக்க வேண்டும் செல்லம்மாள் பாரதியார்தான் அவருடைய நூல்களையெல்லாம் கவிதைகளை எல்லாம் நாம் பதிப்பிக்க வேண்டும் என்ற பேரவா கொண்டு செய்த பணி எல்லாம் நாம் பாராட்டுகின்றோம். 

 குயில் பாட்டினுடைய இனிமை இந்தக் குயில் என்னெல்லாம் செய்தது பாருங்கள் குரங்கை காதலித்தது என்று கவிஞர் கோபத்தில் கனன்றார். 

பிறகு காளையைப் பார்த்துமா உனக்கு மயக்கம் என்று சென்ற வாரம் சொல்லித் துடித்தார். 

இந்த வாரம் காளையைப் பார்த்து அந்தக் குயில் எவ்வளவு அழகாக சொல்லிக் காட்டுகின்றது என்றால்

 பெருமிதமானவனே, 

மிக உயரமானவனே,

 அழகானவனே 

என்று அந்தக்காளையை வர்ணிக்கின்ற காட்சிகளைக் கண்டு கவிஞர் என்ன சொல்லுகிறார் என்பதைப் பாருங்கள் நண்பர்களே

குயில் தன் காதலி காளையிடம் தொடர்ந்து சொன்னது. 

 “மேன்மையானவரே 

அனைத்துக் காளையிலும் நீர் தான் மிகுந்த தீரம் பெற்றவர்

. ஆஹா… என்ன நீளமான முகம், நிமிர்ந்த கொம்புகள், நிற்கும் உடலோ மென்மையிலே, வெண்மையிலே பஞ்சுப் பொதி போன்ற வடிவம். ஆனால் உடல் அனைவரையும் தோற்கடிக்கும் திடம். வாலோ வீரத்தின் விளைநிலம். நீ “மா” எனக் குரல் எழுப்பினால் வானத்து இடி முழக்கம். யாராவது ஒரு வெட்கமற்ற பறவை முதுகில் ஏறி அமர்ந்தால் வாலால் நீ அதனை சுழற்றி அடிக்கையில் உன் காதலின் நேர்மை நிமிர்ந்து நிற்கும்.

 அதனாலேயே உன்னைக் கண்டு மயங்கி விட்டேன் எனக் கூறிய குயில் மேலும் தொடர்ந்தது. 

கொழுத்த உடலும் விழுமிய உடல் வலிமையும் வீரம் மிகுந்த நடையும் என எந்தப் பெருமையும் இல்லாத சிறிய பறவையாக நான் பிறந்துவிட்டேன். 

இரவும் பகலும் இந்த சிறு வயிற்றுப் பிணிக்காக காட்டினைச் சுற்றிப் பறப்பேன். காற்றின் வேகத்தில் காலனைச் சந்தித்தால் சில மடமை கொண்ட மனிதர்களுக்கு உணவாகி விடுவேன். 

இந்தச் சிறிய குயில் குளத்தில் பிறந்து புலம்புகிறேன். என்செய்வேன்! நான் ஒரு பாவி அல்லவா? சேற்றிலே மலரும் செந்தாமரையும் சிறு மீன் இனச்சிப்பியின் கழிவு வயிற்றுக்குள் முத்தும் பிறப்பதை நீ கேள்விப்பட்டிருப்பாய் அல்லவா?

 இந்த மோசமான குலத்தில் பிறந்தாலும் மனதின் ஆசையை மறக்க முடியுமா? மன்மத அம்பு இனம், குலம் பார்க்குமா என்ன? இனி இப்படி தர்க்கம் பேசிப்பேசி என்ன பயனும் இல்லை. அறிவின்மையாலோ முன்வினைப் பயனாலோ ஆண்களுக்குள்ளே காளையான உன்னைக் கண்டு கொண்டேன். 

நீயோ மக்களுக்கு பாரம் சுமந்து உணவு எடுத்துத் தருவதற்கு அவர்களுக்கு தெய்வமென உதவி செய்கிறாய். 

உனக்கு நான் உதவி செய்யத் துணிந்தேன். வேலை முடிந்து அலுப்பு தீர நீ அயர்ந்த நேரத்தில் உன் உறக்கத்திற்கு ஊறு விளைவிக்காது காதல் தேனிசை பாடுவேன்.

 உன் முதுகில் ஏறி ஓரமாய்ப் படுத்துக் கொள்வேன் என்றெல்லாம் அந்த கானக் குயில் காதல் மொழி பேசுவதை நம் கவிஞர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

 Such lovely breed?
are men of beauteous girth called by thy name and so extolled?

O blest of thy race! O Handsome with a long face blest! With horns uprist and mould as cotton heap,a rolling hump on back,thy tail doth keep  stern watch,with bellow as thunder thou swishest away upon thy back the birds impudent sway.such charms as these,

I have,O loved in thee for long  and pined.I lack the majesty of thy mighty form I am a puny breed! O misery,It has become a need to wing each day mid jungles,tossed in the wind for paltry food.O dangers that attend us besides,for men covet us most to make us into dish.

A sinner lost,the lotus is of the mire and mud,the pearl so beautiful doth spring from the oyster shell.so then if true love from the low born flows how could it be rebuffed?is god who knows the path of love ever swayed by thought of caste or creed? 

Ah!words and arguments go waste by ignorance or deeds of days gone by I have fixed thee for my lover meet and sigh,when after toiling in the fields to feed the devilish man and labouring on the road to carry the hump backed to their village near,thou coming weary taketh rest,in thy ear sweet cadeness of song I will pour and soft upon thy back would lie,when the swish of the tuft of thy tail doth brush over me

,I will be happy and feel the song and merge my voice in thy bellows peal

kuyil Pattu Paduvom - Episode 14, A ragamalika set in ragas Kannada, Chandrakowns, Vandana Darini, Nadanamakriya and Punnagavarali, uploaded today on YouTube channel 'R. Suryaprakash Official'

Check out this episode in the link


and the previous episodes in the playlist link

தேமொழி

unread,
Mar 2, 2021, 3:09:18 AM3/2/21
to மின்தமிழ்

பாரதியின் "குயில் பாட்டு"  பாடுவோம்  - 15 

15.JPG

Kuyil Pattu Paduvom - Episode 15 
- Ragamalika - Arul and Surya

அருளின் குரல் வரிகள்:-
••••••••••••••••••••••••••••••••••
குயில் பாட்டு 15 

பெருமக்களே…

குயில் காளையிடம் மேலும் கூறுவதைக் கவிஞர் தொடர்கிறார்

.
காளையே !  நான் உன் முதுகில் அமர்ந்திருக்கையில் வாலைத்தூக்கி என்னை அடித்தாலும் நீ என்னை அணைப்பதாக அகமகிழ்வேன்;  

நீ ‘மா என ஒலி எழுப்புகையில் நானும் உன்னுடன் சேர்ந்து குரலெழுப்பி, குதூகலமடைவேன்; 

 உன் உடலின் மேல் படிந்திருக்கும் உண்ணிகளை  உனக்கு வலி ஏற்படாது எடுத்து கொன்று விடுவேன்.

  காடெல்லாம் அலைந்து, வயல்வெளி எங்கும் சுற்றி வந்தபின், பசித்து உணவு உண்டு அமர்ந்து அசைபோடுவாயே:  அப்போது நாம் உன் பக்கத்தில் அமர்ந்து நீ ரசிக்கும்படியான கதைகள் பல கூறிடுவேன்;

என் அருளை காளையரே ! 

 இக்காட்டின் சிறந்த வீரரே ! 

 உன் காலில் விழுந்து வணங்குகிறேன்.  

பெண்ணாய் பிறந்த என்னை காத்தருள்வாயா ? 

 வழக்கமாக பெண்கள் வாய்விட்டு சொல்லத் தயங்கும் காதலை நான் வேறு வழியின்றி  உன்னிடம் நானாக சொல்லிவிட்டேன், என்னை போன்ற இனத்தவர்களிடம் வேண்டுமென்றால் நான் வெட்கத்தை வெளிப்படுத்தலாம்; ஆனால், தங்களைப் போன்ற மேன்மை உற்றவர்களிடம் நாம் எப்படி நாணம் காட்டி நலம் செய்வது ?  

இறைவனிடம் வணங்கி அன்புடன் பக்தி பரவசத்தில் வெட்கம் நீங்கி வேண்டுவதில்லையா!  

மன்னர் முன் மக்களெல்லாம் மண்டியிட்டுக் கேட்பதில்லையா, அதற்கு மேல், ஆசை வெட்கமறியாதல்லவா ? 

எனப் பல காதல் வார்த்தைகள் குயில் காளையிடம் சொல்கிறது கவிஞர் நினைக்கிறார், 

ஆகா !  என்ன நடிப்பைய்யா இது ? இந்தப் பொய் குயில் பெருமூச்சு விட்டு எப்படி எப்பொழுதும் போல தன் பொய்க் காதலை கொஞ்சமும் கூச்சமில்லாமல் கொட்டுகிறது; என வியக்கிறார்.  

குயிலோ, எப்பொழுதும் போல, எதுவும் தெரியாதது போல எட்டுத்திசையும் மகிழும்படி பாடுகிறது.

காதல், காதல், காதல்
காதல் போயிற், காதல் போயிற்
சாதல், சாதல், சாதல்
என தன் இனிய குரலில் இசைக்கிறது.

Swung by the swish of thy tail sure my heart would be gay;

with thy loud blowing 'maa' I would coo conjoined;

on thy back the Acari ticks that suck, I shall kill sparing none;

wandering in the wild, grazing all the field, when you after

your full eat, postprandially, start chewing the cud,  

beside you I shall reel out tales several! O, Mr Bull Ebullient,

Dark Soldier of the Sylvan Wood, I fall at your feet cloven !

In total surrender clinging!Save this silly lass in me;

love lorn I wilt; I do know ofcourse
it doesn't become

the maidens to parade and proclaim love in the open.    

But like as I am totally taken over by love unprecedented,

except auto-divulging it, is there any vent to unvalve it !

Shame in equal clan is seldom seen in the low down

before the superior great on this terrain! Before Deva,

to proclaim love, would mind shrink abashed ever ?

Won't the downside thrall bare their craving

before the guardian angel ? Would egregious lust ever know

the strain of chagrin ?- thus and thus
in endearing trendy talk,

as ever accustomed in the past, she but sang the lie-laden

lay inebriating the eight airts with doting toxin, aye !  

Love Love Love
If Love be lost,
Love's Labor Lost,

Death, Death, Death
Death Wish, a certain Good !

Do Watch Episode 15 of Kuyil Pattu Paduvom by Surya and Arul uploaded for this week in the You Tube channel 'R. Suryaprakash Official'. Check out this episode in the following link

------

தேமொழி

unread,
Mar 2, 2021, 3:27:55 AM3/2/21
to மின்தமிழ்

பாரதியின் "குயில் பாட்டு"  பாடுவோம்  - 16 

16.JPG

Kuyil Pattu Paduvom - Episode 16 
- Ragamalika - Arul and Surya

அருளின் குரல் வரிகள்:-
••••••••••••••••••••••••••••••••••
குயில் பாட்டு 16 

பெருமக்களே…

கலைமாமணி சூரிய பிரகாஷ் குயில் பாட்டை மிக இனிமையாகப் பாடி கடந்த பதினைந்து வாரங்களாக, பல்வேறு நிலைகளில் அந்தப் பாடல்களைப் பாடியும், அதற்கேற்ற சில உரை விளக்கங்களையும் அங்கிங்கெனாதபடி சொல்லி நான் மகிழ்ந்து வருகிறேன்.

 பெருமக்களே!

 குயிலினுடைய கோலத்தை நாம் ஒவ்வொரு படலமாகப் பார்த்து மகிழ்ந்தோம்.

 சென்ற வாரம் குயிலும் காளையும் எப்படியெல்லாம் அவர்கள் காதல் வயப்பட்டனர் என்று சொல்லிக் காட்டி, இந்தக் காளை பெறுகின்ற மகிழ்ச்சியும் இன்பமும் கவிஞராகிய நான் கூடப் பெறவில்லையே என்று பாரதி ஏங்குவதையும் கண்டு நான் விம்மிதமடைகின்றேன்.

 பெருமக்களே! 

இந்த முறை மிக நுட்பமாக அந்த குயில் பாடல்  விளக்கமாக இசையினுடைய மேன்மையும் பாரதியார் சொல்லி வருவதுதான் மிகச் சிறப்பாக இருக்கிறது.

 பாரதிக்கு எப்படி எல்லாம் இசை மீது அளவற்ற இன்பமும் நேயமும் பரவிக் கிடப்பதையும் விரவிக்கிடப்பதையும் காணும்போது நாமெல்லாம் எல்லையில்லாத மகிழ்ச்சி அடைகின்றோம்.

 என்னை நேற்றைக்கு என் மகள் ஆதிரை கேட்டாள் - 

பாரதியை நாம் சென்னையில் தானே பார்த்துப்பார்த்து மகிழ்ந்தோம். அவருடைய இல்லம் கூட இங்கு சென்னையில் தானே இருக்கிறது. எங்கிருந்து புதுவைக்கு செல்கிறார்? எப்படி அவருக்கு அந்த புதுவையின் வேட்கை? எங்கிருக்கின்றது அந்தக் குயில் பாடுகின்ற காடு? அந்த வனம் எங்கே என்று வினவினார். 

எனக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது. நான் மகள் ஆதிரையிடம் தெரிவித்தேன்.

 குயில் பாட்டினுடைய சிறப்பே அவர் புதுவையில் சென்ற பொழுது எப்பொழுது செல்கிறார் என்றால் - இந்தியா வார இதழை நடத்திக் கொண்டிருந்தபோது, இந்த இதழ் சென்னையில் நடத்த முடியாத ஒரு சூழலில் இந்த இதழை நடத்த முடியாது என்பதனால் அரசியல் புகலிடமாக புதுவைக்கு செல்கிறார்.

 அதுவரை புதுவை கடன்காரர்களுடைய புகலிடமாகத்தான் பொலிவு பெற்றதாம். புகழ் பெற்றதாம். இதுதான் முதல் முறை அரசியலாளர்களுக்குப் புகலிடமாக பாரதியால் புதுவை புகழ் இடம்பெற்றது. 

அங்கு அவர் சென்றவுடன் அவருக்கு அங்குதான் எங்கிருந்தோ வந்தான் என்பது போல குவளைக்கண்ணன் அவருக்கு நண்பனாக அமைவதும், அவர் எங்கு போய் அந்தக் குயில் பாட்டை எந்த இடத்தில் பாடினார் என்பதைக் கேட்டீர்களென்றால் மகிழ்வீர்கள்.

 வெள்ளச்சி கிருஷ்ணசாமி செட்டியாருக்கு புதுவையை அடுத்த முத்தியாளப்பேட்டைக்குப் பக்கத்தில் ஒரு அழகான தோப்பு இருந்தது.

 அந்த தோப்பில்தான் பாரதியார்  மணிக்கணக்காக இருப்பாராம். அந்த தோப்பே தான் பாரதியாருடைய  குயில் பாட்டினுடைய காட்சித் தளமாகவும், தமிழ் உள்ளளவும் சாகாவரம் பெற்று விட்டது இந்த தோப்பு என்று நாம் சொல்லலாம்.

 குயில் பாட்டு மாஞ்சோலை நிழல் நிறைந்தது. 

என்ன வெயில் அடித்தாலும் உரைக்காத அதன் குளிர் தரு நிழலிலிருந்து வெளியே பார்த்தால் கண்ணுக்கு எட்டும் தூரம்வரையில் பசுமையான வயல் தெரியும். 

அந்த வயல் வெளிகள் நடுவிலேதான் அந்த தென்னந்தோப்பு தன்னந்தனியாய் இருக்கும் என்று பாராட்டுகிறார்கள். 

ஒருமுறை வானவில் ரவி என்னிடம் மிக மகிழ்ச்சியாக சொன்னார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு குயில் பாட்டு நடைபெற்ற அந்தத் தென்னந்தோப்பைப் பார்ப்பதற்கென்றே நாங்கள் ஒரு பத்துப் பதினைந்து பேர் சென்று பார்த்து வந்தது நினைவிருக்கிறது என்று சொன்னார்கள்.

 ரா.அ.பத்மநாபன் அவர்கள் தன்னுடைய சித்திர பாரதியில் இது பாரதியார் நூற்றாண்டின் போது வெளியிடப்பட்ட இந்த நூலில் மிக அழகாக அந்தக் குயில் தோப்பு பாடப்பட்ட அந்த தோப்பினுடைய படமும் வெளியிடப்பட்டிருக்கிறது.

 குயிலும் மாடும்

 காலை துயிலெழுந்து சோலை வந்த பாரதியார் குயிலும் மாடும் காதல் களிப்புடன் குலவுவதைக் கண்டு மனம் பதறுகிறார். 

குயில் வழக்கமான தன் காதல் போயின் சாதல் என்ற கானகத்தைப் பாடி மாட்டினை மகிழ்வித்துக் கொண்டிருக்கிறது. குயில் கூறுகிறது - 

நான் உலகம் அறியாமல் இருந்தேன்; கானகமும் கண்டதில்லை; உன்னைப் போன்ற எருதையும் நான் ஏறிட்டும் பார்த்ததில்லை. என்னுடைய இசை ஒன்றையே அறிவேன் என்றெல்லாம் கூறிக் கொண்டிருந்தது. 

பாரதியின் மனம் குயில் கூறியதை மறந்து அதன் குழலிசையில்  மயங்கி எண்ணுகிறார் 

இறைவனே,
 பிரம்மனே, 
நான்முகனே 
எனத் தொடங்கி உலகு உருவான விதம் பற்றி வானியல் வரலாற்றையே இப்படி பாரதியார் வகுக்கிறார். 

இவ்வுலகு எங்கனம் உருவானது? பாரெங்கும் நீரால் நிரம்பி பின் சூரிய ஒளியில் நீர் குறைந்து நிலம் உருவாகிறது. வான்வெளியில் உன் மூத்த பூமிக்கு காற்றாகிறது. எண்ணுதற்கரிய பல விண்மீன்களையும் கோள்களையும் வட்ட வட்டமாய் உருவாக்கி அனைத்தையும் ஈர்ப்பு விசையால் உருள வைக்கிறாய். அந்த சக்திகளை உருவாக்கிய பிரம்மனே நீ காலத்தையும் ஒரு பரிமாணமாக்கினாய். 

இசை அமைத்த வெளியில் திசையமைத்தாய் புவிக்குள் தோன்றி மறையும் நினைக்க முடியாப் பல படைப்புக்கள் இத்தனை செயல் செய்யும் நீ ஒரு பெரும் அதிசயம்.

 உன் படைப்புக்கள் பெரும் அதிசயமாகத்தான் இருக்கிறது.

 All forms of nature the flowers so perfectly formed and coloured the planets and stars the earth, all gives the idea of beauty, of harmony, of music, the whole of nature is breathing not only in living creatures but all nature and the sign of life that this living beauty gives its music the divine beauty of music beauty in tonal form line and colour in imagination, in sentiment, in feeling, in passion for me there is music in every creative feel, be it architecture, gardening, farming, painting, poetry what not? 

In all the occupations of life  where beauty as its inspiration, where the divine has been poured out there  is music, but among all arts of music have been specially considered divine because it is the exact miniature of the law working through the whole universe.

 Music inspires not only the soul of the great musicians but every infant, the instant that comes into the world begins to move its little arms and legs with the rhythm of music.

 Therefore it is no exaggeration to say that music is a language of beauty, the language of the one whom every living soul as love  and we can understand that if we realise and recognise the perfection of all its beauty has god out beloved then it is natural that this music, which we see in art in the whole universe should be called in divine art beauty and sublimity are the two cardinal characteristics of musics.

 The sheer beauty of Bharathiyar’s melodious music thinking claims the conflicts of our rational minds. 

It reveals, affirms, charms, delights, enlightens, enfanchisises and emancipates. 

Sublime is usually used to describe a natural scene that in its immensity and grandeur seems to dwarf the view a O rapt in the spell of song I knew not earth. 

This is how Bharathiyar explains in this Chapter of Kuyil paattu-

 O rapt in the spell of song I knew not earth or sky or clustering trees of swelling girth!

 I knew not self or bull, ah in my plight, but the golden gush of song I heard aright.

 Four Headed creature, O hear me !they say this ancient world you shaped, the watery way, this earth and cooled the waters at the mouth of extinct volcanoes, blew North and South and all about pure ether. 

The vault of heaven so beautifully you created. 

O vain! to gauge thy mighty power mind reels to think of worlds of dreamy girth that drown the brink of heaven roll in myriads ever. Thou hast,O God,all worlds with fiery movement blest Ah, time and dreamy distances! 

O men! and lives that breathe and die in valley and glen. in millions thou hast created, 

O, God O who can gauge the wonders of thy rod? Rarest of all thy beauteous creations, the far expanding blue and swelling oceans, is melody of song. Though it be thought the elements so beautifully wrought. 

A miracle together make they seem but not compared with the cadences and dream of song. Of the million wonders charming ever. ஓசையில் தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ. Oh Song of the million wonders charming ever

Pl watch Episode 16 of Kuyil Pattu Paduvom by Surya and Arul uploaded for this week in the You Tube channel 'R. Suryaprakash Official'. Check out this episode in the following link


------

தேமொழி

unread,
Jun 14, 2021, 2:44:02 AM6/14/21
to மின்தமிழ்
பாரதியின் "குயில் பாட்டு"  பாடுவோம்  - 17 

kuyil paattu.JPG

Kuyil Pattu Paduvom - Episode 17
Ragamalika, a tribute to GNB - Arul and Surya

அருளின் குரல் வரிகள்:-
••••••••••••••••••••••••••••••••••
குயில் பாட்டு 17 

சூரிய பிரகாஷ் தன்னுடைய இன்னிசையால் குயில் பாட்டை செதுக்கி செதுக்கி பாடி வருகிறார்.

 இப்போது நாம் பார்க்கவிருப்பது.பதினேழாம் படலம் பதினேழு  வாரங்கள் என்று எண்ணிக்கையால் கூறி வந்தாலும் எண்ணத்தால் ஓங்கிய அளவில் இப்படி பாடிக்காட்ட முடியுமா? 

குயில் பாட்டை நாங்கள் கேட்டுக் கேட்டு மகிழ்கிறோம் என்று உலக நாடுகளில் உள்ள பல நண்பர்கள் வியந்து பார்க்கின்றார்கள். 

குயில் பாட்டை படலம் படலமாக மிக நுட்பமாக கலைமாமணி  சூர்ய பிரகாஷ் பாடுவது மட்டுமல்லாமல் அவருடைய தங்கை துபாயிலிருந்து இதனை மிக அழகாக படக்கலையாக செய்து  நாமெல்லாம் பார்த்து வியக்கும் அளவிற்கு  படக்கலவையும் செய்து காட்டுகிறார்கள்.

 நண்பர்களே 

பாரதியார் எப்படியெல்லாம் எண்ணி எண்ணி பாடியிருக்கிறார் என்பதை குயில் பாட்டு வாயிலாக கண்டு வியக்கிறோம். 

அந்த குயிலும் காளையும் அவர்களுடைய காதலை அவர்  சொல்லிக்காட்டுகின்ற விதம் தான் அந்த காதலைக் கண்டு இப்படியுமா இந்த குயில் என்னை  ஏமாற்றி  பதைக்க வைக்கிறதேஎன்று அவர் ஏங்குகின்ற அளவிற்கு அந்தப்பாடல் திறத்தை இவ்வாரமும்  நாம் கண்டு களிக்க விரும்புகிறோம். 

தன்னை தன் குரலால் வசப்படுத்தி ஏமாற்றிக் கொண்டிருக்கும் குயிலின் கானம் காளையுடன் பாடும் காதல் பாடல் என்னும் இசையை  மாயவித்தையில்  மதியாக்கியிருந்த கவிஞர் நினைவு பெறுகிறார்.

 உன்மத்தம் தலைக்கேற  உருவிய வாளை காளை மேல் வீசுகிறார்.

 அதன் உடல் மேல் பாய்வதற்குள் உடன் ஓடி விடுகிறது காளை கரிய  குயிலும் கண்ணை விட்டு மறைய  கொம்பில் வந்தமர்ந்து மற்ற பறவைகளெல்லாம் ஒலி எழுப்ப குயில்  காணாமல் தேடி சோர்ந்து போன நம் கவிஞர் இல்லம் திரும்புகிறார். 

தன்னை  எப்படியெல்லாம் இந்த குயில் காதல் மொழிபேசி பசப்பு வார்த்தைகளில் வசப்படுத்தியது என்றும் தான் ஏமாந்ததை எண்ணி நினைக்கையில் கண்களில் நீர் ததும்பியது நெஞ்சம் கனத்தது இப்படித்தான் தங்கள் காதல் நேரத்தில்  மற்ற   பறவைகள் மரத்தில் அமர்ந்து தடை செய்த்தை எண்ணி வியப்படைந்தார். 

ஒன்றும் தெரியாத தன்னை காதல் நெருப்பில் வாட வைத்ததையும் ஒரு ஒழுங்கற்ற  குரங்கும் தொழுவத்தின்  சாலையும் காதல் எதிரிகளாக புகுந்து இன்னல் புரிந்ததையும் கட்டுக்கடங்காமல்  வெடிக்கும் சினத்தையும்  எண்ணுகிறார் .

ஆனால் குயில் மேல்  கொண்ட காதல் வேட்கை அவரை ஆட்கொண்டிருப்பதை ஆச்சரியத்துடன் ஒன்றும் புரியாமல் குழம்புகிறார். 

கண்கள் செருகுகின்றன, களைப்பில் கடும் உறக்கம் அவரை தழுவுகிறது.

 The  symphony of the song is the 
Sweetest dover… 

when the feathery
Holes rapturous song did cease. 

My 
 Sense  I regained and quick did
Seize my sword and whirled it at
 The bull !

 o swift the fled unhurt
The dusky foel left the woodland
Birds returning creaked upon the
 Boughs o shame

 I searched for the koel  in vain and 
 Staggered home in disappointed
Love revolving many memories.

 I stove in vain my self to gain how
 Thawed my heart.

 The koel with 
Love and tears Ah by the dart of 
love I pined and now the birds to
 our  tryst came creaking wild and 
passion with a burst unmindful of
all hindrances came on my heart
and spelled me quiet

 the monkey mean and the cattle
 bull  came  rivals to my love
regardless of these impediments

o how  I hankered after love, such
 thoughts as these benumbed me
 quite and in the dreaminess of 
sleep I lost myself… wow dawned
the day

the Divine quality of the music 
seems to suggest that everything in 
infinite space and a sea  without a
 shore an  everlasting fire an
 unquenchable light , 

a calm wind or 
a ragging tempest thundering 
sky  or a rainy heavel  singing brook or 
 or vailing rule a tree up bloomed in
spring or a  ganacatte  sapling in 
winter arising  mountain  or a descending valley

No wonder when  koel sings  eternal wisdom 
often seems to speak to us in mysterious
 language of Bharathiar soul and
 nature converts together when he listen to
 Kuyilpattui and we stand speechless and 
bewildered in a state of ecstasy 

I would end this as a personal  tribute  by 
quoting the immortal lines of kahlil 
Gibran 

oh you are music in your depths we  deposit our hearts and souls  

thou has taught us to see with our ears
 and hear with our hearts 

Hail Bharathiyar

Long live kalaimamani Surya Prakash for the lovely  kuyilpattu

Hello Friends, Kuyil Pattu Paduvom - Episode 17 : We are back after the hiatus! This episode is dedicated to memory of the legendary yesteryear Carnatic Musician, the Prince of Carnatic Music, Shri.G N Balasubramaniam (GNB), featuring some of the ragas that he took to a different level of grandeur when he rendered, namely Sarangatharangini, Yadukula Kambhoji, Gavathi and Kiranavali. GNB popularised many songs of Bharathiyar in his concerts, especially the ones with Srungara Rasam (romance). His "Dikku Theriyaada Kattil" is still evergreen, forever etched in the minds of people. Episode 17 uploaded today on YouTube channel 'R. Suryaprakash Official'

Check out this episode in the link

தேமொழி

unread,
Jun 25, 2021, 12:35:24 AM6/25/21
to மின்தமிழ்
பாரதியின் "குயில் பாட்டு"  பாடுவோம்  - 18 

18.JPG
Kuyil Pattu Paduvom - Episode 18 
- a Ragamalika again (a long video) - Arul and Surya


அருளின் குரல் வரிகள்:-
••••••••••••••••••••••••••••••••••
குயில் பாட்டு 18  

      பெருமக்களே    
  
       நம் நெஞ்சங்களையெல்லாம் கொள்ளை கொள்ளும் அளவிற்கு மிக இன்பமாக நயமாக அருவி ஓட்டத்தின்  வேகத்துடன் குயில் பாட்டினை மிக இனிமையாக  பாடிக்கொண்டு வருகிறார் நம்முடைய அருமை இளவல் கலைமாமணி டாக்டர் சூரிய பிரகாஷ்.  

  சூரிய பிரகாஷ் அவர்களுடைய இன்னிசையினுடைய பெருக்கத்தினால் உலகெங்கும் உள்ள தமிழர்கள் மிக மகிழ்ச்சியாக பாரதியினுடைய குயில் பாட்டை நாங்கள் கேட்பதிலும் அதில் இழைக்கப்படுகின்ற இசை நுணுக்கங்களையெல்லாம் ஆய்ந்து  கேட்கும் பொழுது இன்பக்கடலிலே  மூழ்கி எழுகிறோம் என்று பாராட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.

 ஏறக்குறைய ஓராண்டாக பல தடைகளுக்கும் தளர்வுகளுக்கும் ஏற்ப குயில் பாட்டினை மிக நுட்பமாக கலைமாமணி சூரிய பிரகாஷ் படைத்து வருகிறார். 

குயிலினுடைய சிருங்காரத்தையும் காதலிலே கவிஞர் கனிந்து கொள்கின்ற காட்சிகளையெல்லாம் நாம் கண்டும் கேட்டும்  இன்பமாய் சிரித்தோம் மகிழ்ந்தோம்.

  பல நேரங்களிலே காதல் போனால் சாதல் சாதல் என்று சொல்வது போல காதலில் படுகின்ற பல அல்லல்களை துன்பங்களை கவிஞர் மிக நயமாக சுட்டிக்காட்டி வருகின்றார்.

 பதினேழு வாரங்கள் கழித்து அடுத்த படலமாக குயிலினுடைய கதை எங்கே செல்கிறது என்பதை நாம் இப்போது பார்த்து மகிழலாம்….

நம் கவிஞர், குயில் பாட்டினை தொடர்கிறார். 

 நான்காம் நாள் நிகழ்ச்சி பற்றி கூறுவதற்கு முன்னால் கொஞ்சம் திரும்பிப் பார்த்துவிட்டு வரலாம்.

 காதல் போயின் சாதல் என குயில் தன் குழலினிய குரலில் கவிஞரிடம் தன் காதலை கூறியது. சிந்தை பறிகொடுத்தார். 

காதலை வேண்டி கரைத்த  குயிலோ மற்ற பறவைகள் வந்து இவர்கள் தனிமையை கெடுத்ததால் இவரை அடுத்த நான்காம் நாள் வந்தருளல் குயில் வேண்டி சென்றது.  

சித்தம் மயங்கி திகைப்போடு நின்ற கவிஞர் நான்காம் நாளுக்காக காத்திருந்தார்.  

அதற்குள் அடுத்தடுத்த நாட்களில் சோலையில் குயில் குரங்கிடம் குலவியதைக் கண்டு கலங்கி மயங்கினார்.

 அதற்கடுத்து குயில் ஒரு மாட்டிடம் காதல் பேசுவதைக் கண்டு குழம்பினார்.

 இருந்தாலும் வேட்கைத் தீராமல் நான்காம் நாளுக்காக சொன்ன நாள் வந்ததென எண்ணிப் பார்க்கிறார்.

 நயவஞ்னை செய்து பசப்பு வார்த்தைப் பேசினாலும் குயிலை மறக்க முடியாமல் வீட்டின் மாடத்தில் நின்று குயில் இருந்த மாஞ்சோலை திசை பார்த்தார்.  

மேற்கு திசை கடல் மேல் வானத்தில் கரும்பறவை வியந்து போல் வீதி வந்தார். 

வானிலிருந்து அவரைத் தொடர்ந்து சென்று மாஞ்சோலைக்குள் நுழைகிறது.  

அவரும் உள்ளே சென்று அது வீற்றிருக்கும் மரக்கொம்பினை நோக்குகிறார். 

அது எப்பொருள் பாடும், பொய்க்ககாதல் பழம்பாட்டை பாடியதைக் கண்டு மனம் குமைந்தார். 

  ” ஏ குயிலே!  
 என்ன நாடகம் ஆடுகிறாய்? குரங்கையும், காளையையும் காதலித்து அவளை எண்ணிப்பாடும் பாட்டை நான் கேட்க வேண்டும் என என்னையும் அழைத்து வந்தாயோ?
 சினம் பொங்க சீறுகிறார்.  

இதை கேட்டவுடன் கண்ணீர் மழையென கொட்ட குயில் கூறியது, ”என் ஆசை நாயகனே!
 இந்த ஏழையை ஏன் தவறாக கருதுகிறீர்,  தகாத வார்த்தைகளை கூறி என்னை சாகடிக்க வேண்டுமோ? 
 கொளுத்தும் வெயிலில் மெல்லிய மலர் வாடுமன்றோ? 
 தாயே குழந்தையை கொல்லலாமா? இறைவனை கோபித்தால் மண்ணுயிர்கள் வாழ முடியுமா?  என்னை கொல்லத் துணிந்து விட்டீர்களா? 
என் தலைவரை நீங்கள் சினம் கொண்டால் நான் செத்துவிடுவேன்.  நெருப்பில் வீழ்வேன்.

 மற்ற விலங்குகளுக்கு  இரையாகி விடுவேன். 
 உங்கள் கோபம் புரிகிறது.  
நான் குரங்கிடமும் மாட்டிடமும்  முறையற்ற காதல் கொண்டதாக தாங்கள் சந்தேகிக்கிறீர்,  என்னவென்று சொல்வது?  
நான் ஒரு பிழையும் செய்யவில்லை.  விதியே! 
 யார் என்னை நம்புவார்?  
நீ தான் உதவ வேண்டும் என வேந்தன் என்னை வெறுக்கிறார்.  என் வார்த்தையை அவர் நம்ப மறுக்கிறார்.

  நான் தீயில் விழந்து மரிப்பது தவிர வேறு வழி தெரியவில்லை என புலம்பத் தொடங்கியது.       

  Fixed by the koel, that with her loving lay had made me languish still.

When lost in thought of humiliations by the koel wrought I sat upon the turret of my house and dreamily to the woodland turned my eyes-0 blissfulness!,

 I faint espied afar A dusky bird on wing,and mouth ajar,with a tremulous heart I gazed O deep engrossed! 

I thought it was my faithless koel lost!

since far off flew the bird I couldnt make out it was the bird it looked.But snatch my heart I could not from the object of my gaze;and down the stairs I hastened in a daze and rushed into the street and spied upon the western sky a sooty speck up borne on the glittering sea of light.

To be assured it were the selfsame shameless treacherous bird I knew,I hurried forth.

Straight on she flew stopping and moving,and I did,on blue,still keeping high avoiding closer sight.She led me by degrees to the woodland bright and vanished!into the mango grove I sped and saw the wee she koel sitting proud upon a bough where waves of glimmering light did play and singing in her voice as bright and beautiful as the sound of a golden flute fresh made.She sang her treacherous love.

Ah mute I heard awhile and sighed.

Approaching her I spake all wrath,Detested warbler,hear! Inconstant bird,O hear! Is it for this -to hear your song of treacherous love and bliss to your pair of lovers the monkey and the bull you led me here? 

I flew to a rage to kill but cooling down,I kept me back sweet -while the koel in her melodious voice and guile of tears said loved of my soul pray tell me straight dost thou intend to save or kill outright?

the anril bird when parted from her mate will cease to live...if sun shines burning hot would timid blossoms smile? 

If mother kills where could the child protection seek from ills?

what will poor creatures do if devas burn with ire?,

0 lord of my heart O noble born,if thou dost burn with anger I will die I will drop in fire or die of animals by.

I know the guilt you come to charge me with.

Ah,thou art not yo blame nor I in troth you told with the hateful monkey and bull of the meadows green I had indulged to the full in amours.

Ah,what shall I say O god how live what will I do O living lord refute thy charge I cannot but be assured I am not to blame.

Ah who will trust me now?
vile fate to blame whether thou dost yield to save me from disgrace and wed me to my love or the lover distrusting forsakes me quite as a thing all mean and I without respite happen to plunge in fire,whatever it be should I bear stern fate is there no remedy.....       

            Kuyil Pattu Paduvom - Episode 18 uploaded today on YouTube channel 'R. Suryaprakash'.

 This episode is a ragamalika set in ragas Sarasangi, Hemavathi, Chalanata , Gorakhkalyan (Hindustani raag), Sekharachandrika, Kedaram and Saurashtram. The tala employed is Adi.  

Check out this episode in the link

----

தேமொழி

unread,
Aug 1, 2021, 10:22:29 PM8/1/21
to மின்தமிழ்
பாரதியின் "குயில் பாட்டு"  பாடுவோம்  - 19

kuyil paatu -19.JPG
Kuyil Pattu Paduvom - Episode 19 
- Kavadi chindu and rare ragas (a long video) - Arul and Surya



அருளின் குரல் வரிகள்:-
••••••••••••••••••••••••••••••••••
குயில் பாட்டு 19

பெருமக்களே !
பாரதியாரின் பாடல்களை உருக்கமாகவும் துணிவாகவும் பல்வேறு இசைநிலைகளில் பாடிவருவதை நீங்கள் தொடர்ந்து  கேட்டுக்கொண்டு வருகின்றீர்கள்.
அருமை நண்பர் கலைமாமணி  டாக்டர் சூர்ய பிரகாஷ் பாடும் இன்னிசைவெள்ளம் , குயில் பாட்டை புதிய உலகத்திற்கு நம்மை அழைத்துச் சென்றது.
 குயில் பாட்டினுடைய  தத்துவ அடுக்கங்களையும் அவர் எடுத்துச் சொல்கின்ற அந்தப் பாடலினுடைய நுட்பத்தையும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அவ்வப்போது நானும் சில தொடர்களாக அந்தப் பாடலுக்கு விளக்கம் சொல்வதற்கு மெருகேற்றுவதற்கு முயன்றேனே தவிர பாட்டா, உரையா என்று நீங்கள்  எல்லோரும் வினவினால்  குயில் பாட்டினுடைய  சிறப்பும், கலைமாமணி  டாக்டர் சூர்யபிரகாஷ் இசை அறிவால்தான் இந்த கலைமாமணியின் குயில் பாட்டினுடைய வெற்றித்தூணாக விளங்குகிறது .
எனக்கும் வாய்ப்புத் தந்த அருமை நண்பர் சூர்ய பிரகாஷ் அவர்களுக்கு நான் நன்றிக்கடன்பட்டுள்ளேன்.
 அவருடன் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயின்றதனால்  எனக்கு அந்த வாய்ப்பு. 
 வாய்ப்பை நல்கிய சூர்ய பிரகாஷின் இத்தனை இசைக் கோலங்களையும்  செய்து காட்டுகின்ற நுண்ணாற்றலை  அவருடைய குடும்பத்தினர் போற்றி வளர்க்கின்றனர்.
 தன்னுடைய தங்கை துபாயிலிருந்து 
இதற்கு வரைகலை செய்வதும் இது புலனத்தில் வெற்றி காண்பதும் அவர்களுடைய குடும்பத்தினுடைய பெருமையாகும் என்று சொல்லிக் குயில் பாட்டினுடைய பெருமையாக இந்த முறை என்ன சொல்லப்போகிறார், என்னப் பாடப்போகிறார் என்றால்  நண்பர்களே  
பெருமக்களே 
வியப்படைவீர்கள். 
அந்தக் குயில் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பாரதியாரை கவிஞரை ஏமாற்றியதனால் கவிஞர் குயில் மீது கோபமுற்றார்.
சினம் கொண்டார் 
ஏன் இது ! எத்தனை கோலங்கள் செய்கின்ற இந்தக் குயிலைக் கொன்றே விடலாமா என்று பாரதியார் கொந்தளித்த போது தன்னுடைய முன் கதையைச் சொல்லத் தொடங்கியது அந்தக் குயில் பேசுகிறது .
நமது கவிஞரின் மனதைக் கவர்ந்த குயில், ஒரு குரங்கோடும், மாட்டோடும் குலவுவதைக் கண்டு உள்ளம் துடிதுடிக்கக் கோபக்கனலில் கொன்று விடவும் துணிகின்றார்.
 பின் நெஞ்சம் இளகிடவே, குயில் சொல்லும் கதையைக் கேட்கத் துணிகிறார். 
குயில் தன் கதையைத் தொடங்கியது. 
என் இறைவனே ! 
என் செல்வமே ! 
என் உயிரே ! 
நான் சொல்வதைக் கொஞ்சம் பொறுமையாகக் கேளுங்கள் ! 
ஒரு முறை, பொதிய மலையருகில் உள்ள ஒரு பூஞ்சோலையில் நான் தனித்து இருக்கையில் ஒரு முனிவர் வந்தார். 
அவர் காலில் விழுந்து வணங்கினேன்; 
அவரிடம் நான் கேட்டேன்” எனக்கு மட்டும் எவ்வாறு அனைவரும் பேசும் மொழி புரிகின்றதே ! 
மனிதர்கள் போன்ற சிந்தை எனக்கு எங்ஙனம் வாய்ந்தது ? 
என வினவினேன். 
அந்தப் பெரியவர் கூறினார் –
 குயிலே ! 
 நீ முற்பிறவியில் சேர நாட்டின் தெற்குப் பகுதியில் வாழ்ந்து வந்த ஒரு வேடர்  தலைவனின் மகளாகப் பிறந்தாய் !
 நல்ல இள மங்கையாய், தமிழகத்தின் மூன்று பகுதிகளிலும் அழகில் உன்னை வெல்வார் யாரும் இல்லை எனும்படி வளர்ந்திருந்தாய் ! 
உன் மாமன் மகன் மாடன் என்பவன் உன்னையே திருமணம் செய்ய வேண்டுமென உன்னையே நாளும்  எண்ணியிருந்தான். 
உனக்காக தினமும் மலைத்தேனையும் ,புது மலரையும் கொண்டுவந்து கொடுத்து மகிழ்ந்திருந்தான். 
அவன் உன்னையே எண்ணி உருகுவதையும் உடல் வருந்துவதையும் கண்டு மனமிரங்கி அவனையே மணந்து கொள்வதாக வாக்களித்தாய்! 
அவனை ஒன்றும் நீ காதலிக்கவில்லை ; 
அது பரிதாபத்திலிருந்து வந்த பாச மொழி மட்டும் தான். 
அதற்குள் மற்றொன்று நடந்துவிட்டது.
 தேன்மலை என்ற இடத்தைச் சேர்ந்த மொட்டைப் புலியன் எனும் வேடர் தலைவன் தன் மூத்த மகன் நெட்டைக் குரங்கன் என்பவனுக்குத் திருமணம் செய்ய எண்ணி, உன்னைப் பெண் பார்க்க, உன் தந்தையை அணுகினான்;
 அவனோ, பார்த்தாலே பயத்தை ஏற்படுத்தும் உருவமும் ,செயலும் உள்ளவன்;
 உன் தந்தையிடம் அவன் தன் கருத்தைச் சொன்னவுடன், அவரும் மகிழ்ச்சியுடன் இசைவு சொல்லி உறுதியும் செய்து வருகிறார். 
அது கேட்டு உன் மாமன் மாடன், உன்னையே எண்ணி உள்ளுருகி வாழ்ந்து வந்த மாடன், திடுக்கிட்டான்;
 மனம் புகைத்தான்;
 விறுவிறுவென வந்தான்; 
உன்னைப் பார்த்து, ”என்ன வஞ்சகச் செயல் இது” எனக் கோபத்தில் கொதித்தான். 
நீயும் அவனை ஆறுதல்படுத்த ”மாடனே! 
கவலைப்படாதே ! 
கோபத்தைத் தவிர்’ என் தந்தை செய்த நெருக்கடியினால் இப்படிச் செய்து விட்டார் ! 
என்னைக் குரங்கினார் மணம்புரிந்து தன் காவலில் வைத்தாலும் எப்படியாவது மூன்று மாதங்களுக்குள் அவருடன் கோபம் கொண்டு அதன் விளைவாகச் சண்டையிட்டு, எப்படியாவது, தாலியையும் மீட்டுத் தங்களிடம் வந்து விடுவேன்.
 இன்னும் ஏழெட்டு மாதங்களில் நீங்கள்தான் எனக்குக் கணவனாவீர்” என அவனை சமாதானப்படுத்துவதற்காகக் கூறியுள்ளாய்; 
சொல்ல மறந்து விட்டேன், 
உன்னை முற்பிறவியில் மாதரசியான உன்னை சின்னக்குயிலி எனச் செல்லமாக உனை அழைப்பர் என்றும் கூறினார்.
 உனக்கு மாடன் மேல் காதலும் இல்லை; ஒன்றும் இல்லை; சும்மா அவன் கோபம் தணிக்கவும், சினம் தவிர்க்கவும் மட்டுமே அவ்வாறு கூறி ஒருவாறு அவனை அனுப்பி வைத்தாய் ! 
சில நாட்கள் சென்றன. 
பெண் குயிலி என்ன செய்தாள் ? 
 மீதியை அடுத்த நிகழ்வில் காண்போம்.
---
O Deva, rarest treasure !
 O my soul,you departed,listen to foolish fowl,
in a grove one morning by the southern hill I state on a mango twig,lone pondering on my fate.
There came a sage.
At his feet I fell all meek.
He blessed me.
The noble sage that wise men seek I asked pray tell me,vedic sage,how though a low born bird I am born on earth I know unlike my kith and kin the tongues of all and human like consciousness of my soul possess ? 
the rishi made reply O hear in a former birth grew the daughter dear of the dreaded hunter chief murugan the bold of the southern hill in the chera realm of gold,most beautiful in the tamil kingdoms three...most hunters of the woods of luxury, thy uncles son madam by name full struck with thy beauty yearned to win thee in wedlock.
He brought thee gold and honey fresh and flowers and pining sought to live as wedded lovers.
thou out of sympathy but not of love,gave word to take him as thy mate.
And now  O maid of delicate waist,thy beauty's name far spread. 
A hunter chief of might and fame,pulian bold his name,of the honey hill side for kurangan tall,his son asked thee for bride.thy father gladly gave assent.
The date was fixed to celebrate with great eclat the happy wedding.
This thy cousin heard and burning with ire to thy lovely presence sped and vented his wrath in words of fire.
In grace thou madest reply,put out thy ire ablaze,
O Mada,rest assured though gained my will I am wed to Kurangan tall and kept on hill
 I shall,each quarter scheming some device or other,causing trouble in his house return,leaving behind his Tali jewel and sometime after marry thee.
I tell no lies,believe me....
I,profusely thanks Mrs Themozhi from USA for the intro video presentation of mine which has been introduced in this episode...
These were words of grace but not of love.
Hello Friends, Kuyil Pattu Paduvom - Episode 19 uploaded today on YouTube channel 'R. Suryaprakash'. This episode has been recorded solo, starting with Kavadi chindu and then featuring ragas Dwijavanthi, Namanarayani, Miyan-ki-malhar, Nayaki, Denuka, Mahathi, Neethimathi, Chakravaham, Vanaspathi and Kambhoji. The tala employed is Adi.  

Check out this episode in the link

தேமொழி

unread,
Aug 29, 2021, 12:32:07 AM8/29/21
to மின்தமிழ்
பாரதியின் "குயில் பாட்டு"  பாடுவோம்  - 20

20.JPG
Kuyil Pattu Paduvom - Episode 20
- Kuyil Pattu Paduvom - ragamalika (a long video) - Arul and Surya

அருளின் குரல் வரிகள்:-
••••••••••••••••••••••••••••••••••
குயில் பாட்டு 20

பெருமக்களே! 
முன்னொரு பிறவியிலேயே நீ ஒரு அழகிய பெண்ணாக வேடர் தலைவன் மகளாக பிறந்து இருந்தாய் அல்லவா!  

ஒரு நாள் மாலை சின்ன குயிலாகிய நீயும் உன் தோழிகளும் மின்னல் கொடிகளாய் ஒரு தோட்டத்தில் விளையாடிக் கொண்டே இருந்தீர்கள்.

 உன்னையே நினைத்து இயங்கிக் கொண்டிருக்கும் உன் மாமன் மகன் மாடன் உன்னை மணந்து கொள்வோம் என்ற கனவுலகில் தேன்மழை நாட்டு வேடன் மகன் நெட்டைக் குரங்கன் நேராக நின்று தந்தையை மிரட்டி உன் மனம் பற்றி நினையாமல் மனம் நிச்சயித்து சென்றுள்ளான். 

இவர் இருவரிடமும் செல்லாத மனம் கொண்ட நீயோ கள்ளமில்லா பேதையாய் தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த அன்று வீரன் சேரமான் மகன் ஒருவன் மான் தேடி வனம் புகுந்தான். 

 உனை கண்டான் மையல் கொண்டான் நீயும் அவனை கண்டாய் மோகம் கொண்டாய் கண்டதும் காதல் கொண்ட கண்களுமே ஆவி கலந்துவிட்டாய், தோழியர் பயந்து தொலைந்து விட்டனர் .

வேடர் மகளே வஞ்சி அரசன் மகன் நான் நீ என் மேல் காதல் கொண்டேன் என்று சொன்னால் நீயும் காதல் வசப்பட்டாய் 

ஆனால் அச்சம்.. 

“நீங்களோ பெரும் செல்வந்தர் கல்விமான் மன்னவர் நாங்கள் மலைக்குறவர் சிங்கம் முயலை நேசிக்குமோ நாங்கள் குறவர் ஆணும் யாருக்காவது மனைவியாக இருப்பது அல்லாமல் ஒரு இல்லத்தில் அடிமையாகும் நிலை மகளாகவும் இருக்க விரும்ப மாட்டோம் என கூறிவிட்டாய்.

 ஆனாலும் உன் கண்களில் உள்ள காதலை அறிந்த அந்த வேந்தன் மகன் உன்னை கட்டி அனைத்து முத்தமிட்டான். 

நீ விலகி சென்றாலும் உன்னை தாவி அணைத்து விட்டான். 

காதல் மொழியால் கவிதை பாடினான்,

 பொன்னே 
மணியே, 
அமுதமே 

என் ஆசை துணைவியை என் மனதின் ராணியே,

 நீ என் துணை, 
நீ என் தெய்வம் 

உன்னை தவிர வேறு பெண்ணை நான் சிந்தையாலும் தொடேன்.

 இக்கணமே உன் இல்லம் செல்வோம் என் மனம் சொல்லி வேதம் சாட்சியாக விவாகம் முடிப்பேன்

 வென்நிலவே என சத்தியம் செய்தான் நீயோ பொறிப்பு கொண்ட புளகாங்கிதம் பெற்றாய். 

நாணம் தவிர்த்தாய் மன்னவன் தோள் தழுவி விட்டாய், வேந்தன் மகனும் தேனில் வண்டாய் மயங்கிவிட்டான், இருவர் இதழ்களும் இணைந்தன, கண்கள் செருகின இங்கனம் இருவரும் இருக்கையில்தான் நடந்ததோர் பூகம்பம். 

குயிலியை மணக்கப்போகும் நெட்டைக் குரங்கன் அங்கு வந்து நின்றான்

 ஊரிலிருந்து வந்த அவன் குயில் எங்கே என சுற்றி சுற்றத்தாரிடம் தோப்பிலே தோழியிடம் என்ற பதில் கேட்டு ஆசையுடன் வந்தவனை ஆத்திரமூட்டும் காட்சி, அதிர வைக்கும் செய்கை, பதைபதைக்க வைக்கும் நிகழ்ச்சி துடித்துப் போய் கத்தினான். 

பட்டப்பகலிலேயே என்ன கெட்ட செயல் இது, 

திருமணம் நிச்சயமான பெண்ணொருத்தி இன்னொரு பாவியுடன் சல்லாபம் செய்கிறாளா... எனக்குத்தான் பரிதவித்து திருமணத்துக்கு முன் இப்படியொரு திருட்டு காதலா என கதறினான்.

 விழுந்துவிட்டாளே அதை தொலைத்து விட்டாளே என மனம் நொறுங்கி நோக்கி நின்றான் இனி என்ன நடக்கும் 

அடுத்த நிகழ்வில்

 காணலாம்.

Thou with thy maids a few days hence forth           to the woods at evening and played as lightning flashes....

then quick upon you came from the bushes,hunting,the lovely prince of the Chera king chasing a deer alone he came...

The ring of maids with thee as queen in revelry he spied...

Outright he fell in love with thee and you with him.

The maids about thee fled and his,as prince they saw so lovely clad before them...

Nearing thee the stranger said I am the son of the Vanchi chief,O hunter maid so beautifully!

 The fruits of birth as man I reap,ah,only now!

for I have won thee,loving at first sight.with passion swell pent up,thou madest reply

,In thy palace dwell five hundred wives all beautiful and young well read and versed in the art of dance and song.Go then enjoy their lovely company .

A kurava maid I am.

I dare not be thy bride.Would the fiery lion ever stop to run the rabbit down or conquering king go in for a hunter maid?

 Even though he be a king we will not live his paramour and fling our chastity away...

with reverence I worship thee and bid goodbye...

O,Prince my maid companions all have left !O what shall I do?

in such a baffled state thou were.

The prince who read lush love upon thy eyes emboldened tripped to thee all in a trice and kissed thy cheeks aflush...

with a frowning brow you stepped aside what shame do lovers know he gliding close embraced and said,my gold my dazzling gem,fresh amrut,joy untold...

thou art my bride my queen...O my deity,would I ever dream of other maids than thee?

 Why should thou me distrust?

this very hour we will go to your house and I tell am thy lover.As writ in vedas

,I shall wed thee damsel...so vowed the prince...

thou feltest bosom swell of rapture and delight. all  timidity you shook away...

free from the rigidity of wakeful life,you swam into the realm of sweet unending dreams...

to overwhelm the prince with clasps and kisses and  to drink in his honeyed lips you longed at passions brink

.like bee quick buzzing down in honey,or iron falling into gravity,thy lover embraced thee close of thy red lips sweet honey quaffed in never quenching sips...

and now kurangan tall returning home thy revels in the woods away from home did learn and leaping with delight he sped to where thou wert and saw the prince in bed with thee...

atrocious sin in broad day light 

O God!the wedding is not over yet...she hath now dashed my dreams to dust and shamed me ....

, Kuyil Pattu Paduvom - Episode 20 uploaded today on YouTube channel 'R. Suryaprakash'. This episode has been recorded solo, set in ragas amruthavarshini, balahamsa, thodi, gowrimanohari, hamsanadam, lathanthapriya and kosalam. The tala employed is Adi, both chatusra nadai and tisra nadai.

Check out this episode in the link

தேமொழி

unread,
Dec 3, 2021, 11:46:27 PM12/3/21
to மின்தமிழ்

21.jpg
Kuyil Pattu Paduvom - Episode 21 
Ragamalika - Arul and Surya

அருளின் குரல் வரிகள்:-
••••••••••••••••••••••••••••••••••
குயில் பாட்டு 21

பெருமக்களே!       

                  குயில் பாட்டின் இறுதிப் பகுதிக்கு நெருங்கி வருகிறோம்....

 கலைமாமணி சூர்ய பிரகாசு அற்புதமாக பாடி வருவதை உலகமே மகிழ்ந்து கேட்டு வருகிறது....

பொதிகை மலை பெரியவர் கதையை தொடர்கிறார். 

நீயும் தோழியும் பூவனத்தில் ஓடி விளையாடுகையில் மான் தேடி வந்த சேரமான் மகன் உன்னை கண்டு மையல் கொள்ள நீயும் மனம் மயங்கி அவனிடம் நெருங்கி வர இருவரும் ஆரத் தழுவிக்கொள்ள குறட்டை குரங்கன் அங்கு வந்து பார்த்து விடுகிறான்.

 மனம் அதிர்ச்சியுற்றான். 
திகைத்து நின்றான். 

என்ன இது அநியாயம்!  

எனக்கும் இவளுக்கும் நிச்சயம் நடந்துள்ளது. 

இந்த பாதகி யாருடனோ சல்லாபம் செய்து கொண்டு இருக்கிறாரே என துடித்து போனான்.

 மனதில் கோபத்தை பொங்கி எழுகிறது.

 அதே சமயம் குயிலி உன் மாமன் மகன் மாமனிடம் யாரோ குரங்கு வந்து குயிலியை தேடி பூங்காவிற்கு சென்றதை சொல்லிவிட அவனும் அங்கு வந்து நின்றான்.

 மாடன் ஐயோ! ஐயோ! சேரமான் மகனும் செயல்படும் காணவில்லை சேர்ந்து அனைத்து அனைத்தும் மறந்து நிற்கின்றனர்.

 கண்டவுடன் காதல் கொண்ட இருவர் விழிகளும் கலந்து மயங்கி இருக்க நான்கு விழிகள் மூடி நிலையில் இருந்தன.

 குரங்கன் மாடன் இவர்களின் நான்கு வழிகளும் கோபக் கனலில் கொதித்து விழித்திருக்கின்றன.

 குரங்கனும் மாடனும் ஆளுக்கொரு வாள் எடுத்து வந்து சேர மன்னன் மகன் முதுகில் வெட்டி விடுகின்றனர்.

 இளவரசன் சற்றே திரும்பி தன் வாளால் வந்த இருவரையும் வெட்டி சாய்க்கிறான். 

இருவரும் பிணமாக மண்ணில் சாய்ந்தனர்.  

மன்னவன் மைந்தரும் சோர்ந்து கீழே விழுந்தான்.

 குயிலியும் மனம் பதைத்து காதலன் மடியில் வாரி எடுத்துக் கூறினார் இறக்கும் தருவாயில் நான் உள்ளேன். 

இன்னும் சில மணித்துளிகளில் நான் மறைந்து விடுவேன். 

நீ கலங்காதே, எத்தனை பிறவி எடுத்தாலும் நீதான் என்னுடைய என்னுடன் இருப்பாய் மகிழ்ந்திருப்போம் எனக்கூறி மலர்ந்த புன்னகையுடன் மடிந்து விடுகிறான்.

 மாடன் செய்த மாயம்தான் நீ அடுத்த பிறவியில் இந்தப் பெண் குயில் பிறப்பாய் பிறந்து விட்டாய். 

 நீ உன் மன்னவன் தொண்டை நாட்டின் கடற்கரையில் உள்ள உள்ளங்களில் மனிதனாக வளர்ந்து உள்ளான். 

உன்னை தோப்பில் காண்பான். 

நீ பாடும் கனிவான பாட்டை கேட்பான்.

 முற்பிறவிகள் தொடங்கிய காதல் மீண்டும் தொடரும் என அந்த முனிவர் உரைத்தார். 

குயிலோ பெரியவரே நான் உயிர் பறவை என்கோ மகனோ மனிதன் அன்றோ நாங்கள் மீண்டும் காதல் திருமணம் எப்படி செய்ய முடியும் என வினவினேன் பெரியார் கூறுகிறார்.

 இப்பிறவியிலும் நீ விந்திய மலை அருகில் ஒரு வேடனின் மகளாகத் தான் பிறந்தார். 

 ஆனால் மடைந்த மாடனும் குற்றுயிராய் விழுந்து இறந்தவனும் பேயாய் திரிகின்றனர். 

உன்னை கண்டு கொண்டனர் உன்னைக் உயிர் பறவையாய் சபித்து விட்டனர். 

நீ மன்னவனே நாம் மீண்டும் சேர்ந்து விடாமல் தடுப்பதற்கு என உரைத்தார்.

 குயில் மீண்டும் தவயோகியிடம் கேட்டது இப்பிறவியிலும் என் மனமே அவர்கள் எங்காவது பார்த்து அவருக்கும் ஏதாவது தீங்கு செய்து விடுவார்களா என்செய்வது இதற்கு மாற்றுவழி இல்லையா எனக்கு ஆகிய நான் முனிவரை வினவினேன். 

அதற்கு அந்த பெரியவர் குயிலே என பதில் கூறத் தொடங்குகிறார்.

 அவர் சொன்னதை மீண்டும் தொடர்ந்து காண்போம்.  

    Kuyil paatu
 episode 21. 
English version.                 

            She hath now dashed my dreams to dust and shamed me quite and her bethrotal hath defamed,O beggar wench!

so sighed thy kurangan tall and stood all wrath.

Now to thy maadans hall quick flashed the news the bridegroom had arrived,and hastened to the woods to see the bride revelling with her maids.

Now maadan sprang to his feet with bloodshot eyes and seating along he ran to the woods and saw thee with thy love in loves sweet paradise in a slumberous grove!

he rankling stood but saw not kurangan tall nor the latter him.

They saw nothing at all except thy slumbering beauty and thy lover.

They smarting stood while you two in the bower as if in the blissful bower of heaven slept soul with soul commingling,love enrapt!

two jealous pairs of eyes their dreamy vigil keep.At this two souls aflaming fill the floating eyes with sparks of fire.

Now rushed maadan and kurangan tall at the lovers hushed intent to kill the prince.

two cuts on back quick spilled the royal blood.

now sprang O quick the prince and cut the murderous two in twain .

they with a thump fell dead and in a swoon the prince fell on the ground. 

And in thy lap thou tookest him,wailing at the dread mishap as from a dream in the prince now opened the eyes and said how long I will die.no good I'm cries... 

No sorrowing in death.

 Ah once again o maid we will be born on earth.

I will pine for love of thee and then enjoy thee too.

more births await us,pleasures too.

I will woo thee and enjoy in the birth to come. 

Which said with a fading smile upon his lips,he died by maadans spell thou hast been changed a bird.thy former lover prince who fell by sword is born a man in the sea washed town set in the palmy Rhonda realm.

The  poet does not call it ponde(French) realm.

thus shows the poets love of freedom and of the mother land.in ancient times thonda mandalam which included Pondicherry was ruled by thondaman ilanthirayan,a scion of the chozha line...

thou wilt be seen by him in a wood.

thy thrilling song he will hear and charmed,impelled by fate,become thy lover again...

so ended the sage of the southern hill.

my lover by birth a man and I a koel!

though love genuine be betwixt us twain how could we wed?

are words of my lover in vain words of a former birth at death bed said.the sage with a smile replied,o foolish bird,thou even in this birth wert born a maid a hunters child on the vindhya mountain side,maadan and kurangan tall by karma old by woods and hills as ghosts, aye wand ring wild came upon thee quick.lest thou shouldst once again rejoin thy former lover prince,they have transformed thee to a bird,o koel and follow thee,o doggedly over hill and dale.

 Art thou not aware of this,o fate for the dead to vex the living is it meet o if the devils weaken my sense and make me quiet forget my birth would the lover take me as his bride..

.or if he hurts,Alack great sage,what shall I do ?couldst thou not find a way to save me..

.now the sage rejoined in grace ,o koel,o koel

Hello Friends, 

Kuyil Pattu Paduvom - Episode 21

 (pre final episode) 

uploaded  on YouTube channel 'Suryaprakash'.

 This episode full of pathos has been recorded solo, set in ragas kalyani, srothaswini, kumudakriya, saramathi, yamuna kalyani, manirangu and kanada.  

Check out this episode in the link

தேமொழி

unread,
Dec 23, 2021, 12:54:13 AM12/23/21
to மின்தமிழ்
Kuyil Pattu Paduvom - Episode 22.jpg
Kuyil Pattu Paduvom - Episode 22 (final episode) 
- ragamalika (a long video) - Arul and Surya

Presenting a series of episodes of Mahakavi Subramanya Bharathiyar's "Kuyil Pattu" in musical form with explanation.

Episode 22 : This final episode has been recorded solo, set in ragas desh, misra sivaranjani, kokilam, hamsanandi, kapi, gopriya (dream scale), suruti and madhyamavathi (the ending with Bharathi's Thamizh Vaazthu).

Dr.R.Suryaprakash's singing is followed by a discourse by Dr.Arul on the lyrical beauty of Bharathiyar's verses sung in this episode.

Music Composing and Singing : Kalaimamani Dr. R Suryaprakash

Translation and explanation on the lyrical content : Dr.Arul Avvai Natarajan

Creative work : Jayashree Iyer
Dec 11, 2021 (Bharathi's birth date)

Check out the previous episodes in the playlist link:
https://www.youtube.com/playlist?list=PLey9Tl9ylHG07gEIradxNDcCyb25AFIuD


தேமொழி

unread,
Dec 23, 2021, 1:05:44 AM12/23/21
to மின்தமிழ்
Kuyil Pattu Paduvom - Episode 22.jpg

பாரதியின் குயில் பாட்டு..!
ஆர்.ராஜேஷ் கன்னா


கவினெழு சுடரே
குளிர் இளந்திருவே – வண்ணக்
குழலிசை அமுதே
ஆவென அழகாய் உன்றன்
அலகினை விரித்தே
தேனார்ப் பாவினை இசைப்பாய்
இன்பப் பண்ணொடு கலந்தே!

பாடிக் காட்டிடு தமிழே என்ற தேன்கவி வரிகளுக்கு உயிரோவியமாக பல இராகங்களில் பண்ணிசைத்து குயில்பாட்டு முழுவதையும் கொரோனா தீநுண்மிக் காலத்திற்கு முன் தொடங்கி, பாரதி பிறந்த நன்னாளான இன்று, நிறைவடைகிறது.

குயில் பாட்டின் முழுத்தொடரைப் பாடிய கலைமாமணி முனைவர் சூரியப் பிரகாசின் இசைப்பயணம். இது பற்றி சென்ற வருடம் விகட கவியில் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

சூரியப் பிரகாஷ் பாட, தமிழக அரசின் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் முனைவர் அருள் பாடலின் சிறப்பையும், கருத்தையும் தன் எழுச்சிக் குரல் வாயிலாக கருத்து விளக்கங்களையும் தொடர்ந்து செய்து வந்த இம்முயற்சியை உலகத்தில் பரந்துள்ள பல தமிழர்கள் பாராட்டி மகிழ்ந்தனர்.

அருளும், சூரியப் பிரகாஷும் சென்னை கிறித்தவ மேனிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை ஒன்றாகப் பயின்ற மாணவர்களாவார்கள்.

இவர்கள் இருவரும் பள்ளி முடித்து, கல்லூரிக் கல்வி கற்று பல ஆண்டுகள் இடைவெளி கழித்து, பள்ளி மாணவர்கள் ஒருசேர நடந்த சந்திப்பில் மீண்டும் சந்தித்து அளவளாவிக் கொண்டிருந்த பொழுது சூரியப் பிரகாஷ் தன் வாழ்வை இசை மயமாகவும்,

அருள் தன் வாழ்வைத் தமிழ் வழியாகவும் அமைத்துக்கொண்டிருந்த பொருத்தங்களை இணைத்துப் பேசிக்கொண்டிருந்த தருவாயில், கலைமாமணி சூரியப் பிரகாஷ் தான் பாடும் பாடல்களுக்கு எங்காவது ஒருமுறை தமிழில் நீ விளக்கம் சொல்லக் கூடாதா என்று வினவிய பொழுது...

அருள் மலைத்துப் போய், உங்கள் பயணமும் என் பயணமும் எந்த மையப் புள்ளியில் இணையுமென்று எனக்குத் தெரியவில்லை.

 உங்களைப் போல இசைத்திறமை அறியாத என்னை எப்படி இணைத்துக் கொள்வீர்கள் என்று தெரியவில்லை என நழுவி விட்டார்.
 
முதலில் வானவில் பண்பாட்டு மையத்தின் நிறுவனர் பாரதி புகழ் வழக்கறிஞர் இரவி, அருளிடம், பாரதியைப் பற்றிக் கட்டுரை எழுதத் தூண்டிய போது, அருள் ‘

பாரதியாரை நாழும் நினைவோம்’ என்று தொடங்கி,
‘புதுவைக் குயிலின் பொன்னோவியம்’

 என்ற தலைப்பில் 05.05.2020 அன்று எழுதியதை இணையத்தில் வெளியிட்ட பொழுது,

 கருநாடக இசைக் கலைஞர் கலைமாமணி ஆர். சூரியப் பிரகாஷ் அருளை அழைத்து, “பாரதியின் குயில் பாட்டுக் கவிதை வரிகளை உலகம் முழுவதும் இணையத்தில் கொண்டு சேர்க்க ‘குயில் பாட்டு பாடுவோம்’ என்ற தலைப்பில், யூடியூபில் 25 வாரத் தொடராகப் பாடுகிறேன்.

அதற்கான விளக்கத்தையும், ஆங்கில மொழிபெயர்ப்பையும் நீங்கள் விளக்க வேண்டும்.

 நாமிருவரும் இணைந்து குயில்பாட்டுக்கு ஒரு புதுவடிவம் கொடுக்கலாமே” என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க...

24.05.2020 அன்று தொடங்கப்பட்ட இசைப்பயணம் பல்வேறு இடர்களுக்கு மத்தியில், தத்தித்தத்தி 11.12.2021 அன்று நிறைவடைவதை, தமிழ்கூறு நல்லுலகம் பாராட்டி மகிழ்கிறது.

அருளின் தாயார் மருத்துவமாமணி தாரா நடராசன், இம்முயற்சியைப்பெரிதும் பாராட்டி, அருளை ஊக்குவித்துக் கொண்டிருந்த தருணத்தில், 14.08.2020 அன்று தீநுண்மித் தாக்குதலுக்கு ஆட்பட்டு, இயற்கையெய்திய பெருந்துன்பத்திலிருந்து அருள் மீண்டு வருவதற்கே பல திங்களாயிற்று.

அத்தருணங்களில், கலைமாமணி சூரிய பிரகாஷ், அருளை ஆற்றுப்படுத்தி, அவருக்காகவே காத்திருந்து, அவர் தேறிவந்த பிறகு, குயில்பாட்டு இசைப்பயணத்தைத் தொடர்ந்தார்.

பௌளி, நாட்டை குறஞ்சி, ஆகிரி, சுமநேச ரஞ்சனி, நளின காந்தி, அடாணா, சிந்து பைரவி, தர்பாரி கானடா ஆகிய இராகங்களில் மெட்டமைத்து, கருநாடக இசையில் குயில் பாட்டுப் பாடல்கள் பாடப்பட்டுள்ளன.

 குயில் குறிஞ்சி இராகம் கிராமிய இசையைத் தழுவியும், இயற்கையாக ஏற்படும் மகிழ்ச்சியைக் கொண்டும், உற்சாக இராகமாக உருவாக்கப்பட்டுள்ளது.

சூரிய வசந்தா இராகம் வீர உணர்ச்சி மற்றும், சோக உணர்ச்சியினை ஏற்படுத்தும் மற்றொரு புதிய இராகமாக உருவாக்கியுள்ளார் கலைமாமணி டாக்டர் ஆர். சூரியபிரகாஷ் என்பது பெருமையிலும் பெருமையாகும்.
 
குயில்பாட்டு 744 அடிகளையும், பாட்டாகப் பாடி, நம்மைப் பெருமைப்படுத்தியுள்ளார் சூரிய பிரகாஷ்.

குக்கூ என்ற குயிலின் குரலில் காதல், அருள், இன்பம், நாதம், தாளம், பண், புகழ், உறுதி, கூடல், சூழல் ஆகிய பத்துப் பொருண்மைகளையும், ஒலியாலும், சூழலாலும், குரல் வெளிப்பட்ட முறையாலும்,

 பாரதியார் உணர்வதையும், சின்னக்குயிலின் மடியில் வெட்டுண்ட நிலையில் கிடக்கும் சேரமானின் இறுதிப்பேச்சு,

 கண்ணகியின் மடியில் வெட்டுண்ட கோவலன் பேசிய இறுதிப் பேச்சைப் பல இடங்களில் குயில்பாட்டு தனக்கு நினைவூட்டியதைப் பெருமிதமாக முனைவர் அருள் நம்மிடம் சொல்லும்போதே குயில்பாட்டின் ஒவ்வொரு பாடல் தொடரிலும் எவ்வளவு கருத்துக்களைச் சொல்ல வருகிறார் என்று தெரிய வருகிறது.

குயில் பாட்டு பாடுவோம் என்ற இந்தப் படைப்பு இசையறிஞர்களுக்கும், தமிழார்வலர்களுக்கும் கிடைத்த அருமருந்து;

இதுவரை யாரும் செய்திராத நல்லதொரு முயற்சி.

குயில்பாட்டு பாரதியாரின் உயிர்ப்பாட்டாகும்.

தமிழில் முன்னெல்லாம் கோகிலம் என்பார்கள்.

அதனால் தான், தன் அருமைத் திருமகளின் குரலுக்கு, வசந்தகோகிலம் என்றே பெயரிட்டார்கள்.

கோகிலம் என்பது குயிலாகும்.

 அதனால்தான், இசையரசிக்கு கோகில வாணி என்றே பெயரிட்டார்கள்.
 
குயில்பாட்டில், காதல் காதல் காதல், அதுபோயின் சாதல் சாதல் சாதல் என்ற அந்த வரிகள் தான் வைரவரிகளாகவும், சாதனை வரிகளாகவும், கல்வெட்டு வரிகளாகவும் சாசன வரிகளாகவும் இளையோரின் இதய கீதமாகவும் பாரதியார் படைத்துக் காட்டினார்.

 உலகெங்கும் உள்ள அனைவருக்கும் தெரிந்த தேன்வரிகள் இவைகளாகும்.

இந்த வரிகளை பாரதியார் சொல்லும்போதே அவருக்கு திருவள்ளுவருடைய இன்பத்துப்பால் தான் நினைவுக்கு வந்தது.

உலகிலுள்ள கலைகள் யாவும் இசையின் உயர்ந்த நிலையை அடையவே தாமும் ஆசைப்பட்டு அதனை அவாவி நிற்கும் நிலையில் இசைக்கு என்ன குறை கூறமுடியும்

 (All arts aspire the status of music) என்றார் கோல்ட்ரிஜ்.

எந்தவொரு படைப்பையும் இசையாக மாற்றிக் காட்டுகிற அந்த விதம், அந்த இசைக்கும், அந்தப் பாட்டுக்கும், அந்தக் கருத்துக்கும் ஒரு மாபெரும் சிறப்பு என்று கூறினார்.

அந்த சிறப்பு, இந்தக் குயில் பாட்டில் பொதிந்து கிடக்கிறது.

குயில்பாட்டை இசைப்பாட்டாகவே பாடிக் காட்டிய பெருமை சூரிய பிரகாசைச்சாரும்.

சூரிய பிரகாஷ் பாடிய குயில்பாட்டைக் கேட்ட இலண்டன் வாழ் தமிழர் பெருமிதமடைந்து, “சூரிய பிரகாஷின் குரல் வளம், மாந்தளிரைக் கோத வைக்கும் குயிலின் குளிர்காலக் கூவலைப் போல உள்ளது” என்று சொல்லிச் சிலாகித்தார்.

குயில் பாட்டின் ஒவ்வொரு வரிகளையும் முனைவர் அருள் தமிழில் நீண்ட விளக்கங்களுடன் எழிலார்ந்த ஆங்கிலத்திலும், குயில் பாட்டின் சிறப்பினை உலகிலுள்ள எல்லோரும் அறிந்து கொள்ளும் வண்ணம் நுட்பமாக விளக்கினார்.
 
கரைபுரள அலைபுரள சூரிய பிரகாஷ் பாடிக்காட்டிய குயில் பாட்டு மகோன்னதமான வரவேற்பைப் பெற்று, இலண்டன், அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலுள்ள தமிழார்வலர்கள் குயில்பாட்டைக் கேட்டு மகிழ்ந்தார்கள்.

பாரதியாருடைய தலைசிறந்த மூன்று படைப்புகள் எவையென்னால்,

தேசிய உணர்ச்சிக்காக - பாஞ்சாலி சபதமும்,
தெய்வீக உணர்ச்சிக்காக - கண்ணன் பாட்டும்,
தத்துவ நோக்கத்திற்காக - குயில் பாட்டும்

என்று போகிற போதே அருள் தன்னுடைய கருத்து மழையை அங்கிங்கெனாதபடி குயில்பாட்டில் சொல்லி வந்தது பெருமிதமாக உள்ளது.

கலைமாமணி சூரியப் பிரகாஷ் தனிமனிதராக இப்பணியைச் செய்யவில்லை.

அவர் குடும்பமே ஒரு நல்லதொரு பல்கலைக்கழகம் போல குயில்பாட்டை ஓம்பி வளர்த்தனர்.

 அவருடைய பெற்றோர்கள் அவருக்குக் கிடைத்த மாணிக்கச் செல்வங்களாவர்.

அவருடைய தாயார் நாங்கள் இருவரும் சென்னை கிறித்தவப் பள்ளியில் பயிலும்போதே பேச்சுப் போட்டிகளிலும், கவிதைப்போட்டிகளுக்கும் நடுவராக வந்த மாதரசியாவார்.

சூரிய பிரகாசின் துணைவியார் ஒரு பக்கம், அவருடைய மக்கட்செல்வங்கள், துபாயிலிருந்து அவருடைய தங்கை யூடியூப் வாசகர்களுக்காக, அழகாக எடிட் செய்த காட்சிகளைப் பார்த்தால் யாவரும் உறுதியாகப் பாராட்டுவார்கள்.

பாரதியை நாம் சென்னையிலே தான் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தோம்.

 அவருடைய இல்லம் கூட இங்கு சென்னையில் தானே இருக்கிறது.

 எங்கிருந்து புதுவைக்குச் செல்கிறார்?

எப்படி அவருக்கு அந்தப் புதுவை மீது வேட்கை?

 எங்கிருக்கிறது அந்த குயில் பாடுகிற காடு?
அந்த வனம் எங்கே?
என்றெல்லாம் வினவத் தோன்றும்.

 இந்தியா வார இதழைப் பாரதியார் நடத்திக்கொண்டிருந்தபோது, இந்த இதழ் சென்னையில் நடத்த முடியாத சூழலில் அரசியல் புகலிடமாகப் புதுவைக்குச் செல்கிறார்.

அதுவரை புதுவை கடன்காரர்களுடைய புகலிடமாக இருந்த பகுதியாகும்.

 புதுவையில் தான் அவருக்கு எங்கிருந்தோ வந்தான் என்பது போல குவளைக் கண்ணன் அவருக்கு நண்பராக வந்ததும், வெள்ளச்சி கிருஷ்ணசாமி செட்டியாருக்குப் புதுவையை அடுத்த முத்தியால்பேட்டைக்குப் பக்கத்தில் அழகான தோப்பு இருந்தது.

அந்தத் தோப்பில்தான் பாரதியார் மணிக்கணக்காக இருப்பாராம்.

 அந்தத் தோப்பே தான் பாரதியாருடைய குயில்பாட்டினுடைய காட்சித் தலமாகவும், தமிழ் உள்ளவும் சாகாவரம் பெற்று விட்டது இந்தத் தோப்பு என நாம் சொல்லலாம்”

 என்று நுட்பமாக முனைவர் அருள் குயில் பாட்டினூடே மேற்குறித்த கருத்துக்களையும் பாரதி புகழ்பெற்ற ரா.ஆ. பத்மநாபன் அவர்கள் தன்னுடைய சித்திர பாரதியில் பாரதியார் நூற்றாண்டின்போது, வெளியிடப்பட்ட தன்னுடைய நூலில் மிக அழகாக அந்த குயில்பாட்டு பாடப்பட்ட அந்தத் தோப்பின் படத்தையும் வெளியிட்டிருப்பதையும் அருள் தெரிவித்தது ஆச்சரியமுட்டும் செய்தியாக அமைந்தது.

பாரதியார் பற்றி அருள் மற்றும் கலைமாமணி சூரிய பிரகாஷ் ஒராண்டுக்கு மேல் கடும் முயற்சி செய்து குயில் பாட்டை உலகெங்கும் கொண்டு சென்றது பாரதிக்கு இவர்கள் செலுத்திய புகழாஞ்சலி என்றே சொல்லவேண்டும் !


நன்றி: 
விகடகவி
ஒரு சூப்பர் டிஜிட்டல் வீக்லி
பாரதியார் ஸ்பெஷல்
11 12 2021

Reply all
Reply to author
Forward
0 new messages