கொலை செய்ததை விழாவாகக் கொண்டாடும் நாகரிகமற்ற மனிதர்கள்

19 views
Skip to first unread message

தேமொழி

unread,
Apr 29, 2026, 11:14:57 AM (2 days ago) Apr 29
to மின்தமிழ்
கொலை செய்ததை விழாவாகக் கொண்டாடும் நாகரிகமற்ற மனிதர்கள்
kazhu.jpg
விளாத்திகுளம் - 6 ஆம் நாள் நிகழ்வு
தத்ரூபமாக அரங்கேற்றப்பட்ட கழுவேற்றம் நிகழ்வு.. கண்ணிமைக்காமல் கண்டு களித்த மக்கள்
https://www.youtube.com/watch?v=gijg-PzkDxE

சிவகாசி
youtube.com/shorts/4kvX0IURJ9k?si=mXL26Gnj8M4LyldV

கழுவன் - திருவிழா
https://www.youtube.com/watch?v=tACGU1mnBjg
​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​_________________________________

பள்ளியில் திருக்குறள் படித்து என்ன பயன்?  மத வழிபாடு என்றவுடன் சிந்திக்கும் திறன் ஏன் இல்லாது போகிறது? 
காலத்திற்கு ஏற்ப இவர்கள் மாற மாட்டார்களா?

அன்பே சிவம் என்று வலியுறுத்த வேண்டிய தேவை இருக்கும் அளவிற்கு நடவடிக்கை இருக்கிறது.  
இதை எல்லாம் மரபு என்று தமிழர் வரலாற்றைக் கேவலப்படுத்துகிறார்கள்.  இதற்கு அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் மதத் தலைவர்களும் அறிவுறுத்த வேண்டும். 

இவர்கள் என்ன  தங்கள் மக்களைத் துன்புறுத்தியவர்களை வெற்றி கொண்டதாகவா கொண்டாடுகிறார்கள்? 
அடுத்த மதத்தவரைக் கொன்றோம் என்று பெருமை பேச ஒரு விழாவா?  அசிங்கமாக இருக்கிறது.

தேமொழி

unread,
Apr 29, 2026, 11:17:22 AM (2 days ago) Apr 29
to மின்தமிழ்
அரசாங்கத்தின் அறநிலையத்துறையே முன்னின்று நடத்திடும் சமணர் கழுவேற்றம்
-------------------------
சமணத்தை அழித்தொழித்த ஞானசம்பந்தர்
நின்றசீர் நெடுமாறன் என்கிற பாண்டிய மன்னனுக்கு வெப்பு நோய் நீக்கினார் என்றும்
அதன் பொருட்டு
புனல் வாதத்தில் சமணர்களைத் தோற்கடித்த கதையை நினைவு கூரும் வகையில் பல்லாண்டுகளாக சித்திரை வைகாசி திருவிழாக்களில் சைவ கோயில்களில் சமணர் கழுவேற்ற நிகழ்ச்சிகள் இன்றும் தொடர்ந்து ஆண்டுதோறும் நடந்து வருகிறது .

மன்னவன் மாறன் கண்டு மந்திரி யாரை நோக்கி
"துன்னிய வாதி லொட்டித் தோற்றவிச் சமணர் தாங்கள்
முன்னமே பிள்ளை யார்பா லநுசித முற்றச் செய்தார்
கொன்னுனைக் கழுவி லேற்றி முறைசெய்க"
என்கிறது பெரிய புராணம் .

இதில் மிகவும் வேதனையான விஷயம்
சித்திரை திருவிழாவில் தமிழ்நாடு அரசாங்கத்தின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோயில்களிலேயே சமணரை கழுவேற்றும் வன்மங்களை சித்தரிக்கும்  நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுகிறது .
இது தவிர பல சைவ கோயில்களில் சமணர் கழுவேற்றம் நிகழ்வு அரங்கேறி வருகிறது .

💠மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
 
💠திருப்பரங்குன்றம் முருகன் கோயில்
 
💠திருமங்கலம் பத்திரகாளியம்மன் கோயில்

💠மதுரை சுற்றுவட்டார சிவன் கோயில்கள்
 
💠விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்

💠காளையார்கோயில்
 
💠சோழவந்தான் ஜனகை மாரியம்மன் கோயில்
 
💠சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில்

💠மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயில் (ஏப்ரல் 26 )

இப்படி பல்வேறு கோயில்களிலும் இன்றும் கழுவேற்ற அவலம் தமிழகத்தில் தொடர்ந்த வண்ணமே உள்ளது .

வேதனையுடன்
பேரணி ஸ்ரீதரன்

#வாட்சப் பகிர்வு 

தேமொழி

unread,
Apr 29, 2026, 11:20:00 AM (2 days ago) Apr 29
to மின்தமிழ்
இந்த அவலங்களை என்னென்று சொல்வது

இந்தக் கொடுமைகளை நான்தான் செய்தேன் என உலகில் யாரேனும்  எழுதி வைப்பார்களா? செய்து காட்டுவார்களா?

தமிழகத்தில் இந்த பாதகச் செயல் இன்றும் அரங்கேற்றப்படுகிறது  பெருமையாக

முனைவர் அஜிததாஸ் 
Reply all
Reply to author
Forward
0 new messages