
”அண்ணா நாற்பது"-முனைவர்.தே.சங்கர சரவணன்
அண்ணா பிறந்தநாள் சிறப்புரையில்
அண்ணா குறித்த 40 நூல்கள் பற்றிய அறிமுகம்
அண்ணா நூற்றாண்டு நூலகம் - ஏற்பாட்டில்
செந்தமிழ்ச் சிற்பிகள் உரையரங்கம் 9
https://www.youtube.com/watch?v=EjDDL_xnKcs
அண்ணா நாற்பது:
உள்ளத்தாற் பொய்யாத உயர்நிலை ஒன்று
ஊர்வாழத் தான்தேயும் உணர்ச்சியதி ரண்டு
வெள்ளத்தோ டுறவாடும் அன்புமனம் மூன்று
வெறும்வார்த்தை இல்லாத சொற்செட்டு நான்கு
கள்ளத்தாற் றளர்வோர்க்கு அறிவூட்டல் ஐந்து
கலைக்கூடம் எழில்காண வளந்தேக்கல் ஆறு
அள்ளத்தான் குறையாத கருத்தோட்டம் ஏழு
அறிகுர்க்கோர் வழியென்னும் மெய்வாழ்வும் எட்டு
ஒழுக்கத்தாற் பிறர்போற்றும் உயர்வாழ்வே ஒன்பது
உள்ளன்பிற் குலஞ்சேர்க்கும் நற்பண்பு பத்து
பழக்கத்திற் கினிதான தன்மைபதி னொன்று
பணிவுக்கோர் நாணலெனும் நிலைமைபனி ரண்டு
கலக்கச்சோர் வறியாத ஆண்மைபதின் மூன்று
கண்டறைந்த பின்பேசாப் பெருந்தன்மை யோடு
விளக்கத்தால் பலர்நெஞ்சை வெற்றிபெறு செம்மல்
வீரத்தின் இடமென்று கூட்டுபதி னாறு!
அங்கத்தின் அசைவுக்குள் அரசியலின் தேக்கம்
அணுவுக்குள் அணுத்தேடும் ஆராய்ச்சிப் பாக்கம்
சிங்கத்தைக் கொல்லாமை நோன்புபெறச் செய்து
திருநாட்டின் வாழ்வுக்குப் புதுப்படம் கண்டு
தங்கத்தில் வைரத்தின் நீரோட்டம் பார்க்கும்
தன்மைத்தாய் தமிழ்கற்ற பேராளன் எங்கள்
அங்கத்தாற் றலையாண அண்ணாவின் பெருமை
அறிவுக்கோர் வீடாக இருபத்தி நான்கு!
வைவாரின் முன்தோன்றி வாழ்த்துக்கள் பெற்றும்
வாலாட்டும் பலபேரைத் தலையாட்ட வைத்தும்
நைவாரின் வறுமைக்கு நமனாக நின்றும்
நடிப்பாரை உலகோடு சமமாகச் செய்தும்
மைவாங்கும் விழியாரை மாதாவென் றழைக்கும்
மாண்புக்கு வழிகோலிப் பண்பாடு காத்தும்
தைவார்க்கும் பொங்கற்குத் தனித்தன்மை தந்தும்
தமிழ்காக்கும் செயவோடு முப்பத்தி ரண்டு!
முகம்பார்த்தே அகங்காணும் மூடாத விழிகள்
முதலாளி கண்டஞ்சும் நிறங்கொண்ட இதழ்கள்
செகங்கண்டு சிலிர்ப்பேறும் சீரான கைகள்
தென்னாட்டின் அன்பெல்லாம் துயில்கொள்ளும் நெற்றி
அகம்பற்றி உரைத்தற்கோர் அழகான வார்த்தை
அய்யய்யோ உலகத்தில் இனும்தோன்ற வில்லை!
யுகம்தேய்ந்து போனாலும் பெயர்நிற்கு மென்றால்
ஒருவர்க்கே அண்ணாவென் றுரைநாற்ப தன்ப!
-கவிஞர் கண்ணதாசன்
-------------------
அண்ணா குறித்த 40 நூல்களின் தலைப்புகள்:
1. Anna —R. Kannan (Penguin)
2. A Grand Tamil Dream (TNTBESC & THE HINDU TAMIL THISAI)
3. Help me in this tricky case (TNTBESC & BLOOMSBERRY)
4. தமிழ் Characters [Tamil Characters] —ARV
5. மாபெரும் தமிழ் கனவு - தி இந்து தமிழ்த்திசை
6.அண்ணா போற்றிய பெருமக்கள் [த.வ.துறை]-48 பேர்
7. கார்டூனாயணம் —எம்.எஸ்.எஸ், வீ.எம்.எஸ். மருது
8. கறுப்பு சிகப்பு இதழியல் —பாவேந்தன் [கயல் கவின் பதிப்பகம்]
9. திராவிட சினிமா —பாவேந்தன், வீ.எம்.எஸ்.
10. அண்ணா நூற்றாண்டு மலர் தினமணி.
11. புத்துலகச் சிற்பி [தென்னிந்திய பதிப்பகம்]
12. திராவிட இயக்கப் பெருமக்கள் - 37 பேர்.
13. பாம்பின் கண் - தியோடர் பாஸ்கரன்.
14. திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் —மு.பி பாலசுப்பிரமணியன்.
15. திராவிட ஆட்சி மாற்றமும் வளர்ச்சியும் —Jayaranjan.
16. திராவிட மாடல் —கலையரசன், விஜயபாஸ்கர்
17. Rule of the commoner —Rajankurai. V. M.S. Ravindran
18. அமெரிக்காவில் அண்ணா —எம். எஸ். உதயமூர்த்தி
19. அண்ணா ஒரு சமுதாய சிற்பி —Chennai தமிழ் துறை கல்லூரி Loyola
20. அறிஞர் அண்ணா —ShanMuga Sundaram. Su, 2001-Sahitya Academy
21. அறிஞர் அண்ணா அமெரிக்க உளவாளியா? —க.திருநாவுக்கரசு (நக்கீரன்-19447)
22. தமிழ் பேரொளி பேரறிஞர் அண்ணா (சைவ சித்தாந்த பதிப்பகம்-1970)
23. மாமனிதர் அண்ணா —க.அன்பழகன் [ பூம்புகார்-2009)
24. அண்ணா திரை —Shanmuga Sundaram.Su
25. லெனினும் அண்ணாவும் —A.S.Venu
26. அண்ணா தன்வரலாறு —அண்ணா பரிமளம்
27. அண்ணா அறிவுக் கொடை [more than 120 volumes.]
28. அண்ணாவும் பாவேந்தரும் —கா.வேழவேந்தன்.
29. அண்ணா சில நினைவுகள் —கருணானந்தம்
30. இவர்தான் அறிஞர் அண்ணா —கி.வீரமணி
31. கலைஞர் வாழ்வில் அண்ணா —கமலா கந்தசாமி
32. நீதிதேவன் மயக்கம்
33. தீ பரவட்டும்
34. ஏ தாழ்ந்த தமிழகமே!
35. எண்ணித் துணிக கருமம்
36. பார்வதி B.A,
37. சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்
38.தீட்டுத் துணி
39. ஆரிய மாயை
40. ரோமாபுரி ராணிகள்