"தமிழர் தடம்" — வலைத்தளம்

10 views
Skip to first unread message

தேமொழி

unread,
Apr 8, 2026, 10:01:08 AM (3 days ago) Apr 8
to மின்தமிழ்

Thamizhar Thadam.jpg

உலகெங்கிலும் வாழும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் இனிய வணக்கம்!

நமது முன்னோர்கள் கடல் கடந்து சென்ற கதைகளும், அவர்கள் எதிர்கொண்ட சவால்களும், இன்று நாம் அடைந்துள்ள வளர்ச்சியும் வெறும் தகவல்கள் அல்ல; அவை ஆவணப்படுத்தப்பட வேண்டிய வரலாறு!

தமிழர் தடம் என்பது உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களின், குறிப்பாக காலனியாதிக்க காலத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களின் இடம்பெயர்வு குறித்த வரலாறுகள், தரவுகள் மற்றும் அனுபவங்களை ஆய்வு செய்து ஆவணப்படுத்த தமிழ்நாடு அரசின், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையால், உருவாக்கப்பட்ட ஒரு இலவச, திறந்த உள்ளடக்க இணையவழிக் களஞ்சியமாகும்.

உலகெங்கிலும் புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் தமிழர்களை பற்றிய தரவுகள் மற்றும் தகவல்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து ஒரு ஒற்றை கலைக்களஞ்சியத்தைப் போல இந்த தமிழர் தடம் தரவு தளம் செயல்பட வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கம் ஆகும்.

இத்தளத்தில் பதிவிடப்படும் கட்டுரைகள், தமிழர்களின் வரலாறு, புலம்பெயர்வு குறித்த இனங்களில் சிறப்பு வாய்ந்த இரண்டு பேராசிரியர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு பின்பு வளைத்தளத்தில் வெளியிடப்படும்.

இக்கட்டுரைகள் இக்கால தமிழ் சமூகத்திற்கு மட்டுமின்றி எதிர்வரும் சந்ததியினருக்கும் தாங்கள் கடந்து வந்த பாதைகளை, பயணங்களை பற்றிய புரிதல்கள் ஏற்பட ஏதுவாக தமிழர் தடம் வலைதளம் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

எனவே, இந்த தமிழர் தடம் வலைத்தளத்தில் தங்களின் மேலான கட்டுரைகளை தாங்களோ அல்லது விருப்பமுள்ளவர்கள் பதிவிடும் வகையில், இக்குறுந்செய்தியை அனைத்து புலம்பெயர் தமிழ் சமூகங்களுக்கும் பகிருமாறு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையால் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

தமிழர் தடம் வலைதளத்தின் இணைப்பு: 
------------------------------
Warm greetings to all Tamil people living across the world!

The stories of our ancestors who crossed the seas, the challenges they faced, and the progress we have achieved today are not merely pieces of information—they are histories that deserve to be documented.

Tamilar Thadam is a free and open digital knowledge platform created by the Government of Tamil Nadu through the Department of Welfare of Non-Resident Tamils and Rehabilitation. It aims to research and document the histories, data, and experiences of Tamils living across the globe, especially those who migrated during the colonial period.

The primary objective of this platform is to function as a unified digital encyclopedia by consolidating data and information about Tamils living worldwide in one place.

The articles submitted to this platform will be reviewed by two distinguished professors specializing in Tamil history and migration studies before being published on the website.

These articles will not only benefit the present Tamil community but will also help future generations understand the journeys and paths their ancestors have taken. There is no doubt that Tamilar Thadam will serve as a valuable resource in this regard.

Therefore, you are kindly requested by the Department of Welfare of Non-Resident Tamils and Rehabilitation to share this message among Tamil diaspora communities worldwide and encourage interested individuals to contribute their valuable articles to the platform.

Website link: https://nrtamils.tn.gov.in/tamilar-thadam/
------------------------------
Reply all
Reply to author
Forward
0 new messages