சிவன் கோயில்களில் சிவப்பிராமணர்கள் அர்ச்சகர்களாவதற்கு முன்பு அர்ச்சகர்களாய் வேத பிராமணர்கள் இருந்திருக்கிறார்கள். இவர்களில் சிலர் சிவயோகிகளாகவும் இருந்திருக்கிறார்கள். இணைப்பில் உள்ள ஆங்கிலக் கட்டுரை எப்படிப் பிராமணரல்லாதார், வேத பிராமணர், சிவப்பிராமணர் ஆகியோர் சிவன் கோயில்களில் அர்ச்சகர்களாக அமர்த்தப்படுவதில் காலம் தோறும் மாற்றங்கள்
நிகழ்ந்துள்ளன என்பதையும் வழிபாட்டு முறைகளில் ஆகமங்களின் பங்கு என்ன என்பதையும் சிவப்பிராமணர்களின் சமுதாய வரலாறு என்ன என்பதையும் விரிவாகக் கல்வெட்டுக்கள், தமிழ் இலக்கியம், வடமொழிச் சைவசித்தாந்த நூல்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆராய்கிறது.
தமிழ்ச் சிவன் கோயில்கள், ஆகமங்கள், சிவப்பிராமணர்கள்/ஆதிசைவர்கள்
— சுடலைமுத்து பழனியப்பன்