அனைவருக்கும் வணக்கம்.
பள்ளி மாணவர்களுக்கான “எல்லோருக்கும் AI” புத்தகத்தைத் தொடர்ந்து , அனைவரும் வாசிக்கக்கூடிய வகையில் "AI யுகம்" புத்தகம் தற்போது இணையத்தில் கிடைக்கிறது.

பரந்ததும் அதிவேகமானதுமான செயற்கை நுண்ணறிவு அலை ஏற்கனவே நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை மாற்றத் தொடங்கிவிட்டது. நாம் உணராமலேயே, ஒரு யுக மாறுதலின் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதற்குத் தயாராகுவதற்காகவே இந்தப் புத்தகம் எழுதப்பட்டது.
இந்தப் புத்தகம் எல்லோருக்குமானது.
தங்கள் குழந்தைகள் வாழப்போகும் எதிர்காலத்தைப் பற்றி அறிய விரும்பும் பெற்றோர்களுக்காக.
இன்னும் உருவாக்கப்படாத வேலைகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் ஆசிரியர்களுக்காக.
மாற்றம் நம்மைச் சுற்றி நிகழ்கிறது என்பதை உணர்ந்து, ஆனால் எங்கிருந்து தொடங்குவது என்று தெரியாமல் இருக்கும் தொழில்முனைவோர், கலைஞர்கள், மற்றும் அனைத்துத் துறைசார் வல்லுநர்களுக்காக.
"நான் ஒருTech நபர் அல்ல," என்று நீங்கள் சொல்பவராக இருந்தாலும், இந்தப் புத்தகம் உங்களுக்காகத்தான்.
செயற்கை நுண்ணறிவை தெளிவாகப் புரிந்துகொள்ளவும், அதை சரியாகப் பயன்படுத்தவும், புதிய AI உலகில் நம்பிக்கையுடன் அடியெடுத்து வைக்கவும் இந்தப் புத்தகம்சிறிதளவாவது உங்களுக்கு உதவும்.
வாசிக்க:
https://ai-yugam.ai2all.orgபுத்தகத்தை வாசித்து உங்கள் கருத்துரைகளை வழங்குங்கள். அவை ,மேலும் பலருக்கு வாசிக்கவும் பகிர்ந்துகொள்ளவும் தூண்டுகோலாகவும், எமக்கு அடுத்த பதிப்பினை மேம்படுத்த உதவியாகவும்
இருக்கும்.