வெருளி நோய்கள் 1536-1540 : இலக்குவனார் திருவள்ளுவன்

5 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Jun 7, 2026, 4:55:44 PM (yesterday) Jun 7
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan Srinivasan, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan, Umarani Pappusamy Mysore, Dr. Ku.Muthukumar

வெருளி நோய்கள் 1536-1540 : இலக்குவனார் திருவள்ளுவன்

 ஃஃஃ      அகரமுதல     இலக்குவனார் திருவள்ளுவன்      08 June 2026      



(வெருளி நோய்கள் 1531-1535 : தொடர்ச்சி)

வெருளி நோய்கள் 1536-1540

  1. நேர்ச்சி வெருளி-Dystychiphobia/Accidensophobia

நேர்ச்சி(accident) குறித்த இயல்பு கடந்த தேவையற்ற பேரச்சம் நேர்ச்சி வெருளி.
தன்னால் நேரும் அல்லது பிறரால் நேரும் நேர்ச்சித் துன்பத்தால் உடைமை யிழப்பு, பொருள் இழப்பு, உயிரிழப்பு ஏற்படும் என்று காரணமின்றிக் கவலையில் மூழ்கிப் பேரச்சம் கொள்வர். இயல்பாகச் செல்லும்பொழுது கூட நேர்ச்சி நிகழும் என்று அஞ்சுவர்.
பயணம் மேற்கொள்பவர்களுக்கு நாம் சரியாக விதிமுறை களைப் பின்பற்றிப் பயணம் மேற்கொண்டாலும் பிறர் விதிமுறை மீறி அல்லது போதையில் நேர்ச்சியை உண்டாக்குவர் என்ற அச்சம் ஏற்படும்.
இயந்திரங்களைப் பயன்படுத்துவோரிடமும், அவை இருக்குமிடத்தில் உள்ளவர்களிடமும் நேர்ச்சி வெருளி ஏற்படும்.
ஊர்திவெருளி(Ochophobia/Amaxophobia/Motorphobia/Hamaxophobia)யுடன் தொடர்புடையது.
dys என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் தீய;
tych என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் நேர்ச்சி(எதிர்பாராமல் நேர்வது/விபத்து).
accidens என்னும் இலத்தீன் சொல்லின் பொருளும் acciden என்னும் கேட்டலான் சொல்லின் பொருளும் நேர்ச்சி.
00

  1. நேர்ப்பு வெருளி -Tychophobia / Random Page Phobia

தொடர்பின்றி வரும் நேர்வுவாய்ப்பு(randomness) தொடர்பான அல்லது நேர்ப்புப்பக்கம்(Random Page) குறித்த வரம்பற்ற பேரச்சம் நேர்ப்புப்பக்க வெருளி.
வரிசை முறைப்படி இல்லாமல் வாய்ப்பு வழங்குதல் அல்லது தெரிவின் பொழுது அங்கொன்றும் இங்கொன்றுமாக நேர்விற்கேற்ப முடிவெடுப்பது நடுநிலையாக இருக்கும் எனக் கருதுகின்றனர். அகரவரிசைப்படி என்றால் பின்னெழுத்து உள்ளவர்களுக்கு வாய்ப்பு தள்ளிப்போகும். எனவே, இதனை விரும்புவோர் பலர் உள்ளனர். ஆனால் இதனால் தகுதி அடிப்படை அல்லது முதலில் வந்தவர் என்ற அடிப்படையில் உள்ளவர்களின் வாய்ப்புகள் தள்ளிப் போகலாம். எனவே, அவர்கள் விரும்புவதில்லை. ஆகவே நேர்வு வாய்ப்பு முறைகுறிததுப் பேரச்சம் கொள்கின்றனர்.
அகராதிகளில் உள்ளவாறு சமவாய்ப்பு என்றே முதலில் குறித்திருந்தேன். எனினும் நேர்விற்கேற்ப அமையும் வாய்ப்பு என்ற வகையில் நேர்வுவாய்ப்பு என்பது பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன். நேர்வுவாய்ப்பு> நேர்ப்பு.
தொடர்பின்மைப் பக்க வெருளி(Random Page Phobia) எனத் தனியாகக் குறிக்கத் தேவையில்லை. Tychophobia என்பதை ஆங்கிலச்சொல் மூலம் குறிப்பிட்டுள்ளனர். அவ்வளவுதான்.
00

  1. நொப்பு வெருளி – Logocrisiaphobia

தணிக்கை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நொப்பு வெருளி
தணிக்கை என்றால் கணக்கு வழக்கு தணிக்கை மட்டும் என்று எண்ண வேண்டா. பேச்சு, எழுத்து, காட்சி, பொதுத்தொடர்பினை முழுமையாகவோ பகுதியாகவோ நீக்குவது, அடக்குவது, ஒடுக்குவது, கருத்தாளர்களைத் தண்டிப்பது முதலிய தடைமையும் தணிக்கைதான். தணிக்கை என்றால் கணக்கு தணிக்கை அல்லது திரை்பபடத் தணிக்கை என்று மட்டும் பொருள் கொள்வதால் இதே பொருள் உள்ள நொப்பு என்னும் தமிழ்ச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. நொப்பு என்றால் புரியவில்லை எனச் சிலர் புறப்படுவா்கள். Logocrisia என்றால் மட்டும் புரிகிறதா? பழஞ்சொற்களையும் கையாள வேண்டும் என உணர வேண்டும்.
00

  1. நொறுமா வெருளி – Voutimaphobia / Biskotophobia

நொறுமா (biscuit/cookie) தொடர்பான வரம்பற்ற பேரச்சம் நொறுமா வெருளி.
இடச்சுச் சொல்லான koekje என்பதிலிருந்து Cookie சொல் உருவானது.
அமெரிக்கா மற்றும் கனடா குக்கீ என்றும் வட அமெரிக்காவுக்கு வெளியேயுள்ள ஆங்கிலம் பேசும் பெரும்பாலான நாடுகளில் பிசுகட்டு (biscuit) என்றும் கூறுகின்றனர்.
பழம் பிரெஞ்சில் உள்ள bescuit என்னும் சொல் இலத்தீன் சொல்லில் இருந்து வந்தது. இலத்தீனில் bis என்றால் இரு முறை என்றும் coquere, coctus என்றால் சமைக்கப்பட்ட என்றும் பொருள். எனவே, இதன் பொருள் இரு முறை சமைக்கப்பட்டது என்பதாகும். இதன் அடிப்படையில் இதனை ஈரட்டி என்பர் சிலர். ஈர் + அட்டி என்பதில் வரிசை அல்லது தடை என்னும் பொருள் உடைய அட்டி என்பது பொருந்தவில்லை. இரு மாச்சில்லினை அடுத்தடுத்து வைத்ததால் ஈரட்டி என்று சொல்லியிருந்திருக்கலாம். சில்லுவடிவில் உள்ள மாப்பலகாரம் என்பதால் மாச்சில்லு என்பர் சிலர். தமிழ் ஒலிப்பில் மாற்றிப் பிசுக்கோத்து என்றும் விசுக்கோத்து என்றும் சொல்வாரும் உள்ளனர். மாவில் செய்யப்பட்ட நொறுக்குத் தீனி என்ற வகையில் நொறுமா எனக் குறித்துள்ளேன்.
00

  1. நொறுவை வெருளி – Gustatophobia

நொறுவைத் தீனி(snacks) பற்றிய அளவுகடந்த பேரச்சம் நொறுவை வெருளி.
நொறுக்குத் தீனிகள் உடலுக்குக் கேடுதருவன. இதனால் பிள்ளைகள் நொறுக்குத் தீனிகளில் ஆர்வம் காட்டினால் பருப்பு வகைகள் முதலான நல்ல நொறுவைகள் மீது நாட்டத்தைத் திருப்பாமல், பெரிதும் கேடு விளையப்போவதாக அளவற்ற பேரச்சம் கொள்வோர் உள்ளனர். உணவு இடை நேரங்களில் பசியாற்ற நொறுக்குத் தீனியைக் கொரித்துக் கொண்டே அது குறிதது தேவையற்ற வரம்பற்ற கவலைகளையும் பேரச்சத்தையும் வளர்த்துக் கொள்வோரும் உள்ளனர்.
Gustato என்னும் இலத்தீன் சொல்லிற்குச் சுவைப்பொருள் எனப் பொருள். இங்கே நொறுக்குத்தீனிப் பொருளைக் குறிக்கிறது.
00

(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5

--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages