ஆங்கிலச்சொற்றொடர்களில் போய் அடைந்து கொண்டாலும் அது அந்த அடை காக்கும் முட்டைக்குள் முறுக்கேறும் வலியைத்தான் சொல்கிறது. முட்டையா? கோழியா? எது முதல் என்ற "குவாண்டத்து"க் காக்காய் வலிப்பு "வலியை"த்தான் பிக்காஸொ பாணியில் தூரிகையை முறித்துப்போட்டு முறித்துப்போட்டு வரைகிறது. ஜீன் பால் சார்டர் எனும் எழுத்தாளர் "வாந்தி" (நாஸ்யா) என்றொரு நாவல் எழுதியிருக்கிறார். நான் ஏன் பிறந்தேன் என்ற மொட்டைப்பாணி எம் ஜி ஆர் தொடரின் திருக்கு முறுக்கு தான் அந்த நாவல். ஒவ்வாமை எனும் சமுதாய அலர்ஜியின் அநாடமி வரிகளே அவை. லவ் தை நெய்பர் அஸ் தை செல்ஃப் என்பதை கோடரி கொண்டு குறுக்காக பிளப்பதே இந்த "சமுதாய வாந்தி" எக்ஸிஸ்டென்ஷியலிசம் என்பதை ஒரு பிரசவ வலி என்று சொல்லிக்கொள்வோம். பிறப்பதில் வலி யாருக்கு? குழந்தைக்கா? தாய்க்கா? எனவே வாழ்க்கை எனும் சுறுக் சுறுக் வலி ஒரு வலியின் இரு பக்க வலி. புரட்சியும் எதிர்புரட்சியும் ஒரு சுடுகாட்டு அமைதிக்குத்தான் வாந்தியெடுக்கும். பூஜ்யமும் எல்லையின்மையும் ஒன்றையொன்று தின்று செரிக்காமல் வாந்தியெடுப்பதே இது. அது என்னவாய் தான் உணரப்படுகிறது? பார்க்கப்படுகிறது? நினைக்கப்படுகிறது? செத்த பாம்பை அடிப்பது போல் அடித்துக்கொண்டிருப்போம். என்றைக்காவது அதற்கு உயிர் வரும். அப்போது நாம் இறந்து கிடப்போம்.