பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
ஆவும் ஆன்இயல் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடையீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போல் புதல்வர்ப் பெறாஅ தீரும்,
எம்அம்பு கடிவிடுதும்! நும்மரண் சேர்மின்! (புறம். 9:1-5)
நெட்டிமையார்
பொருள்:
பசுக்களும் பசுவின் இயல்புடையோரும்
பெண்களும் நோயுடையோரும் இறந்தோருக்கு
ஈமக்கடன் செய்யும் ஆண்மக்களைப் பெறாதோரும்
பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுங்கள்.
நாங்கள் எங்கள் அம்புகளை விரைவாகச் செலுத்தப்போகிறோம்.
Cows, honourable men with the nature of cows, women, diseased,
And those living with no sons to perform the precious last rites,
Take refuge! We are ready to shoot volleys of arrows!