You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to Global-Tam...@googlegroups.com
நண்பர் தமிழ்த்தேனீ அவர்களுடனான கலந்துரையாடலில் ஸ்டார்ட்டப் எனபதற்கான தமிழாக்கம் என்னவென்று வினவி பின் முன்னூக்கி எனபது சரியாகத் தோன்றியது..
முன்னூக்கி என்பது புதிதாக புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நிறுவனத்தையோ ,குறைந்த அளவு காலங்களைக் கொண்ட தனிநபர் நிறுவனத்தையோ, பதிய சிந்தனைகளைக் கொண்டு அதை பரவலாக்க முயல்கின்ற நிறுவனத்தைக் குறிக்கும். இன்றைய காலகட்டத்தில் பல கோடிகளைக் கையாள்கிற நிறுவனம் யாவும் ஆரம்பிக்கப் பட்ட காலத்தில் முன்னூக்கியாகவே செயல்பட்டு பின்னாட்களில் பெரும் விரிவடைந்து வளர்ச்சி கண்டுள்ளது.
முன்னூக்கிகளின் முக்கிய நோக்கமானது புதிய நிறுவனத்தைத் தொடங்குபவர்களின் தங்களுக்கான சுற்றங்களுக்குத் தெரியப்படுத்தவும், ஆலோசனைகளைப் பெறவும், தங்களது தயாரிப்புப் பொருள்களை பரவலாக்குவதற்கும் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழர்களின் வளர்ச்சிகளை, பொருட்களை பரவலாக்குவதற்கும், தொழில்வளம் தொடர்பான ஐயங்களை நமக்குள் போக்கிக் கொள்வதற்கும் இத்தளத்தைப் பயன்படுத்தலாம்.
இவை தவிர், புதிய சிந்தனைகளை தமக்குள் வைத்துக் கொண்டு என்ன செய்வது, எப்படி எடுத்துச் செல்வது எனப் புரியாமல் இருக்கும் எண்ணற்ற இளைஞருக்கு வழிகாட்டவும் இத்தளத்தை நாம் பயன்படுத்த வேண்டும் என்பதும் இதன் முக்கியக் குறிக்கோள். இவற்றிற்கான வளர்ச்சி எனபது ஆட்டையாம்பட்டியிலுள்ள கந்தசாமியின் சிந்தனையையும், செயலாக்கத்தையும் செயல்படுத்த அமெரிக்காவிலுள்ள செல்வராசாவுக்கு பரவலாக்க அறிவு கொண்டு செயல்படுத்த இத்தளம் உதவி தொழிலதிபர்களையும், பொருளாதார ஏற்றத்தையும் நம்மில் ஏற்படுத்துவதே இத்தளத்தின் வெற்றியாக அமையும்.