Dear VLE,
அரசின் உத்தரவின்படி, விவசாயிகள்/உழவர் பதிவேடு (Farmer Registry) பதிவு பணிகள் 01.11.2025 முதல் முழு வேகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து மாவட்ட பொது சேவை மைய (CSC) ஒருங்கிணைப்பாளர்களும், தங்களது CSC மையங்கள் மூலம் விவசாயிகள் பதிவேடு பதிவேற்ற பணிக்கு முன்னுரிமை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
• தற்போது ரபி பருவத்திற்கான பயிர் காப்பீட்டு (PMFBY) பதிவு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், காப்பீட்டிற்கு பதிவு செய்ய வரும் விவசாயிகளிடம் அவர்கள் விவசாயிகள் பதிவேட்டில் பதிவு செய்துள்ளனரா என கேட்டறிந்து, பதிவு செய்யாமல் இருந்தால் அவர்களை ஊக்குவித்து உடனடியாக பதிவேற்றம் செய்யுமாறு வழிகாட்ட வேண்டும்.
எனவே, அனைத்து மாவட்ட CSC ஒருங்கிணைப்பாளர்களும் தங்களது மாவட்டங்களில் விவசாயிகள்/ உழவர் பதிவேடு பதிவு எண்ணிக்கையை அதிகரிக்க முழுமையான ஒத்துழைப்பையும் தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.