Re: ருக்மணி பரிணயம்

12 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Dec 19, 2013, 8:57:54 AM12/19/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, mintamil, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com, CTa...@googlegroups.com, Nagarajan Vadivel, pollachinasan, thami...@googlegroups.com, tamil_...@googlegroups.com, panb...@googlegroups.com, perumal murugan, Periannan Chandrasekaran, Periannan Chandrasekaran, Periannan Senapathy, K Rajan, Dr. Krishnaswamy Nachimuthu, Banukumar Rajendran, A. R. Venkatachalapathy, Asko Parpola, Iravatham Mahadevan, Jean-Luc Chevillard, Jean-Luc Chevillard
On Wednesday, 18 December 2013 19:18:48 UTC+5:30, selvi...@gmail.com wrote:
விவாகம் கல்யாணம் பரிணயம் எனும் சொற்கள் காணப்படுவதில் 
அவறறின் இடையே நுண்ணியதாக எதற்கு எது பயன்கொ ள்ளவெண்டும் எனும் வரை முறை இருக்கலாம் அல்லவா? 

நுண்ணிய வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை.

பரிணய -
परिणय
परि-णय . leading round , (esp.) leading the bride round the fire 

 
இங்கு  கிருஷ்ணன் செய்தது சில அகப்பொருள் இலக்கண  நூற்கள் காட்டும் வகையில் அ சுரவகை(இராட்சச)எனக்
 கொள்ள வேண்டும் அல்ல வா  ?பரிணயம் என்பது இவ்வழி ஏதாவது நு ண்ணி ய பொருள் காட்டுமா? 
 

பாரதப் பண்பாட்டில் மறவர் குலத்தினருக்குச் சிறையெடுத்து
மணம் புரிந்து கொள்ளும் வழக்கம் இருந்தது ; ஆகோள் பூசல்,
பெண்கோள் பூசல் அவர்களின் மரபு. முறைப்பெண்ணுக்கான
போட்டி இன்றும் ஊரகப் பகுதிகளில் உண்டு.

 
பெரியாழ்வார் திருமொழி 
309
உருப்பிணி நங்கையைத் தேரேற்றிக் கொண்டு
விருப்புற்றங் கேக விரைந்துஎதிர் வந்து
செருக்குற்றான் (#) வீரம் சிதைய தலையைச்                      (#)ருக்மியைக் குறித்தது)
சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப்பற
                   தேவகி சிங்கத்தைப் பாடிப்பற  3

இதைக்காட்டிலும் அழகாக நகைச்சுவையுடன்
நாச்சியார் ருக்மிணி பரிணயத்தைப் 
பாடியுள்ளார், கண்ணாலம் எனும் 
கொச்சை வழக்குடன் -

கண்ணாலங் கோடித்துக் கன்னிதன்னைக் கைப்பிடிப்பான்
திண்ணார்ந் திருந்த சிசுபாலன் தேசழிந்து
அண்ணாந் திருக்கவே யாங்கவளைக் கைப்பிடித்த
பெண்ணாளன் பேணுமூர் பேருமரங்கமே

Dev

On Wednesday, December 18, 2013 7:41:38 AM UTC-8, DEV RAJ wrote:
On Wednesday, 18 December 2013 19:18:48 UTC+5:30, selvi...@gmail.com wrote:
விவாகம் கல்யாணம் பரிணயம் எனும் சொற்கள் காணப்படுவதில் 
அவறறின் இடையே நுண்ணியதாக எதற்கு எது பயன்கொ ள்ளவெண்டும் எனும் வரை முறை இருக்கலாம் அல்லவா? 
 

விவாஹம் - மறுபெயர் உத்வாஹம்
திருமணஞ்சேரியில் சுவாமி பெயர்
உத்வாஹ நாதர்.
தமிழில் மணவாள நாயகர்.

சங்கதத்தின் கல்யாணம் உண்மையில் திருமணத்தைக் 
குறிக்காது; ஏனோ அப்பெயர் நிலைத்து விட்டது,
இலக்கிய வழக்கிலும்.

கல்யாணம் சங்கத அகராதியில்
மணவினையைக் குறிப்பதாக இல்லை -


கலியாணம் என்னும் பழந்தமிழ்ச்சொல் கல்யாணம் என்று வடமொழியில்
வழங்குவதாக த்ராவிட மொழியியல் அறிஞர்கள் ஆராய்ந்து சொல்லியுளர்.
வடமொழியில் தமிழ்போலவே பொதுவான பொருளும், கண்ணாலம் (< PDr கலியாணம்,
a common phenomenon called consonant assimilation in Prakrits). என்ற பொருளிலும்
சம்ஸ்கிருதத்தில் உண்டு.  உதாரணமாக, உமையைக் கலியாணம் செய்யும்
சிவனின் மணக்கோலம் சம்ஸ்கிருத நூல்களில் (iconography) கல்யாணசுந்தரமூர்த்தி
என்பது வழக்கு. வங்கத்தில் கிடைத்துள்ள கலியாணசுந்தரர் படிமையைப்
பற்றிய ஆய்வுக்கட்டுரை படித்துக்கொண்டுள்ளேன். Elephanta (கஜபுரி, மும்பை),
எல்லோரா குகைகளின் கலியாணசுந்தர மூர்த்தி காண்க.

கலியாணம் = கலி + யாணம் எனப் பிரியும். இருசொற்களைச் சேர்த்து முக்கியமான
சொற்களை அமைப்பது தொல் தமிழரின் மொழியியல் பண்பு. கண்காணி (கங்காணி),
... இற்றைத்தமிழில் போஸ்ட்கம்பம், ... என்பது கூட இவ்வாறே.

கலி - மகிழ்வொலி, செழித்தல், உருவாதல், எழுதல், பெருகுதல், செருக்கு, பீடு, ...
(கலியரசர் - கல்வெட்டுச் சான்று).
யாணம் < யாண- என்னும் வேர்த்தாது. யாணர் = கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை (புறநா. 66, 6)
புதிது, புதுவரவு, செழுமை, வளப்பம், புதுவெள்ளம், செல்வம், நன்மை, முறைமை, அழகு.
கலி- + யாண- என்ற தொல்த்ராவிடச் சொல் தமிழிலும், சங்கதத்திலும் கண்ணாலம் என்ற
பொருளில் விளங்குவது இதனாற்றான்.

விவாஹம், பரிணயம் - வடசொற்கள். ஆனால், கலியாணம் என்பது தமிழ்ச்சொல் (உ-ம்: திருவிக பெயர்
கலியாணசுந்தரன். கல்கி இவர்பெயரை வைத்துக்கொண்டது ப்ரசித்தம்).

-----------

தொல்த்ராவிட பாஷைகள் ஹிந்தி, குஜராத்தி, பஞ்சாபி என்று மாறியதன் வரலாற்றை Vedic Night என்பர் இந்திய தொல்லியல் அறிஞர்.
அவ்வரலாற்று இருளில் ஒளிபாய்ச்சும் மகரவிடங்கர் ஸ்வாமி ஹரியானாவில் கிடைத்துள்ளார். மழுவாள் நெடியோன்
என்னும் தலைப்பில் புதுச்சேரி https://fr.wikipedia.org/wiki/EFEO  École française d'Extrême-Orient, ஜனவரி 10, 2014 அன்று
சொற்பொழிவு ஆற்ற உள்ளேன். சென்னையில் இன்ஸ்டிட்யூட்டில் ஜனவரி 17, 2014 உரை. இடையில்
தமிழ்ப் புத்தாண்டு தினமாம் பொங்கலின்போழுது பொள்ளாச்சி தோட்டத்தில் பட்டிநோன்பு. (முன்பிருந்த நிலையை
கோவைகிழாரின் எங்கள் நாட்டுப்புறம் (பேரூர் ஆதீனம் தமிழ்க் கல்லூரி வெளியீடு) நூலில் வாசித்தருளலாம்.
சென்னை மின்தமிழ், வல்லமை, தமிழாயம், தமிழுலகம், பண்புடன், ... தமிழறிஞர்களும், அன்பர்களும்
வந்து என் ஆராய்ச்சியை ஆசீர்வதித்தருள வேண்டுகிறேன். அருட்செல்வர் நா, மகாலிங்கள் (உடல்நிலை அன்று
நன்றிருந்தால்) போன்றோர் வருகிறார்கள்.

பிற பின்னர்!
நா. கணேசன்

 
kalyANa
 कल्याण -
beautiful , agreeable 
illustrious , noble , generous
excellent , virtuous , good ((कल्याणि , " good lady ")
beneficial , salutary , auspicious
happy , prosperous , fortunate , lucky , well , right 

ஹிந்தியில் ‘கல்யாண் ஹோ’ என ஆசி கூறினால்
வாழ்க வளமுடன்’ என்று பொருள்


தேவ்

N. Ganesan

unread,
Dec 19, 2013, 9:07:19 AM12/19/13
to vall...@googlegroups.com, மின்தமிழ், housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com, CTa...@googlegroups.com, pollachinasan, thami...@googlegroups.com, tamil_...@googlegroups.com, panb...@googlegroups.com, perumal murugan, Periannan Chandrasekaran, Periannan Chandrasekaran, Periannan Senapathy, K Rajan, Dr. Krishnaswamy Nachimuthu, Banukumar Rajendran, A. R. Venkatachalapathy, Asko Parpola, Iravatham Mahadevan
This difference exists in Englsih also:
wedding = திருமணம்
marriage = கலியாணம்.

Pl. see the differences between wedding and marriage.
Same thing in Dravidian/Taml: between திருமணம் & கலியாணம்.

Happy Holidays to all!
N. Ganesan
தமிழ்ப் புத்தாண்டு பொங்கலன்று 
தமிழன்னையை வணங்குவோம்!
தமிழ்த்தாய் வாழ்த்தினைப் பாடுவோம்!


2013/12/19 N. Ganesan <naa.g...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "திருவள்ளுவர் சங்கத்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tiruvalluvar...@googlegroups.com.
To post to this group, send email to tiruva...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tiruvalluvar.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Reply all
Reply to author
Forward
0 new messages