நேரிமலை

0 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jul 24, 2021, 8:41:44 PM7/24/21
to vallamai, housto...@googlegroups.com
சேரநாட்டு நேரி மலை:
-----------------------

”குட்ட நாட்டிற்குக் கிழக்கில் நிற்கும் மலைகளில் பேரி யாற்றங்கரையில் நேரிமலை நிற்கிறது. அந்த மலையடிப் பகுதியில் சேரமன்னர் போதந்து வேனிற் காலத்தில் தங்கி மலைவளம் கண்டு இன்புறுவது வழக்கம். இப்போது அங்குள்ள நேரியமங்கலம் என்னும் மூதூரே பண்டு சேரமன்னர் வந்து தங்கிய இடமாகலாம் என அறிஞர் கருதுகின்றனர்; கற்குகைகளும் பாழ்பட்ட பழங்கட்டிடங்கள் சிலவும் அவ்விடத்தில் இருந்து பழம்பெருமையைப் புலப்படுத்தி நிற்கின்றன. வேந்தர்கள் அங்கு வந்து தங்கும் போது பாணரும் கூத்தருமாகிய இரவலர் பலரும் வேந்தன் திருமுன் போந்து, பாட்டும் கூத்தும் நல்கி இன்புறுத்துவர். நார்முடிச் சேரல், தன் மனைவியும் அரசியற் சுற்றமும் உடன்வர, நேரிமலைக்குப் போந்து தங்கினான். அக் காலையில் காப்பியாற்றுக் காப்பியனாரும் வந்திருந்தார். வேந்தன் இன்பமாக இருக்கும் செவ்வி நோக்கி இனியதொரு பாட்டைப் பாடினார். விறலி யொருத்தியை நார்முடிச் சேரல்பால் ஆற்றுப்படுக்கும் குறிப்பில் அப் பாட்டு இருந்தது. ” - ஔவை துரைசாமிப்பிள்ளை, சேரமன்னர் வரலாறு, 177.

பதிற்றுப்பத்து: நேரி - நேரி மலை. பாடுசால் நெடுவரை நேரி எனவும், கல்லுயர் நேரி எனவும் கூட்டுக. (ஔவை)
நீரிமிழ் சிலம்பின் நேரியோன் (பதிற். 40)
பாடுசால் நெடுவரைக் கல்லுயர் நேரிப் பொருநன் (பதிற். 67)

https://en.wikipedia.org/wiki/Neriamangalam
https://www.youtube.com/watch?v=BMVa3CRpXos நேரிவாயில்

”ஒருகால் செங்குட்டுவன் மலைவளம் காண விரும்பித் தன் மனைவி இளங்கோ வேண்மாள் உடன்வரப் பேரியாற்றங்கரைக்குச் சென்றான். அங்கே, அதற்கு இலவந்திகை வெள்ளிமாடம் என்றோர் அரண்மனை இருந்தது அப்போது அவனுடன் அரசியற் சுற்றத்தாரும் தண்டமிழாசானாகிய சாத்தனாரும் வந்திருந்தனர். அவ்விடம், நேரிமலையின் அடியில் பேரியாற்றங்கரையில், இப்போது உள்ள நேரிமங்கலம் என்னும் இடமாகும். இன்றும் அங்கே இடிந்து பாழ்பட்டுப்போன அரண்மனைக் கட்டிடங்கள் உள்ளன எனத் திருவாங்கூர் நாட்டியல் நூல்[14] கூறுகிறது. இடைக்காலத்தில் வாழ்ந்த அரச குடும்பத்தின் ஒரு கிளை அங்கே இருந்தது என அங்கு வாழ்பவர் கூறுகின்றனர். ”
14. Travancore State Manual Voi. iv. p. 223.

பல்யானைச் செல்கெழு குட்டுவன், ஔவை சு. து., செந்தமிழ், 1956
“தென்னம் பொருப்பின் முடியில் தோன்றியோடும் பேரியாற்றின் கரையில் நேரி மலை, அயிரை மலை என இருமலைகள் உள்ளன. நேரிமங்கலத்துக்கு எதிரே நிற்பது நேரி மலை. நேரிமங்கலம் முன்னாளில் சேர மன்னர் வந்து தங்கிய சிறப்புடையது; அவ் வூர்க்கண் பழங்காலக் குறிப்புகள் பல இன்றும் காணப்படுகின்றன. அம்மலைக்குத் தென்கிழக்கில் நிற்கும் மலை அயிரை எனப்படுகிறது; அதன்கண் தோன்றி மேற்கே ஓடும் காட்டாற்றுக்கு அயிரையாறு என்பது இன்றும் வழங்கும் பெயர். அம்மலைக்கண் பண்டைத் தமிழ் வேந்தரான சேர மன்னர் கொற்றவையை நிறுவி வழிபாடு செய்வது மரபு. யானைகளின் மருப்புக்களால் அமைக்கப்பட்ட கட்டிலின் மேல் கொற்றவையை எழுந்தருள்வித்துக் குருதிப்பலி தந்து அவ்வழிபாடு செய்யப்படும். அதனால் அப்பகுதி இந்நாளில் தேவிகுளம் என்ற பெயர்தாங்கி நிற்கிறது. பண்டையோர் முறைப்படி செல்யானைக் குட்டுவன் வஞ்சிநகர்க்கண் இருந்து அயிரைமலைக்குத் தன் அரசியற் சுற்றத்தோடு சென்று கொற்றவையை அவ்ழிபட்டான். அந்நாளில் கீழ்க்கடல் சோழ பாண்டியர்க்கும் மேலைக்கடல் சேரக்கும் உரியவாயிருந்தன. இருகடல் நீரையும் ஒருநாளில் கொணர்ந்து நீராடி வழிபாடு செய்வது முறையென்று அறிந்தோர் கூறினர். அக் காலத்தே இன்றுபோல் வாய்த்த போக்குவரவு வசதி இல்லை; ஆயினும் கீழ்கடற்கும் மேலைக்கடற்கும் வலிய களிற்று யானைகளை அஞ்சலுக்கேற்ப நிரல்பட நிறுத்தி ஒருபகலில் இருகடல் நீரும் கொணருமாறு குட்டுவன் ஏற்பாடு செய்தான். இவ்வாறு செய்ததனால் இவன் இருகடல் நீரும் ஒருபகல் ஆடினோன் என்ற சிறப்புக்கு உரியன் ஆனான். இதனைப் பதிகம்,
 ”கருங்களிற் றியானைப் புணர்நிரை நீட்டி
   இருகடல் நீரும் ஒருபகல் ஆடி
  அயிரை பரைஇய”
ஆற்றல் சான்றவன் என்று கூறுவதாயிற்று,”

இப்பொருளை முன்னரே கூறியுள்ளேன். இப்போது ஔவை உரை படித்தாலும் பொருந்துகிறது. சங்க காலத்து அயிரைமலை எதுவென்று பிற்காலச் சமணர்கள் கல்வெட்டுகளில் அறிவிப்பதால் தெரியலாகிறது. அயிரைமலை என்பது இப்போது அயிரை கோவில், சமணர் குகைகள், கல்வெட்டுகள் உள்ள குன்றுக்கு அருகே இப்போது ஆனைமலை என வழங்கும் மிக உயர்ந்த மலை என்பது தெளிவாகிறது. அதன் அருகே நேரிமலை, நேரிமங்கலம்.

நா. கணேசன்

On Fri, Jul 23, 2021 at 9:42 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
நேரிமலை பற்றி எழுதச் சொல்லி குடவாயில் பாலு ஐயா கேட்டிருக்கிறார். சேரர்களுக்கு உரிய பெரிய மலை சையாத்திரியிலே இருக்கிறது. அந்தணர்களுக்கு சேரராசாக்கள் தானம் செய்த நேரிமங்கலம் என்ற ஊர் சபரிமலை அருகே உள்ளது. அதற்குச் சற்றுவடக்கே அயிரை மலை இருக்கிறது. அயிரைமலையில் கொற்றவை அவதாரமாக, கண்ணகி சென்று விமானத்தில் விண்ணேறினாள். வேங்கை மர நீழலில் நின்றாள் என இளங்கோ அடிகள் பாடியமை கொல்லியின் அவதாரமாக, கணவனை இழந்த கொங்கச்செல்வி, குடமலையாட்டி கண்ணகி ஆனாள் என்பதன் குறிப்பு.
http://nganesan.blogspot.com/2021/05/tiger-durga-indus-cilappatikaram.html

பழனி அருகிலே ஐவர்மலை என்பதும் அயிரைமலையின் திரிபு தான். மூணாறு அருகே ஒரு நேரிமங்கலம் உண்டு. ‘நேருயர் நெடுவரை’ பதிற்றுப்பத்து. நேராக நெட்டக்குத்தாக உள்ள ஸஹ்ய மலைத்தொடரில் நேரிமலை சேரர் மலைகளில் சிறந்த ஒன்றாகும்.

-------------

சோழநாட்டில் மலைகள் இல்லை. ஆனால், பாண்டியர்க்குப் பொதிய மலை, சேரர்க்குக் கொல்லிமலை போல, சோழருக்கு நேரிமலை குலபர்வதம். இது ஒரு சிறிய மலை தான். ஆயினும் சோழர் குலமலை ஆதலால், இலக்கியப் புகழ் வாய்ந்தது. குடவாசலார் இந்த நேரிமலை பற்றிக் கட்டுரை எழுதியுள்ளார்.  சோழரின் நேரிமலை பற்றிய பாடல் தருகிறேன். ~NG

https://kkoneswaran.blogspot.com/2020/02/13.html
ஓட்டக்கூத்தர் ஒரு பெரும்புலவர். தன் மன்னனான சோழனுக்குப் பெண்கேட்டுப் பாண்டியனிடம் செல்கிறார். பாண்டியனும் அவரைச் சீண்ட வேண்டுமென்ற எண்ணத்தினாலோ என்னவோ, பாண்டியர் குடும்பத்திற் பெண் எடுப்பதற்குச் சோழனுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்டுவிட்டான்.

ஓட்டக்கூத்தருக்குக் கோபம் வந்துவிட்டது. “சோழன் ஏறும் குதிரையான கோரத்துக்கு நீ ஏறும் குதிரையான கனவட்டம்  நிகராகுமா? சோழநாட்டு நதியான காவிரிக்கு உன்னாட்டு நதி வைகையை ஒப்பிடக்கூடுமோ? ஆத்திமாலைக்கு உன் வேப்பம்பூ மாலை இணையாகுமா? சோழன் என்கிற ஆதவனுக்கு முன்னால் பாண்டியன் என்கிற சந்திரன் ஒளிவீச இயலுமோ? மீன்கொடியைக் கொண்ட மீனவனான உன்னால் வீரருக்கெல்லாம் வீரனாகிவிட முடியுமா? எங்குமே வெற்றியைக் குவிக்கின்ற புலிக்கொடிக்கு நிகராக உன் மீன்கொடியை உயர்த்திப் பிடிக்கலாகுமா? உன் கொற்கை நகரத்தைச் சோழனின் உறந்தை நகருக்கு ஒப்பிடல் சரியோ? உன் பாண்டிநாடு எங்கள் சோழநாட்டுக்கு எந்த வகையிலேனும் ஈடாகுமா?” என்றெல்லாம் கேட்டுவிடுகிறார்.

இதற்குப் பாண்டியன் பதில் சொல்லவில்லை. மாறாக, ஒட்டக்கூத்தரின் தமிழ்வீச்சில் மயங்கிக் கிடந்தான். ஆனால் அவனது அரசவைப்புலவர் புகழேந்தியாருக்குக் கோபம் வந்து விட்டது. சோழநாட்டிலிருந்து வந்தவன் பாண்டிய மன்னனையும் நாட்டையும் இகழ்வதா என்று துடித்துப் போனார். வழக்கமாகவே ஒட்டக்கூத்தருக்கும் புகழேந்தியாருக்கும் இணக்கம் இருப்பதில்லை. எனவே,  கிடைத்த வாய்ப்பை நழுவவிடுவாரா? அவர் பதிலளிக்கிறார்.

“திருமாலின் அவதாரமாமோ சோழநாட்டுச் சிறுபுலி?  சிவன்முடியில் என்ன செங்கதிரா இடம்பிடித்தது?  தமிழ்மொழி சிறப்படைந்தது உங்கள் நாட்டு மலையிலோ? சிவபெருமானின் திருவிளையாடல்கள் உன் உறந்தை நகரிலா இடம்பெற்றன? ஆற்றையெதிர்த்து ஏடு கரையேறிய அற்புதம் உனது காவிரிநதியிலா இடம்பெற்றது? பகைவென்ற வேம்புக்கு நிகராக வெற்று அலங்காரங்கொண்ட அத்திமாலையை ஒப்பிட இயலுமா? அலைகடல் என்ன  சோழனின் பாதத்திலா பணிந்து நிற்கிறது? பாண்டியவேந்தின் பராக்கிரமத்தைச் சொல்லவுங்கூடுமோ?” என்று சீறிவிழுகிறார்.

இப்போதும் பாண்டியன் அசையவில்லை. தமிழன்னைக்குப் புலவர்களின் கோபத்தாற் கிடைத்த இரு பாடல்களையும் எண்ணி வியந்தபடியே அமர்ந்திருக்கிறான்.

இவைதாம் அப்பாடல்கள்:

கோரத்துக் கொப்போ கனவட்ட மம்மானை
  கூறுவதுங் காவிரிக்கு வையையோ வம்மானை
ஆருக்கு வேம்பநிக ராகுமோ வம்மானை
  ஆதித்தனுக் குநிகர் அம்புலியோ வம்மானை
வீரர்க்குள் வீரனொரு மீனவனோ வம்மானை
  வெற்றிப் புலிக்கொடிக்கு மீன்கொடியோ வம்மானை
ஊருக் குறந்தைநிகர் கொற்கையோ வம்மானை
  ஓக்குமோ சோணாட்டுக் குப்பாண்டிநா டம்மானை?

(இது ஒட்டக்கூத்தர் பாண்டிநாட்டைவிடச் சோழநாடே சிறந்தது எனப்பாடியது.)

திருநெடுமா லவதாரஞ் சிறுபுலியோ வம்மானை
  சிவன்முடியி லேகுவதுஞ் செங்கதிரோ வம்மானை
ஒருமுனிவன் *நேரியிலோ* வுரைதெளிந்த தம்மானை
  ஒப்பரிய திருவிளையாட் டுறந்தையிலோ வம்மானை
கரையெதி ரேடேறியது காவிரியோ வம்மானை
  கடிப்பகைக்குத் தாதகியங் கண்ணியோ வம்மனை
பரவைபணிந் ததுஞ்சோழன் பதந்தனிலோ வம்மானை
  பாண்டியனார் பராக்கிரமம் பகரெளிதோ வம்மானை?

(இது பாண்டிநாடே மேம்பட்டதெனப் புகழேந்தியார் பாடியது.)


Reply all
Reply to author
Forward
0 new messages