Re: தமிழ் உச்சரிப்பு (வல்லின எழுத்துகள்)

1 view
Skip to first unread message

N. Ganesan

unread,
Mar 14, 2023, 1:50:41 PM3/14/23
to vallamai, housto...@googlegroups.com
மொழியியல் துறைப் பேராசிரியன்மார் பலர், தம் ஆங்கில நூல்களில், தொல்காப்பியரின் ஆற்றல்மிகு வடிவமைப்பாகிய வல்லினங்களுக்கான ஒலிப்புகளை விளக்கியுள்ளனர். தமிழிலே எழுத்துகளின் உச்சரிப்புப் பலுக்கலை விளக்கும் கட்டுரைகள்,  இலக்கண நூல்களின் பகுதிகள் குறைவு. இவ்வகையில், முக்கியமான இரு ஆசிரியர்களைக் குறிப்பிடலாம்.

(1) புதுக்கோட்டை ஊரினரான, பண்டிதர் P (புதுக்கோட்டை). S. D. முத்துசாமி பிள்ளை   அவர்கள் எழுதிய “இலக்கணப் பிரயோக விளக்கம்”. 1905-ல் சென்னையில் அச்சிடப்பெற்றது. தமிழ்ப் புலவர் ஜெகராவ் முதலியார், புலவர் முத்துச்சாமி எழுதிய நூலுக்கு எழுதிய பாயிரத்தை இணைக்கிறேன். நூலின் அருமையை இப்பாயிரம் புகழ்கிறது. நூலின் சிறந்த பிரதி, ஐரோப்பிய, அமெரிக்க நூலகங்களில் இருக்கும். தேடிப் பிடித்து, வெள்ளுரையாகச் (Plain-text) செய்தல் வேண்டும். பொருளடக்கத்தில், தமிழ் எழுத்து உச்சரிப்பு மீதாக வரும் பகுதிகள் இவை.
இலக்கணப் பிரயோக விளக்கம்
VIII
Contents - சூசிப்பத்திரம்
8. எழுத்திலக்கணம்   68 - 77

Appendix A-E
10. எழுத்திலக்கணத்திற்கு இங்கிலீஷ் மொழிபெயர்ப்பு 83 - 88

(2) தூத்துக்குடியைச் சார்ந்த திரு. சு. (சுப்பையா) நடராஜன், தனி நூலாகச் செய்தார். என்னிடம் இருக்கிறது. இணையத்தில் காணோம். இன்னும் பிடிஎப் ஆகவில்லை.

பண்டிதர் P (புதுக்கோட்டை). S. D. முத்துசாமி பிள்ளை எழுதிய “இலக்கணப் பிரயோக விளக்கம்”. 1905, சென்னை.
நூல் இங்கே கிடைக்கிறது:
https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0008290_இலக்கணப்_பிரயோக_விளக்கம்.pdf

பாயிரம்
-------------


From Vidvan A. S. Jagarow Mudaliar, Head Tamil Pundit, St. Mary's College, Madras ; author of தேம்பாவணி விருத்தியுரை, இலக்கண சிந்தாமணி &c., &c.

நிலைமண்டில ஆசிரியப்பா.

சந்தனப் பொதிகைச் செந்தமிழ் முனிபால்
பைந்தமி ழியலோ ரைந்தையு மோர்ந்த
ஆறிரு புலவருள் வீறுறு புலமை
யல்காப் புகழ்மைசால் தொல்காப் பியமுனி
தன்பெய ரானிறீஇத் தந்தரு ளிலக்கண
வழிவழி யடைவே வந்தன பலவுஞ்
சில்வகை யெழுத்திற் பல்வகைப் பொருளைத்
திண்ணிதி னுணர நுண்ணிதிற் றெரித்து
வகுத்துந்  தொகுத்தும் வகைபட விரித்துஞ்
சூத்திர முறையா யாத்தன வதனா
னுச்சிமேற் புலவர்கொ ணச்சினார்க் கினியமு
முளம்பூ ரணம்பெறு மிளம்பூ ரணமு
மானா வரைநிகர் சேனா வரையமு
முதலிய வுரையா னுதலிய பொருடெரீஇ
மொழித்திறத் தாய முட்டறுப் பதுவே
யறிவார்க் கலது சிறியார்க் கரிது
வென்னு நோக்கமே தன்னு ளுந்தலான்
கத்திய வடிவுல கத்திய றோன்றித்
திசையெலாம் பரவத் திசையெனுந் தொகையிற்
பகுத்துய ராங்கிலோ பதப்பெயர்ப் புடனே
பன்னாண் முயன்று பன்னாட் பயனாக
கற்றார் விருப்புற மற்றார் வியப்புற
இலக்க ணப்பிர யோக விளக்கமென்
றொருநூ லெழுதா வெழுத்திற் பொறித்தனன்
சுரிமுகச் சங்கஞ் சொரிதரு நித்திலம்
பொருதிரைக் கரத்தா லிருகரை கொழிக்கும்
பூவிரி வளம்புனற் காவிரி யாறு
மதுப்புனல் விரவிப் புதுப்புனற் செவிலித்
தாயெனப் பைங்கூழ்ச் சேயினை வளர்க்கு
முளமகிழ் சோழ வளநாட் டணியா
மாண்புறுந் தொண்ட மான்புதுக் கோட்டை
யென்னுநல் லூரன் மன்னுநல் லூர
னையந் திரிபற வருங்கலை யுணர்ந்த
தலம்புகழ் முத்துச் சாமிநா வலனே.

--------------

(1)    ”என்னு நோக்கமே தன்னு ளுந்தலான்
          கத்திய வடிவுல கத்திய றோன்றித்”

    என்னும் நோக்கமே தன்னுள் உந்தலான்
    கத்திய வடிவு உலகத்தியல் தோன்றித்

 கத்திய ரூபம் = உரைநடை.  இராமாநுசர் பாடிய சீரங்க கத்தியம் கேட்டருளுக. Śrīraṅga gadyam https://youtu.be/X1WCOG0RjhE
https://en.wikipedia.org/wiki/Sriranga_Gadyam

(2) எழுதா எழுத்து = அச்சு எந்திரம்.

நா. கணேசன்
pAyiram_ilakkaNap_prayoga_viLakkam_1905.jpg


On Mon, Mar 13, 2023 at 4:35 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
தமிழ் உச்சரிப்பு (வல்லின எழுத்துகள்)
----------------------------------------------------

Niranjan Bharati asked a question on the pronunciation of Vallinam
letters. Ravi A., Cleveland explained it very well. Listen to the
question and Ravi's answer in audio files. This has been explained by
Tamil scholars, Dravidian linguists for almost 2 centuries. One of the
best explanations is by a Tamil scholar born in PutukkOTTai in his
book published in 1905 CE. I read it few years ago, and will give.
Many others' remarks have been given in the past years. will
consolidate them as one file later. Thanks, ~NG

PS:
பன்மை விகுதி -கள் சேர்கையில், சில பழைய நூல்களில் ஒற்று க் மிகுந்து
இருப்பினும்,  வாழ்த்துகள், பாராட்டுகள், எழுத்துகள், கல்வெட்டுகள்,
சிறப்புகள், சிறகுகள், ... என ஒற்று க் மிகாமல் இருப்பது நன்று.
Reply all
Reply to author
Forward
0 new messages