ஆசை :: சங்கச் சொல்லாய்வு

2 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Sep 5, 2021, 10:14:17 AM9/5/21
to housto...@googlegroups.com, ctamil, tiruva...@googlegroups.com, vallamai

ஆசை :: சங்கச் சொல்லாய்வு
--------------------------

ஆசை என்ற சொல் சங்க இலக்கியத்தில் உண்டு. ஆசை என்னும் சொல் ஆஶா என்னும் வடசொல்லில் இருந்து வந்தது என்பர் (MTL). ஆனால், நசை, நச்சு-தல் என்னும் தமிழ் வினைச்சொல் பலகாலமாக இருக்கிறது. நுண்ணி > உண்ணி, நீர்- > ஈரம், நம்பி > அம்பி ... போல, நசை- சொன்முதல் ந் இழந்து *அசை-/ஆசை உருவானதாக இருக்கலாம்.  
அகநானூறு 199. பாலை

[பொருள் கடைக்கூட்டியநெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.]
1. கரைபாய் வெண்திரை கடுப்பப் பலவுடன்
நிரைகால் ஓற்றலின் கல்சேர்பு உதிரும்
வரைசேர் மராஅத்து ஊழ்மலர் பெயல்செத்து
உயங்கல் யானை நீர்நசைக்கு அலமரச்
5. சிலம்பி வலந்த வறுஞ்சினை வற்றல்
அலங்கல் உலவை அரிநிழல் அசைஇத்
திரங்குமரல் கவ்விய கையறு 3தொகுநிலை
அரந்தின் ஊசித் திரள்நுதி அன்ன
திண்நிலை எயிற்ற செந்நாய் எடுத்தலின்
10.  வளிமுனைப் பூளையின் 4ஒய்யென்று அலறிய
கெடுமான் இனநிரை 5தரீஇய கலையே
கதிர்மாய் மால ஆண்குரல் விளிக்குங்
கடல்போல் கானம் பிற்படப் பிறர்போல்
செல்வேம் ஆயின்எம் செலவுநன் றென்னும்
15.  ஆசை உள்ளம் அசைவின்று துரப்ப
நீசெலற்க உரியை நெஞ்சே வேய்போல்
தடையின மன்னுந் தண்ணிய திரண்ட
பெருந்தோள் அரிவை ஒழியக் குடாஅது
இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவில்
http://www.tamilvu.org/slet/l1270/l1270exp.jsp?x=442&y=438&bk=197&z=l1270c32.htm
13-6. பிறர்போல் -ஏதிலரைப்போல, செல்வேம் ஆயின் எம் செலவு நன்றுஎன்னும் - நம் தலைவியைப் பிரிந்து போவேமாயின்எமது போக்கு நன்றாகும் என்றெண்ணும், ஆசை உள்ளம் அசைவு இன்று துரப்ப - பொருளாசையுற்ற நின் உள்ளம் தளர்தலின்றிச் செலுத்த, நீ செலற்கு உரியை நீசெல்லுதற்கு உரியை ஆவாய்;  

ஆஶா பாரசீகம், ஆப்கானி போன்ற மொழிகளில் என்னவாக இருக்கிறது, அல்லது இல்லையா என்பதற்கான விடையும் இன்னும் தெளிவுண்டாக்கும்.
நசை- > *அசை/ஆசை- > ஆஸா (பிராகிருதங்களில்) > ஆஶா (பிராகிருதம், பாளி, ஸம்ஸ்கிருதம் - வடமொழிகளில்).

கலம் > கலயம்/கலசம் > கலஸம்/கலம் என்றாதலை ஆராய்க.
கலூழ் > வடமொழியிலே , கலுஶ, கலூஷ என்று மாறுவது போல,
ஆசை/ஆஸ எனும் த்ராவிட வார்த்தை ஆஸா/ஆஶா என ஆகியுள்ளது எனத் தெரிகிறது:
nityānanda-rasālayaṃ sura-muni-svāntāmbujātāśrayaṃ
svaccaṃ sad-dvija-sevitaṃ kaluśa-hṛt-sad-vāsanāviśkṛtam |
śambhu-dhyāna-sarovaraṃ vraja mano-haṃsāvataṃsa sthiraṃ
kiṃ kśudrāśraya-palvala-bhramaṇa-sañjāta-śramaṃ prāpsyasi || 48 ||
நித்யாநந்த³-ரஸாலயம்ʼ ஸுர-முநி-ஸ்வாந்தாம்பு³ஜாதாஶ்ரயம்ʼ
ஸ்வச்சம்ʼ ஸத்³-த்³விஜ-ஸேவிதம்ʼ கலுஶ-ஹ்ருʼத்-ஸத்³-வாஸநாவிஶ்க்ருʼதம் .
ஶம்பு⁴-த்⁴யாந-ஸரோவரம்ʼ வ்ரஜ மநோ-ஹம்ʼஸாவதம்ʼஸ ஸ்தி²ரம்ʼ
கிம்ʼ க்ஶுத்³ராஶ்ரய-பல்வல-ப்⁴ரமண-ஸஞ்ஜாத-ஶ்ரமம்ʼ ப்ராப்ஸ்யஸி .. 48 ..

https://www.wisdomlib.org/definition/asha
Āsā, (f.) (cp. Sk. āśaḥ f. ) expectation, hope, wish, longing, desire; adj. āsa (-°) longing for, anticipating, desirous of Vin. I, 255 (°avacchedika hope-destroying), 259; D. II, 206; III, 88; M. III, 138 (āsaṃ karoti); A. I, 86 (dve āsā), 107 (vigat-āso one whose longings have gone); Sn. 474, 634, 794, 864; J. I, 267, 285; V, 401; VI, 452 (°chinna = chinnāsa C.); Nd1 99, 261, 213 sq; Vv 3713 (perhaps better to be read with v. l. SS ahaṃ, cp. VvA. 172); Pug. 27 (vigat° = arahattāsāya vigatattā vigatāso Pug. A 208); Dhs. 1059 (+ āsiṃsanā etc.), 1136; PvA. 22 (chinn° disappointed), 29 (°âbhibhūta), 105; Dāvs. V, 13; Sdhp. 78, 111, 498, 609. (Page 115)

Alexander Lubotsky, The Indo-Iranian substratum, Early Contacts between Uralic and Indo-European: Linguistic and Archaeological
Considerations. Papers presented at an international symposium held at the Tvärminne Research Station of
the University of Helsinki 8-10 January 1999. (Mémoires de la Société Finno-ougrienne 242.) Chr. Carpelan,
A. Parpola, P. Koskikallio (eds.). Helsinki 2001, 301-317. On page 310,
*āćā/aćas- `region, space': Skt. āsā- f.; LAv. asah- n.
So, aasana-, and this has nothing to do with āsā as in abilāsā etc.,

தமிழ் சினிமாப் பாட்டு ஒன்று அழகானது.
https://youtu.be/Uoz5cjRS0aU
அதில், “தமிழ் படிக்கான் ஆச வந்தல்லோ வந்துச்சா வந்துச்சா” என்று வரியைக் கேட்டுச் சுவைக்கலாம்.

ஊச்சு- < மூச்சு :: சொல்லாய்வு (தமிழில் ஓர் மிகப் பழைய சொல்)
தமிழில் பல சொற்கள், சொல்லில் முதலாக உள்ள மெய்யெழுத்து மறைந்து ஏற்படுவன. ஒரு நூறு வார்த்தைகளைத் தொகுத்து, க், ச், ம், ந், வ், ய் எனும் எழுத்துக்கள் சொன்முதல் இருப்பது மறைந்து ஏற்படும் சொற்களைத் தொகுக்கலாம். பொறுமையாக, உயிரெழுத்தில் தொடங்கும் எல்லாத் தமிழ்ச் சொற்களையும் ஆராய்ந்தால், சொன்முதல் மெய் (க், ச், ம், ந், வ், ய்) அழிந்து, தோன்றும் தமிழ்/த்ராவிட வார்த்தைகளைத் தொகுக்கலாம். மொழியியலார் செய்ய வேண்டிய பணி இது. ஒரு சில எடுத்துக்காட்டுகள் காண்போம்.
https://groups.google.com/g/santhavasantham/c/34ebzqoFK64/m/ZfjCNyGKCgAJ

நசை- > *அசை/ஆசை- > ஆஸா (பிராகிருதங்களில்) > ஆஶா (பிராகிருதம், பாளி, ஸம்ஸ்கிருதம் - வடமொழிகளில்) எனலாம்.
இதேபோல், சுழலு-தல் (சூழ்தல்) > உழலுதல், ஊழ் (cf. என்றூழ்= சூரியன்) பற்றியும் பேசவேண்டும்.

N. Ganesan
I listened to this love song straddling between tamil and malayalam for the first time today : https://youtu.be/Uoz5cjRS0aU
trying to transcribe in Tamil lipi.

http://thenkinnam.blogspot.com/2009/02/958.html
(இதில் ”நாசை” என “ஆச” தவறாக எழுதப்பெற்றுள்ளது. இந்தத் தவற்றைப் பல தளங்கள் அப்படியே பிரதி செய்கின்றன.
”தமிழ் படிக்க நாசை வந்தல்லோ” என்பது பிழையானது. “தமிழ் படிக்கான் ஆசை வந்தல்லோ” எனத் திருத்தப்படல் வேண்டும்.
பச்சமலயாளத்தில் ஆசை என்ற சொற்பிரயோகம் உண்டு போலும்.)

மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா வந்தல்லோ வந்நல்லோ
மயிலிறகில் வாசனை வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ
தமிழ் படிக்க ஆசை வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ
தமிழ்நாட்டு வெட்கம் வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ
அட காந்தம் போல ஏதோ ஒன்னு
நெஞ்சுக்குள்ளே ஒட்டிக்கொண்டு காதல் காதல் என்று சொல்லுச்சா

மனசினுள்ளே தாகம் வந்தல்லோ வந்துச்சா வந்துச்சா
மயில் சிறகில் வாசன வந்தல்லோ வந்துச்சா வந்துச்சா
தமிழ் படிக்கான் ஆச வந்தல்லோ வந்துச்சா வந்துச்சா
தமிழ்நாடின் நாணம் வந்தல்லோ வந்துச்சா வந்துச்சா
அட காந்தம் போல ஏதோ ஒன்னு
நெஞ்சினுள்ளில் ஒட்டிச்சின்னு ப்ரேமம் ப்ரேமம் என்னு சொல்லியே

புள்ளி வச்சு கோலம் போட மறந்திருப்ப அதே அதே
புத்தகத்தை தலைகீழாய் படிச்சிருப்ப அதில்லோ
மூன்றாம் பிறை அளவுதான் சிரிச்சிருப்ப
தினம் நூறு முறை என் பேரை சொல்லி ரசிப்ப
எண்ட ஒத்த காலில் கொலுசொன்னு தொலைஞ்ஞு போயி
அதை தேடி நோக்கான் மனசென்னோ மறந்நு போயி
அது தப்பு இல்ல பயப்பட தேவை இல்ல
உன் நெஞ்சுக்குள்ளே காதல் வந்த சுவடு புள்ள
எண்ட கனவிலும் நினவிலும் வெளியேற்றம் நடக்குன்னு கலகம் ஏதும் வருமோ
(மனசுக்குள்ளே..)

மலரின மனங்கள் மலர்கின்ற நேரம்
சுகம் என காற்றே சொல்வாயா
கண்களின் பாஷை காதலின் பாஷை
என்னிடம் உண்டு உன்னிடம் உண்டு
வாழ்வது இன்று வெல்வது என்று
நேற்றும் இன்றும் நாளை என்றும்
நேசம் தேடும் நெஞ்சம் ரெண்டும்
வாழ்ந்திட வேண்டும் வாழ்ந்திட வேண்டும் ஹோ..

அச்செடுக்க உத்தரவு இடணும் போல் தோணுன்னோ
தனிமையும் ஶாந்தியும் ப்ரியமிருந்நு ஹேய்
கேரளத்து கதகளி ஆடணும்போல் தோணுதே
எனக்கும் இருக்குது அந்த கிறுக்கு
கண்ணால் பேசும் வித்தை எல்லாம் போகப் போக கத்துக்குவ
கடிகாரத்தை பார்த்துப் பார்த்து உன்னை நீயே திட்டிக்குவ

எந்நன் பாத விரல் பத்தும் இன்று துடிக்குதடா
நீ மெட்டியிட்டால் அடங்குமோ அறியில்லடா
நம்ம வயசுக்குள் வன்முறைகள் நடக்குதடி
அது தட்டிக் கேட்க ஆளில்லைன்னு சிரிக்குதடி
அட குச்சு குச்சு பேச்சு எல்லாம் செய்யுந்முன்
ஞான் நின்னை கண்டால் ஏண்டா ஏண்டா ஏண்டா

மனசினுள்ளில் தாகம் வந்தில்லே வந்திச்சி வந்திச்சி
மயிலிறகில் வாசனை வந்தில்லே வந்சிச்சி வந்திச்சி
தமிழ் படிக்க ஆசை வந்தில்லே வந்திச்சி வந்திச்சி
தமிழ்நாட்டு வெட்கம் வந்தில்லே வந்திச்சி வந்திச்சிடா

படம்: ஆட்டோகிராஃப், இசை: பரத்வாஜ்
பாடியவர்கள்: ஹரீஷ் ராகவேந்திரா (கோவை), ரேஶ்மி



Virus-free. www.avg.com
Reply all
Reply to author
Forward
0 new messages