சீவில்லிபுத்தூர் (ஸ்ரீவில்லிபுத்தூர்)

6 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Sep 9, 2021, 4:22:07 PM9/9/21
to housto...@googlegroups.com, vallamai, ctamil
Thanks, Smt. Bavani. This is from Santi Sadhana trust (Murray S. Rajam publishers), edited by prof. Y.Subbarayalu. Volume I, I suppose. I bought the paper copy of Vol.II, unfortunately Vol. I was not available in the bookstore then.
https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp7kuly#book1/
will try to get the Volume I also in Tamil Digital Library.

T. N. Subramanian, Epigraphical Glossary:
https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0010712_கல்வெட்டுச்_சொல்லகராதி.pdf
in a modern format, by Aravamudan,
https://archive.org/details/vvv_20200701_20200701_2202/page/n1/mode/2up

இவற்றில் சேர்த்த வேண்டிய ஒரு கல்வெட்டுப் பெயர்ச்சொல் உள்ளது: சீவில்லிபுத்தூர் என்பதாகும்.
(1) சீவில்லிபுத்தூர் - கோச்சடை பந்மரான த்ரிபுவன சக்கரவத்திகள் ஸ்ரீ வீரபாண்டியர்க்கு எனத் தொடங்கும் கல்வெட்டு. இந்தியக் கல்வெட்டு அறிக்கை 519/1926.

(2) இ.க.ஆ. அறிக்கை: 520/1926
சீவில்லிபுத்தூர்

(3) இ.க. அறிக்கை 530/1926
சீவில்லிபுத்தூர் - ஸ்ரீ குலசேகரதேவர்

(4) இ.க. ஆ. அறிக்கை: 563 / 1926
சீவில்லிபுத்தூர்
திருமல்லிநாட்டு சீவில்லிபுத்தூர் சீபராங்குசப் பேரேரியில்

குறிப்பு : இக் கல்வெட்டுகளில் எல்லாம் ஸம்ஸ்கிருத வார்த்தைகள் கிரந்த லிபியில் உள்ளன. ஆனாலும், ஊர்ப்பெயர் சீவில்லிபுத்தூர் என்றிருத்தல் மிகச் சிறப்பு. எனவே தான், திருவில்லிபுத்தூர் என்ற அண்மைய திருத்தம் தேவையில்லாதது. இதனால், தமிழின் பரப்பளவு மிகக் குறுகும். what we need is Linguistic diversity, and our forefathers have shown the way on the approaches to preserve them. ஸ்ரீவில்லிபுத்தூர் என்றும், சீவில்லிபுத்தூர் என்றும் பல நூற்றாண்டுகளாக ஆளப்பட்டுள்ளது. சீலத்தூர்/சீலுத்தூர் எனவும் பொதுமக்கள் வழக்கிலும் சீ (< ஸ்ரீ) உள்ளது.

Reference: இரா. இரகுநாதன், ஸ்ரீவில்லிபுத்தூர், 2008, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை,
https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0010752_ஸ்ரீவில்லிபுத்தூர்.pdf

ஓர் உதாரணம் தருகிறேன்: என்னிடம் நிரஞ்சன் பாரதி “அடங்ஙொப்புரானே" விளக்கக் கேட்டிருந்தார். அதில் ஆண்பால் விளி, “அட” குறுகி “ஙொப்புரானே” என்றும் புழங்கும். இவை  “அட, உங்க(ள்) பிரானே” என்பதன் மாற்றம் ஆகும். தம்பிரான், தம்பிராட்டி என்பன தம்புரான், தம்புராட்டி எனவழங்குதல் போல, அடங்ஙொப்புரானே என்கிறோம். இதனை, பத்மினி நடித்து மோகனா, தில்லானா மோகனாம்பாள் எனப் பட்டம் பெறும்போது சிவாஜி சொல்வதில் கேட்கலாம். எம்ஜிஆர் பாட்டும், பின்னரும் பாடல்கள் அடங்கொப்புரானே என உண்டு. “அப்பர் ஆணை” என்ற விளக்கம் பொருந்துவதாய் இல்லை: (1) அப்பர் என்று எந்தக் கம்யூனிட்டியும் பயன்படுத்தக் காணோம். (2) Also, everyone does not issue orders, only royals, or Sambandhar tell "aaNai namathE". (3) there is no retroflex, N in this phrase at all. மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா என்றார் தொல்காப்பியர். பிரான் என்ற சொல் அன்றாடத் தமிழில் மறைந்துவிட்டதால், இத்தகு நூதன விளக்கங்கள் வருகின்றன. அதுபோலத்தான், 1500 ஆண்டு காலமாக, கல்வெட்டிலும் உள்ள சீவில்லிபுத்தூர், சென்னை போன்ற இடத்தில் இந்த மொழிவளம் அறியாதாரால், ஸ்ரீவில்லிபுத்தூர் எனவே திருவில்லிபுத்தூர் எனத் தற்போது மாற்றுகின்றனர். அவர்களில் பலருக்கும் தமிழ் தாய்மொழி யன்று.  சீவில்லிபுத்தூர் என்றே தமிழ் முன்னோர்கள் வழியில் சொல்வோம்.

நா. கணேசன்


<<<
இப்பவும் சீலுத்தூர் வழக்கில் உள்ளது. (என் பதின்பருவத்தில் கூட அங்கு வாழ்ந்த உறவினர்கள் அப்படிச் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.) படிப்பறிவு இல்லாக் கிராமத்தோர் வாயில் தமிழ் இன்றும் உயிருடன் உள்ளது.

கல்வியின் அடையாளம் என்ற பெயரில் நவநாகரிகம் என்ற மயக்கில் 'ஸ்ரீவி' என அழைப்போர் பெருகி வருகின்றனர்.

திருவில்லிபுத்தூர் என்பது 'அருவி'க்கு நீர்வீழ்ச்சி எனப் பெயர் வைத்த தமிழ் மேதாவித்தனம் தான்.

ஆய்குடிக்கு விளக்கமளித்து அறிவு கொளுத்தியமைக்கு நன்றி.

ஓமாந்தூர் விளக்கம் புதிது. சிறப்பு.

சக
>>>

ஔவை துரைசாமிப்பிள்ளை, புறநானூற்று உரையில், சீவில்லிபுத்தூர் என்ற பெயரின் தோற்றத்தை விளக்கியுள்ளார்:
மகிழம் > வகுளம் (நம்மாழ்வார் = வகுளாபரணர்) ஆதற்போல், மல்லி > வல்லி > வில்லி ஆகியுள்ளது. பனாட்டு > பினாட்டு; பன்னுதல் > பின்னுதல் (திருப்பூர் பின்னலாடை, கடா > கிடா, ...)
“மல்லிகிழான் காரியாதி

காரியாதி யென்பவன் மல்லி யென்னும் ஊர்க்குத் தலைவன். இது சீவில்லிபுத்தூர் நாட்டின்கண் உள்ளதோர் ஊர். இவன் வேளாண்குடி முதல்வனாய்ப் பரிசிலர்க்கு வேண்டுவன வழங்கிப் புலவர் பாடும் புகழ் பெற்றவன். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனையும் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பன் விண்ணந்தாயனை யும் பாடிப் பரிசில் பெற்று மேம்பட்ட ஆவூர் மூலங்கிழார் ஒருகால் இக் காரியாதியின் ஊராகிய மல்லிக்குச் சென்று அவனது கைவண்மையைக் கண்களிப்பக் கண்டார். அங்கே இம்மல்லி கிழான் தந்த கள்ளை அவ்வூரிடத்துக் குறிய பல அரண்களிலிருந்து ஆடவர் பலரும் நிரம்ப வுண்டு தேக்கெறிந்து புளிச்சுவையை விரும்பிக் களாப்பழத்தையும், துடரிப்பழத்தையும், விரவி யுண்பதையும், பின்பு கான்யாற்றின் எக்கர் மணற்குன்றேறியிருந்து குடநாட்டு மறவர் எறிந்து கொணர்ந்த எய்ப்பன்றியின் கொழுவிய நிணங் கலந்து சமைத்த சோற்றை வருவார்க் களித்துத் தாமும் பனையோலையில் வைத்து விடியற்காலையில் உண்பதையும் கண்டனர். உடனே அவர் நெஞ்சில் இவ்வா றுண்ணும் பரிசிலர், வேந்தர் நெடுநகர் முன்னே நின்று கண் சிவக்க, நாவுலரப் பாடிக் களிறு முதலிய பரிசில் பெறுவது தோன்றிற்று. வேந்தர் செய்யும் களிற்றுக் கொடையையும், இக்காரியாதி விடியலில் தரும் சோற்றையும் சீர் தூக்கினார்.”

“இம் மல்லிகிழானுக்கு இப்போதுள்ள சீவில்லிபுத்தூர் உரியது. சீவில்லிபுத்தூர் வைத்தியநாதசாமி கோயில் கல்வெட்டுக் களிலும், ஆண்டாள் கோயில் கல்வெட்டுக்களிலும் “மல்லிநாட்டுச் சீவில்லிபுத்தூர்” என்றே குறிக்கப்படுகிறது. இந்த மல்லிநாட்டுப் புத்தூரே பின்னர் மல்லிபுத்தூர் என்றும், பிற்காலத்தில் வில்லி புத்தூரென்றும் மருவியது. வில்லிபுத்தூராகி வழங்கிய காலத்தில் பெரியாழ்வாரும், திரு ஆண்டாளும் தோன்றி இதனைத் தம்முடைய தெய்வப் பாடலால் சீவில்லிபுத்தூராகுமாறு செய் தனர். இவ்வூர்க்கு அவ்வப்போது மலையிலிருந்து வரும் பழையரே இப்பாட்டின்கட் கூறப்படும் குடவராக இருக்கலாம். இப் பழையர் “பளியர்” என இந்நாட்டவரால் வழங்கப்படு கின்றனர்.”

சீயன் = ஸ்ரீயன் (கந்தரந்தாதி)
https://kaumaram.com/anthathi/nat_019.html

கோதை பிறந்தவூர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணிமாடம் தோன்றுமூர் - நீதியால்
நல்ல பத்தர் வாழுமூர் நான்மறைகள் ஒதுமூர்
வில்லிபுத்தூர் வேதக்கோன் ஊர்

----

குறித்தொருவர் கொண்டாடும் கொள்கைத்தோ கோதை
நிறத்தவூர் விண்டுசித்தர் நீடூர் - பிறப்பிலியூர்
தாழ்வில்லி புத்தூரெனு ஐவர்க்குத் தானிரந்தான்
வாழ்வில்லி புத்தூர் வளம் - நூற்.  திருப். அந். 48 (திவ்யகவி)

ந. சி. கந்தையாபிள்ளை, தமிழ்ப் புலவர் அகராதி
ஞானசம்பந்த தேசிகர்: (16ஆம் நூ.) இவர் பாண்டிநாட்டுச் சீவில்லிபுத்தூர் வேளாளர்; சிவபோகசாரம், சொக்கநாத வெண்பா, பரமானந்த விளக்கம், முத்தி நிச்சயம், திரிபதார்த்த தசகாரிய அகவல், நவரத்தின மாலை, பண்டாரக் கலித்துறை, சொக்கநாதக் கலித்துறை, பேரானந்த சித்தியார் முதலியன இவர் பாடிய நூல்கள்.

தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்: (சங்ககாலம்) தங்கால் என்பது திருத்தண்கால் என இக்காலத்து வழங்கும். இது சீவில்லிபுத்தூருக் கருகிலுள்ள விட்டுணுகோயிலுள்ள இடம். இவர் பாடியது: நற். 368.

திருவேங்கடையர்: (14ஆம் நூ.) இவர் சீவில்லிபுத்தூரில் வாழ்ந்த வேதியர். உவமான சங்கிரகமியற்றியவர். உவமான சங்கிரகம் புகழேந்திப் புலவர் செய்ததாகக் கூறப்படுவதுமுண்டு.

Country Herald, கிராம தூதன்
கௌரவ பத்திராதிபர்: இரா. கு. நல்லகுற்றாலம்பிள்ளை, சீவில்லிபுத்தூர்
https://www.tamildigitallibrary.in/admin/assets/periodicals/TVA_PRL_0001385_கிராம தூதன் 1942 மார்ச்சு.pdf

https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0008856_எனதுயிர்த்_தோழர்_திருவாளர்,_இ_மு_சுப்பிரமணிய_பிள்ளையவர்கள்_
ரலாறு.pdf  (சீவில்லிப்புத்தூர் இந்து உயர் பள்ளிக்கூடம்)

https://www.tamildigitallibrary.in/admin/assets/periodicals/திராவிட நாடு (ஜூன் 2, 1946).pdf
கலைஞர் பால் கருணை காட்டுக (பாகவதர்-கிருஷ்ன் கைது விடுதலை கோரி) பல ஊர்களில் - சீவில்லிப்புத்தூர்  உள்பட - தீர்மானம்.

ராயகோபுரம் - தமிழ்நாட்டின் சின்னம்,
https://www.bbc.com/tamil/india/2013/09/130919_rajaduraiontempletower

வெண்பா
வேசையரே மல்குமூர் வீதியிலார் வந்தாலும்
பேசிவலை வீசிப் பிடிக்குமூர் - ஆசைமயல்
பூட்டுமூர் கையிற் பொருள்பறித்தே யோடுகொடுத்
தோட்டுமூர் சீவிலிபுத் தூர். 249

இஃது, அந்தகக்கவி வீரராகவ முதலியார் சீவில்லிபுத்தூரிற் பாடிய கவி.
(ஔவை துரைசாமிப் பிள்ளை, தமிழ் நாவலர் சரிதை)

https://vallinam.com.my/version2/?p=7227 சுளுந்தீ - முத்துநாகு (பழைய பாணர்களில் ஒரு பகுதியினராகிய மங்கலர் பற்றிய நாவல்).
கன்னிவாடி அரண்மனையும் அதன் எல்லைகளையும் விரித்து சித்திரமாக்குவதில் முத்துநாகு வெற்றி பெற்றுவிட்டார். சாலைகள் வழியே திசையை அனுமானிப்பதில்தான் எவ்வளவு அபத்தமுள்ளது. கன்னிவாடியிலிருந்து மலை ஏறி மலைக் காடுகள் வழியாகவே மூணாருக்குச் செல்வதும், அங்கிருந்தபடியே வெள்ளிமலை சாப்டூர் சந்தையூர் வழியாக சீவில்லிபுத்தூர் செல்வதுமாக கதையினூடே பல மைல்கள் பிரயாணத்தை நாவல் சாத்தியமாக்கியுள்ளது.

நா. கணேசன்
>
> முக்கியக் காரணம் மக்களுக்கு ஸ்ரீ என்பது சீ என்று தமிழில்
> வழங்கும் என்பதற்கு நல்ல உதாரணம் சீவில்லிபுத்தூர் என இலக்கியங்களில்,
> கல்வெட்டுகளில் இருப்பதை இன்றைய தமிழில் இருக்கும் சொல்.
> சீவில்லிபுத்தூர் அப்பிரதேச மக்கள் பல நூற்றாண்டுகளாக பயன்பாட்டில்
> இருக்கும் சொல். சீலத்தூர், சீலுத்தூர் என்றும் சொல்வர், அதிலும் சீ (< ஸ்ரீ) உள்ளது.
>
> இதில் எல்லாம் சீ என்பதைத் திரு என மாற்றத் தேவையில்லை. உ-ம்:
> ஸ்ரீதரன் சீதரன் என்றால் போதும். திருதரன் என்று மாற்றத் தேவையில்லை.
> ஸ்ரீதனம் சீதனம் என்றால் போதும். திருதனம் என்று மாற்றத் தேவையில்லை.
> எங்கேயோ சென்னையில் இருந்துகொண்டு பழைமையான ஊர்ப்பெயர்களை
> மாற்றி, தமிழின் பரப்பைக் குறுக்குதல் சரியன்று.
>
> நா. கணேசன்

Reply all
Reply to author
Forward
0 new messages