Re: naLLi ("crab") and al "night" (< naL)

9 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jul 26, 2011, 7:28:24 AM7/26/11
to மின்தமிழ், CTa...@googlegroups.com, Santhavasantham

On Jul 14, 8:58 pm, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> ஐயா,
> தெலுங்கு மொழியில் நல் என்பதற்கு கருமை எனப் பொருள். அல் எனபதும் கருமைக்
> கருந்து வேர் எனவே கருமைக் கருத்தின் அடிப்படையில் நண்டிற்கு பெயர்
> கொடுக்கப்பட்டு உள்ளது. மலையாளத்தில் ஞண்டு என வழங்குவர். அருளியார் தம் யா
> நூலுள் ய >  ஞ > ந  என வேர் வளர்ச்சியைக்  காட்டுகிறார்.
>
> சேசாத்திரி
>
>

எனக்கு ஒரு சந்தேகம்.

இந்தோ-ஐரோப்பிய மொழிகளில்
schwa ( http://en.wikipedia.org/wiki/Schwa) ஒலியை பாணினி
போன்றோர் அகர எழுத்தாக்கிவிட்டனர்.
அதாவது, ə-வை அ என எழுதுகின்றனர்.

இதேபோல், ஷ்வா (ə) முந்து-திராவிட மொழியில்
இருந்ததா? தமிழர்கள் பல வடசொற்களை
ə-உடன் சொல்வர்: ஜெயலலிதா < ஜய-,
ரெங்கநாதர் < ரங்க, கெங்கை < கங்கை, லெட்சுமணன் < லக்ஷ்மண
...

மூன்று உதாரணங்கள் தரலாம் என
நினைக்கிறேன்.

(அ) தெற்கு, தென்- < தெல்-/தெள்-
தெலுகு, தெனுகு - தென்னவர் என்ற பொருள்.
தெற்குக்கு மரம் தென்னை, வடக்குக்கு மரச்சின்னம்
வடம் (யால்/ஆல்). தெள்ளு-/தள்ளு- இவற்றில்
ə இருக்கிறதா?

(ஆ) நள்- ‘கருமை’, ‘இருள்’.
நாள் = நட்சத்திரம், இருளில் தோன்றுவதால் ஏற்பட்ட பெயர்.
தொல்திராவிடர்களின் நட்சத்திரமோகம் அமோகமானது.
சோதிடம் பிறந்தது. வடமொழியில் கிரஹம் என்பது
தமிழ் ‘கோள்’ என்னும் கோட்பாட்டின் மொழிபெயர்ப்பு
என்பர். அன்று பிறக்கும் தினத்துக்கு நட்சத்திரங்களின்
பலனைச் சொல்வது நாளோலை. நாட்கணக்கர் தொழில்.
”The word olai in Tamil is significant in this connection
as it specifically means the palm-leaf used for writing.
The calender carried by the astrologer who is an
adjunct to the temples is referred to a Nalolai (நாளோலை)
in inscriptions (SII III, p. 321). A document is styled
Arai-olai (Ibid, pp. 163 and 275)"
(pg. 19, C. Sivaramamurti, Indian epigraphy and South
Indian scripts, 1948, Madras Govt. Museum).

அடிப்படையில் நாள் = கருமை. அது பகலுக்கு ஆகிவரும்போது,
நாளங்காடி. இரவை வேறுபடுத்திக்காட்ட தமிழ்
அல் என்ற சொல்லை நள்- லிலிருந்து உருவாக்கிக்கொண்டது.
நாளங்காடி, அல்லாங்காடி. இதற்கு ஒப்பாக,
பெண் ஞெண்டை நள்ளி என்றும், அதன் கணவனை
அலவன் (< நளவன்) என்பதும் இலக்கிய வழக்கு.
தேவாரம், 4000 காண்க. ஆழ்வார் நள்ளி - அலவன்
காதலை விளக்கமாகப் பாடுகிறார். அதற்கு வியாக்கியானம்
அருமை. ஸ்ரீவைஷ்ணவர்கள் சொன்னால் சிறப்பாய்
அமையும்.

நெள்-/நள்- ‘கருமை’ ஷ்வா (ə) இருக்கிறதா?
ஞெள்-/ஞள்- ஞெண்டு/ஞண்டு

நெள்ளு/ஞெள்ளு ‘கருமை’ = எள்ளு (எண் என்று
தொல்காப்பியத்தில் சொல்லப்படுவது).
எள்ளு < நெள்-/நள்- ‘கறுப்பு’. (ஈரம் < நீர், உண்ணி < நுண்ணி(ய),
{உண்ணி க்ருஷ்ணன் - குருவாயூர்} ).
எள்+ நெய் = எண்ணெய். டிச் குழி, போஸ்ட் கம்பம், ...
மீண்டும் ஒருமுற்றை நல் (< நள்) சேர்கிறது:
நல்லெண்ணெய் < *நள்ளெண்ணெய்/நெள்ளெண்ணெய்.
எமனோ அல்-, நல்லம் தொடர்புடையன என்கிறார்.
அல்- < நல்- < நள்-. (1) நள்ளி:அலவன்
(2) நாளங்காடி, அல்லங்காடி.

(இ) செல்- இதிலிருந்து ஹிந்தி உருவாக்கும் சொல் சலோ.
நெசவு (நெய்-) > நசநச (நயம்)

நன்றி,
நா. கணேசன்

>
>
>
>
>
> On Fri, Jul 15, 2011 at 5:36 AM, N. Ganesan <naa.gane...@gmail.com> wrote:
>
> > Madras Tamil Lexicon lists:
>
> > naḷḷi , n. 1. [K. naḷḷi.] Crab; நண்டு. நள்ளிசேரும் வயல் (திவ். திருவாய் 9,
> > 10, 2). 2. Cancer in the zodiac;
> > 3. A liberal chief, one of seven kaṭaivaḷḷalkaḷ,
>
> > For crab, TiruvAymozi 9.10.2 "naLLi cErum vayal" is given in MTL.
>
> > naLLi = crab is in the earlier Sangam poetry also.
> > ParipATal 10:
> > "nattoTu naLLi naTaiyiRavu vayavALai
> > vitti alaiyil viLaika polika en2pAr"
> > This can be seen in a news coverage on a wedding of a KizhaanpaaDi bride
> > recently:
> >http://groups.yahoo.com/group/Shiva_Sena/message/1105
>
> > Like naLLi, naLir also refers to the crab.
>
> > Two words - (a) Night "al" and (b) name for the crab "alavan2" (kavaittAL
> > alavan2, perumpANARRuppaTai 208) seem to come from the loss
> > of initial n. i.e, al- < naL-.
>
> > N. Ganesan
>

Reply all
Reply to author
Forward
0 new messages