Re: கொடிக்கறி

5 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jul 27, 2021, 2:25:16 PM7/27/21
to vallamai
On Mon, Jul 26, 2021 at 10:03 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:>
> சூடு என்பதே பெயர்ச்சொல்; சூட்டு என்பது வேற்றுமை உருபு ஏற்கத் திரிந்த வடிவம் எனப் புரிந்து கொண்டேன். 
> நன்றி.

https://ta.wikipedia.org/wiki/குற்றியலுகரம்

(1) நெடில் தொடர்க் குற்றியலுகரம்:
மாடு, காடு, வீடு, மேடு, சூடு, நாகு, காசு, மாது, பேறு, தராசு  ... எல்லாம்
இப் பெயர்ச்சொல் இன்னொரு பெயர்ச்சொல்லுடனோ, வேற்றுமை உருபுடனோ புணரும்போது
உகரம் கெட்டு, டகர மெய் போல நிற்பன இரட்டிக்கும்.

(2) உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்: இவற்றில் சிலவும் இவ்வாறு ஈற்று மெய் இரட்டிப்பதுண்டு.
உ-ம்: வெருகு. (> வெர்கு > வெக்கு (consonant assimilation) > பெக்கெ (bekke) எனக் கன்னடத்தில் இயங்குஞ்சொல்).
விந்து எனும் தமிழ்ச்சொல் பிந்து (bindu) என வருவதுபோல. விந்துமதி/இந்துமதி வெண்பா (யாப்பருங்கலம்).

வெருகு¹ veruku , n. 1. Tom-cat; ஆண் பூனை. (திவா.) 2. Wild cat; காட்டுப்பூனை. (பிங்.) வெருக்கு விடையன்ன (புறநா. 324). 3. Toddy cat, Paradoxurus niger; மரநாய். 4. Ol, tuberous-rooted herb, Arum macrorhizon; செடிவகை. Colloq. 5. White-flowered sola; வெண்கிடை. (பிங்.)

வெருக்குவிடை verukku-viṭai , n. < வெருகு¹ + விடை⁷. Male of wild cat; காட்டுப் பூனையின் ஆண். வெருக்குவிடை யன்ன வெகுணோக்கு (புறநா. 324).

வெருகு:
வெருகிற்கு (1)
பிள்ளை வெருகிற்கு அல்கு_இரை ஆகி - குறு 107/4

வெருகின் (5)
எழுதி அன்ன கொடி படு வெருகின்/பூளை அன்ன பொங்கு மயிர் பிள்ளை - அகம் 297/13,14
குவி அடி வெருகின் பைம் கண் ஏற்றை - அகம் 367/8
பார்வல் வெருகின் கூர் எயிற்று அன்ன - அகம் 391/1
பிள்ளை வெருகின் முள் எயிறு புரைய - புறம் 117/8
ஊர் முது வேலி பார்நடை வெருகின்/இருள் பகை வெரீஇய நாகு இளம் பேடை - புறம் 326/1,2

வெருகு (3)
வேலி வெருகு இனம் மாலை உற்று என - குறு 139/2
வெருகு சிரித்து அன்ன பசு வீ மென் பிணி - குறு 220/4
வெருகு இருள் நோக்கி அன்ன கதிர் விடுபு - அகம் 73/3

வெருகு - பெயரின் குற்றியலுகர உகாரம் அழிந்து ககரம் இரட்டித்தல்:
=========================================================

வெருக்கு பல் உருவின் முல்லையொடு கஞலி - குறு 240/3  வெருகு + பல் = வெருக்குப் பல்
வெருக்கு அடி அன்ன குவி முகிழ் இருப்பை - அகம் 267/6 வெருகு + அடி = வெருக்கடி
வெருக்கு விடை அன்ன வெருள் நோக்கு கயம் தலை - புறம் 324/1 வெருகு + விடை = வெருக்குவிடை

NG


On Tue, 27 Jul 2021, 7:48 am N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:
சூடு - சங்க காலத் தமிழரின் ஊனுணவு வகை.
-----------------------------------------

சூடு³ cūṭu , n. perh. சுடு-. [M. cūṭu.] 1. That which is heated, burnt, roasted; சுடப்பட்டது. கடலிறவின் சூடுதின்றும் (பட்டினப். 63). (MTL).

உலகிலே மாந்தர்கள் முதன்முதலாகத் தொடங்கிய தொழில்களுள் வேட்டையாடல் மிகப் பழமையானது. குகைகளில் கிடைக்கும் ஓவியங்கள் பல ஆயிரம் ஆண்டுகள் முன்னர் தீட்டப்பெற்றவை. தொல்மனிதன் வேட்டுவனாக வாழ்ந்தமை அவ் ஓவியங்களில் காண்கிறோம். வேட்டையாடிய விலங்கி இறைச்சியை, மூங்கில் அல்லது இரும்புக் காழில் கோத்துத் தீயில் வாட்டி உண்ணத் தொடங்கியிருக்கிறான். இவ்வகை உணவுக்குச் “சூடு” என்று பெயர்கொடுத்து 2000 ஆண்டு முன்னர் வழங்கியுள்ளனர். கல்லடுப்பு போன்ற அடுப்புகளைக் குறிப்பிடும் சங்க இலக்கியம், வேட்டுவத் தொழிலால் உருவான சூட்டை வாட்டும் ‘ரோஸ்ட்டிங்’ அடுப்பை முரியடுப்பு என்று கலைச்சொல்லால் விளக்கியிருக்கிறது. அடுப்பு வகைகளை வர்ணிக்கும் சங்க இலக்கிய நூல்களை ஆராய்ந்தால், முரியடுப்புக்குத் தான் விளக்கமாகச் செய்திகள் இருக்கின்றன. பழைய வாழ்க்கையில், சூடு என்னும் உணவு வகைக்கு இருந்த முக்கியத்துவம் இதனால் தெரியலாகிறது.

முரி is a technical word for skewer, wooden stick:
https://en.wikipedia.org/wiki/Skewer
முரி - தாவரத்தினின்றும் முரித்ததால்.
https://en.wikipedia.org/wiki/Skewer#/media/File:Wooden_skewers.jpg

வாடூன் என இருவகைச் சூடுகளைப் பற்றிப்பாடல்கள் இருக்கின்றன
வாடூன் (1) Kebab (2) Jerky:
https://groups.google.com/g/vallamai/c/O_s4Jn_lxOI/m/DyMlez5HBgAJ
கபாப் செய்முறை:
         முரவு வாய் குழிசி முரி அடுப்பு ஏற்றி
        வாராது அட்ட வாடூன் புழுக்கல் – பெரும் 99,100

விளிம்பு உடைந்துபோய் கரடுமுரடான குழியுடைய முரிந்த அடுப்பிலே ஏற்றி,
தாளிதம், தண்ணீர், எண்னெய் என எதுவும் வார்க்காமல்  சுட்ட (மான் தசையின்) வாடூன் (கபாப்).
இத்துடன், புழுக்கல் “steamed rice" பக்கலில் வைத்து உண்ணும் உணவு.
கபிலபரணர், உற்றார் உறவினர், ... போல வாடூன் புழுக்கல் (பெரும்பாண்.) என்பது உம்மைத்தொகை.
தொல்லியல் சான்றுகள் பெரும்பாணில் உள்ள பழைய அடுப்பை விளக்கத் துணை செய்கிறது.
காட்டுவாசிகளின் முரியடுப்பு சூடுகளைச் சமைக்க அடிப்படையான (primitive) அடுப்புவகை
பெரும்ப்பாணாற்றுப்படை விளக்குகிறது. காட்டிலே வாழும் மக்கள் பாணனுக்கு விருந்து படைக்கின்றனர்.

காட்டுவாசிகளின் இந்த முரியடுப்பின் அடுத்த கட்ட வளர்ச்சியை நாம் சிந்துவெளி நாகரிகத்தில் காண்கிறோம்.
நகர வாழ்க்கை அங்கே. நகர வாழ்க்கை பெரிதாக உலகத்தில் தொடங்கிய பிரதேசங்களில் சிந்து நாகரீகமும் ஒன்று.
அங்கே தான், ‘தந்தூரி கோழி’ என்னும் சூட்டுவகை சுடுசமையல் கண்டுபிடிக்கப்பட்டது.
https://thefoodfunda.com/history-of-tandoor-tandoori-cooking/
https://myvoice.opindia.com/2019/02/busting-the-tandoori-chicken-myth/
https://twunroll.com/article/1285546208866361344
இன்று உலக முழுதும் பிரபலமானது: https://youtu.be/9Gcux1MFr50

சூடு:
-------------
கடல் இறவின் சூடு தின்றும் - பட் 63
குறு முயல் கொழும் சூடு கிழித்த ஒக்கலொடு - புறம் 34/11
ஆரல் கொழும் சூடு அம் கவுள் அடாஅ - புறம் 212/4
விடை வீழ்த்து சூடு கிழிப்ப - புறம் 366/17
அரவு வெகுண்டு அன்ன தேறலொடு சூடு தருபு - புறம் 376/14
சூடு கிழித்து வாடூன் மிசையவும் - புறம் 386/4
கொழும் தடிய சூடு என்கோ - புறம் 396/15
நெய் உற பொரித்த குய் உடை நெடும் சூடு/மணி கலன் நிறைந்த மணம் நாறு தேறல் - புறம் 397/13,14
குறுமுயல் கொழுஞ் சூடு கிழித்த ஒக்கலொடு – புறம் 34/11

வேற்றுமை உருபு போன்றவற்றுடன் “சூடு” இணையும் அடிகள்
---------------------------------------------------
வறல் குழல் சூட்டின் வயின்_வயின் பெறுகுவிர் - சிறு 163  (குழல் சூடு - குழல்மீன் கருவாடு.)
ஆமான் சூட்டின் அமைவர பெறுகுவிர் - சிறு 177
தண் மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர் - பெரும் 282
எலி வான் சூட்டொடு மலிய பேணுதும் - நற் 83/6
குறு முயலின் குழை சூட்டொடு/நெடு வாளை பல் உவியல் - புறம் 395/3,4
பசும் கண் கருனை சூட்டொடு மாந்தி - புறம் 395/37 (vegetarian)

மாடு + வால் = மாட்டுவால், ஆடு + தாடி = ஆட்டுத்தாடி, வீடு + எலி = வீட்டெலி, காடு + பலா = காட்டுப்பலா, சூடு + இன் = சூட்டின், ...
குற்றியலுகரத்தின் உ கெட்டு, டகரம் இரட்டித்துச் சூடு என்னும் சொல் புணர்தலைச் சங்க நூல்களில் மேலே உள்ள
எடுத்துக்காட்டுகளில் காண்கிறோம். மாட்டு, ஆட்டு, வீட்டு, காட்டு, சூட்டு ... இவையெல்லாம் தனிச்சொற்கள் அல்ல.

நா. கணேசன்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdKaTBOomsRJf_3bdWKFYt0jbopxQWDAJXR0BRzTr4Ruw%40mail.gmail.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcvM_8NL%3D3e76BCNiYkGswarFr2AnEc4pBaPwhsXdnc82w%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages