தமிழ் மொழி எழுத்துள்ள மொழியாக உருவாகச் சமணர்களின் கொடை பெரிது. வட நாட்டுப் பிராமி, சுமார் கி.மு. 5-ம் நூற்றாண்டிலே கொங்குநாடு வழியாகத் தமிழகம் வந்தடைகிறது. தமிழி எழுத்துக்கொண்ட பானை ஓடுகளில் மிகப்பெரும் பகுதி கொடுமணலில் பேரா. கா. ராஜன் குழுவினர் கண்டவையே [1]. பானை ஓடுகளில் கிடைக்கும் பிராமி எழுத்தில் 12 எழுத்துகள் தொல்காப்பியத்தில் இல்லாதனவாக வடமொழி பிராகிருத எழுத்துகள். தமிழ் பிராமி என ஐராவதம் மகாதேவன் பெயரிட்டமை உலக முழுதும் ஏற்கப்பட்டுள்ளது. https://unicode.org/charts/PDF/U11000.pdf . தமிழ் மொழியில் எழுதும்போது "தமிழி" என்றழைத்தவர் இரா. நாகசாமி ஆவார். தொல்காப்பியர், திருவள்ளுவர், ... போன்றோரின் சமணப் பின்புலம் காட்டிய தமிழ்ப் புலவர் பலர். ஹார்வர்ட் பல்கலையின் ஓரியண்டல் ஸீரீஸ் மிகுபுகழ் பெற்றது. முதல் முறையாகத் தமிழ் பற்றிய நூல்: Early Tamil Epigraphy, 2003, Harvard Oriental Series, by Iravatham Mahadevan. சங்க காலக் கல்வெட்டுகளில் மிகப் பலவும் சமண முனிவர்களுக்கு அளித்த நிவந்தம்.
ஜீவபந்து T. S. ஶ்ரீபால் தமிழுக்குச் சமணர் கொடையை உலகுக்குப் பல நூல்கள், கட்டுரைகள் எழுதி வெளிக்கொணர்ந்தவர். அன்னாரது 124-ம் பிறந்தநாள் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. அருணன் எழுதிய திருக்குறள் உரை வெளியிடப்பட்டது. முகப்பில் "திராவிட மொழிக் குடும்பம்" என்ற கருதுகோளை உருவாக்கிய கலெக்டர் F. W.எல்லிஸ் சமணர்கள் வழிவழிக் கொண்டாடிய துறவிக் கோலத்து தங்க நாணயம் வெளியிடப்பட்டுள்ளமை சிறப்பு. அனைவருக்குமான தேசிய நூல் என அறிவிக்க இந்தியாவின் செம்மொழிகளில் உள்ள ஒரே நூல் திருக்குறள் தான். ஜைந இளைஞர் மன்றம் நடாத்தும் "முக்குடை" இதழிகை தமிழின் முக்கியப் பத்திரிகை. அதன் ஆசிரியர் பேரா. கனக அஜிததாசுக்கு வந்த ஜீவபந்து விழா அழைப்பிதழ் இணைப்பில்.