வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை: சித்திரை முதல்நாள் <-> தொல்காப்பியர் திருநாள், 2021 தொல்காப்பியர் திருநாள் சிறப்பிதழ் வெளியீடு

2 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Mar 30, 2021, 2:06:59 PM3/30/21
to vallamai, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com, panbudan, CTa...@googlegroups.com
யாடு (Aries - ram, Zodiac sign) என்னும் சொல் யாட்டை, யாண்டு என்ற ஆண்டுக்கான தமிழ்ச்சொற்கள் இரண்டையும் தந்தது. யாடு ஐ விகுதி ஏற்று யாட்டை என வந்தது. கச்சிப் பேடு --> பேடு+ஐ = பேட்டை போல. ‘யாறு, யாண்டு, யாடு, யாமை, யானை (< யால்), யாளி, யார், யாப்பு, யாக்கை, யா, யால்’ என்பன யகாரத்தில் தொடங்கும் பழந்தமிழ்ச் சொற்கள் ஆகும். இவை இடைக்காலத்தில் மொழிக்கு முதலில் வரும் யகர மெய்யை இழந்து, முறையே, ‘ஆறு, ஆண்டு, ஆடு, ஆமை, ஆனை, ஆளி, ஆர், ஆப்பு, ஆக்கை, ஆ (மரம்), ஆல் (மரம்)’ என ஆகாரத்தில் தொடங்கும் சொற்களாக மாறி அமைந்தன.  காடு : காண்டா (மிருகம்), கீடு-கீண்டு (கீடம் = புழு), கூடு-கூண்டு, தாடு-தாண்டு (மேகெ தாடு - ஆடுதாண்டு காவேரி), நீடு-நீண்டு, வேடு-வேண்டு, சூடு-சூண்டு(சுண்டு), ... போல யாடு (சித்திரை மாத ராசி) தொடக்கம் ஆதலால் யாண்டு, யாட்டை எனச் சங்க காலத்தில் ஆண்டுக்குப் பெயர்.

யாடு >> யாட்டு, யாண்டு (சங்க நூல்களில்).
யாட்டுக் கோட்பாடு கொணர்ந்த சேரலாதன் - பதிற்றுப்பத்து
கனலிவட்டம் - தமிழில் Zodiac என்பதன் கலைச்சொல் (சிந்தாமணியில்) இழையில் சொல்லியுள்ளேன். எங்குமே, தொல்காப்பியர் ஆவணியை எப்பொழுதும் ஆண்டு (< யாண்டு/யாடு) பிறப்பாகக் கொள்ளவில்லை. முந்நான்கு பருவமாக சித்திரையில் தொடங்கும் 12 பருவங்களைப் பகுத்து, க்ரீஷ்ம பர்வத்தில் தொடங்கும் வட இந்திய முறையைத் தமிழகத் தட்பவெப்ப நிலைக்கு மாற்றுகிறார் காப்பியர். பிராமி எழுத்து தமிழகம் வந்தபோது, சில மாற்றங்களை - உ-ம்: புள்ளிக் கோட்பாடு - செய்தவர் தொல்காப்பியர். மேலும், வல்லமை எழுத்துக்களை வல்லெழுத்து இனமாக வைத்தார். அதே போலத்தான் வேளாண்மைக்காக கார்ப்பருவத்தை முதலில் சொல்வதும் ஆகும். சமணர்கள் பலரும் வேளாண்மைத் தொழிலர். வேளாண்மைக்கு அடிப்படை கார்காலம், எனவே 6 பருவச் சுழற்சியை வேளாண்மையை முதன்மையாக வைத்துத் தருகிறார். சமணர்கள் செய்த நிகண்டுகளும் அவ்வாறே. கனலிவட்டம் - தமிழில் Zodiac என்பதன் கலைச்சொல் (சிந்தாமணியில்) இழையில் விரிவாக விளக்கியுள்ளேன். நச்சினார்க்கினியர் திருநாளாக சிங்க மாசத்தை (ஆவணி 1) வைக்கலாம். வேளாண் சுழற்சி துவங்கும் மாதம் கார்ப்பருவம். அதற்காக, யாண்டு/யாட்டு < யாடு தமிழ் ஆண்டுப் பிறப்பு மாறுவதில்லை.

திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக,
ரோகிணி நட்சத்திரம் பற்றிய கதை நெடுநல்வாடையில்
இருக்கிறது. அது என்ன? டெக்ஸாஸ் ஆஸ்டின் பெருவளர்ச்சி பெற்றுவருகிறது. அங்கே சுமார் 20 நோபல் பரிசுபெற்ற விஞ்ஞானிகள்
பணியற்றுகின்றனர். ஆஸ்டின் பல்கலையில் ஹூஸ்டன் விஞ்ஞானி, முனைவர் ராஜ் வேதம் பேசுகிறார்:
https://www.youtube.com/watch?v=Jq__DXtfeXw
நெடுநல்வாடை வரிகள்,
http://www.diamondtamil.com/education/sangam_literature/pattuppattu/nedunalvaadai5.html#.XqN-8GhKjIU

தொல்காப்பியர் தமிழ் வருஷத்தில் உள்ள மாதங்களுக்கும், திங்கள்வட்டத்தின் (27 Lunar Mansions) நட்சத்திரங்களுக்கும் ஈற்றுவிதி கூறினார். எல்லா மாதங்களும், நக்ஷத்ரங்களும் முடியும்வகையை நன்கு ஆய்ந்து சூத்திரங்கள் செய்துள்ளார் என வியக்காமல் இருக்க இயலாது.  Cf. கனலிவட்டம் 12 Solar Mansions. I've written extensively on how Tiruttakka Tevar in his Chintamani epic translates Zodiac as "Kanali VaTTam".

அவர் ஆட்டின் பழைய பெயர் யாடு என்றும் கூறினார்:
யாடுங் குதிரையும் நவ்வியும் உழையும்
ஓடும் புல்வாய் உளப்பட மறியே
இளம்பூரணம் : (இ - ள்) : என்றது யாடு முதலாகச் சொல்லப்பட்ட
 ஐந்துயிரும் மறி என்னும் இளமைப்பெயர் பெறும் என்றவாறு.

யாறு, யாண்டு, யாடு, யாமை, யானை, யாளி, யார், யாங்கு, யாக்கை ...
இப் பழம்பெயர்களில் சொன்முதல் யகர அட்சரம் நீங்கிவிட்டது.
திருவள்ளுவர் யாண்டு (< யாடு) தைப்பொங்கல். திருவள்ளுவர் திருநாள்!
அது போல், தொல்காப்பியர் திருநாள் சித்திரை வருஷப் பிறப்பு
வேண்டும் என்று கேட்டவர் நாடு நன்கறிந்த தமிழ்ப் பேரா. தமிழண்ணல்.

ஓர் யாட்டு ஒரு கால் வரவு (கலி.71)
யாண்டுப லவாக நரையில வாகுதல்
யாங்கா கியரென வினவுதி ராயின் - பிசிராந்தியார்

http://www.languageinindia.com/july2019/profrajendrantamilnounscontentscomplete.pdf
“உடையார் ஸ்ரீ ராஜேந்திரசோழ தேவர்க்கு யாண்டு இருபதாவது” – திருவாரூர்க் கல்வெட்டு.
“இவ்வாட்டை மேஷ நாயற்று ஞாயிற்றுக்கிழமை” – உடையார்குடிக் கல்வெட்டு ...
“வருடையைப் படிமகன் வாய்ப்ப’ – பரிபாடல் 11:5 (வருடை – மேழம்; படிமகன் – செவ்வாய்)

2008-ல் தை 1 வருஷப் பிறப்பு என அந்நாள் முதல்வர் மு.க. மாற்றியபோது, பேரா. தமிழண்ணல் எழுதிய கட்டுரை.
யாடு - யாட்டுக் கோட்பாடு தந்த சேரலாதன் (பதிற்றுப்பத்து) - பிறப்பிப்பது யாட்டு, யாண்டு.
http://kilvaanam.blogspot.com/2008/01/blog-post_3433.html
http://viduthalaidaily.blogspot.com/2011/09/blog-post_8010.html
”இனி, ஞாயிற்றின் செலவை வைத்துத் தமிழர்கள் ஆண்டு தொடக்கத்தைக் கணக்கிட்டனர் என்பதைப் பற்றி, முன்னே சுட்டியபடி சான்று காண்போம். சூரியன் தென்திசையாகச் சாய்ந்து சென்றது மாறி, வடதிசையாகச் சாய்ந்து செல்லும் நாள் - தை முதல் நாளாகும். இன்று தட்சிணாயனம், உத்தராயனம் என்பர். இது மேஷராசி யில் நடப்பதை அனைவரும் அறிவர். மேஷம் என்பது - ஆடு எனும் தமிழ்ச் சொல்லின் மொழி பெயர்ப்பாகும். ஆடு - முன்பு யாடு என்றே வழங்கியது. இதனால் தமிழர்கள் யாட்டை என முதலில் அழைத்து, பிறகு அது மூக்கொலி பெற்று யாண்டு- ஆண்டு என ஆயிற்று. கண்ணகி ஈராறு ஆண்டு அகவையாள் கோவலன் ஈரெட்டாண்டு அகவையான் என மங்கல வாழ்த்துப் பாடலில் குறிக்கப் பெறுகின்றனர். பதிற்றுப் பத்தில் யாண்டு தலைப் பெயர (15) யாண்டு ஓர் அனைய ஆக (90) என வருகிறது. கணவன் மனைவியைப் பார்க்க, ஓராண்டிற்கு ஒரு முறைதான் வருகின்றான். இதைத் தலைவி கூற்றாக, ஓர் யாட்டு ஒரு கால் வரவு (கலி.71) என்று கலித்தொகை குறிப்பிடுகிறது. யாடு (மேடம்) இராசியில் மாறுவதால், யாட்டு என ஆண்டு குறிக்கப்படுவதே முதல் வழக்கு. இன்றும் சனி கிரகம், ஏழரையாண்டு என்பதை ஏழரையாட்டைச் சனி என்றனர். அது மருவி ஏழரை நாட்டுச் சனி எனப் பிழைபட வழங்குகின்றது திண்ணிலை மருப்பின் ஆடுதலையாக, விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலம் என (நெடுநல். 160, 161) ஞாயிறு குறிக்கப் படுகிறது. ஆடு - மேட ராசியே முதலாவதாகும். ஆடுதலையாக என்பதற்கு மேடராசி முதலாக ஏனை இராசிகளில் சென்று திரியும் என நச்சினார்க்கினியர் விளக்கம் தருகிறார்” யாடு என்பதில் இருந்து தான் யாட்டு, யாண்டு என்ற சங்க இலக்கியச் சொற்கள் பிறக்கின்றன
எனத் தெளிவாக விளக்கும் தமிழண்ணல், யாடு என்பது மேட இராசி என்கிறார் (2008).

N. Ganesan



On Mon, Mar 29, 2021 at 9:48 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (Federation of Tamil Sangams of North America, FETNA) என்பது வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் ஒரு குடையமைப்பு ஆகும். இவ் அமைப்பில் 57-இற்கும் மேற்பட்ட தமிழ்ச் சங்கங்கள் அங்கம்
வகிக்கின்றன. https://fetna.org/member-tamil-sangams/  தமிழ் மொழி, பண்பாடு, சமூகம் ஆகியவற்றைப் பேணி வளர்ப்பதே இச்சங்கத்தின் முக்கிய நோக்காகும். இச்சங்கம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 4-ல் மாநாடு மற்றும் ஒன்றுகூடல் நடாத்துகின்றது. 2008 இல் தனது ஆண்டு விழாவை பெரியசாமி தூரன் நூற்றாண்டு விழாவாக இச்சங்கம் கொண்டாடியது. 2019-ல் சிகாகோவில் 10-ம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டைப் பேரவைக்குழு சிகாகோ மாநகரில் நிகழ்த்தியது.

தமிழர் சென்று கடல் வாணிகம் செலுத்திய நாடுகளில் எல்லாம் “ஆடு தலையாக” என்று சங்க இலக்கியங்கள் வர்ணிக்கும் சூரியன் மேட இராசியில் அரங்கேறும் சித்திரையை வருடப்பிறப்பு நாளாக இந்தியாவில் எல்லா சமயங்களைப் பின்பற்றுவோரால் கொண்டாடப்பெறுவது சங்ககாலத் தமிழர்களின் பழைய வானியல் இது. ஆடு கோட்பாட்டுச் சேரல் ஆதன் என்பது இக்கோட்பாட்டைத் தமிழகத்தில் கொணர்ந்த (அ) நிலைநிறுத்திய சேர மன்னனின் பெயர். இந்தியா முழுமையும் வாழ்வாங்கு வாழ்ந்த தொல்தமிழ் மொழியினரின் 4700 ஆண்டுக்கு முந்தைய வானியல் பற்றி இக் கட்டுரையில் அறியலாம்:  http://nganesan.blogspot.com/2021/02/divine-couple-binjor-amulet-to.html  . பௌத்தர்கள், சமணர்கள், இந்துக்கள் என மூன்று சமயத்தவர்க்கும் தமிழ் ஆண்டின் 12 மாதங்களில் முதல் திங்கள் சித்திரை என இலங்குகிறது. இதனை இலங்கை, கம்போடியா, லாவோஸ், ... போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கூடக் காணலாம்.

தமிழர்க்குத் திருவள்ளுவர் தொடராண்டு தைப் பொங்கல் (தை 1) தினத்தில் அமைந்துள்ளது. கலி அப்தம், சக அப்தம் எனப் பழைய முறைகள் தொடராண்டாகக் தமிழ்க் கல்வெட்டுகளில் இருந்தாலும், அரசாங்க ஆணைக மூலமாக, திருவள்ளுவர் ஆண்டு கணக்குமுறையே தமிழக அரசால் பின்பற்றப்படுகிறது. திருவள்ளுவர் திருநாள் தைப்பொங்கலில் அமைந்துள்ளது போல, தொல்காப்பியர் திருநாள் சித்திரை முதல்நாள் எனக் கொண்டாட வேண்டும் என வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை ( FETNA) முன்னெடுக்கிறது. முப்பெரும்விழாவாக தொல்காப்பியர் திருநாள் (ஏப்ரல் 14, 2021 = சித்திரை 1), மற்றும் ஹூஸ்டன், டொராண்டோ பல்கலைக்கழகங்களில் தமிழ்ப் பேராசிரியர் பீடம் நிறுவ நிதிசேர் பெருவிழா வரும் ஏப்ரல் 10-தேதியில் பேரவை கொண்டாடத் தீர்மானம் நிறைவேற்றி. பேரவைக் குழுவினர் ஏற்பாடுகளைச் செய்துவருகின்றனர். விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க அனைவரையும் பேரவை அழைக்கிறது. ஜேம்ஸ் வசந்தன் (பல தொலக்காட்சி அமைப்பாளர்) இசையமைப்பு, நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆக விளங்குவார்.

தொல்காப்பியத்தை வாழ்நாள் முழுதும் கற்பித்துவரும், பல ஆய்வு மாணவர்களுக்கு நெறியாளராக விளங்கும் பேராசிரியர்கள் செ. வை. சண்முகம், கி. நாச்சிமுத்து, கு. சிவமணி, ஈரோடு தமிழன்பன், கவிஞர் சிற்பி, முனைவர் ப. பாண்டியராஜா, ... கட்டுரைகள், கவிதைகள் தொல்காப்பியர் திருநாள் (சித்திரை 1)  அமெரிக்கப் பேரவைச் சிறப்பிதழுக்கு (அருவி இதழிகை) அனுப்பியுள்ளனர். கவிஞர் இனியன் தொல்காப்பியர் திருநாள் பதிகம் பாடியுள்ளார். திருச்சிப் புலவர் இராமமூர்த்தியின் தொல்காப்பியர் திருப்புகழ், மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து வண்ணம் (கவிமாமணி இலந்தை) இவ் இரண்டு பாடல்களும் யாழ். தவசஜிதரன் இசையமைப்பில் வெளிவர உள்ளது. மணியம் செல்வன் அவர்கள் பெட்னா பேரவையின் தொல்காப்பியர் திருநாள் சிறப்பிதழ் (2021) மலருக்கு அட்டைப்பட ஓவியம் வரைகிறார். இம்மலருக்கு உங்கள் கவிதை, கட்டுரை வெளியாக விரும்பினால், naa.g...@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். தொல்காப்பிய இலக்கணம் பற்றியதாகப் பொருண்மை இருக்கவேண்டும். யூனிக்கோட் என்னும் ஒருங்கு குறியீட்டு எழுதுருவில் வேண்டும். தமிழண்ணல், கு. சிவமணி போன்ற தமிழறிஞர்கள் பரிந்துரையின் பேரில் தொல்காப்பியர் திருநாள் சித்திரை முதல்நாள் என அறிவிக்க தமிழ்நாட்டு அரசாங்கத்தினை அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் அணுகியுள்ளன. நன்றி.

தமிழக முதல் அமைச்சருக்கு வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (Federation of Tamil Sangams of North America, FETNA) தலைவர், செயலர் தொல்காப்பியர் திருநாள் (சித்திரை 1) பற்றிய கடிதம்.

உலகத் தாய்மொழி நாள், 2021-ல் தினமணி பத்திரிகையில் வெளியான தொல்காப்பியர் திருநாள் கட்டுரை:
https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2021/feb/21/சித்திரை-முதல்-நாள்-தொல்காப்பியர்-திருநாள்-3567698.html

நா. கணேசன்
பொருளாளர், ஹூஸ்டன் தமிழ் இருக்கை


TT_Day_2021-min.png
dinamani_article.png







Reply all
Reply to author
Forward
0 new messages